அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 17

தாவீதும் கோலியாத்தும்

1. பிலிஸ்தியர் மறுபடியுஞ் சண்டைக்குத் தங்கள் படைகளைச் சேர்த்துக் கொண்டு யூதாவினுடைய சொக்கோவில் வந்து சொக்கோவுக்கும் அசேக்காவுக்கும் நடுவில் தொமீம் எல்லைகளிலே பாளையம் இறங்கினார்கள்.

2. சவுலும் இஸ்றாயேல் மக்களும் ஒருமித்துக் கூடி தெரேபேந்து கணவாயில் வந்து பிலிஸ்தியருக்கு எதிராகச் சண்டை தொடுப்பதற்கு அணிவகுத்து நின்றார்கள்.

3. பிலிஸ்தியர் அந்த பக்கத்தில் ஒருமலை மேலும், இஸ்றாயேலர் இந்தப் பக்கத்தில் வேறொரு மலையின்மேலும் இருந்தார்கள். அவர்கள் நடுவே ஒரு கணவாயிருந்தது.

4. அப்பொழுது கேத் நாட்டானா கிய கோலியாத்தென்று பேர்கொண்ட ஒரு ஈனமுள்ள மனிதன் பிலிஸ்தியர் பாளையத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் ஆறுமுழம் ஒரு சாண் உயர முள்ளவன்.

5. அவன் தலையில் வெண்கலச் சீராவைப் போட்டு மீன் செதிலைப் போன்ற ஒரு போர்க்கவசம் அணிந் திருந்தான். அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சீக்கலான வெண்கலமாம்.

6. கால்களில் வெண்கலக் கவசத் தையும், தோள்களின்மேல் ஒரு வெண்கலக் கேடயத்தையுந் தரித்துக் கொண்டிருந்தான்.

7. அவன் ஈட்டித்தாங்கும் நெசவுக் காரர்களுடைய படைமரம் போலிருந் தது. அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சீக்கல் இரும்பாயிருக்கும். அவனுடைய ஆயுததாரி அவனுக்கு முன்னாக நடப் பான்.

8. அவன் வந்து நின்று இஸ்றாயேல் பட்டாளங்களுக்கு விரோதமாய்ப் பார்த்துக் கூவி: என் சண்டைக்கு முஸ்திப் பாய் வந்தீர்கள்; நான் பிலிஸ்தியனல் லவா? நீங்கள் சவுலின் ஊழியர்களல் லவா? உங்களுக்குள் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள். அவன் என் னுடன் தனிச் சண்டை பண்ண வரட்டும். 

9. அவன் என்னுடன் சண்டை போடவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால் நாங்கள் உங்கள் அடிமைகளா யிருப்போம்; நான் அவனைக் கொன்று போட்டாலோ, நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு ஊழியஞ் செய்வீர்கள் என்பான்.

10. பின்னும் அந்தப் பிலிஸ்தியன்: நான் இன்றைக்கு இஸ்றாயேலின் சேனை களை நிந்தித்திருக்கிறேனாகையால் ஒரு வீரனை என்னிடம் அனுப்புங்கள். அவன் தன்னோடு தனிச் சண்டை போடட்டு மென்று சொல்லுவான்.

11. பிலிஸ்தியனுடைய இவ்விதமான வார்த்தைகளைச் சவுலும் இஸ்றாயே லித்தாரெல்லோருங் கேள்விப்பட்டுக் கலங்கி அதிகமாய்ப் பயந்து கொண்டிருந் தார்கள்.

12. முன் சொல்லப்பட்ட தாவீது யூதாவிலுள்ள பெத்லேமூரானும் இசாயி யென்று பேர்கொண்ட எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனுமாயிருந்தான். இசாயிக்கு எட்டு குமாரர்களிருந்தார்கள். இவன் சவுலின் காலத்திலே மற்ற சனங்களுக்குள்ளே வயது சென்ற கிழவ னாயிருந்தான்.

13. அவனுடைய மூன்று மூத்த குமாரர்கள் சவுலோடு கூடச் சண்டைக் குப் போயிருந்தார்கள். சண்டைக்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரர் களுடைய பேர்: முதல் பிறந்தவன் எலியாப், இரண்டாவது பிறந்தவன் அபினதாப், மூன்றாவது பிறந்தவன் செம்மா.

14. தாவீது எல்லாருக்கும் இளையவ னாயிருந்தான். மூத்தவர்களாகிய அந்த மூன்று பேரும் சவுலைப் பின்பற்றிச் சென்றிருந்தபடியால்,

15. தாவீது சவுலை விட்டுத் திரும்பிப் போய் பெத்லேமில் தன் தகப்பனுடைய மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தான்.

16. அந்தப் பிலிஸ்தியனோ காலை யிலும் மாலையிலும் நாற்பது நாள் பரியந்தம் வந்து நிற்பான்.

17. (அந்நாளில் ஒருநாள்) இசாயி தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த மாவையும், இந்தப் பத்து உரொட்டிகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்திலிருக்கிற உன் சகோதரர் களிடத்தில் விரைந்துபோய்,

18. இந்த பத்து பால்கட்டிகளை ஆயிரம் பேருக்கு அதிபதியானவனுக்குக் கொண்டு போய்க் கொடுத்து, உன் சகோ தரர்கள் சுகமாயிருக்கிறார்களாவென்று பார்த்து விசாரித்து அவர்கள் எவர் களுடன் வகுக்கப்பட்டிருக்கிறார்க ளென்று பார்த்து விசாரித்து அவர்கள் எவர்களுடன் வகுக்கப்பட்டிருக்கிறார் களென்று அறிந்துகொள்ளென்று அனுப் பினான்.

19. அப்போது சவுலும் இவர்களும் இஸ்றாயேலின் சகல குமாரர்களும் தெரேபிந்து கணவாயில் பிலிஸ்தியரோடு சண்டை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

20. ஆகையால் தாவீது அதிகாலையி லெழுந்து மந்தையைக் காவலாளி வசமாய் ஒப்புவித்து இசாயி தனக்குக் கட்டளையிட்ட பிரகாரம் எடுத்துக் கொண்டு போய் மகலாவென்னும் இத்திலிருந்த சேனைக்கு வந்தான். சேனைகள் யுத்தத்திற்குப் புறப்பட்டுப் போருக்கென்று ஆர்ப்பரித்தார்கள்.

21. இந்தப் பக்கத்திலே இஸ்றாயே லர் அணிவகுத்திருக்க, அந்தப் புறத்திலே பிலிஸ்தியர் போருக்கு ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

22. தாவீது தான் கொண்டு வந்த மூட்டையை இறக்கி அவைகளைக் காவல் செய்யும் ஒருவன் வசமாய் ஒப்புவித்து யுத்தவிடத்துக்கு ஓடித் தன் சகோ தரர் விஷயத்திலே எல்லாஞ் சரியாயிருக் கிறதாவென விசாரித்துக் கேட்டான்.

23. அவன் அவர்களோடு இன்னமும் பேசிக் கொண்டிருக்கையில் பிலிஸ்தியர் பாளையங்களிலிருந்து கோலியாத் தென்று பேர்கொண்ட பிலிஸ்தியனும் கேத் நாட்டானும், ஈன சாதியுமான அந்த மனுஷன் வந்து நின்றான். அவன் முன் சொன்ன வார்த்தைகளையே சொன் னான். தாவீது அதைக் கேட்டான்.

24. அந்த மனுஷனைக் கணடபோது இஸ்றாயேலியரெல்லாம் மிகவும் பயந்து அவன் முகத்துக்கு விலகி ஓடிப் போனார்கள்.

25. இஸ்றாயேலரில் ஒருவன்: இப் போது வந்து நிற்கிற அந்த மனுஷனைப் பார்த்தீர்களா? இஸ்றாயேலை நிந்தித்துப் பழிக்க வந்தான். இவனைக் கொல்பவன் எவனோ? அவனை இராசா ஐசுவரிய னாக்கித் தன் குமாரத்தியையும் அவனுக் குக் கொடுத்து அவன் தகப்பன் வீட் டாரையும் இஸ்றாயேலிலே பகுதியில் லாமல் ஆக்குவாரென்று சொல்லக் கேட்டு,

26. தாவீது தன்னுடனிருந்த மனிதர் களை நோக்கி: இந்த பிலிஸ்தியனைக் கொன்று இஸ்றாயேலுக்கு நேரிட்ட நிந்தை அவமானத்தை நீக்குகிறவனுக்கு என்ன கொடுக்கப்படும்? ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளைப் பழிக்கிற தற்கு விருத்தசேதனமில்லாத அந்தப் பிலிஸ்தியன் எம்மாத்திரம்? இப்போதே நான் போய் ஜனங்களுடைய நிந்தையை நீக்கிப் போடுகிறேனென்றான்.

27. அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு அவை கொடுக்கப் படுமென்று முன்சொன்ன வார்த்தைக ளையே அவனுக்கு மறுபடி சொன்னார்கள்.

28. அவனுடைய மூத்த சகோதர னாகிய எலியாப் அவன் மற்றவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறதைக் கேட்டுத் தாவீதின்மேல் கோபித்துச் சொல்லு கிறான்: ஏன் இங்கு வந்தாய்? அந்தக் கொஞ்சம் ஆடுகளை வனாந்தரத்தில் ஏன் விட்டுவிட்டாய்? உன் ஆங்காரத் தையும், உன் இருதயத் துர்க்குணத் தையும் நான் அறிவேன்; சண்டையைப் பார்க்கிறதற்குத்தானா வந்தாய்?

29. அதற்குத் தாவீது: நான் என்ன செய்தேன்? பேசலாகாதாவென்றான்.

30. அவனை விட்டுச் சற்றே விலகி வேறொருவனிடத்தில் அந்தப் பிரகா ரமே கேட்டான். ஜனங்கள் முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்கு மறுமொழியாகச் சொன்னார்கள்.

31. தாவீது பேசின வார்த்தைகளெல் லாங் கேட்கப்பட்டுச் சவுலின் சமுகத்தில் அறிவிக்கப்பட்டன.

32. தாவீது அவன் கிட்ட அழைக்கப் பட்டபோது சவுலை நோக்கி: கோலி யாத்தினிமித்தம் ஒருவனுடைய இருத யங் கலங்க வேண்டியதில்லை; உமது அடியானாகிய நானே போய் அந்தப் பிலிஸ்தியனோடு சண்டை போடுவேன் என்றான்.

33. அதற்குச் சவுல்: அந்தப் பிலிஸ்திய னோடே தீர்க்கவும், அவனுடன் சண்டை போடவும் உன்னால் ஆகாது; நீயோ சிறு பிள்ளையாயிருக்கிறாய். அவனோ வாலிபந் துவக்கி யுத்த வீரனாயிருக் கிறான் என்றான்.

34. தாவீது சவுலைப் பார்த்து: உமதடியான் தன் தகப்பனுடைய மந்தையை மேய்த்துக் கொண்டிருக்கும் போது சிங்கமாவது கரடியாவது வரும், மந்தை நடுவிலிருந்து கிடாயைத் தூக்கிக் கொண்டு போகும்.

35. நான் அவைகளைப் பின்துடர்ந்து அடித்து அவைகளின் வாயினின்று பிடுங்குவேன். அவைகள் என்பேரில் எழும்பும்; நானோ அதுகளின் மூஞ்சி யைப் பிடித்து, மூச்சு விடாதபடிக்கு அமுக்கு அவைகளைக் கொல்லுவேன்.

36. உமதடியானாகிய நான் ஒரு சிங் கத்தையும், ஒரு கரடியையுங் கொன் றேன்; அவைகளில் ஒன்றைப் போல் தானிருப்பான் விருத்தசேதனமில்லாத அந்தப் பிலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனையைச் சபிக்கிற தற்குத் துணிந்த விருத்தசேதனமில்லாத அந்தப் பிலிஸ்தியன் எம்மாத்திரம்? இப்போதே நான் போய் ஜனங்க ளுடைய நிந்தையை நீக்கிப் போடுகிறே னென்றான்.

37. மறுபடியுந் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்குந் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பிலிஸ் தியன் கைக்கும் என்னை மீட்பார் என்றான். போ, ஆண்டவர் உன்னுட னிருப்பாராக! என்று சவுல் தாவீதுக்குச் சொன்னான்.

38. சவுல் தாவீதைத் தன் உடை களால் உடுத்துவித்து அவன் தலைமேல் வெண்கலச் சீராவைப் போட்டு ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.

39. தாவீது அவன் பட்டயத்தைத் தன் வஸ்திரத்தின்மேல் கட்டிக் கொண்டு இப்படி ஆயுதம் அணிந்து நடக்கக் கூடுமோவென்று பரிட்சைப் பார்த்தான். ஏனெனில் அவனுக்கு வழக்கம் இல்லை. தாவீது சவுலைநோக்கி: எனக்கு வழக்கம் இல்லாததால் இவ்விதம் நடக்க என்னால் முடியாதென்று சொல்லி அவைகளைக் களைந்துபோட்டு,

40. எப்பொழுதும் கையில் வைத் திருக்கும் தன் தடியைப் பிடித்துக் கொண்டு ஓடையில் ஐந்து கூழாங்கல்லு களைத் தெரிந்தெடுத்துத் தன் மேலிருந்த மேய்ப்பனுக்குரிய சோளிகையிலே போட்டுக் கவணையுங் கையிலெடுத்துப் பிலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட் டான்.

41. பிலிஸ்தியனும் நடந்து தாவீதைக் கிட்டி வந்தான்; அவனுடைய ஆயுததாரி அவனுக்கு முன்னாக நடந்தான்.

42. பிலிஸ்தியன் சுற்றிப் பார்த்து தாவீதைக் கண்டு அவன் வாலனாகவும், கபில நிறமாகவும், பார்வைக்கு அழகாக வும் இருந்ததைப் பற்றி அவனை அசட் டைப் பண்ணினான்.

43. பிலிஸ்தியன் அவனை நோக்கி: நீ என்னிடம் ஒரு கோலுடன் வருகிறதற்கு நான் என்ன ஒரு நாயாவென்று சொல்லி, பிலிஸ்தியன் தன் தேவர்களின்மேல் ஆணையிட்டுத் தாவீதைச் சபித்தான்.

44. பின்னும் அவன் தாவீதை நோக்கி: என் கிட்ட வா, நான் வானப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக் கும் உன் மாம்சங்களைக் கொடுப்பே னென்றான்.

45. அதற்குத் தாவீது பிலிஸ்தியனைப் பார்த்து: நீ பட்டயத்தோடும், ஈட்டி யோடும், கேடயத்தோடும் என்னிடம் வருகிறாய்; நானோ சேனைகளின் ஆண்டவருடைய நாமத்தினாலே, நீ நிந்தித்த இஸ்றாயேலுடைய இராணுவங் களின் தேவனுடைய பேராலே உன்னிடத்தில் வருகிறேன்.

46. இன்று ஆண்டவர் உன்னை என் கையிலே கொடுப்பார். நான் உன்னைக் கொன்று உன் தலையை வெட்டுவேன். உலகமெல்லாம் இஸ்றாயேலரில் தேவ னிருக்கிறதை அறிந்துகொள்ளும் பொருட்டு இன்று பிலிஸ்தியருடைய பாளையங்களின் பிணங்களை வானப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக் கும் கொடுப்பேன்.

47. அதனால் கர்த்தர் இரட்சிக்கிறது பட்டயத்தினாலுமல்ல, ஈட்டியினாலு மல்ல என்று இந்த ஜனக் கூட்டமெல்லாந் தெரிந்து கொள்ளம்; ஏனெனில் யுத்தம் அவருடையது. அவர் உங்களை எங்கள் கைகளில் ஒப்பிப்பாரென்று சொன்னான்.

48. பிலிஸ்தியன் எழுந்து வந்து தாவீதுக்கு எதிரில் நெருங்கி வருகையில் தாவீது தீவிரித்துப் பிலிஸ்தியன்மேல் சண்டைக்கு ஓடினான்.

49. தன் சோளிகையில் கையைவிட்டு ஒரு கல்லை எடுத்து கவணிலே போட்டுச் சுழற்றி விட்டு பிலிஸ்தியன் நெற்றியில் பட எறிந்தான். கல் அவன் நெற்றியில் பதிந்துபோனதால் அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.

50. இப்படி தாவீது ஒரு கவணாலுங் கல்லாலும் பிலிஸ்தியனை மேற்கொண்டு அடிபட்ட பிலிஸ்தியனைக் கொன்று போட்டான். தாவீதுக்குப் பட்டயம் இல்லாதபடியால், 

51. அவன் ஓடி பிலிஸ்தியன்மேல் நின்று அவன் பட்டயத்தைப் பிடித்து அதின் உறையிலிருந்துருவி அவனைக் கொன்று அவன் தலையை வெட்டிப் போட்டான். அப்போது பிலிஸ்தியர் தங்களுக்குள் அதிக பலசாலியான வீரன் மரித்ததைக் கண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

52. அந்நேரத்திலே இஸ்றாயேலிய ரும், யூதா மனிதர்களும் எழுந்து ஆர்ப் பரித்துக் கொண்டு பள்ளத்தாக்கின் எல்லை வரைக்கும் அக்காரோன் பட்டண வாசல் மட்டும் பிலிஸ்தியரைத் துரத்தினார்கள். பிலிஸ்தியரில் காயம் பட்டவர்கள் சாராயீம் வழியிலும் கேத்தும் அக்காரோனும் வரைக்கும் வெகு பேர் விழுந்து கிடந்தார்கள்.

53. இஸ்றாயேல் குமாரர்கள் பிலிஸ் தியரைப் பின்துடர்ந்த பின்பு திரும்பி வந்து அவர்கள் பாளையங்களைக் கொள்ளையடித்தார்கள்.

54. தாவீது பிலிஸ்தியனுடைய சிரசை எடுத்து ஜெருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங் களையோ தன் கூடாரத்தில் வைத்தான்.

55. தாவீது பிலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போனதைக் கண்டபோது தன் சேனாதிபதியாகிய அப்நேரை நோக்கி: அப்நேரே இந்த வாலன் எந்தக் குடும்பத்தில் பிறந்தவன் என்று கேட் டான். அப்நேர்: இராசாவே உமது ஜீவ னாணை! அதை நான் அறியேன் என்றான்.

56. இராஜா அந்தப் பிள்ளையாண் டான் ஆருடைய குமாரனென்று விசாரித் துக் கேட்டுக் கொள்ளென்று சொன்னான்.

57. பிலிஸ்தியனைக் கொன்று தாவீது திரும்பி வந்தபோது அப்நேர் அவனைச் சவுல் முன்பாக அழைத்துக் கொண்டு போய் விட்டான். பிலிஸ்தியனுடைய தலை அவன் கையிலிருந்தது.

58. சவில் அவை நோக்கி: வாலனே நீ யாருடைய மகன் என்று கேட்டான். அதற் குத் தாவீது: நான் பெத்லேமூரானாகிய உமதடியானாயிருக்கிற இசாயின் குமார னாயிருக்கிறேனென்று சொன்னான்.