சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 19

திராட்ச இரசத்தாலும் ஸ்திரீகளாலும் உண்டாகும் தின்மைகள்.

1. குடிகாரனான தொழிலாளி செல்வந்தனாக மாட்டான்; அற்ப காரியங்களை இழிவாய் எண்ணுகிறவன் மெல்ல மெல்ல விழுவான்.

2. மதுவும் பெண்களும் ஞானமுள்ளவர்களை விழச் செய்கின்றனர்; அவர்கள் விவேகிகளைக் கடிந்து கொள்கின்றனர்.

3. வேசிகளோடு சேர்பவன் தீயவன் ஆவான்; அழுகலும் புழுக்களும் அவனைத் தங்கள் சொந்தமாக்கிக் கொள்ளும்; தீயவனுக்கு அதிகப் பெரிதான மாதிரிகையாகும்படி அவன் உயர்த் தப்படுவான்; அவன் ஆத்துமம் கணக்கினின்று அகற்றப்படும்.

4. அவசரப்பட்டு நம்புகிறவன், மனதிற் கவனக் குறையுள்ளவன்; அதனால் அவன் குறைவுபடுவான்; தன் சொந்த ஆத்துமத்திற்கு எதிராகப் பாவம் செய்கிறவன் நிந்திக்கப்படு வான்.

5. அக்கிரமத்தில் அக்களிப்புக் கொள்பவன் தடை செய்யப்படு வான்; தண்டிக்கப்படுவதை வெறுப் பவன், குறைவான வாழ்நாளைக் கொண்டிருப்பான்; வீண் பேச்சை வெறுப்பவன் தீமையின் நெருப்பை அணைக்கிறான்.

6. தன் சொந்த ஆத்துமத்திற்கு எதிராகப் பாவம் செய்பவன் மனம் வருந்துவான்; துர்க்குணத்தில் இன்பம் காண்பவன் தண்டனைத் தீர்ப்புப் பெறுவான்.

7. கெடுதியும் கடுமையுமான வார்த் தையை மறுபடி சொல்ல முயலாதே; அப்போது அதிகத் தீமையானது எதையும் நீ விலைகொடுத்து வாங்க மாட்டாய்.

8. நண்பனுக்கும் எதிரிக்கும் உன் மனதிலிருப்பதைச் சொல்லாதே; உன்னில் பாவம் இருந்தால் அதை (அவர்களுக்கு) வெளிப்படுத்தாதே.

9. ஏனெனில் நீ சொல்வதை அவன் கவனித்துக் கேட்டு, உன்னைக் கண்காணிப்பான். உன் பாவத்தைத் தற்காப்பது போல் உன்னை வெறுப்பான், உன்னிடம் எப்போதும் இப்படியே இருப்பான்.

10. உன் அயலானுக்கு விரோத மாய் நீ ஏதாவது ஒரு வார்த்தையைக் கேள்விப்பட்டாயா? அதனால் உனக்குக் கெடுதி நேராது என்று நம்பிக்கையோடு அது உனக்குள் மடிந்துபோவதாக.

11. பிள்ளை பெறுகிற ஸ்திரீ வேதனையால் முனகுவது போல, ஒரு வார்த்தையைக் கேட்டதும் மூடன் கொடிய வேதனைப்படுகிறான். 

12. ஒரு மனிதனின் தொடையில் தைத்த அம்பைப் போலவே, மூட னின் இருதயத்தில் வார்த்தையும்.

13. உன் நண்பன் புரிந்து கொள் ளாமல், நான் அதைச் செய்யவில்லை என்றோ, அல்லது செய்திருந்தால், இனி அதைச் செய்யாதிருக்கும்படி யாகவோ, அவனைக் கண்டித்துத் திருத்து.

14. உன் அயலானுக்குப் புத்தி சொல்லு; ஏனெனில் ஒருவேளை அவன் அதைச் சொல்லியிருக்கமாட் டான்; ஒருவேளை சொல்லியிருந் தால் மறுபடியுஞ் சொல்லாதபடி அவனைக் கண்டித்துத் திருத்து.

15. நண்பனைக் கடிந்துகொள். ஏனெனில் தவறு அடிக்கடி செய்யப் படுகிறது.

16. மேலும், சொல்வதெல்லாம் நம்பாதே; அவன் இருதயத்தில் இருந்து சொல்லாமல், வாய் தவறிச் சொல்லும் வார்த்தையும் உண்டு.

17. ஏனெனில் தன் நாவினால் நோகச் செய்யாதவன் யார்? அயலானை மிரட்டுவதற்கு முன் அவனுக்குப் புத்திமதி சொல்.

18. உன்னதரின் மீதுள்ள பயத் திற்கு இடம் கொடு; ஏனெனில் தெய்வ பயமே முழு ஞானமாக இருக்கிறது, அதில் கடவுளுக்குப் பயந்து நடத்தல் இருக்கிறது; திருச்சட்டத்தை அனுசரித்தலில் முழு ஞானம் இருக்கிறது.

19. ஆனால் அக்கிரமத்தைக் கற்றுக்கொள்ளுதல் ஞானமல்ல. பாவிகளின் திட்டமிடுதலில் விவேகம் இல்லை.

20. இரகசியமான அக்கிரமம் உண்டு. அது அருவருக்கத்தக்கது. மூடனும், ஞானத்தில் குறைவுபடு கிறவனுமாகிய மனிதனும் இருக் கிறான்.

21. மிகுந்த புத்தியுள்ளவனாயிருந் தாலும் உந்நதரின் திருச்சட்டத்தை மீறுகிறவனை விட, குறைந்த ஞானமும், புத்தியும் கொண்டிருந் தாலும் தெய்வ பயமுள்ள மனிதன் மேலானவன்.

22. மிக நுணுக்கமான இரகசியம் உண்டு. அது அநீதியானது.

23. உண்மையைத் தெரிவிக்கும் மிகச் சரியான வார்த்தை சொல் கிறவன் உண்டு; தன்னைக் கபடான எண்ணத்தோடு தாழ்த்துகிறவனும் உண்டு. அவனுடைய உள்ளமோ வஞ்சகத்தால் நிறைந்திருக்கிறது.

24. மிகுந்த தாழ்ச்சியில் தன்னை அதிகமாய்க் கீழ்ப்படுத்துகிறவன் உண்டு; தன் தலையைக் குனிந்து கொண்டு, தான் அறியாத காரியத் தைப் பாராதவன்போல பாசாங்கு பண்ணுகிறவனுமுண்டு.

25. தன் பலக்குறைவினால் பாவம் செய்யாதபடி அவன் தடுக்கப்பட்டா லும், தீமைசெய்ய வாய்ப்புக் கிடைத் தால் அவன் அதைச் செய்வான்.

26. தன் தோற்றத்தைக்கொண்டு ஒரு மனிதன் அறியப்படுகிறான்; ஞானமுள்ளவனை நீ சந்திக்கும் போது, அவன் தன் முகத்தால் அறியப்படுகிறான்.

27. ஒருவன் அணிந்திருக்கும் உடையும், அவனுடைய பற்களின் சிரிப்பும், அவன் நடக்கும் விதமும், அவன் எப்பேர்ப்பட்டவனென்று காட்டுகின்றன.

28. பிறர் மனதைக் காயப்படுத்தும் மனிதனின் கோபத்தில் போலியான கண்டிப்பு இருக்கிறது; நன்மையான தாயிருக்க அனுமதிக்கப்படாத தீர்மானம் ஒன்று உள்ளது; தன் அமைதியைக் காத்துக் கொள்ளும் ஒருவனும் இருக்கிறான், அவனே ஞானமுள்ளவன்.