அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 18

ஜோனத்தாசும் தாவீதும்.

1. சவுலிடத்தில் பேசி முடிந்த போது ஜோனத்தாசின் ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றித்துக் கொண்டது. ஜோனத்தாஸ் தன் உயிர் போல் அவனை நேசித்தான்.

2. அந்நாளிலே சவுல் தாவீதைத் தன்னிடம் வைத்துக் கொண்டான்; அவனுடைய தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்   போக அவனுக்கு விடை கொடுத்த தில்லை.

3. ஜோனத்தாசும் தாவீதும் உடன் படிக்கைப் பண்ணிக் கொண்டார்கள். அவன் இவனைத் தன்னுயிர்போல் நேசித்தான்.

4. ஜோனத்தாஸ் தான் போட் டிருந்த உள்சட்டையைக் கழற்றி அதைத் தாவீதுக்குக் கொடுத்தான். தன் பட்ட யம், வில், வாள், கச்சை, மற்றச் சட்டை களையுங் கொடுத்தான்.

5. சவுல் தாவீதை அனுப்புங் காரி யங்களுக்கெல்லாம் இவன் புறப்பட்டுப் போய் விமரிசையாய் நடந்துகொள் வான்; சவுல் அவனைப் போர்வீரர்களுக்கு அதிபதியாக்கினான். தாவீது ஜனங்களுக் கெல்லாம் விசேஷமாய் சவுலுடைய ஊழியர்களுக்குப் பிரியப்பட்டிருந்தான்.

6. தாவீது பிலிஸ்தியனைச் செயித் துத் திரும்பி வருகையில் இஸ்றாயேலின் சகல பட்டணங்களிலுமிருந்து ஸ்திரீகள் சந்தோஷமாய் மேள தாளத்துடன் கும்ப லாய் ஆடிப்பாடிக் கொண்டு சவுல் இராசாவுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.

7. அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடி: சவுல் கொன்றது ஆயிரம் பேர்; தாவீது கொன்றது பதினாயிரம் பேர் என்று சொல்லிக் கொண்டு செல்லுவார்கள்.

8. சவுல் மிகுந்த எரிச்சலடைந்தான். இந்த வார்த்தை அவன் பார்வைக்கு வெறுப்பாயிருந்தது. அவர்கள்: தாவீ துக்குப் பதினாயிரம் எனக்கு ஆயிரம் கொடுத்தார்களே; இன்னும் இராஜாங் கத்தை விட அவனுக்கு என்ன குறைச் சலாயிருக்கிறதென்று சொன்னான். 

9. அந்நாள் முதல் சவுல் தாவீதை நல்ல முகத்துடன் பார்க்கவில்லை.

10. மறுநாளிலே ஆண்டவரால் விடப் பட்ட கெட்ட அரூபி சவுலைப் பிடித்துக் கொண்டது. அவன் தன் வீட்டுக்குள்ளே அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தான். தாவீது நாள்தோறுஞ் செய்வதுபோலத் தன் கையால் வீணை வாசித்துக் கொண்டிருந்தான். சவுல் ஈட்டியைக் கையில் வைத்துக் கொண்டு,

11. தாவீதைச் சுவருடன் தைத்துக குத்திப் போடுவேனென்று ஈட்டியை அவன் மேல் எறிந்தான். தாவீது இரண்டு விசையும் விலகி அவனுடைய பார்வைக்குத் தப்பித்துக் கொண்டான்.

12. ஆண்டவர் தன்னைவிட்டுத் தாவீ துடனிருப்பதினால் சவுல் அவனுக்குப் பயந்திருந்தான்.

13. சவுல் அவனைத் தன்னிடத்திலில் லாதபடிக்கு அகற்றி அவனை ஆயிரம் பேருக்கு அதிகாரியாக ஸ்தாபித்தான். அப்படியே தாவீது சனங்களுக்கு முன் பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.

14. தாவீது தன் கிரிகைகளில் எல்லாம் புத்திமானாக நடப்பான். ஆண்டவர் அவனுடன் இருந்தார்.

15. அவன் மகா விமரிசையுடன் நடக் கிறதைக் கண்டு சவுல் அவன் மட்டில் எச்சரிக்கையாயிருக்கத் துவக்கினான்.

16. இஸ்றாயேலரும் யூதேயா ஜனங் களும் ஆகிய யாவருந் தாவீதை நேசிப்பார்கள். ஏனெனில் அவனே அவர் களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமா யிருந்தான்.

17. ஒருநாள் சவுல் தாவீதை நோக்கி: இதோ என் மூத்த குமாரத்தியாகிய மேரோபை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன். நீ மாத்திரந் தைரிய வீர னாயிருந்து ஆண்டவருடைய யுத்தங் களைச் செய்யென்றான். (சவுலின் யோசனை) என் கை அவன் மேல் இரா மல் பிலிஸ்தியர் கையே அவன் மேல் விழட்டும் என்று எண்ணிக் கொண்டிருந் தான் விழட்டும் என்று எண்ணிக் கொண் டிருந்தான்.

18. தாவீது சவுலை நோக்கி: இராசா மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜீவனும் எம்மாத்திரம்? இஸ்றாயே லிலே என் தகப்பன் வமிசமும் எம்மாத் திரமென்றான்.

19. சவுலின் குமாரத்தியாகிய மேரோ பைத் தாவீதுக்குக் கொடுக்க வேண்டிய தாக நேரிட்ட போது அவள் மோலாத் தித்தனாகிய அதிரியேலுக்குப் பெண்சாதி யாகக் கொடுக்கப்பட்டாள்.

20. சவுலின் வேறொரு குமாரத்தி யாகிய மிக்கோலென்பவள் தாவீதின் மேல் பட்சங் கொண்டாள். இது சங்கதி சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் சந்தோஷமுற்று,

21. அவள் அவனுக்குக் கன்னியாவா ளென்றும், பிலிஸ்தியர் கை அவன் மேல் விழுமென்றுந் தனக்குள்ளே எண்ணி: நான் அவளை அவனுக்குக் கொடுப் பேனென்று சவுல் சொன்னான். பின்னும் அவனைப் பார்த்து: நீ இரண்டு காரியங் களைப்பற்றி இன்று எனக்கு மருமகனா யிருப்பாயென்றான்.

22. பிறகு சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் தாவீதோடு இரகசிய மாய்ப் பேசி: இராசா உன் பேரில் சனுவா யிருக்கிறார்; அவருடைய ஊழியர் எல்லோரும் உம்மை நேசிக்கிறார்கள்; ஆதலால் நீர் இராசாவுக்கு மருமக னானால் நலமென்று சொல்லுங்களென் றான்.

23. அவ்விதமே அவர்கள் இந்த வார்த்தை எல்லாஞ் சொல்லித் தாவீதின் செவிகளுக்கு எட்டப் பேசினார்கள். அதற்குத் தாவீது: இராசாவின் மருமக னாயிருக்கிறது உங்களுக்கு அற்பமென்று தோன்றுகிறதா? நான் ஏழையும் அற்ப மனிதனுமாயிருக்கிறேனே என்றான்.

24. தாவீது இன்னபடி சொன்னா னென்று சவுலின் ஊழியர்கள் அவனுக் குத் தெரிவித்தார்கள்.

25. அதைக் கேட்டுச் சவுல்: நீங்கள் அவனைப் பார்த்து இராசாவுக்குப் பரிசம் அவசியமில்லை, இராசாவினுடைய சத்துராதிகளைப் பழிவாங்கிப் பிலிஸ் தியரின் நூறு நுனித்தோல்களை நீர் கொண்டு வந்தாலே போதுமென்று சொல்லுங்களென்றான்.

26. சவுல் சொன்ன வார்த்தைகளை இவனுடைய ஊழியர்கள் தாவீதுக்குத் திரும்பத் தெரிவித்தபோது, தாவீது சந்துஷ்டியாகி இராசாவினுடைய மருமகனாயிருக்க விரும்பினான். 

27. கொஞ்ச நாட்களுக்குப் பின் தாவீது எழுந்து தன் கீழிருந்த மனிதர் களோடு போய் பிலிஸ்தியரில் இருநூறு பேர்களைக் கொன்று அவர்களுடைய நுனித்தோல்களைக் கொண்டுவந்து இராசாவுக்கு மருமகனாயிருக்கும் பொருட்டு அவைகளை அவன் முன் எண்ணினான். ஆகையால் சவுல் தன் குமாரத்தியாகிய மிக்கோலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

28. சவுல் பார்த்து ஆண்டவர் தாவீ துடன் இருப்பதாகக் கண்டுபிடித்தான். சவுலின் குமாரத்தியாகிய மிக்கோல் தாவீ தினிடத்தில் மிகுந்த அன்புகூர்ந்திருந் தாள்.

29. சவுல் அதிகம் அதிகமாய்த் தாவீதுக்குப் பயப்படத் துவக்கினான். நாளுக்கு நாள் தாவீதுக்குச் சத்துருவா யிருந்தான்.

30. பிலிஸ்தியரின் அதிபதிகள் சண் டைக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டது முதற்கொண்டு தாவீது சவுலின் ஊழியர்களைப் பார்க்கிலும் அதிக விமரிசையாய் நடந்து கொண்டான். அவனுடைய பேர் வெகு கீர்த்தி யடைந்தது.