அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 15

அசாரியாஸ், இன்னும் மற்ற அரசர்களின் ஆட்சி.

1. இஸ்றாயேலின் அரசனான எரோ போவாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதா அரசனான அமாசியாசுடைய குமாரன் அசாரியாஸ் அரசாளத் துவக் கினான்.

2. இவன் இராச்சிய பரிபாலனஞ் செய்யத் தொடங்குகையில் பதினாறு வயதுள்ளவனாயிருந்தான்; எருசலே மில் ஐம்பத்திரண்டு வருஷம் அரசாண் டான். எருசலேம் நகரத்தாளான அவனுடைய தாயின் பேர் எக்கேலியாள்.

3. அவன் தன் தகப்பனாகிய அமாசி யாஸ் செய்தபடியெல்லாம் ஆண்டவரின் சமுகத்திற்குப் பிரீதியானதையே செய் தான்.

4. ஆனாலும் அவன் உயர்நத விடங் களை அழித்தானில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுக் கொண்டுந் தூபங்காட்டிக் கொண்டும் இருந்தனர்.

5. ஆனால் கர்த்தர் அவ்வரசனைத் தண்டித்தார்; மரண நாள் வரைக்கும் குஷ்டரோகியாகி தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணி வந்தான். இராசாவின் குமாரனான யோவாத்தான் அரண்மனை யில் சர்வாதிகாரியாய் தேசத்து ஜனங் களை நியாயம் விசாரித்தான்.

6. அசாரியாஸ் என்போனது மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசரது இராசாங்கச் சம்பவச் சங்கிரகமென்னும் புத்தகத்திலே எழுதப்பட்டுள்ளன.

7. அசாரியாஸ் தன் பிதாக்களோடு கண் வளர, அவனைத் தாவீதின் பட்ட ணத்தில் அவன் முன்னவரண்டையிலே அடக்கஞ் செய்தார்கள். அவன் குமார னாகிய யோவாத்தான் அவனுடைய ஸ்தானத்தில் அரசாண்டான்.

8. யூதாவின் அரசனான அசாரியா சின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே எரோபோவாமின் புத்திரனான சக்காரி யாஸ் சமாரியாவில் இஸ்றாயேலின்மீது ஆறுமாதம் அரசு புரிந்தான்.

9. இவன் தன் பிதாக்கள் செய்தது போல் தானும் ஆண்டவர் சமுகத்திற்குத் தகாத காரியத்தையே செய்துவந்தான்; இஸ்றாயேலைப் பாவஞ் செய்ய விட்டிருந்த நாபாத்தின் குமாரனான எரோபோவாமுடைய பாவங்களை அவன் விட்டு விலகினானில்லை.

10. அது நிற்க ஜாபேஸ் குமாரனான செல்லோம் என்போன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி அவ னைப் பைரங்கமாக வெட்டிக் கொன்று போட்டு, அவனுக்குப் பதிலாக இராச்சிய பரிபாலனஞ் செய்தனன்.

11. சக்காரியாசின் மற்ற வர்த்த மானங்கள் இஸ்றாயேல் அரசரின் இரா சாங்கச் சம்பவச் சங்கிரகமென்னும் புத் தகத்தில் வரையப்பட்டுள்ளன.

12. உன் புத்திரர் நாலு தலைமுறை யாக (மாத்திரம்) இஸ்றாயேலுடைய சிம்மாசனத்தில் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் ஏகு என்போனுக்குத் திருவுளம் பற்றிய வார்த்தை இதுதான்.

13. யூதாவின் அரசனான அசாரியா சுடைய முப்பத்தேழாம் வருஷத்திலே ஜாபேஸ் குமாரன் செல்லோம் அரசாளத் துவக்கினான்; ஆனால் சமாரியாவில் ஒரே மாதம் இராச அதிகாரஞ் செலுத்தினான்.

14. (ஏனெனில்) காதின் குமாரனான மனாஹேம் என்போன் தேர்சாவினின்று புறப்பட்டு, சமாரியாவுக்கு வந்து ஜாபேஸ் குமாரனாகிய செல்லோமை வெட்டிக் கொன்றுபோட்டு அவனுக்குப் பதிலாக அரசுபுரிந்தான்.

15. செல்லோமின் மற்ற எல்லாச் செய் கைகளும், அவன் செய்த கட்டுப்பாடும் இஸ்றாயேல் இராசாக்களின் நாளாகமத் தில் எழுதப்பட்டுள்ளன.

16. அதே காலையில் மனாஹேம் என்போன் தப்சா பட்டணத்தைப் பிடித் துச் சங்காரம் பண்ணி, அதின் வாசி களைத் தெர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் அடித்தான்; அன்றியும் கற்பவதிகளான எல்லா ஸ்திரீகளையும் இரண்டாக வெட்டிக் கொன்றுபோட் டான்.

17. யூதாவின் அரசனான அசாரியா சுடைய முப்பத்தொன்பதாம் வருஷத் திலே காதின் மகன் மனாஹேம் என் போன் இஸ்றாயேலின் மேல் இராசா வாகி சமாரியாவிலே பத்து வருஷம் அர சாண்டான்.

18.  அவன் ஆண்டவருடைய சமுகத் திற்கு ஏறாத காரியத்தைச் செய்தனன். அன்றியுந் தன் சீவியகால பரியந்தம் இஸ்றாயேலைப் பாவஞ் செய்ய விட் டிருந்த நாபாத் குமாரனாகிய எரோபோ வாமின் பாவங்களை விட்டு விலகினா னில்லை.

19. அசீரியா அரசனான பூல் என்போன் (இஸ்றாயேல்) தேசத்திறகு எழுந்துவந்தான்; அப்பொழுது மனா ஹேம் பூலின் உதவியால் தனக்குத் தன் இராச்சியம் அடங்கும்பொருட்டுப் பூல் என்போனுக்கு ஆயிரம் வெள்ளித் தலேந்து நாணயந் தந்தனன்.

20. மனாஹேம் இந்தப் பணத்தை இஸ்றாயேலிலுள்ள வல்லோர் ஆஸ்தி வந்தர் முதலியோரிடத்தில் தண்டினான். ஆள் ஒன்றுக்கு ஐம்பது வெள்ளி சீக்கல் வீதம் அசீரியா அரசனுக்குக் கொடுக்கும் படி அதைத் தண்டினான். அசீரியா அரசன் தேசத்திலே கிஞ்சித்தேனுந் தாமதியாமல் தன் ஊருக்குத் திரும்பி விட்டான்.

21. மனாஹேமின் மற்றுமுள்ள வர்த்தமானங்களும் அவன் செய்த யாவும் இஸ்றாயேல் அரசருடைய நாளா கம புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

22. மனாஹேம் தன் பிதாக்களோடு கண்வளர்ந்தான்; அவன் குமாரன் பசேயா அவனுக்குப் பதிலாக அரசாண் டான்.

23. யூதாவின் அரசனான அசாரியா சுடைய ஐம்பதாம் வருஷத்தில் மனா ஹேம் குமாரன் பசேயா இஸ்றாயேலின் மேல் சமாரியர் பட்டணத்திலே இராச்சிய பரிபாலனம் பண்ணி இரண்டு வருஷம் அரசாண்டான்.

24. இவன் ஆண்டவர் சமுகத்திற்குப் பொருந்தாததைச் செய்தனன்; இஸ்றா யேலைப் பாவஞ் செய்யப பண்ணின வனான நாபாத் குமாரனான எரோபோ வாமின் பாவங்களை விட்டு விலகினா னில்லை.

25. ரொமேலியின் குமாரனும் (அரச னின்) தளபதியுமான பாசே என்போன் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணித் தன் சகிதமான ஐம்பது கலகாத் தியரோடு சமாரியாவிலுள்ள அரண் மனை கோபுரத்திலே வந்து அக்கோபும், அரியேயும் பார்க்க இராசாவைத் தாக்கிக் கொன்று, அவனுக்குப்பதில் அரசாண் டான்.

26. பசேயா என்போனின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்த யாவும் இஸ்றாயேல் அரசரின் சரித்திராக மத்தில் எழுதப்பட்டுள்ளன.

27. யூதாவின் அரசனான அசாரியா சுடைய ஐம்பத்திரண்டாம் வருஷத்திலே ரொமேலியின் குமாரனான பாசே இஸ்றாயேல் மேல் இராசாவாகி இருபது வருஷம் அரசாண்டான்.

28. கர்த்தருடைய சமுகத்திற்குத் தின்மையானதைச் செய்தான். அன்றியும் அவன் இஸ்றாயேலைப் பாவஞ் செய்யப் பண்ணியிருந்த நாபாத் குமாரனான எரோபோவாமின் பாவங்களை விட்டு விலகினானில்லை.

29. இஸ்றாயேலின் அரசனான பாசே யுடைய நாட்களிலே அசீரியரின் அரச னான தெகிளாத் பலசார் என்போன் இஸ் றாயேல் தேசத்தில்வந்து அயியோனை யும், மகாக் காவிலுள்ள அபேல ஸ்தானத்தையும், ஜானயே, கேதஸ், அசோர், கலிலேயுள்ள கலாகாத்தையும், நேப் தாளியைச் சேர்ந்த எல்லா நாட்டையும், பிடித்ததல்லாது, (அத்தேச வாசிகளெல்லோரையும்) அசீரியா தேசத் திற்குச் சிறையாகக் கொண்டு போனான்.

30. ஏலாவின் குமாரனான ஓசே என் பவனோவெனில் ரொமேலி புத்திரன் பாசேயுக்குச் சதிமோசம் பண்ணக் கட்டுப்பாடு செய்து அவனைச் சாடிக் கொன்று போட்டான்; (அவனே) ஒசியாசின் குமாரனான யோவாத்தாமின் இராஜரீகத்து இருபத்து மூன்றாம் வருஷத்தில் அவனுக்குப் பதிலாக அரசாண்டான்.

31. பாசே என்போனது மற்ற வர்த்த மானங்களும் அவனுடைய செய்கைகள் யாவும் இஸ்றாயேலரசர் இராசாங்கச் சம்பவச் சங்கிரக மென்னும் புத்தகத்தில் வரையப்பட்டுள்ளன.

32. இஸ்றாயேலின் அரசனான ரொமேலியின் குமாரன் பாசே என்போ னின் இராஜரீகத்தின் இரண்டாம் வருஷத்திலே யூதாவின் அரசனான ஓசியாஸ் குமாரன் யோவாத்தான் அரசாளத் துடங்கினான்.

33. அவன் இராசாவான போது இருபத்தைந்து வயதுடையவனாய் எருச லேமில் பதினாறு வருஷம் அரசாண் டான். சதோக்கின் புத்திரியான அவன் தாயின் பெயர் எருசாள்.

34. அவன் கர்த்தருடய பார்வைக்கு நேர்மையானதைச் செய்தனன்; அவன் தகப்பனான ஒசியாஸ் செய்தபடி எல்லாம் செய்தான்.

35. ஆயினும் உயர்ந்த ஸ்தலங்களை அழித்தானில்லை; இன்னும் ஜனங்கள் மேடைகளின்மேல் பலியிட்டுக்கொண் டும் தூபமிட்டுக்கொண்டு மிருந்தார்கள்; இவன்தான் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.

36. யோவாத்தாமுடைய மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசருடைய சரித்திராகமத்தில் வரையப்பட்டுள்ளன.

37. அக்காலையில் கர்த்தர் சீரியாவின் அரசனான ரசீனையும் ரொமேலியின் குமாரனான பாசேயையும் யூதாவுக்கு விரோதமாய் அனுப்பத் தொடங்கினார்.

38. யோவாத்தாம் தன் பிதாக்க ளோடு கண் வளர்ந்தபோது அவன் பிதா வான தாவீதின் பட்டணத்திலே அவன் முன்னவரண்டையில் அடக்கஞ் செய்யப் பட்டான்; அவன் குமாரனாகிய ஆக்காஸ் அவன் ஸ்தானத்தில் இராசாவானான்.