அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 16

மிப்போசேத்தை சீபா காட்டிக் கொடுத்தல்.

1. தாவீது மலையின் உச்சியிலிருந்து சற்று அப்புறம் நடந்தபோது மிப்பிபோ சேத்தின் ஊழியக்காரனாகிய சீபா என்பவன் இரண்டு கழுதைகளை ஓட்டிக் கொண்டு அவனை சந்தித்தான்; கழுதைகள் இருநூறு அப்பங்களையும், வற்றலான அத்திப்பழங்களின் நூறு கூடைகளையும் ஒரு துருத்தி திராட்ச இரசத்தையுங் கொண்டுபோயின.

2. அப்போது அரசன் சீபாவைப் பார்த்து: இவை எதுக்கு? என, சீபா: கழுதைகள் அரசனின் அரண்மனையார் ஏறுவதற்கும், அப்பங்களோ, அத்திப் பழங்ளோ உம்முடைய ஊழியர்கள் புசிக் கிறதற்கும், இரசமோ வனாந்தரத்தில் விடாய்த்திருப்பவனெவனோ அவன் குடிப்பதற்குந்தானே என்று மறுமொழி சொன்னான்.

3. அதைக் கேட்டு அரசன்: உன் எஜ மானின் குமாரன் எங்கே? என்று கேட்க, சீபா: எருசலேமிலிருக்கிறார்.  இன்று இஸ்றாயேல் வீட்டார் என் பிதாவின் இராச்சியத்தை என் வசமாய்த் திரும்பக் கொடுப்பார்கள் என்றாராம் என்றான்.

4. அப்போது இராசா சீபாவை நோக்கி: மிப்பிபோசேத்துக்கு உண்டான தெல்லாம் உன்னுடையதாயிற்று என, சீபா: என்னாண்டவனான இராசாவே, உம்முடைய சந்நிதியில் நான் கிருபை யைக் கண்டடையப் பிரார்த்திக்கின் றேன் என்றான்.

5. அப்பால் தாவீது பாஹூரிம் மட்டும் வந்தான்.  அந்நேரத்தில் சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த கேராவின் குமாரனான சேமேயி என்னும் பெயரை யுடைய ஒரு மனுஷன் அங்கிருந்து புறப் பட்டுத் தூஷித்துக் கொண்டு நடந்து வந்தான்.

6. சகல சனங்களும் சமஸ்த வீரர் களும் தாவீதின் வலது புறம் சமஸ்த வீரர் களம் தாவீதின் வலது புறம் இடது புற மாக நடந்து போகையில் அவன் (அஞ் சாமல்) இராசாவையும் அவனுடைய எல்லா ஊழியர்களையும் கல்லாலெறியத் தொடங்கினான்.

7. சேமேயி அரசனைத் தூஷித்துப் பேசி: அப்பாலே போ இரத்தப் பிரியனானவனே, தொலைந்து போ பெலியாலின் மனுஷனே!

8. சவுலின் சிம்மாசனத்தை நீ அபிகரித்ததினாலே அல்லோ கர்த்தர் சவுலின் வீட்டாருடைய இரத்தப் பழியை  உன மேல் திரும்பப் பண்ணி உன் அரசாட்சியை உன் குமாரனாகிய அப்சலோன் கையிலே கொடுத்திருக் கிறாரே.  இப்போதும் இதோ உன் அக்கிர மங்களின் பாரம் உன்னை அமுக்கிப் போட்டது நியாயம்; ஏனெனில் நீ நரரின் ரத்தத்தைச் சிந்தினாய் என்று அரசனை ஏசிப் பேசித் திட்டினான்.

9. அப்போது சார்வியாளின் மகன் அபிசாயி இராசாவைப் பார்த்து: இந்தச் செத்த நாய் என் ஆண்டவனான அரச னைத் தூஷிப்பானேன்?  நான் போய் அவன் தலையை வெட்டிப் போட்டு வருகிறேன் என்றான்.

10. அதற்கு இராசா: சார்வியாளின் குமாரர்களே உங்களுக்கும் எனக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்க வேண்டுமென்று கர்த்தர் அவனுக்குக் கற்பித்திருக்க: அவன் இவ்வாறு செய்வானேனென்று சொல்லத் துணிந்திருக்கிறவன் யார் என் றான்.

11. மீண்டும் அரசன் அபிசாயியையும் தன்னுடைய சமஸ்த ஊழியர்களையும் பார்த்து: இதோ என் கற்பப் பிறப்பாகிய என் குமாரனே என் ஆன்மாவைத் தேடும்போது இந்த ஜெமினியின் குமாரன் அதிகமாய்ச் செய்தாலும் ஆச்சரி யப்பட வேண்டாம்.  கர்த்தருடைய அனு மதியின்படி அவன் என்னைத் தூஷிக்கட் டும்.  தடை செய்யாதீர்கள்.

12. ஒருவேளை கர்த்தர் என் துயரத் தைப் பார்த்து இன்றைய இச்சாபத்துக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் செய்து சரிக்கட்டுவாரென்றான்.

13. அப்பிரகாரமே தாவீதும் அவ னோடிருந்த அவன் தோழர்களும் வழியே நடந்துபோனார்கள்.  செமேயி யோவெனில் மலையுச்சியின் மேலிருந்து இராசாவைப் பின்சென்று அவனைத் தூஷித்தும் அவன் மேல் கற்களை எறிந் தும் மண்ணை வாரித் தூற்றியும் நடந்து வருவான்.

14. இராசாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய் அவ்விடத்தில் தங்கிக் கொண்டு இளைப் பாறினார்கள்.

15. அப்சலோனும் அவனோடு இருந்த சகல ஜனங்களும் எருசலேமில் பிரவேசித் தார்கள்; அக்கித்தோப்பேல் அவனுட னிருந்தான்.

16. தாவீதுடைய சிநேகிதனான அரக்கித்தனான கூஸாயி அப்சலோனிடத் தில் வந்தபோது அப்சலோனை நோக்கி: அரசனே வாழ்க, அரசனே வாழ்க, என்று வணங்கினான்.

17. அப்சலோன் அவனைப் பார்த்து: உன் சினேகிதன்மட்டில் உனக்கிருக்கிற தயை இம்மாத்திரந்தானோ? உன் மித்திர னோடு கூட நீ போகாமற்போன தென்ன? என்று கேட்க,

18. கூஸாயி அப்சலோனை நோக்கி: அப்படியல்லவே; கர்த்தரும் சர்வ ஜனங் களும் இஸ்றாயேலியரனைவரும் எவ ரைத் தெரிந்துகொண்டார்களோ அவரோடு நான் இருக்க வேண்டும்; அவரோடுதான் இருப்பேன்.

19. இன்னுமொரு வார்த்தை.  இந் நேரம் நான் ஆரிடத்தில் சேவிக்க வந் தேன்? இராசாவின் புதல்வனிடத்தில் தானே;  ஆம்: உம்முடைய தகப்பனிடத் தில் எப்படி கீழ்ப்பட்டு ஊழியம் பண்ணி வந்தேனோ அப்படியே உம்மிடத்திலுங் கீழ்ப்பட்டுத் தொண்டுசெய்வேனென்று மறுவுத்தாரஞ் சொன்னான்.

20. அப்போது அப்சலோன் அக்கித் தோப்பேலை நோக்கி: நாம் செய்ய வேண்டியதின்னதென்று யோசனை செய்யுங்கள் என,

21. அக்கித்தோப்பேல் அப்சலோ னைப் பார்த்து: வீட்டைக் காக்க உம் முடைய தகப்பன் வைத்துப் போன மறு மனையாட்டிகளோடு நீர் சயனிக்க வேண்டியது; நீர் உம்முடைய தகப்ப னைப் பங்கப்படுத்தின செய்தியை இஸ்றாயேலியர் எல்லோருங் கேள்விப் பட்டபோது உம்முடன் இருக்க மனந் தேறிப் போவார்கள் என்றான்.

22. அப்படியே அப்சலோனுக்கு உப்ப ரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட் டார்கள். அங்கே அப்சலோன் இஸ்றாயே லியர் யாவரும் பார்க்கத் தன் தகப்ப னுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.

23. அந்நாட்களில் அக்கித்தோப்பேல் சொல்லும் வாக்கியம் ஆலோசனை கேட்டுப் பெற்ற தேவனுடைய வாக் கியம் போலே அங்கீகரிக்கப்படும்; அக்கித்தோப்பேல் சொல்லும் ஆலோ சனை யெல்லாம் (முன்னே) தாவீதுக்கும் (இப்போது) அப்சலோனுக்கும் அவ்வித மாகவே யிருந்தன.