அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 18

எசெக்கியாசின் ஆட்சி.

1.  இஸ்றாயேலின் அரசனான ஏலா வின் குமாரன் ஓசே என்போனுடைய மூன்றாம் வருஷத்தில், அக்காசின் குமார னாகிய எசேக்கியாஸ் அரசாளத் துவக் கினன்.

2. அவன் இராசாவானபோது இருபத்தைந்து வயதாயிருந்தான். எருச லேமிலே இருபத்தொன்பது வருடம் அரசாண்டான்; சக்காரியாவின் புத்திரி யாகிய அவன் தாயின் பேர் ஆபி.

3. அவன் தன் பிதாவான தாவீது செய்தபடி எல்லாம் ஆண்டவருடைய சமுகத்திற்குச் செம்மையானதைச் செய்தான்.

4. அவன் உயர்ந்த ஸ்தானங்களை நாசம் பண்ணி விக்கிரகங்களைத் தகர்த்து அவைகளுக்குப் பிரதிஷ்டையான சோலைகளை அழித்து, மோயீசன் செய்வித்த வெண்கலச் சர்ப்பத்தை ஒடித் தான். ஏனெனில், இஸ்றாயேல் மக்கள் அந்நாள் பரியந்தம் அதற்குத் தூபாரா தனை காட்டிவந்தார்கள். அதற்கு நோயஸ்தான் எனப் பெயரிட்டான்.

5. இவன் தன் நம்பிக்கையெல்லாம் இஸ்றாயேலின் தேவனாகிய ஆண்டவ ரின்மேல் வைத்தான். ஆதலால் அவனுக் குப் பின்னும் அவனுக்கு முன்னுமிருந்த யூதாவின் அரசரிலெல்லாம் அவனைப் போல ஒருவரும் இருக்கவில்லை.

6. இவன் ஆண்டவரையே சார்ந்து, அவர் வழிகளினின்று விலகாமல், கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்த கட்டளை களை அநுஷ்டித்து வந்தான்.

7. ஆதலால் ஆண்டவர் அவனோ டிருந்தார்; அவன் தான் எடுத்த காரி யங்கள் இயாவற்றிலும் வெகு விவேகி யாக நடந்து கொள்வான்; அசீரிய ருடைய அரசனைச் சேவிக்காமல் அவ னதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

8. மேலும் பிலிஸ்தியரைக் காசாம் வரையிலும் முறியவடித்து, அவர்களு டைய எல்லைகளிலுள்ள காவலாளர் கோபுரங்களையும், அரணிக்கப்பட்ட பட்டணங்களையும் நாசம் பண்ணி னான்.

9. இஸ்றாயேலின் அரசனான ஏலாவின் குமாரன் ஓசேயுடைய ஏழாவது வருஷம் ஆகிய எசேக்கியாஸ் இராசா வின் நாலாம் வருஷத்திலே அசீரியா இராசாவாயிருந்த சல்மனாசார் என் போன் சமாரியாவுக்கு வந்து அதை முற் றிகையிட்டு

10. பிடித்தனன். அதைப் பிடிக்க மூன்று வருஷம் சென்றது. ஆதலால் எசேக்கியாஸ் அரசனும் ஆறாம் வருஷ மாகிய இஸ்றாயேலின அரசனான ஓசேயுடைய ஒன்பதாம் வருஷத்திலே தானே அது பிடிபட்டது.

11. அசீரியா இராசா இஸ்றாயே லரைச் சிறைபிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போய்க் கோசான் நதி ஓரமான மேதர்களுடைய பட்டணங்களாகிய ஆலாயிலும், காபோரிலும் அவர்களைக் குடியேற்றினான்.

12. காரணம்: இஸ்றாயேலர் தங்கள் கர்த்ரான தேவனுடைய குரற் சப்தத் திற்குச் செவிகொடாமல், அவருடைய உடன்படிக்கையை மீறி ஆண்டவ ருடைய தாசனான மோயீசன் கற்பித்த யாவற்றையுங் கவனியாமலும் அதின்படி நடவாமலும் போயிருந்தார்கள்.

13. எசேக்கியாஸ் அரசாண்ட பதி னாலாம் வருஷத்தில் அசீரியருடைய இராசா சென்னாக்கெரிப் யூதாவிலிருந்த அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித் தான்.

14. அப்போது யூதாவின் அரசனான எசேக்கியாஸ் லாக்கீசிலிருந்த அசீரியா இராசாவுக்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி: நான் குற்றஞ் செய்தேன்; என் (தேசத்தை) விட்டுத் திரும்பிப் போம். நீர் என்மேல் என்ன சுமை வைத்தாலுஞ் சுமப்பேனென்றான். அப்படியே அசீ ரியா இராசா யூதாவின் அரசனாகிய எசேக்கியாசை முன்னூறு தலேந்து பொன்னையுஞ் செலுத்தக் கட்டளை யிட்டனன்.

15. எசேக்கியாசென்போன் ஆண்ட வருடைய ஆலயத்திலும் இராசாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லாப் பணத்தையுங் கொடுத்தனன்.

16. (அது போதாமலிருந்ததினாலே) எசேக்கியாஸ் ஆண்டவருடைய ஆலயக் கதவுகளின் நிலைகளிலே தான் அழுத்தி யிருந்த பொன் தகடுகளையுங் கழற்றி அவைகளை அசீரியா அரசனுக்குக் கொடுத்தான்.

17. ஆயினும் அசீரியா இராசா லாக் கீசிலிருந்து தர்த்தானையும், ரப்சாரிசை யும், ரப்சாசேசையும் பெரிய சேனை யோடு எருசலேமுக்கு எசேக்கியாஸ் அரச னிடத்தில் அனுப்பினன். இவர்கள் எழுந்து எருசலேமுக்கு வந்து வண்ணார்த் துறை வழியருகாமையிலுள்ள மேல் குளத்துச் சாலகத்தண்டை வந்து நின்ற னர்.

18. அவர்கள் அரசனை அழைப்பித் தார்கள். அவர்கள் அப்பொழுது அரண் மனையது பெரிய காரியஸ்தனான எல்கியாஸ் குமாரனாகிய எலியாக்கிமும், சம்பிரதியான சொப்னாவும் அரசனு டைய கணக்கனான அசாபும் அவர் களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

19. இரப்சாசேஸ் என்போன் இவர் களைப் பார்த்து: நீங்கள் எசேக்கியா சுக்குச் சொல்ல வேண்டிய தென்ன வெனில்: அசீரியா இராசா உம்மைப் பார்த்து: மகா சக்கரவர்த்தியாகிய நீர் நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

20. என்னோடு சமர்செய்ய யோசனை பண்ணியிருக்கிறீர் போலும், என்னை எதிர்க்கத் துணிவதற்கு யாரைத்தான் நம்புகிறீரோ அறியேன்.

21. எஜிப்த்தின் அரசனையே நம்பு கிறீராக்கும். அவன் நெரிந்த நாணலே யன்றி வேறல்ல. நெரிந்த நாணலின்மேல் ஒருவன் சாய்ந்தால் அது உடைந்து அவன் உள்ளங்கயையில் பட்டு உருவிப் போகுமன்றோ? எஜிப்த்தின் அரசனாகிய பாரவோன் தன்னை நம்புகிற யாவருக் கும் அவ்விதமே இருப்பான்.

22. நீர் சிலவிசை: எங்கள் தேவனான ஆண்டவர் பேரில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று சொல்வீர்; (அதற்கு நான்:) அவருடைய உயர்ந்த ஸ்தானங்களையும், பலிப் பீடங்களையும் எசாக்கியாஸ் அழித்து யூதேயரையும், எருசலேமியரையும் பார்த்து: நீங்கள் எருசலேமிலிருக்கிற இந்தப் பீடத்தின் முன் பணியக்கடவீர்களாக வெனக் கட்டளையிட்டானே!

23. இப்போது என் ஆண்டவராகிய அசீரியா இராசாவை எதிர்க்க வாரும் பார்ப்போம். நான் உமக்கு இரண் டாயிரங் குதிரைகளைக் கொடக்கிறேன்; அவைகளின்மேல் ஏறத்தக்க வீரர்கள் அத்தனைகூட உமக்கிருக்கின்றார்களோ என்னமோ?

24. நீர் என் ஆண்டவருடைய அடியார்களில் கடைசித்தரமான ஒரே ஒரு சிறிய தலைவன் முன் எங்ஙனம் எதிர்த்து நிற்கப் போகிறீர்? இரதங்களை யுங் குதிரை வீரர்களையும் அனுப்புவார் களென்று எஜிப்த்தையா நம்புகிறீர்? 

25. (ஆனால் கேளும்:) ஆண்டவ ருடைய சித்தத்தினாலல்லவா நான் இத் தேசத்தை நாசப்படுத்த வந்தேன். ஆண்டவர் என்னைப் பார்த்து: நீ போய் அந்தத் தேசத்தை அழித்துப் போடென்று என்னை இங்கே அனுப் பினார் என்றான்.

26. அப்பொழுது எல்சியாசின் குமார னாகிய எலியாசிமும், சொப்னாயும், ஜோவாகேயும் ரப்சாசை நோக்கி: உமதடி யாராகிய எங்களோடு சீரியா பாஷையில் பேசும். அது எங்களுக்குத் தெரியும். யூதா பாஷையிலே பேச வேண்டாம்; ஏனெ னில் அலங்கத்தின் மேல் நிற்கிற சனங்கள் காதுகொடுத்திருக்கிறார்கள் என்றார்கள்.

27. அதற்கு ரப்சாசேஸ்: உங்கள் ஆண் டவனோடும் உங்களோடுமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுபபினது? இல்லை. உங்க ளோடு கூட தங்கள் கசுமாலத்தைத் தின்னவும், தங்கள சிறுநீரைக் குடிக்கவுந் திரியும் அலங்கத்தில் நிற்கிற மனிதரண் டையே என்னைப் பேச அனுப்பினார் என்று சொல்லி,

28. ரப்சாசேஸ்: எழுந்து நின்று கொண்டு யூதபாஷையில் உரத்தச் சத்த மாக மகா வேந்தனாகிய அசீரியா இராசா வின் வாக்கியத்தைக் கேளுங்கள்.

29. அவர் சொல்லுகிறது: எசேக்கி யாஸ் உங்களை மோசஞ் செய்யாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; உங் களை என் கையிலிருந்து தப்புவிக்க அவனுக்குத் திராணியில்லை.

30. “அவன்: ஆண்டவரை நம்மை நிச்சயமாய் விடுவித்துக்காப்பார். இந்தப் பட்டணம் அசீரியா இராசாவின் கையில் ஒப்புக் கொடுக்கப்படுவதில்லை” எனச் சொல்லி எசேக்கியாஸ் கர்த்தரை நம்பப் பண்ணுவான்.

31. எசேக்கியாசுடைய சொல்லுக்குக் காது கொடாதீர்கள். இதோ அசீரியா இராசா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடு இராசியாக என்னைச் சரண மடையுங்கள். (அப்படி செய்தால்) அவ னவன் தற்காலத் தன் தன் திராட்சைக் கொடியின் கனியையும், அத்தி மரத்தின் கனியையும் புசித்துத் தன் தன் கிணற் றின் தண்ணீரைக் குடிப்பீர்கள்.

32. பிற்பாடு நான் வந்து உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும், ஒலீவ் மரமும், திராட்சைத் தோட்டமுள்ள நேசமும், ஒலீவ் எண்ணெயிலும், தேனி லுஞ் சிறந்த தேசமுமமாகிய மற்றொரு சீமைக்கு உங்களை நான் கொண்டு போ வேன். நீங்கள் அமரிக்கையாய்ச் சீவிப்பீர் கள், சாக மாட்டீர்கள். “கர்த்தர் நம்மைத் தப்புவித்துக் காப்பார்” எனச் சொல்லி உங்களை மோசஞ் செய்யப் பார்க்கிற எசேக்கியாசுக்கு நீங்கள் செவி கொடா திருங்கள்.

33. மற்றச் சனங்களுடைய தேவர் களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா இராசாவின் கைக்குத் தப்புவித் ததுண்டோ?

34. எமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செபர்வாயிம் தேவ னும், ஆனா தேவனும், ஆவா தேவனுந் தான் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

35. அத்தனைச் சாதியார்களின் எல் லாத் தேவர்களுக்குள்ளுந் தங்கள் சொந்த தேசத்தை என் கைக்குத் தப்புவிக்கத் தக்கவர் ஒருவருமில்லை யென்றிருக்கை யிலே உங்கள் கர்த்தர் (மாத்திரமா) எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார்? (யோசனை பண்ணுங்கள்) என்றான்.

36. ஆயினும் சனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பகராது மெளனஞ் சாதித்திருந்தார்கள்; ஏனெனில், அவனுக் குப் பதிலொன்றுஞ் சொல்ல வேண்டா மென்று அரசன் கட்டளையிட்டிருந்தான்.

37. பின்பு அரண்மனையது பெரிய காரியஸ்தருடைய எல்சியாஸ் மகள் எலியாகிமும், சம்பிரதியான சொப்னா யும், இராச்சியத்தின் கணக்கருடைய தலைவனான அசாபின் மகன் ஜோவாகே யும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எசேக்கியாஸ் அரசனிடத்திற் குத் திரும்பி வந்து ரப்சாசேஸ் என்போ னின் வாக்கியங்களை அவனுக்குத் தெரிவித்தனர்.