நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 18

தான் வம்சத்தார் அறுநூறு பேரும் லாயீசுக்கு வந்து குடியேறி மிக்காசின் ஆசாரியனையும் வக்கிரத்தையும் எடுத்துக்கொண்டு போனது. 

1. அக்காலத்தில் இஸ்ராயேலில் அரசனில்லை. தான் வம்சத்தார் தாங்கள் வாசஞ் செய்ய ஒரு ஸ்தலங் தேடிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் மற்ற வம்சங்களைப் போல் அவர்களுக்குச் சுதந்தரப்பாகங் கிடைக்கவில்லை.

2. ஆகையால் தேசத்தை உளவு பார்த்து வரும்படி தான் புத்திரர் தங்கள் கோத்திரத்திலும், சொந்த வம்சத்திலும் பலவான்களாகிய ஐந்து பேர்களைச் சாராவிலும், எஸ்தா வேலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய் சுற்றிப் பார்த்து ஆராய்ந்து வாருங்கள் என்றார்கள். அவர்கள் புறப்பட்டு எப்பிராயீம் மலை சேர்ந்து, மிக்காஸ் வீட்டில் பிரவேசித்து அங்கு இராத் தங்கினார்கள்.

3. அவர்கள் அந்த வீட்டிலிருக்கையிலே லேவியனான வாலிபனுடைய வார்த்தைகளால் அவனை அறிந்துகொண்டு அவனை நோக்கி: உன்னை இவ்விடங் கொண்டுவந்ததார்? நீ இவ்விடத்தில் செய்கிறதென்ன?நீ இங்கே வந்த முகாந்தரம் என்னவென்று கேட்டார்கள்.

4. அதற்கு அவன்: மிக்காஸ் எனக்கு இன்னின்னபடி செய்திருக்கிறான்; நான் அவனுக்கு ஆசாரியனாயிருக்கும்படி அவன் சம்பள முங் கொடுக்கிறான் என்றான்.

5. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அனுகூலமாக முடியு மா? நாங்கள் நினைத்த காரியம் கைக்கூடி வருமாவென்று நாங்களறிய விரும்புகிறோம். நீ ஆண்டவரிடத்தில் கேள் என்றார்கள்.

6. அதற்கு அவன்: நீங்கள் சமாதானத் தோடு போங்கள், ஆண்டவர் உங்கள் வழியையும் உங்கள் பிரயாணத்தையுந் தயவோடு பார்க்கிறார் என்றான்.

7. ஆகையால் அவர்கள் ஐவரும் புறப்ப ட்டு லாயீஸுக்குப் போய் அவ்விடத்தில் ஜன ங்கள் சிதோனியரின் வழக்கப்படி யாதொரு பயமில்லாமல் அமரிக்கையாயும், சுகமாயும் இருக்கிறதையும், எதிரி ஒருவருமில்லாமல் அச்சமின்றிச் செல்வத்தில் வாழ்கிறதையும், அவர்கள் சிதோனினின்றும் மற்ற மனிதரிடத் தினின்றும் பிரிந்திருக்கிறதையுங் கண்டார்கள்.

8. சாராவிலும் எஸ்தாவேலிலும் இருந்த தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்த போது: நீங்கள் என்ன செய்தீர்களென்று கேட்ட சகோதரர்களுக்கு:

9. எழுந்திருங்கள், அவர்களிடம் போவோ ம். செல்வமுஞ் செழிப்புமான பூமியைக் கண் டோம்; அசதி பண்ணவும் வேண்டாம், தாம திக்கவுமாகாது. போய் அதைச் சுதந்தரிப் பதற்கு பிரயாசை ஒன்றுமில்லை.

10. அமரிக்கையாயிருக்கிற ஜனங்களிடத் தில் செல்லுவோம், விஸ்தாரமான தேசத்தில் பிரவேசிப்போம். பூமியில் விளையும் சகல வஸ்துக்களிலும் அது செழுமையான தேசம். ஆண்டவர் அப்படிப்பட்ட தேசத்தை நமது கையில் அளிப்பார் என்றார்கள்.

11. அப்பொழுது சாராவிலும எஸ்தாவிலு மிருக்கிற தான் வம்சத்தாரில் அறுநூறு பேர் ஆயுதபாணிகளாய் அங்கிருந்து புறப்பட்டு,

12. யூதாவிலுள்ள காரியாத்யாரிமில் பாளையம் இறங்கினார்கள். அன்று முதல் அந்த ஸ்தலம் தானின் கோட்டையயன்று அழைக்கப்பட்டு வருகின்றது. அது காரியாத் யாரிமுக்குப் பின் புறத்தில் இருக்கின்றது.

13. அவ்விடத்தினின்று எப்பிராயீம் மலைக் குச் செனறார்கள். மிக்காசின் வீட்டுக்கு வந்த போது,

14. லாயிஸ் நாட்டை உளவுபார்க்க முன் னாடியே அனுப்பப்பட்டிருந்த ஐந்து பேர் தங்கள் மற்றச் சகோதரரை நோக்கி: அந்த வீட்டிலே ஏப்போத்தும், தெரப்பீம்களும், கொத்து வேலையான சுரூபமும், வார்ப்பு வேலையான விக்கிரமும் இருக்கிறது உங்களுக் குத் தெரியும் அல்லவா? உங்களுக்கு இஷ்டமா னதைச் செய்யுங்கள் என்றார்கள்.

15. பிறகு அவர்கள் சற்றே வழியை விட்டு விலகி மிக்காசின் வீட்டிலிருந்தலேவிய வாலி பன் அறைக்குட் சென்றார்கள். அவனுக்கு மரியாதையாய் வந்தனஞ் செய்தார்கள்.

16. ஆயுதபாணிகளான அறுநூறுபேரும் வாசற்படி பின்புறத்திலே நின்றுகொண்டிருந் தார்கள்.

17. வாலிபன் அறைக்குள் நுழைந்தவர்க ளோ கொத்து வேலையான சுரூபத்தையும், ஏப்போத்தையும், தெரப்பீம்களையும், வார்ப்பு வேலையான விக்கிரகத்தையும் எடுக்க முயலுகையில் ஆசாரியன் வாசற்படி முன்பாக நின்றுகொண்டிருந்தான்; ஆயுத பாணிகளான அறுநூறு பேர்களோ சற்று தூரத்தில் காத்திருந்தார்கள்.

18. உள் நழைந்தவர்கள் கொத்து வேலை யான சுரூபத்தையும், ஏப்போத்தையும், தெரப் பீம்களையும், வார்ப்பு வேலையான விக்கிரகத் தையும் எடுத்தார்கள்; ஆசாரியன் அவர்களை நோக்கி: என்ன செய்கிறீர்களென்றான்.

19. அதற்கு அவர்கள்: பேசாமல் வாயை மூடிக்கொள், எங்கள் தகப்பனும் ஆசாரியனு மாயிருக்க நீ எங்களோடுகூட வா; ஒருவன் வீட்டில் ஆசாரியனாயிருப்பதைவிட இஸ்ரா யேலின் ஓர் கோத்திரத்திற்கும், வம்சத்திற்கும் ஆசாரியனாயிருப்பது மேன்மையல்லவா என்றார்கள்.

20. அவர்கள் சொன்னதைக் கேட்டு அவன் சரிதானென்று சம்மதித்து ஏப்போத்தையும், விக்கிரகங்களையும் சித்திரச் சுரூபத்தையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட் டான்.

21. அவர்கள் சிறுவர்களையும், ஆடு மாடு களையும், விலை உயர்ந்த வஸ்துகளையும் முன்னால் கொண்டுபோதும்படி செய்து தாங் களும் புறப்பட்டு,

22. மிக்காஸின் வீட்டினின்று வெகுதூ ரஞ் சென்றபோது, மிக்காஸோடு வசித்தி ருந்த மனிதர் கூச்சலிட்டுக்கொண்டு கூட்டங் கூடி அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

23. அவர்களைப் பின்பற்றிச் சப்தமிட் டார்கள். அவர்களோ இவர்களைத் திரும்பிப் பார்த்து மிக்காஸை நோக்கி: நீ என்ன கேட் கிறாய், ஏன் சப்தமிடுகிறாய் என்றார்கள்.

24. அதற்கு அவன்: எனக்கென்று நான் செய்துவைத்திருந்த என் தேவர்களையும், என் ஆசாரியனையும், எனக்குண்டான சகலத்தை யும் நீங்கள் எடுத்துக்கொண்டு: அப்புறம் ஏன் கூவுகிறாயயன்று நீங்கள் கேட்கிறீர்களே என்றான்.

25. அவனை நோக்கி தான் குமாரர்: எங்க ளிடம் அதிகமாய் பேசாதே, எச்சரிக்çக் கோப முள்ள மனிதர் உன்மேல் விழுந்தால் நீயும் உன் குடும்பமும் அழிந்து போவீர்கள் அல் லோ என்றார்கள்.

26. இப்படிச் சொல்லி அவர்கள் தங்கள் வழியே நடந்து போனார்கள். மிக்காஸோ அவர்கள் தன்னிலும் பலவான்களென்று கண்டு தன் இல்லிடந் திரும்பினான்.

27. அறுநூறு பேரோ ஆசாரியனையும் மேற் சொன்ன வஸ்துகளையுங் கொண்டு போய் லாயீஸ் ஊரைச் சேர்ந்து பயமில்லாமல் சமாதானத்திலிருந்த ஜனங்களை வாளுக்கு இரையாக்கி, அக்கினியால் பட்டணத்தை சுட்டெரித்துப் போட்டார்கள்.

28. அது சிதோனுக்கு வெகுதூரமாயிருந்த தினாரும், ஊராருக்கு வேறு மனிதர்களோடு சம்பந்தமும் வியாபாரமும் இல்லாததினா லும் இவர்களைத் தப்புவிப்பார் ஒருவருமில் லை. லாயீஸ் நகரம் ரொகோப் பள்ளத்தாக்கில் இருந்தது. தானின் புத்திரர் அதைப் புதிதாய்க் கட்டி அதின் குடியிருந்தார் கள்.

29. பூர்வத்திலே லாயினென்று அழைக்கப் பட்ட இந்த நகரத்துக்கு இஸ்ராயேலின் குமா ரனான தானின் புத்திரர் தங்கள் கோத்திரத் தின் தலைவனுடைய நாமத்தின்படி தான் நகரமென்று புதுப்பெயரை இட்டார்கள். மீ

30. அப்பொழுது அவர்கள் (மேற்சொல் லிய) கொத்து வேலையான் சுரூபத்தைத் தங்க ளுக்குத் (தேவனாக) ஸ்தாபித்து மோயீசனுக்குப் பிறந்த கேர்சாமின் குமாரனா கிய ஜோவாத்தானையும் அவன் புத்திரர்க ளையும் தான் நியமித்தார்கள். தான் புத்திரர் சிறைப்பட்ட நாள் மட்டும் அவ்விதமே நடந்தது.

31. தேவனாலயம் சீலோவிலிருந்த காலமு ழுதும் அவர்கள் மிக்காஸின் விக்கிரகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.