அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 19

சவுலின் சதி.

1. ஆனால் தாவீதைக் கொல்ல வேண்டுமென்று சவுல் தன் குமாரனாகிய ஜோனத்தாஸ் இடத்திலும் தன் எல்லா ஊழியர்கள் இடத்திலும் பேசினான். ஆனால் சவுல் குமாரனாகிய ஜோனத்தாஸ் தாவீதை மிகவும் நேசித்திருந்தான்.

2 .ஜோனத்தாஸ் தாவீதுககு இதைத் தெரிவித்து: என தகப்பனாகிய சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்; ஆகையால் நாளைக் காலமே எச்சரிக்கை யாயிரு; மறைவான இடத்திலிருந்து ஒளித்துக் கொண்டிரு.

3. நான் எழுந்து நீ வெளியில் எங்கெங்கு இருப்பாயோ அந்த ஸ்தலத் திலே என் தகப்பன் அண்டையில் நிற்பேன். நான் உன்னைக் குறித்து என் தகப்பனிடத்தில் பேசி நடக்குங் காரி யத்தை உனக்குத் தெரிவிப்பேன் என்றான்.

4. ஜோனத்தாஸ் தன் தகப்பனாகிய சவுலிடத்தில் தாவீதைக் குறித்து நல மாய்ப் பேசி: இராசாவே, தாவீது உமக்குத் துரோகஞ் செய்ததில்லை; அவன் கிரிகைகளெல்லாம் உமக்கு மெத்தவும் உபயோகமாக இருக்கிறபடி யால் நீர் உமதடியானாகிய அவனுக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்ய வேண்டா மென்றும்,

5. அவன் தன் பிராணனை ஒரு பொருட்டாயெண்ணாமல் அந்தப் பிலிஸ்தியனைக் கொன்றான். ஆண்டவர் இஸ்றாயேல் முழுதுக்கும் பெரும் இரட் சிப்பைத் தந்தார். நீர் அதைப் பார்த்து சந்தோஷப்பட்டீர். குற்றமில்லாமல் இருக்கிற தாவீதைக் கொன்று குற்ற மில்லாதவனுடைய இரத்தத்தைச் சிந்தப் பார்த்துப் பாவஞ் செய்ய வேண்டிய தென்னவென்றுஞ் சொன்னான்.

6. இதைச் சவுல் கேட்டபோது ஜோனத்தாஸ் வார்த்தைகளாலே சாந்த மாகி: ஆண்டவர் ஆணை! அவன் கொலை செய்யப்படுவதில்லையென்று சத்தியம் பண்ணினான்.

7. ஜோனத்தாஸ் தாவீதை அழைத்து இந்த வார்த்தைகளை எல்லாம் அவனுக் குத் தெரிவித்தான். ஜோனத்தாஸ் தாவீ தைச் சவுலிடங் கூட்டிக் கொண்டுபோய் விட்டான். அவன் முன்போலே சவுலின் சமுகத்தில் இருந்தான்.

8. மறுபடியும் ஒரு யுத்தம் மூண்டு கொண்டது. தாவீது புறப்பட்டுப் பிலிஸ் தியரோடு சண்டை கொடுத்து அவர்களுக் குள்ளே பெரிய சங்காரம் பண்ணினான். அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந் தோடினார்கள்.

9. ஆண்டவரால் விடப்பட்ட கெட்ட அரூபி சவுலின்மேல் வந்தது. அவன் தன் வீட்டில் உட்கார்ந்து ஈட்டியைப் பிடித்துக் கொண்டிருந்தான்; தாவீது தன் கையால் வீணை வாசித்துக் கொண்டிருந்தான்.

10. சவுல் ஈட்டியால் தாவீதைச் சுவ ரோடு சேர்த்துக் குத்திப்போட்டான்; ஆனால் தாவீது அதைத் தவிர்த்து விலகின தால், ஈட்டியானது வியர்த்தமாய்ச் சுவ ரிலே பட்டது. தாவீது அன்று இராத்திரி ஓடிப்போய்த் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

11. தாவீதைக் காவல் பண்ணி அவனை மறுநாள் காலமே கொல்லும் படிக்குச் சவுல் அவன் வீட்டுக்குத் தன் சேவகர்களை அனுப்பினான். தாவீதின் மனைவியாகிய மிக்கோல் இதை அவனுக்குத் தெரிவித்து: நீர் உம்மை இன்று காப்பாற்றிக் கொள்ளாவிட்டால் நாளைக்குச் சாவீர் என்று சொல்லி,

12. அவனைச் சன்னல் வழியாய் இறக்கி விட்டாள். அவன் அவ்விதமே தப்பி ஓடிப்போய் விட்டான்.

13. மிக்கோரோ ஒரு சுருபத்தை எடுத்துக் கட்டிலின் மேல் கிடத்தி வெள்ளாட்டு மயிர்த் தோலை அதின் தலைமாட்டிலே வைத்து அதைத் துப்பட் டியால் மூடினாள்.

14. தாவீதைப் பிடிக்கிறதற்குச் சவுல் சேவகர்களை அனுப்பினபோது அவர் வியாதியாயிருப்பதாக மறுமொழி சொல் லப்பட்டது.

15. மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும்படி தூதர்களை அனுப்பி: அவனைக் கொன்று போடும்படிக்குக் கட்டிலுடன் அவனைத் தன்னிடத்திற்கு எடுத்துக் கொண்டு வாருங்களென்றான்.

16. தூதர்கள் வந்தபோது அதோ கட்டிலின்மேல் சிலையும் அதின் தலை மாட்டிலிருந்த வெள்ளாட்டுத் தோலுங் காணப்பட்டன.

17. பிறகு சவுல் மிக்கோலைப் பார்த்து: ஏனிப்படி என்னை மோசம் பண்ணினாய்? என் பகைஞனைத் தப்ப விட்டு அனுப்பினாய் என்று கேட்டதற்கு மிக்கோல் அவனை நோக்கி: என்னைப் போகவிடு, இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்று போடுவேனென்று அவர் என்னிடத்தில் சொல்லி மிரட்டி னாரென்றாள்.

18. தாவீது தப்பி ஓடி ராமாத்தாவி லிருந்த சமுவேலிடத்திற்குப் போய்ச் சவுல் தனக்குச் செய்தவைகளையெல் லாம் அவனுக்குச் சொன்னான். அப்பொழுது அவனும் சமுவேலும் போய் நயோத்திலே தங்கியிருந்தார்கள்.

19. தாவீது ராமாத்தாவுக்கடுத்த நயோத்திலிருக்கிறானென்று யாரோ சொல்லிச் சவுலுக்கு அறிவித்தார்கள்.

20. அப்போது தாவீதைப் பிடிக்கச் சவுல் சேவர்களை அனுப்பினான். அவர்கள் (போய்ச் சேர்ந்து) தீர்க்கத் தரிச னஞ் சொல்லுகிற தீர்க்கத்தரிசிகளுடைய கூட்டத்தையும், இவர்களுக்குச் சமுவேல் தலைவனாக உட்கார்ந்திருக்கிறதையுங் கண்டார்கள். பார்த்தபோது அவர்கள் பேரிலும் ஆண்டவருடைய ஆவி இறங் கினதால் அவர்களுந் தீர்க்கத்தரிசனஞ்ங சொல்லத் துவக்கினார்கள்

21. இது சவுலுக்குத் தெரிவிக்கப் பட்ட போது வேறு தூதர்களை அனுப் பினான். அவர்களுந் தீர்க்கத்தரிசனஞ் சொன்னார்கள். மறுபடியுஞ் சவுல் தூதரை அனுப்பினான். இவர்களுந் தீர்க்கத்தரிசனஞ் சொன்னார்கள். மறு படியும் சவுல் தூதரை அனுப்பினான். சவுல் கடூர கோபங் கொண்டு:

22. அவன்தானே ராமாத்தாவுக்குப் போய் சொக்கோட்டிலிருக்கிற ஒரு பெருங் கிணற்றருகே வந்து: சமுவேலும் தாவீதும் எந்த இடத்திலிருக்கிறார் களென்று கேட்டான். அதோ ராமாத்தா வுக்கடுத்த நயோத்திலிருக்கிறார்க ளென்று சொல்லப்பட்டது.

23. அப்பொழுது அவன் ராமாவுக் கடுத்த நயோத்துக்குப் போனான். அவன் மேலும் ஆண்டவருடைய ஆவி இறங்கினது; அவன் ராமாத்தாவிலிருந்து நயோத்துக்குச் சேரும் வரைக்குந் தீர்க்கத் தரிசனஞ் சொல்லிக் கொண்டு நடந்து போனான்.

24. தானுந் தன் சட்டைகளைக் கழற்றிப் போட்டுச் சமுவேலுக்கு முன்பாக மற்றவர்களோடு தீர்க்கத்தரி சனஞ் சொன்னான். அன்று பகல் முழுவதும் இரா முழுவதும் வஸ்திர மில்லாமல் விழுந்து கிடந்தான். இதி னாலே சவுலுந் தீர்க்கத்தரிசிகளில் ஒருவனோ என்னும் பழமொழி புறப்பட்டது.