அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 17

எலியாஸ் தீர்க்கதரிசி.

1.  கலாதிலுள்ள குடிகளில் தெஸ்பேயனாகிய எலியாஸ் ஆக்காபை நோக்கி: எனக்குப் பிரசன்னமாயிருக்கிற இஸ்றா யேலின் தேவனாகிய கர்த்தர் வாழ்க, என் வாக்கினால் அல்லாது இந்த வருஷங் களிலே பனியும் மழையும் பெய்யாது என்றான்.

2. பின்னுங் கர்த்தர் எலியாசை நோக்கிச் சொன்னதாவது: 

3. நீ இவ்விடத்தைவிட்டுக் கீழ்த் திசை நோக்கிப் போய் யோர்தானுக்கு நேராயிருக்கிற காறீத் ஆற்றோரத்தில் ஒளித்துக்கொண்டிரு.

4. நீ அந்த ஆற்றின் ஜலத்தைப் பானம் பண்ணுவாயாக.  அவ்விடத்தில் உன்னை போஷிக்கக் காகங்களுக்குக் கட்டளையிட்டோமென்றார்.

5. இதைக் கேட்கவே எலியாஸ் புறப்பட்டுக் கர்த்தருடைய வாக்கின் படியே யோர்தானுக்கு எதிராயிருக்கிற காறீத் ஆற்றோரத்தில் தங்கியிருந்தான்.

6. காகங்கள் அவனுக்குக் காலை யிலும் மாலையிலும் அப்பமும் மாமிச மும் கொண்டுவந்தன.  அந்த ஆற்றின் ஜலத்தைப் பானம்பண்ணிக் கொண்டு வந்தான்.

7.   தேசத்தில் மழை பெய்யாததி னால் சில நாட்களுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று.

8. அப்போது கர்த்தர் அவனை நோக்கிச் சொன்னதாவது: 

9. நீ சீதோனியரின் ஊராகிய சரேப் தாவுக்குப் போய் அங்கே தங்கியிரு; உன் னைப் போஷிக்கும்படியாய் அங்கேயிருக் கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட் டோம் என்றார்.

10. அப்படி எலியாஸ் புறப்பட்டுச் சரேப்தாவுக்குப் போனான்; அப்பட்டணத்து முன்வாசலுக்கு அவன் வரவே அங்கே ஓர் விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தனள். அவன் அவளைக் கூப்பிட்டு அவளை நோக்கி: நான் பானம் பண்ணும்படி ஓர் பாத்திரத்தில் கொஞ்சம் ஜலங் கொண்டு வா என்றான்.

11. அவன் ஜலங்கொண்டுவரப் புறப்பட்டுப் போகையில் அவள் பிறகாலேயிருந்து அவளைக் கூப்பிட்டு: எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டுவாவென்றான்.

12. அவள் அவனுக்கு மறுமொழி யாக: உம்முடைய தேவனாகிய கர்த்தர் வாழ்க, என்னிடத்தில் அப்பமே கிடை யாது; என்னிடத்தில் அடிப் பானையிலே உள்ளங்கை கொண்டது அம்மாத்திரம் மாவும், சிறு கலயத்தின் அடியிலே கொஞ் சம் எண்ணெயுந் தானிருக்கிறது; அப்பஞ் சுடத்தானே இந்த இரண்டொரு விறகைப் பொறுக்கினேன்; அதைச் சாப் பிட்டுவிட்டு நானும் என் குமாரனும் மறுபடி ஒன்றுமில்லாமல் இருவருஞ் சாகப்போகிறோமென்றான்.

13. அப்போது எலியாஸ் அவளைப் பார்த்து: பயப்படாதே, நீ போய் நீ சொன்ன பிரகாரமே செய்; ஆனாலும் முதல் அதிலே எனக்கொரு சிறிய அடை சுட்டு எனக்குக் கொண்டுவா; பிறகு உனக்கும் உன் மகனுக்கும் அப்பம் முஸ்திப்பு பண்ணலாம்.

14. ஏனென்றால் கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மாவு செலவழிந்து போவதுமில்லை; கலயத்தில் எண்ணெய் குறைந்துபோவதுமில்லை என்று இஸ்றா யேல் தேவனாகிய கர்த்தர் சொல்லு கிறார் என்றான்.

15. அவள் போய் எலியாஸ் சொற்படி செய்தாள், அவனும் புசித்தான்; அவளும் அவள் வீட்டாரும் சாப்பிட் டார்கள்.

16. கர்த்தர் எலியாசைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அந் நாள் முதற்கொண்டு பானையில் மாவு செல வழிந்ததுமில்çல் கலயத்தில் எண்ணெய் குறைந்ததுமில்çல் இதற்குப் பிற்பாடு,

17. குடும்பத்துத் தலைவியாகிய அந்த ஸ்திரீயின் குமாரன் பின்னும் வியாதியில் விழுந்தான்.  அவ்வியாதி எவ்வளவு கொடுமையாயிருந்ததென் றால், அவன் மூச்சற்றுப் பிரேதம் போலா னான்.

18. அப்போது அந்த ஸ்திரீ எலியாசை நோக்கி: தேவ மனுஷனே, உமக்கும் எனக்கும் என்ன?  நீர் என் அக்கிரமத்தை நினைப்பூட்டவும் என் குமாரனைச் சாகடிக்கவுமோ என்னிடத்தில் வந்தீர் என்றாள்.

19. அதற்கு எலியாஸ்: உன் குமா ரனை என்னிடத்தில் கொடு, என்று சொல்லி அவன் மடியிலிருந்த அந்தப் பிள்ளையைத் தானே வாங்கி எடுத்துக் கொண்டு தானிருக்கும் அறைக்குப் போய் அவனைத் தன் கட்டிலின் மேல் வைத்து:

20. என் தேவனாகிய கர்த்தரே, தன்னாலானமட்டும் என்னைப் போஷித்து வந்த இந்த விதவையின் குமாரனைச் சாகடித்தே அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ? என்று கடவுளை நோக்கி அபயமிட்டு,

21. பிறகு பிள்ளையின் சரீரத்தை யளந்தாப்போல் அவன் மூன்று முறையும் அதின்மேல் தன்னைக் கிடத்தி: என் தேவ னாகிய கர்த்தரே இந்தப் பிள்ளையின் ஆத்துமாவை அவன் சரீரத்தில் திரும்பப் பிரவேசிக்கச் செய்தருளும் என்று கர்த்தரை நோக்கிப் பிரார்த்தித்தான்.

22. கர்த்தர் எலியாசின் விண்ணப்பத் துக்கிரங்கினார்; பிள்ளையின் ஆத்துமம் அவனுள் திரும்பி வர அவன் உயிர் பிழைத்தான்.

23. அப்பொழுது எலியாஸ் பிள்ளையை எடுத்துக்கொண்டு மேல் வீட்டிலிருந்து கீழ் வீட்டுக்கு வந்து அவனை அவன் தாயின் கையிலே கொடுத்து, இதோ உன் மகன் உயிரோடிருக்கிறானென்றான்.  

24. அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாசை நோக்கி: நீர் தேவ மனுஷ னென்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்குங் கர்த்தருடைய வாக்கெல்லாம் உண்மையென்றும் இச்சம்பவத்தினால் அறிந்திருக்கிறேன் என்றாள்.