அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 15

அபியாம், ஆசா, நாதா, பாசா, இவர்களின் ஆட்சி.

1.  நாபாத்தின் குமாரனாகிய எரோ போவாம் ஆண்ட பதினெட்டாம்  வரு ஷத்திலே அபியாம் யூதாவின் இராசா வாகி,

2. மூன்று வருஷம் எருசலேமில்  இராச்சியபாரஞ் செய்தான்;  அபெசெ லோனின் குமாரத்தியாகிய மாக்கள் என்பவளே அவனுக்குத் தாயாகினாள்.

3. அபியாம் தன் தகப்பன் தனக்கு முன் செய்த எல்லாப் பாவங்களையும் கட்டிக் கொண்டான்; அவனிருதயம் அவன் பிதாவாகிய தாவீதின் இருதயத் தைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் சமுகத்தில் உத்தமமாயிருந்ததில்லை.

4. ஆனாலுந் தாவீதினிமித்தம் அவ னுடைய தேவனாகிய கர்த்தர் எருசலேமிலே அவனுக்கு ஒரு விளக்கை யளித்தார்; உள்ளபடி எருசலேமைக் காப் பாற்ற அவனுக்குப் பிறகு அவன் குமா ரனை உதிக்கச் செய்தார்.

5. (வாஸ்தவமே) தாவீது ஏத்தைய னாகிய உரியாசின் சங்கதி ஒன்று தவிர (மற்றுமுள்ள விஷயத்திலே) தன் உயிர்க் காலமெல்லாங் கர்த்தர் தனக்குக் கட்ட ளையிட்டதிலே ஒன்றையும் விட்டு வில காமல் அவர் சமுகத்துக்குச் செம்மையான தைச் செய்துவந்திருந்தான்.

6. ஆனாலும் ரோபோவாம் சீவித்த காலமுழுவதும் இவனுக்கும் எரோபோ வாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டே யிருந்தது.

7. அபியாமின் மற்ற வர்த்தமானங் களும் அவன் செய்தவை யாவும் யூதா வினுடைய இராசாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.  அபிரா முக்கும், எரோபோவாமுக்கும் ஒரு யுத்தம் நடந்தது.

8. அதின்பிறகு அபியாம் தன் பிதாக் களோடு நித்திரையடைந்தான்; அவ னைத் தாவீது நகரத்தில் அடக்கம் பண்ணி னார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவனுக்குப் பிறகு இராசாவானான்.

9. இஸ்றாயேலின் இராசாவாகிய எரோபோவாம் ஆண்ட இருபதாம் வரு ஷத்தில் ஆசா யூதாவுக்கு இராசாவாகி,

10. நாற்பத்தொரு வருஷம் எருசலே மில் இராச்சியபாரஞ் செய்தான்.  அபெசலோனின் குமாரத்தியாகிய மாக்காளென்பவள் அவனுக்குத் தாயா யினாள்.

11. ஆசா தன் பிதாவாகிய தாவீதைப் போல் கர்த்தர் சமுகத்துக்குச் செம்மை யானதைச் செய்தான்.

12. அவன் பெண்மையான புருஷ ரைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிட்டுத் தன் பிதாக்கள் செய்துவைத்த அசுசியான விக்கிரகங்களையெல்லாந் தகர்த் தெறிந்து விட்டான்.

13. அன்றியும் ஆசாவின் தாயாகிய மாக்காள் பிரியாப்பென்னும் (அருவருப் பான விக்கிரகத்தை) ஒரு தோப்பில் ஸ்தாபித்து அதற்குப் பலி செலுத்திவரு வாள்.  அது நடவாதபடிக்கு ஆசா அவளை அவ்வதிகாரத்தினின்று விலக்கி விட்டுக் கோவிலை இடித்து அதனுள் ளிருந்த (அருவருப்பான விக்கிரகத்தை) விக்கிரகத்தை நிர்மூலமாக்கி அதைச் சுட்டேரித்து அச்சாம்பலைக் கெதிரோன் நதியிலே கொட்டிவிட்டான்.

14. உணர்ந்த மேடைகளையோ ஆசா அழிக்கவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருக்குங் காலமெல்லாம் அவ னிருதயங் கர்த்தருக்கு உத்தமமாயிருந் தது.

15. அவன் தகப்பன் பரிசுத்தமாக்கிக் கர்த்தருக்கு நேர்ந்துகொண்ட பொன் னையும், வெள்ளியையும், எத்தனங் களையும் ஆசா கர்த்தருடைய ஆலயத் திலே கொண்டுவந்தான்.

16. ஆசாவுக்கும் இஸ்றாயேலின் இராசாவாகிய பாசாவுக்கும் அவர்க ளுடைய கால மெல்லாம் யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது.

17. இஸ்றாயேலின் அரசனான பாசா யூதாவுக்கு வந்து அரசனாகிய ஆசாவின் இராச்சியத்தில் ஒருவரும் போக்குவரத் தாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.

18. அப்பொழுது ஆசா, கர்த்த ருடைய ஆலயத்தின் பொக்கிஷங் களிலும், இராசாவின் அரண்மனையி லுள்ள பொக்கிஷங்களிலும் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும் எடுத்து அவைகளைத் தன்னுடைய ஊழி யக்காரர் கையில் கொடுத்து தாமாஸ்கு வில் வாசமாயிருந்த எசியோனின் குமாரனாகிய தப்ரேமோனுக்குப் பிறந்த பெனாதாத் என்னுஞ் சீரியாவின் இராசா வுக்கு அனுப்பி:

19. எனக்கும், உமக்கும், என் தகப் பனுக்கும், உம்முடைய தகப்பனுக்கும், உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக் கையிருந்ததே.  அதைப்பற்றிப் பொன் வெள்ளி முதலியதை உமக்கு அனுப்பு கிறேன்.  மேலும் இஸ்றாயேலின் இராசா வாகிய பாசா என் எல்லையை விட்டு விலகிப் போகும்படிக்கு நீர் தயவுபண்ணி வந்து அவனோடு செய்த உடன்படிக் கையைத் தள்ளிப்போடுமென்று சொல் லச் சொன்னான்.

20. பெனாதாத் இராசாவாகிய ஆசா வுக்குச் செவிகொடுத்துத் தனது சேனாதி பதிகளை இஸ்றாயேலின் பட்டணங் களுக்கு விரோதமாக அனுப்ப அவர்கள் ஐயோனையும், தானையும், மாக்கா வென்னும் அபேல்தோமையும், சென்ன ரோத் அனைத்தையும், அதாவது: நெப்தாலி தேசமுழுமையும் பிடித்து வாதித்தார்கள்.

21. பாசா அதைக் கேள்வியுற்றபோது ராமாவைக் கட்டுகிறதை விட்டுவிட்டுத் தேர்சாவுக்குத் திரும்பி வந்து விட்டான்.

22. அப்பொழுது இராசாவாகிய ஆசா யூதாவெங்கும் ஆளை அனுப்பி ஒரு வருந் தப்பாமல் எல்லோரும் போய் பாசா கட்டின ராமாவின் கற்களையும், அதின் மரங்களையும் எடுத்து வரச் சொன்னான்.  பிறகு அவைகளைக் கொண்டு ஆசா வென்னும் அரசன் பெஞ்சமீன் நாட்டில் காபாவையும் மஸ்பாவையுங் கட்டுவித் தான்.

23. ஆசாவின் மற்ற எல்லாக் கிரிகை களும் அவனுடைய எல்லாத் திறமை சாமார்த்தியங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய இராசாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கின் றன; அவன் முதிர் வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண் டிருந்தது.

24. ஆசா தன் பிதாக்களோடு நித்திரை அடைந்தபின் தன் பிதாவாகிய தாவீதின் நகரத்தில் தன் பிதாக்க ளண்டையில் அடக்கம்பண்ணப்பட் டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவனுக்குப் பின் இராசாவானான்.

25. யூதாவின் இராசாவாகிய ஆசா ஆண்ட இரண்டாம் வருஷத்திலே எரோபோவாமின் குமாரனாகிய நாதாப் இஸ்றாயேலுக்கு  இராசாவாகி இரண்டு வருஷம் அதை ஆண்டுவந்தான்.

26. அவன் கர்த்தருடைய சமுகத் தி; பொல்லாப்பானதைச் செய்து தன் தகப் பன் வழியிலும், அவன் இஸ்றாயேலை அக்கிரமங்களைக் கட்டிக்கொள்ளச் செய்த பாவவழியிலும் நடந்துவந்தான்.

27. இசாக்கார் வமிசத்தானான ஆகியாசின் குமாரனாகிய பாசா நாதா புக்கு விரோதமான ஒரு துர்ஆலோசனை பண்ணிக் கெப்பெட்டோனிலே அவ னைக் கொலை செய்தான்.  கெப்பெட் டோனானது நாதாபும் இஸ்றாயேலியர் எல்லோரும் முற்றிக்கை போட்டிருந்த ஒரு பட்டணமாம்.

28. இப்படி யூதாவின் இராசாவாகிய ஆசா ஆண்ட மூன்றாம் வருஷத்திலே பாசா நாதாபைக் கொன்றுபோட்டு அவனுக்குப் பதிலாக இராசாவானான்.

29. பாசா இராசாவானவுடன், கர்த் தர் கிலோனித்தனாகிய ஆகியாஸ் என்னுந் தமது தாசனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே எரோபோவாமின் வீட்டாரெல்லாரை யுங் கொன்றுபோட்டதுமன்றி அவன் வமிசத்தில் பேர் சொல்ல ஒருவனையுமுத லாய் விடாமல் எல்லோரையுஞ் சங்காரஞ் செய்துவிட்டான்.

30. ஏனெனில் எரோபோவாம் செய்த பாதகத்தைப்பற்றியும், அவன் இஸ்றா யேலைச் செய்யப்பண்ணின பாவங் களைப் பற்றியும், அவர்கள் இஸ்றாயே லின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபத்தை வருவித்த பாவத்தினிமித்த மும் அது நிறைவேறிற்று.

31. நாதாபின் மற்ற நடபடிகளும் அவன் செய்தவை யாவும் இஸ்றாயேல் இராசாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கின்றன. 

32. ஆசாவுக்கும் இஸ்றாயேலின் இராசாவாகிய பாசாவுக்கும் அவர்கள் உயிராயிருந்த காலமெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

33. யூதாவின் இராசாவாகிய ஆசா ஆண்ட மூன்றாம் வருஷத்திலே ஆகியா சின் குமாரனாகிய பாசா இஸ்றாயேல் அனைத்துக்கும் தேர்சாவிலே இராசா வாகி இருபத்துநாலு வருஷம் அரசாண்டு, 

34. கர்த்தருடைய சமுகத்துக்கு விருத் துவமானதைச் செய்து எரோபோவாமின் வழியிலும் இஸ்றாயேலை அக்கிரமங் களைக் கட்டிக்கொள்ளச் செய்த அவன் பாவவழியிலும் நடந்துவந்தான்.