நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 16

சம்சோன் தாலிலாவால் பிலிஸ்தேயர் கையில் காட்டிக்கொடுக்கப்பட்டது.

1. பின்பு சம்சோன் காஜாப் பட்டணத்துக்குப் போய் அங்கு ஒரு வேசியைக் கண்டு அவள் வீட்டுக்குள் நுழைந்தான்;

2. சம்சோன் பட்டணத்துக்குள் பிரவேசித்தானென்று செய்தி பரம்பினது. பிலிஸ்தேயர் அதைக் கேள்விப்பட்டு அவனை வளைத்துக் கொண்டு பட்டணத்தின் வாசல்களில் காவலாளிகளை வைத்தார்கள்; பொழுது விடியுஞ் சமயத்தில் சம்சோன் வெளியிலே வரும்போது அவனைக் கொல்லக் காத்திருந்தார்கள்.

3. நடுச்சாமம் வரையிலுஞ் சம்சோன் தூங்கினான். பிறகு எழுந்து பட்டணத்து வாசல் இரு கதவுகளையும், அவைகளின் நிலைகளையுந் தாழ்ப்பாள்களையும் பிடுங்கி தன் தோளின்மேல் வைத்துக்கொண்டு எப்பிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையுச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.

4. அதன் பிறகு அவன் சோரெக் கணவாயில் வசித்த தாலிலா என்னப்பட்ட ஒரு பெண்பிள்ளையை நேசித்தான். 

5. பிலிஸ்தேய பிரபுக்கள் அவளிடம் வந்து, அவளைப் பார்த்து: நீ அவனை நயந்து ஏமாற்றி, இவ்வளவான பலம் அவனுக்கு எதினால் உண்டாகிறதென்றும், நாங்கள் எவ்விதமாய் அவனை மேற்கொண்டு கட்டி வருத்தப்படுத்தலாமென்றும் அறிந்துகொள்; நீ இப்படிச் செய்வாயானால் நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்தொருநூறு வெள்ளி நாணயங்களைக் கொடுப்போம் என்றார்கள்.

6. இப்படியே தாலிலா சம்சோனைப் பார்த்து: நீ எனக்கு இரண்டு விஷயங்களை அறிவிக்கவேண்டு மென மன்றாடுகிறேன். உனக்குள்ள பிரதான மகா பலம் எங்கிருந்து உண்டாகிறது? உன்னைச் சிறைப்படுத்த கூடு மான கட்டு எவை? சொல்லென்று கேட்ட தற்கு,

7. அதற்குச் சம்சோன்: உலராத பச்சை யான ஏழு அகணிநார்க் கயறுகளால் என் னைக்கட்டினால் மற்ற மனிதரைப்போல் பலவீனனாவேனென்றான்.

8. அவன் சொன்ன பிரகாரம் பிலிஸ்தேய பிரபுக்கள் ஏழு கயறுகளை அவளிடங் கொண் டுவந்து கொடுத்தார்கள்; தாலிலா அவைக ளால் அவனைக் கட்டினாள்.

9. பக்கத்து அறையில் பிலிஸ்தேயர் பதிவி ருந்து காத்திருந்தார்கள்; தாலிலா சம்சோனை பார்த்து: சம்சோனே, இதோ பிலிஸ்தேயர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள். அப் போது கெட்டசணல் நூலிலே நெருப்புப் பட்டால் இற்றுப்போகிறாப்போல அவன்; அவனுடைய பலம் எங்கிருந்து உண்டாகிற தென்று அறியப்படவில்லை;

10. தாலிலா அவனை நோக்கி: நீ என் னைப் பரியாசம் பண்ணிப் பொய்யான வார்த்தைப் பேசினாய்: உன்னை எதினாலே கட்டலாமென்று எனக்குத் தெரிவி என்றாள்.

11. அதற்கு அவன்: ஒரு வேலைக்கும் வழங் காப் புதுக் கயறுகளால் என்னைக் கட்டினால் என் பலமற்று மற்ற மனிதரைப் போல் ஆவே னென்றான்.

12. திரும்பவுந் தாலிலா அப்படியே அவ னைக் கட்டி: சம்சோனே, பிலிஸ்தேயர் அறைக்குள் பதிவிருந்து இதோ உன்னைப் பிடிக்க வருகிறார்கள் என்று கூவினாள். அவனோ புடவை நூலை அறுப்பதுபோல் அந்தக் கயறுகளை அறுத்துப்போட்டான்.

13. மறுபடியுந் தாலிலா அவனை நோக்கி: நீ எது மட்டும் என்னை மோசம் பண்ணிப் பொய் பேசுவாய்; உன்னை எதினாலே கட்ட லாமென்று சொல்லு என்றாள். அதற்கு அவன் என் தலை மயிர்களில் ஏழு ஜடைகளை எடுத் து நூலோடு பின்னி, ஆணியால் தரையில் அடித்தால் நான் பலமற்றுப்போவேனென் றான்;

14. தாலிலா அவ்வண்ணமே செய்து, சம் சோனே இதோ பிலிஸ்தேயர், ஓடென்றாள். அவனோ நித்தரையினின்று எழுந்து மயிரோ டும் நூலோடும் ஆணியைப் பிடுங்கிவிட் டான்;

15. ஆகையால் அவ்வண்ணமே செய்து, சம்சோனே இதோ பிலிஸ்தேயர், ஓடென் றாள். அவனோ நித்திரையினின்று எழுந்து மயிரோடும் நூலோடும் ஆணியைப் பிடுங்கி விட்டான்;

16. இப்படி தாலிலா பல நாளளவும் அவனை இளைப்பாற வொட்டாமலும் சும்மாய் அலட்டிக்கொண்டு வந்தபடியால், அவன் சாகத்தக்க மிகுதியான விசனத்தை அடைந்து ஏங்கினான்.

17. அப்போது அவன் மெய்யை வெளிப் படுத்தி அவளைப் பார்த்து: சவரக் கத்தி இதுவரையிலும் என் தலையின்மேல் படவே யில்çல் ஏனென்றால், நாசரேயனாயிருக் கேன். அதாவது: என் தாய் கர்ப்பத்தில் பிறந்தது முதல் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக் கப்பட்டேன்; என் தலை சிரைக்கப்பட்டால் என்பலம் போய் பலவீனனாகி மற்ற மனித ரைப்போல் ஆவேனென்றான். மீ

18. அவள் தன் இருதயத்தையெல்லாந் தனக்குத் திறந்து வெளிப்படுத்தினதைத் தாலிலா கண்டு பிலிஸ்தேயர் பிரபுக்களுக்கு ஆளனுப்பி: இப்போது சம்சோன் எனக்குத் தன் இருதயத்தைத் திறந்து காட்டினபடியால் நீங்கள் இன்னொரு விசை வாருங்கள் என்று சொல்லச் சொன்னாள். அவர்கள் தாங்கள் கொடுப்பதாகச் சொல்லியிருந்த பணத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அவளிடத்திற்கு வந்தார்கள்.

19. அப்பொழுது தாலிலா சம்சோனைத் தன் மடியிலே தூங்கவைத்தாள். அவன் தலை அவள் மார்பில் சாய்ந்திருக்கும். அவனால் அழைக்கப்பட்ட ஒரு சவரகன் வந்து அவனு டைய தலை மயிரின் ஏழு ஜடைகளையுஞ் சிரைத்தான். அது ஆனபின்பு தாலிலா தன் பலனை இழந்த சம்சோனைத் தன்னை விட்டு நீங்கும்படிதள்ளத் தொடங்கினாள்.

20. அவனைத் தட்டியயழுப்பி: சம்சோ னே, இதோ பிலிஸ்தேயர் வருகிறார்கள் என் றாள். அவன் விழித்தெழுந்து தேவனாவி தன்னை விட்டு நீங்கிப்போனது தெரியாமல்: முன்போல் அல்லோ என் சங்கிலிகளை உடைத்து புறப்பட்டுப் போவேனென்று தனக்குள் நினைத்துக்கொண்டிருக்கையிலே,

21. பிலிஸ்தேயர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, சங்கிலிகளால் அவனைக் கட்டி, காஜாவுக்குக் கொண்டு போய்ச் சிறைச்காலையில் அவனை அடைத் து ஏந்திரக்கல்லைச் சுழற்றச் செய்தார்கள்.

22. அதற்குள்ளே அவனுடைய தலை மயிர் முளைக்கத் துடங்கின.

23. பிலிஸ்தேய பிரபுக்களோவெனில்: நம் சத்துராதியான சம்சோனை நமது தேவன் நம் முடைய கைகளில் அளித்தாரென்று சொல் லிக்கொண்டு தங்கள் தேவனாகிய தாகோ னுக்குப் பெரிய பலிகளைச் செலுத்தவும் விருந்தாடிக் களிக்கவும் ஒன்றுகூடினார்கள்.

24. ஜனங்களும்: நம்முடைய நாட்டைக் காடாக்கி அழித்து நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நமது எதிரியை நம் தேவன் நம்முடைய கைகளில் காட்டிக் கொடுத்தா ரென்று பிரபுக்களைப் போலத் தங்கள் தேவ னை ஸ்துதித்துப் போற்ற ஆரம்பித்தார்கள்.

25. இப்படி அவர்கள் பெரிய விருந்துண்டு களித்துக்கொண்டிருக்கும்போது: சம்சோன் நமக்கு முன் வேடிக்கைக் காட்டும்படியாக அவனைக் கொண்டு வாருங்களென்றார்கள். அப்படியே சம்சோனைச் சிறைச் சாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு முன்பாக வேடிக்கைக் காட்டினான். பிறகு அவனை இரண்டு தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்;

26. அந்நேரத்தில் சம்சோன் தனக்குக் கை லாகைக் கொடுக்கிற பிள்ளையாண்டானை நோக்கி: வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டு சற்று இளைப் பாறும்படி அவைகளைத் தடவிப்பார்க்கக் கொடுவென்றான்.

27. அந்த வீடு புருஷர்களையும், ஸ்திரீகளாரும் நிறைந்திருந்தது; பிலிஸ்தேய பிரபுக்களெல்லாரும் அங்கிருந்ததுமன்றி, மெத்தையிலிருந்து சம்சோன் விளையாடப் பார்த்த ஸ்திரீ பூமான்கள் ஏறக்குறைய மூவாயிரம் பேர் இருந்தார்கள்.

28. அவனோ ஆண்டவருடைய நாமத்தைச் சொல்லி: என் கர்த்தராகிய தேவனே! என்மேல் நினைவுகூறும். இதோ என் சத்துராதிகளையும் நான் ஒரே அடியாய் அழித்துப் பழிவாங்கும்படி இந்த ஒருவிசைக் கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்ட பின்பு, மீ

29. சம்சோன் அந்த வீட்டைத் தாங்கியிரா நின்ற இரண்டு தூண்களை வலது கையாலும், இடதுகையாலும் பிடித்துக்கொண்டு,

30. பிலிஸ்தேயரோடு நானுஞ் சாகக்கட வேனென்று சொல்லி, தூண்களைப் பலமாய் அசைக்கவே, வீடு இடிந்துபோய்ப் பிரபுக்கள் மேலும் அங்கிருந்த மற்றவர்கள் மேலும் விழுந் தது. அப்படியே சம்சோன் உயிரோடிருக்கை யில் அவனால் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கிலும் அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள். 

31. பிறகு அவனுடைய சகோதரரும் பந்துக் களும் வந்து, அவன் சடலத்தை எடுத்துப் போய்ச் சாராவுக்கும் எதாவேலுக்கும் நடுவழி யிலே அவன் தகப்பனாகிய மனுவேயின் கல்லறையில் அவனை அடக்கஞ் செய்தார்கள்: அவன் இஸ்ராயேலை இருபது வருஷம் நியா யம் விசாரித்திருந்தான்.