அபாக்கூக் ஆகமம் - அதிகாரம் - 2

பாபிலோனின் அழிவு.

1. (பின்னும் யான் ஆண்டவரை நோக்கி: என் தேவனே!) காவலிடத்தில் யான் (சாமக் காவலனென) நிற்பேன்; அலங்கத்தின் மீதிருந்து சேவகஞ் செய்வேன்; (யான் கூறியதற்கு விடை யாக) யாது புலப்படுகிறதெனவும், என்னைக் கண்டனஞ் செய்வோருக்கு மாறுத்தாரமாய் என் சொல்வதெனவும் ஆராய்ச்சி செய்வேன் (என்றேன்.) 

2. ஆண்டவர் பிரத்தியுத்தாரமாக எனக்கு உரைத்ததேதெனில்: உன் காட்சியை எழுது; அதனைப் பலகை கண்மீது, வாசிப்போன் தடை தடங் கலின்றி படிக்கும்படி (அக்ஷரசுத்தியாய்) வரையக்கடவாய்.

3. ஏனெனில், நீ கண்டது துலை யிட்டதெனினும் முடிவில் வரும், தவறாது; அப்படித் தாமதிப்பினும் நீ எதிர்பார்த்திரு; அஃது வரவே வரும், தவணை மீறாது.

4. விசுவசியாதவன் நேர்மையான இருதயமுடையவன் அல்லன்; நீதிமானே விசுவாசத்தால் உத்ஜீவிக்கின்றான்.

* 4-ம் வசனம்: அரு. 3:36; உரோ. 1:17; கலா. 3:11; எபி. 10:38.

5. (அபரிமிதமாயப்) பானஞ் செய் வானை இரசம் மோசஞ் செய்வதெங் ஙனமோ, அங்ஙனமே மமத்துவ முடையவனாகிய (நபுக்கோதனசாருக் கும்) ஆகும், அவன் அவமானமே அடைவன்; அவன் நரகைப்போல் அபிலாசவெண்ணங்களைப் படைத் தவன்; மரணத்தைப் போல் தீராத் தாகமுடையவன்; சகல சாதி சனங்களையுந் தனக்குள் சேர்ப்பவன்; சகல பிரசைகளையுந் தனக்குக் கீழ்ப் படுத்துபவன்.

6. இவர்களெல்லாம் அவனைக் குறித்து உவமைக் கதைகளையும், விடுகதைகளையும் ஏற்படுத்தாமல் போவார்களோ? பிற பொருளை மிக அபகரிக்கும் அவனுக்கு ஐயோ கேடாம்! எவ்வளவு காலந்தான் தனக்கு விருத்துவ மாகவே திரண்ட சேறாகிய (பொன் னைச்) சேகரிப்பன் எனச் சொல்லப் படாமல் போமோ?

7. (கொடுங்கோலனே!) உன்னைக் கடிந்து உதறிப்போடுபவர் திடீரெனக் கிளம்பாரோ? உன்னைக் கிழித் தெறிபவர் எழுந்து வராரோ? அவர் களுக்கும் நீ பறிபொருளாய் ஆகாதிருப்பையோ?

* 7-ம் வசனம். அவர்களுககும்--போசு, மேது நாட்டினரைக் குறிக்கிறது.

8. நீ அநந்த பிரசைகளை உரிந்து விட்டதுபோல், அப்பிரசைகளில் மீதி யானபேர்களெல்லாம், நீ சிந்திய நார் குருதிக்காகவும், (பரிசுத்த) பட்டணத்து நாடுகளுக்கும், அதின் வாசிகளுக்குஞ் செய்த அநியாயங்களுக்காகவும் உன்னை உரிந்துவிடுவார்கள் என்பது திண்ணம்.

9. தின்மையது கரத்துக்கு எட்டாத தென மதித்து, உயரத்தில் நிருமாணிக்கப் படும் (பறவை) கூட்டைப்போல் தன் விடுதியை ஸ்தாபிக்கும்பொருட்டு, அக்கிரமத்தாலாய உலோபத்தால் (பொருள்) சேகரஞ் செய்பவனுக்குக் கேடாம்.

10. உன் வீட்டைக் குறித்து நீ எண்ணியது வெட்கக் கேடாகும்; (ஏனெனில், உன் குடும்பத்தை விருத்தி செய்ய) நீ அநந்த பிரசைகளை நாசஞ் செய்தனை? உன் ஆத்துமா தோ­த் துக்கு உட்பட்டது.

11. உன் சுவற்றில் நடுவீற்றிய கல்லும் (உனக்கு விரோதமாய்) கூக்குரலிடும்; உன் கட்டிடத்திய இசை மாமுஞ் சாட்சியங் கூறும்.

12. குருதியால் பட்டணம் கட்டு வோனும், பாபாக்கிரமத்தால் நகரை ஸ்தாபிப்போனுமாகிய அவனுக்குக் கேடாம்.

* 12-ம் வசனம். எசே.24:9; நாகும். 3:1.

13. (யான் செப்பலுற்ற) இவைகளெல் லாஞ் சேனைகளின் ஆண்டவரால் நிறைவேற்றம் அடையுமன்றோ? (ஆம்) அடர்ந்த தீ (பபிலோன் மீதெழ, அதை அணைக்கப்) பிரசைகள் வியர்த்தமாய்ப் பிரயாசிப்பர்கள்; சனங்கள் வீணே முயன்று களைத்துப் போவார்கள்.

14. ஆண்டவருடைய மான்மியத்தை யாவரும் அறிந்துகொள்ளும்படி, (கல்தேயர்) தேசமானது, சமுத்திர கற்பஞ் சலத்தால் மூடப் பெற்றிருப்பது போல் எண்ணிறந்த (சத்துருக்களாலே) நிரப்பப்பட்டிருக்கும்.

15. தன் நண்பனுக்கு நஞ்சைக் கலக்கிக் குடிக்கக் கொடுத்து, அவன் நிருவாணத்தைப் பார்ப்பதற்கு அவனை வெறிக்கச் செய்யும் அவனுக்குக் கேடாம்.

16. (இங்ஙனஞ் செய்யும்) நீ பிரபாவத் துக்குப் பதிலாக அவமானத்தால் நிரப்பப் படுவை; (ஆண்டருடைய கோபாக்கிர பாத்திரத்தில்) நீயும் பானஞ் செய்து, மயங்கிக் கிட (என்பார்கள்;) ஆண்டவ ருடைய வலது கரத்திய பாத்தியம் உன்னைக் கவர, உன் மகிமை மீதே உன் அவமானத்தைச் சத்தி செய்வை.

17. நீ லீபானில் செய்த அக்கிரமம் உன் மீதே பாரித்து விழும்; நீ நடத்திய மிருகத்துக்குரிய சங்காரமானது உன் னவர்களைக் கலங்கடிக்கும்; அவர்கள் இனி மனித குருதியைச் சிந்தவும், தேசத்தையும் பட்டணத்தையும் அதின் வாசிகளையும் இம்சிக்கவும் பயப்படுவார்கள்.

* 17-ம் வசனம். லீபானில் செய்த அக்கிரமம்--தேவாலயத்திற்கு விரோதமாய்ச் செய்யப் பட்ட அக்கிரமம்.

18. சித்திர வேலைக்காரன் செய்த சுரூபத்தாலும், வார்ப்படத்தில் திரட்டிய பொய் விக்கிரகங்களாலும் பயன் என்னே? ஆயினுந் தொழிலாளி, தான் சமைத்த கைவேலையதாகிய வாய்ப் பேசாச் சிலையிலும் நம்பிக்கைக் கொள்ளுகின்றனன்.

19. கட்டையைப் பார்த்து: விழித்துப் பாரும்; வாய்ப் பேசாக் கல்லை நோக்கி: எழுந்திரும் என்போன் எவனோ அவனுக்குக் கேடாம்; கல்லும் மரமும் யாதாகிலும் கற்பிக்க வறியுமோ? பொன்னாலும், வெள்ளியாலும் மூடப்பட்டிருப்பினும், உள்ளே கிஞ்சித்தும் உயிரே கிடையாதன்றோ?

20. ஆண்டவரோ தமது பரிசுத்த ஆலயத்தில் வீற்றிருக்கின்றனர்; அவர் சமுகம் பூதலமெல்லாம் மோனஞ் சாதிக்கக் கடவது.