சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 17

கடவுள் மனிதனைத் தமது சாயலாகச் சிருஷ்டித்தார்.

1. கடவுள் மண்ணால் மனிதனை உண்டாக்கினார்; தமது சாயலாக அவனைச் சிருஷ்டித்தார்.

2. அவர் திரும்பவும் அவனை மண்ணாகவே மாற்றினார்; அவனுக்குத் தகுந்த பலத்தால் அவனை உடுத்தினார்.

3. நாட்களின் எண்ணிக்கையையும் காலத்தையும் அவனுக்குக் குறித்தார்; பூமியிலுள்ளவற்றின்மீது அவனுக்கு அதிகாரங் கொடுத்தார்.

4. மாம்சமெல்லாம் அவனுக்குப் பயப்படும்படி திட்டம் செய்தார்; அவனும் மிருகங்கள்மீதும் பறவைகள் மீதும் அதிகாரஞ் செலுத்தினான்.

5. அவனிடமிருந்து அவனைப் போலவே அவனுக்கு ஓர் துணையை உண்டாக்கினார்; அவர்களுக்கு விவேகத்தையும், நாவையும், கண்களையும், காதுகளையும், திட்டமிடுவதற்கு இருதயத்தையும் கொடுத்தார்; புத்தியின் அறிவைக் கொண்டு அவர்களை நிரப்பினார்.

6. ஞான அறிவையும் அவர்களில் சிருஷ்டித்தார்; அவர்கள் இருதயத்தைப் ஞானத்தால் நிரப்பினார், நன்மை தீமை இரண்டையும் அவர்களுக்குக் காட்டினார். 

7. தமது செய்கைகளின் மகத்துவத்தை அவர்களுக்குக் காண்பிக்க அவர்கள் இருதயங்களின் மேல் தமது கண்ணை வைத்தார்.

8. தாம் அர்ச்சித்திருக்கிற திருப்பெயரை அவர்கள் போற்றித் துதித்து, தமது அற்புதச் செயல்களில் மகிமை பாராட்டும்படியாகவும், தமது செயல்களின் மகிமையுள்ள காரியங்களை அவர்கள் அறிவிக்கும்படியாகவும் அவர் சித்தங்கொண்டார்.

9. மேலும், அவர்களுக்கு போதகங்களையும், வாழ்வின் திருச்சட்டத்தையும் உரிமைச் சொத்தாகத் தந்தார். 

10. அவர்களோடு நித்திய உடன் படிக்கை செய்துகொண்டார்; தமது நீதியையுந் தீர்மானங்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

11. அவரது மகிமையின் மகத் துவத்தை அவர்களுடைய கண்கள் கண்டன; அவருடைய மகிமையுள்ள குரலை அவர்களுடைய செவிகள் கேட்டன; மேலும், சகல அக்கிரமத் தையும் பற்றி எச்சரிக்கையாயிருங்கள் என்று அவர் அவர்களுக்குச் சொன்னார்.

12. மேலும் அவர்கள் ஒவ்வொரு வருக்கும் அவனவனுடைய அயலா னைப் பற்றிக் கட்டளை தந்தார். 

13. அவர்களது வழிகள் எப்போ தும் அவர் முன்பாக இருக்கின்றன; அவருடைய கண்களுக்கு அவை மறைவாயில்லை.

14. ஒவ்வொரு மக்களினத்துக்கும் ஓர் ஆட்சியாளனை அவர் ஏற்படுத்தி னார்.

15. இஸ்ராயேல் மக்களினம் கடவு ளின் வெளிப்படையான பாகமாக்கப் பட்டது.

16. அவர்களுடைய செய்கைகள் எல்லாம் சூரியனைப்போல அவருக்கு முன்பாக இருக்கின்றன; இடை விடாது அவருடைய கண்கள் அவர் களுடைய வழிகளின்மீது இருக் கின்றன.

17. அவர்களுடைய உடன்படிக் கைகள் அவர்களுடைய அக்கிரமத் தால் மறைக்கப்படவில்லை; அவர் களுடைய அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுக்கு முன்பாக இருக்கின்றன.

18. மனிதன் செய்யும் தர்மமானது அவருக்கு முன் ஒரு சிறு முத்திரை போலிருக்கிறது; ஒரு மனிதனின் வரப் பிரசாதத்தை அவர் தம் கண்ணின் மணி போலக் காப்பாற்றுவார்.

19. பிறகு அவர் எழுந்து அவர் களுடைய சம்பாவனையை அவர் களுக்குத் தருவார். ஒவ்வொருவனுக் கும் அவனது சம்பாவனையை அவனு டைய தலையின்மீது வைப்பார், அவர்களை பூமியின் குடல்களுக்குள் திருப்பி அனுப்புவார்.

20. ஆனால் மனந்திரும்பித் தவம் செய்கிறவர்களுக்கு நீதியின் பாதை ஒன்றைத் தந்திருக்கிறார், பொறுமை யில் தளர்ந்துகொண்டிருந்தவர்களை அவர் பலப்படுத்தினார், சத்தியத்தின் திரட்டுக்கு அவர்களை நியமித்தார்.

21. ஆண்டவரிடமாய்த் திரும்பி உன் பாவங்களை விட்டுவிடு.

22. ஆண்டவருடைய சமுகத்தில் உன் செபத்தைச் செய், மனம் நோகச் செய்வதைக் குறைத்துக்கொள்.

23. ஆண்டவரிடம் திரும்பி, உன் அநீதத்தினின்று விலகு; அருவருப் புக்குரிய அக்கிரமத்தை வெகுவாக அருவருத்து விடு.

24. கடவுளுடைய நீதிகளையும் தீர்ப்புகளையும் அறிந்து, அவர் உனக்கு நியமித்த அந்தஸ்திலும் உன்னத கடவுளிடம் ஜெபிப்பதிலும் நிலைத்திரு.

25. ஜீவியர்களாயும், கடவுளைத் துதிக்கிறவர்களாயும் இருப்பவர் களோடு பரிசுத்த யுகத்தின் பாக் கியத்தை நெருங்கிப் போ.

26. அவபக்தியுள்ளவர்களின் தப்பறையில் நில்லாதே; மரணத்திற்கு முன் கடவுளுக்கு மகிமை செலுத்து. மரித்தவர்களிடம் தேவ துதி ஒன்றுமில்லாமையாக அழிந்து போகிறது.

27. வாழும்போதே கடவுளுக்கு நன்றி செலுத்து; நீ உயிரோடும், உடல் நலத்தோடும் இருக்கும்போதே அவருக்கு நன்றி செலுத்தி, அவரைத் துதிசெய்து வாழ்த்து; அவருடைய இரக்கங்களை மகிமைப்படுத்து.

28. தம்மிடம் திரும்புகிறவர்கள் மீது ஆண்டவருடைய இரக்கமும் அவருடைய மன்னிப்பும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கின்றது!

29. மேலும், எல்லாக் காரியங்களும் மனிதர்களிடம் இருக்க முடியாது; ஏனெனில் மனுமகன் அழிவற்றவன் அல்ல; அவர்கள் தீமையின் வீண் பெருமையில் இன்பம் காண் கிறார்கள். 

30. சூரியனைவிடப் பிரகாசமுள்ளது எது? இருந்தும் அதுவும் மறைக்கப் படுகிறது; மாம்சமும் இரத்தமும் கண்டுபிடித்துள்ளதை விட அதிகத் தீமையானது எது? இது கண்டிக்கப் படும்.

31. பரலோக சிகரத்தின் வல்லமையை அவன் காண்கிறான். சகல மனிதரும் மண்ணும் சாம்பலுமா யிருக்கிறார்கள்.