அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 19

அசாயேலுக்கும் ஏகுவுக்கும் பட்டாபிஷேகம்.

1.  எலியாஸ் செய்த எல்லாவற்றை யும், அவன் பாகாலின் தீர்க்கத்தரிசிகள் அனைவோரையுஞ் சிரசாக்கினை செய்த விதத்தையும் ஆக்காப் எசாபேலுக்கு அறிவித்தான்.

2. அப்பொழுது எசாபேல் எலியா சிடம் ஆளனுப்பி: தீர்க்கத்தரிசிகளில் ஒவ் வொருவனுக்கும் நீ பிராண வதையைச் செய்தது போல நாளை இந்நேரத் திலேயே உனக்கு நான் செய்யாமற் போனால் தேவன் இப்படியும் இதற்கு அதிகமாயும் எனக்குத் தண்டனை பண்ணக்கடவாராக என்று சொல்லச் சொன்னான்.

3. எலியாசோவென்றால் அதற்கஞ் சிப் பிரயாணப்பட்டுத் தன்மனம் போன போக்காய்ச் சென்று யூதாவைச் சார்ந்த பெற்சாபேயில் வந்து சேர்ந்தான்.  சேர்ந்து தன் வேலைக்காரனை அங்கே நிறுத்தி அனுப்பி விட்டான்.

4. எலியாசோ வனாந்தரத்தில் ஒரு நாள் பிரயாணஞ் செய்து ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்துட்கார்ந்து தான் சாகவேண்டும் என்று கோரி:  கர்த்தரே! நான் ஜீவித்தது போதும்; என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் உத்தம மானவனா என்று சொல்லி,

5. அந்தச் சூரைச்செடி நிழலில் சய னித்து நித்திரை போனான்.  அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணுமென்  றார்.

6.  அவன் விழித்துப் பார்த்தான்.  இதோ தணலிலே சுட்ட ஒரு உரொட்டி யும் ஒரு பாத்திரத்திலே சலமுந் தன் தலைமாட்டில் இருக்கக் கண்டு, அவை களைப் போஜனபானம் பண்ணித் திரும் பவுஞ் சயனித்து நித்திரை போனான்.

7. தேவதூதன் இரண்டாம் முறைக் குத் திரும்பி வந்து அவனைத் தட்டி எழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு, நீ செய்யவேண்டிய பிரயாணம் இன்னம் எவ்வளவாயிருக்குமென்றார்.

8. அப்பொழுது அவன் எழுந்திருந்து போஜனம் பண்ணிப் பானமுஞ் செய் தான். பிறகு அந்தப் போஜனப் பலத் தினால் நாற்பது நாள் இராப்பகலாய் ஓரேப்  என்னுந் தேவனுடைய பருவத மட்டும் நடந்துபோனான்.

9. அவன் அங்கே சேர்ந்து ஒரு கெபிக் குள் தங்கியிருக்கக் கர்த்தர் அவனை நோக்கி: எலியாசே, நீ இவ்விடத்தில் என்ன செய்கிறாய் என்றார்.

10. அதற்கவன்: சேனைகளின் தேவ னாகிய கர்த்தருடைய ஊழியத்துக்கு வெகு ஊக்கங் கொண்டிருக்கிறேன்.  இஸ் றாயேல் புத்திரர் உமது உடன்படிக்கை யையுங் கைவிட்டார்கள்; உமது பலி பீடங்களையுந் தகர்த்து உமது தீர்க்கதரிசி களையுஞ் சிரசாக்கினை செய்தார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்க, என் பிராணனையும் வாங்கத் தேடுகி றார்களே என்றான்.

11. அப்பொழுது அவர்: எலியாசே நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும், கன் மலை களை உடைக்கிறதுமான பலத்த பெருங் காற்று உண்டாயிற்று, ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை.  காற்றுக்குப் பின் பூமி அதிர்ச்சி உண்டா யிற்று; பூமி அதிர்ச்சியிலுங் கர்த்தர் இருக்கவில்லை,

12. பூமி அதிர்ச்சிக்குப் பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலுங் கர்த்தர் இருக்கவில்லை;  அக்கினிக்குப் பின் அமர்ந்த மெல்லிய தென்றல் காற்றின் சப்தம் உண்டாயிற்று.

13. அதை எலியாஸ் கேட்ட மாத் திரத்தில் தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக் கொண்டு, வெளியே வந்து கெபியின் வாசலில் நின்றான்.  அப் பொழுது: எலியாசே, நீ அங்கே என்ன செய்கிறாய்? என்று சப்தங் கேழ்க்கப் பட் டது.  அதற்கு எலியாஸ் மறுமொழியாக:

14. சேனைகளின் தேவனாகிய கர்த்த ருடைய ஊழியத்துக்கு வெகு ஊக்கங் கொண்டிருக்கிறேன்; இஸ்றாயேல் புத் திரர் உமது பலிபீடங்களையுங் கை விட் டார்கள்; உமது பலிபீடங்களையுந் தகர்த்துவிட்டு உமது தீர்க்கத்தரிசிகளை யுஞ் சிரசாக்கினை செய்தார்கள், நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்க என் பிராணனையும் வாங்கத் தேடுகிறீர்களே என்றான்.

15. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நீ வந்த வழியாய் வனாந்தரப் பிரயாணமாய்த் திரும்பி தாமாசுக்குப் போ, அவ்விடஞ் சேர்ந்தவுடன் சீரியா வுக்கு இராசாவாக அசாயேலை அபிஷேகம் பண்ணிப் பிற்பாடு,

16. நம்சியின் குமாரனாகிய ஏகுவை இஸ்றாயேலுக்கு இராசாவாகவும், அபேல்மேவுலா ஊரானான சாபாத்தின் குமாரனான எலிசேயை உனக்குப் பதில் தீர்க்கத்தரிசியாகவும் அபிஷேகம் பண்ணு வாய்.

17. அசாயேல் வாளுக்குத் தப்பினவ னெவனோ அவனை ஏகு கொன்று போடுவான்.  ஏகுவின் வாளுக்குத் தப்பினவனையோ எலிசே கொன்று போடுவான்.

18. ஆனாலும் பாகாலுக்கு முழந்தாள் படியிடாதவர்களும், கையினால் வாயைத் தொட்டு முத்தமிட்டு வணங் காதவர்களுமான ஏழாயிரம் பேரை நாம் இஸ்றாயேலில் மீதியாக வைத்திருக் கிறோம் என்றார்.

19. அப்படியே எலியாஸ் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப் போய் பன்னி ரண்டு ஏர் பூட்டி உழுத சாபாத்தின் குமாரனாகிய எலிசேயைக் கண்டான்; அவன் பன்னிரண்டு ஏரில் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தான்.  எலியாஸ் அவனிடம் தன் சால்வையை அவன்மேல் போட்டான்.

20. உடனே எலிசே மாடுகளை விட்டு எலியாசைப் பின்சென்று: நான் என் தகப்பனையுந் தாயையும் முத்தஞ் செய்துவர உத்தரவு கொடும்; அதற்குப் பின்பு உம்மைத் துடர்ந்து வருகிறே னென்றான். அதற்கவன்: (நல்லது) நீ போய் திரும்பி வா; நான் செய்ய வேண் டியதை உனக்குச் செய்தேன் என்றான்.

21. எலிசே எலியாசைவிட்டு வந்து, ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து தான் உழுத ஏரின் மரச்சாமான்களைக் கொண்டு மாமிசத்தைச் சமைத்து ஜனங் களுக்குப் பரிமாற, அவர்களும் அதை அருந்தினார்கள்; பின்பு உடனே அவன் புறப்பட்டுப் போய் எலியாசைப் பின் சென்று அவனுக்கு ஏவல் செய்துவந் தான்.