அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 16

தாவீது அபிஷேகம் செய்யப்பட்டது.

1. ஆண்டவர் சமுவேலைப் பார்த்து: இஸ்றாயேல் பேரில் சவுல் இராசாவா யில்லாதபடிக்கு தாம் இவனைத் தள்ளி யிருக்கையில் நீ எது வரையில் அவனுக் காகத் துக்கித்துக் கொண்டிருப்பாய்? உன் கோப்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டுவா; பெத்லேயித்தானாகிய இசாயினிடத்துக்கு நாம் உன்னை அனுப்பும் பொருட்டு வா. நாம் அவன் குமாரர்களில் ஒருவனை இராசாவாகத் தெரிந்துகொண்டோம் என்றருளினார்.

2. அதற்குச் சமுவேல் எப்படி போவேன்? சவுல் கேள்விப்பட்டால் என்னைக் கொல்லுவானென்றான்; மறுபடியுங் கர்த்தர்: நீ மாட்டுமந்தையில் ஓர் கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு: ஆண்டவருக்குப் பலியிட வந்தேனென்று சொல்லி,

3. இசாயியைப் பலிக்கு அழைப் பாய்; அப்புறம் நீ செய்யவேண்டியதை உனக்கு நாம் காட்டுவோம்; நான் உனக்கு எவனைக் காண்பிப்போமோ அவனை அபிஷேகம் பண்ணுவாயென்று சொன்னார்.

4. ஆண்டவர் அவனுக்குச் சொன்ன படி சமுவேல் செய்தான். பெத்லேமுக்குப் போனான்; அவ்வூரின் பெரியோர்கள் ஆச்சரியப்பட்டு அவன் முன் ஓடி வந்து: உமது வருகை சமாதானமாயிருக்குமா வென்று கேட்டார்கள்.

5. அதற்கு அவன்: சமாதானந்தான். ஆண்டவருக்குப் பலியிட வந்தேன். நீங்கள் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொண்டு என்னோடு கூடப் பலிக்கு வாருங்களென்று சொன்னான். மேலும் இசாயியையும் அவனுடைய குமாரர் களையும் பரிசுத்தப்படுத்தி அவர்களைப் பலிக்கு அழைத்தான்.

6. அவர்கள் வந்தபோது, சமுவேல் எலியாபைக் கண்டு: கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவன் இவன்தானோ வென்று கேட்டதற்கு,

7. ஆண்டவர் சமுவேலை நோக்கி: நீ அவனுடைய முகத்தையுஞ் சரீர உயரத் தையும் பார்க்காதே; எனெனில், நான் அவனைத் தள்ளிவிட்டேன். மனுஷன் பார்க்கிறது ஒருவிதம், நாம் தீர்மானிக் கிறது வேறுவிதம்; மனிதன் வெளிக்குத் தோன்றுபவைகளைப் பார்க்கிறான்; ஆண்டவர் இருதயத்தைப் பார்க்கிறா ரென்று சொன்னார்.

8. அப்பொழுது இசாயி அபின தாயை அழைத்து அவனைச சமுவேல் முன்பாகக் கூட்டி வந்தான். அவன் இவனையும் ஆண்டவர் தெரிந்து கொள் ளவில்லையென்றான்.

9. இசாயி சாமாவைக் கூட்டிவந்து நிறுத்தினான். அவன: இவனையும் ஆண்டவர் தெரிந்து கொள்ளவில்லை என்றான்.

10. இப்படி இசாயி தன் குமாரர்களில் ஏழு பேரைச் சமுவேல் முன்பாகக் கொண்டு வந்தான். இவர்களுக்குள் ஒருவனையும் ஆண்டவர் தெரிந்து கொள்ளவில்லையென்று சமுவேல் இசாயிக்குச் சொன்னான்.

11. அப்போது இசாயியைப் பார்த்துச் சமுவேல்: உன் பிள்ளைகளெல்லாம் இவ்வளவுதானாவென்று கேட்டதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளை யவன் ஒருவனிருக்கிறான்; ஆடுகளை மேய்க்கிறானென்று மறுமொழி சொன் னான். அப்பொழுது சமுவேல் இசா யியை நோக்கி: நீ ஆள் அனுப்பி அவனை வரச் சொல்லு; அவன் வருமட்டும் நாம் போஜனம் பண்ணமாட்டோமென்றான்.

12. இசாயி ஆளனுப்பி அவனை அழைப்பித்தான். அவனோ பார்வைக்கு அழகும், சிவந்த மேனியும் முகம் இலட் சணமுமாக விருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து அவனை அபிஷேகம் பண்ணு என்று சொன்னார்.

13. அப்பொழுது சமுவேல் எண் ணெய்க் கோப்பை எடுத்து அவனுடைய சகோதரர் நடுவிலே அவனை அபிஷேகம் பண்ணினான். அந்நாள் முதற்கொண்டு ஆண்டவருடைய திரு ஆவி தாவீதின் மேல் வந்து எப்பொழுதும் நின்றது. சமுவேல் எழுந்து ராமாத்தாவுக்குப் போய்விட்டான்.

14. ஆண்டவருடைய திரு ஆவி சவுலை விட்டு நீங்கினதன்றி ஆண்டவ ரால் அனுப்பப்பட்ட ஒரு பொல்லாத அரூபி அவனை அலைக்கழித்துக் கொண் டிருந்தது.

15. அப்பொழுது சவுலின் ஊழியர் கள் அவனை நோக்கி: தேவனால் அனுப்பப்பட்ட கெட்ட அரூபி உம்மை இதோ வாதிக்கின்றதே; 

16. எங்கள் ஆண்டவனாகிய நீர் உத்தரவு கொடுத்தால் உமது சமுகத்துக்கு முன்பாக ஏவல் செய்யும் நாங்கள் போய்க் கின்னரம் வாசிப்பதில் தேறின ஒருவனைத் தேடிக் கொண்டு வருவோம். ஆண்டவரால் அனுப்பப்பட்ட கெட்ட அரூபி உம்மைப் பிடிக்கையில் அவன் தன் கையினால் அதை வாசிப்பான். உமக்குக் கொஞ்சம் சுகமாயிருக்கு மென் றார்கள்.

17. சவுல் தன் ஊழியர்களைப் பார்த்து: நீங்கள் போய்க் கின்னரம் வாசிப்பதில் தேறின ஒருவனை என்னிடங் கொண்டுவாருங்களென் றான்.

18. அப்பொழுது அவனுடைய ஊழி யர்களில் ஒருவன் மறுமொழியாக: இதோ பெத்லேமூரானாகிய இசாயி குமாரனைப் பார்த்தேன். அவன் வீணை வாசிக்கத் தெரிந்தவன், பராக்கிரமசாலி, யுத்த வீரன், பேச்சில் மகா சமர்த்தன், சவுந்தரியமுள்ளவன். ஆண்டவர் அவ னுடன் இருக்கிறாரென்று சொன்னான்.

19. அதைக் கேட்டு: ஆட்டு மந்தை களிலிருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடம் அனுப்பு என்று சொல்லச் சவுல் இசாயிக்குத் தூதர்களை அனுப்பினான்.

20. அப்பொழுது இசாயி கழுதை யைப் பிடித்து அதன்மேல் உரொட்டி களையும், ஒரு துருத்தி இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையுஞ் சுமத் தித் தன் குமாரனாகிய தாவீதின் வச மாய்ச் சவுலுக்கு அனுப்பினான்.

21. அப்படியே தாவீது சவுல் அண் டைக்கு வந்து அவன் முன்பாக நின்றான். சவுல் அவனை மிகவும் நேசித்தான். தாவீது அவனுக்கு ஆயுததாரியானான்.

22. சவுல் இசாயிக்கு ஆள் அனுப்பி: தாவீது என் சமுகமுன் இருப்பான். என் கண்களுக்கு அவன் பிரியப்பட்டா னென்று சொல்லுவித்தான்.

23. பின்பு ஆண்டவரால் அனுப்பப் பட்ட கெட்ட அரூபி சவுலைப் பிடிக்கும் போதெல்லாந் தாவீது கின்னரத்தை எடுத்துக் கையினால் கொட்டுவான். அதனாலே சவுல் தேறிக் கொஞ்சம் சுக மடைவான். கெட்ட அரூபி அவனை விட்டு நீங்கும்.