ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 15

பங்குவீதப்படி யூதா கோத்திரத்துக் காணியாட்சியின் எல்லைகள்--காலேபுடைய பங்கும், ஜெயமும்--ஒத்தனியேல் காலேபின் குமாரத்தியை விவாகம் பண்ணினதும்.

1. யூதாவின் புத்திரருக்கு அவர்களுடைய வமிசங்களின் கிரமப்படி உண்டான பங்கு வீதமாவது: ஏதோமிலிருந்து தென் முகத்திலுள்ள சீன் என்னும் வனாந்தரம் துவக்கித் தென்புறத்துக் கடைசியயல்லை மட்டுமாம்.

2. அது உவர்க்கடலின் கடைக்கரையாகிய தென்புறத்திலுள்ள முனையில் துவங்கும்.

3. அங்கிருந்து விருச்சிக மலைக்கும், அங்கிருந்து சீனாவுக்கும் போய் காதேஸ் பார்னேய்க்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து ஆதாருக்கு எழும்பி கல்கலாவைச் சுற்றிப் போன பின்பு,

4. அஸ்மோனாவை அடைந்து எஜிப்த்தின் ஆற்றுக்குச் சென்று பெரிய கடல் மட்டுக்கும் போய் முடியும். இதுவே தென்புறமான எல்லையாகும்.

5. கீழ்ப்புறமான எல்லையோவெனில்: உவர்க்கடல் துவக்கி யோர்தானின் முகத்துவாரம் மட்டும், வடபுறமான எல்லைக் கடலின் முனை துவக்கி மேற்சொல்லப் பட்ட யோர்தான் நதி மட்டும்,

6. அவ்வெல்லையானது பெட்டாகிலாவுக்கு ஏறி வடக்கேயிள்ள பெட்டாபாவைக் கடந்து ரூபனின் குமாரனாகிய பொஏன் கல்லுக்கு ஏறிப் போகும்.

7. அப்புறம், ஆக்கோர் என்னும் பள்ளத்தாக்கிலிருக்கிற தெபேறா எல்லைகளை அடைந்து வடக்கேயுள்ள கல்கலாவுக்கு நேராய்ப் போகும். கல்கலா அதொம்மிம் மலைக்கு எதிலே ஆற்றின் தென்புறத்திலே இருக்கிறது. பிறகு சூரியன் ஊற்று என்று அழைக்கப் பட்ட தண்ணீர் இடத்துக்கு அந்தண்டை போய் ரோகல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

8. அங்கிருந்து என்னொமின் குமாரனுடைய பள்ளத்தாக்கு வழியே போய் எபுசேயர் தேசத்தின் தென்புறமுகமாய் எருசலேம் பட்டணத்தை அடைந்த பின்னர் மேற்கிலிருக்கப் பட்ட கேனோனுக்கு எதிரே இருக்கிற மலைமேலேறி வடபுறத்திலுள்ள இராப்பாயீம் பள்ளத்தாக்குத் தாண்டி,

9. அந்த மலையின் உச்சத்திலிருந்து நெப்தோவா என்னப்படும் நீருற்றுக்குப் போய் ஏபிரோன் மலையின் கிராமங்களுக்குச் சென்று பாலாவாகிய காரியத்தியாரீம், அதாவது: நாடுகளின் நகரத்தை அடையும்.

10. அங்கிருந்து பாலாவை விட்டு மேற்கே செயீர் மலைமட்டும் வழி சுற்றிப் போகுது. அப்புறம் வடக்கே கெஸ்லோன் முகமாயிருக்கிற யாரீம் மலைப்பக்கத்தில் சென்று பெட்சாமேஸில் இறங்கித் தம்மனாவுக்குப் போய்,

11. வடபுறமாய்ச் சென்று அக்கரோனின் பக்கத்திலே திரும்பிச் சேக்கிரோனா முகமாயிறங்கி அங்கிருந்து பாலா மலையைத் தாண்டி ஜெப்னேல் போய் மேற்கேயுள்ள பெரிய கடலோரத்திலே முடியும்.

12. யூதா புத்திரருக்கு அவர்களுடைய வமிசங்களின் படி சுற்றிலும் நேமிக்கப் பட்ட எல்லைக்ள அவைகளேயாம்.

13. கர்த்தருடைய கட்டளையின்படியே ஜெப்போனேயின் குமாரனாகிய காலேபுக்கு, ஜோசுவா கொடுத்த காணியாட்சி என்னவென்றால்: யூதாவின் புத்திரருடைய பூமியின் நடுவே ஏனாக்கின் தகப்பனுடைய காணியாட்சியாகிய காரியாட் அர்பே என்னப்பட்ட எப்பிரோனைக் கொடுத்தான்.

14. காலேபோவெனில்அங்கே ஏனாக்கின் வமிசத்தாரான ரேசாய், அகிமான், தொல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று புத்திரரையுஞ் சங்காரம் பண்ணினான்.

15. அங்கிருந்து தாபீரின் குடிகளிடத்திற்கு இறங்கிப் போனான். முதல் முதல் அந்தத் தாபீருக்குப் பேர் கரியாட்செப்பேர், அதாவது: அட்சரங்களின் நகரம்.

16. அப்போது காவேப் (பின்வருமாறு விளம்பரம் பண்ணி): கரியாட்செப்பேரை எவன் பிடிப்பானோ அவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சம் என்பவளை விவாகம் பண்ணிக் கொடுப்பேன் என்றான்.

17. அந்தப்படி காலேபின் கனிஷ்டனான கெனேசின் மகன் ஒட்டோனியேல் பட்டணத்தைப் பிடித்தான். ஆகையால் தன் குமாரத்தி அக்சம் அம்மாளை அவனுக்கு விவாகம் பண்ணிக் கொடுத்தான்.

18. அவர்கள் ஒருமித்துப் புறப்பட்டுச் செல்லும் வழியில்: உன் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்க வேணுமென்று புருஷன் அக்சம் என்பவளை ஏவி விட்டானாகையால் அவள் கழுதையின் மேல் சவாரி போகையிலே பெருமூச்சு விடத் தொடங்கினாள். அதைக் கேட்டுக் காலேப் அவளை நோக்கி: ஏன் என்று வினாவி னான்.

19. அதற்கவள்: என் ஒரு மனுவை நீர் தர வேண்டும். அதென்னவெனில்: எனக்குத் தென்புறத்திலே வரட்சியான அந்த நிலத்தைத் தந்திரே அல்லவா, அத்தோடு நீர்ப்பாய்ச்சலான ஒரு நிலத்தையும் கூட எனக்குத் தர வேண்டும் என்றாள். அப்பொழுது காலேப் அவளுக்கு மேற்புறத்திலுங் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான மற்றொரு நிலத்தைக் கொடுத்தான்.

20. யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வமிசங்களின் கிரமப்படியே உண்டான சுதந்தரம் அதுவே,

21. கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நெடுக யூதா புத்திரரின் கோத்திரத்துக்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்சையேல், ஏதேர், ஜாகூர்,

22. சீனா, திம்னா, அததா, 

23. காதேஸ் ஆசோர், ஜெட்ணம்,

24. ஜிம், தெலேம், பாலோட்,

25. புது ஆசோர், ஆசோர் என்னப்பட்ட கரியாடெஸ்ரோன்.

26. ஆமம், சரமா, மொலாதா,

27. ஆசேர்கதா, அசேமொன், பெட்பெலத்,

28. ஆசேர்சுவல், பெர்சகே, பஜியயாட்டியா,

29. பாஆலா, ஜீம், ஏசேம்,

30. எல்டொலாத், செஜில், அர்மா,

31. சிசெலக், மெதேமெனா, சென்சென்ன,

32. லெபாவொட், சேலிம், ஆயயன், ரெம்மன்; ஆக இருபத்தொன்பது பட்டணங்களும், அவைகளுடைய கிராமங்களுமே.

33. வெளிக்காட்டு நாட்டில்: எஸ்தா வோல், சாரேயா, ஆசேனா,

34. ஜன்னயே, என்கன்னிம், தப்புவா, ஏனாயீம்,

35. ஜெரிமோட், அதுல்லம், சொக்கோ, அஜேக்கா,

36. சராயீம், அதிட்டாயீம், கெதேரா, கெதரோட்டாயீம் ஆகப் பதினாலு பட்டணங்களும், அவைகளுக்கடுத்த கிராமங்களுமே.

37. சானான், அதசா, மக்தல்கத்,

38. தெலேயோன், மசேப்பா, ஜெக்டல்,

39. லாக்கீஸ், பாஸ்காட், ஏகிலோன்,

40. லெப்போன், லெகெமன், கெட்லீஸ்,

41. கிதெரோட், பெட்தாகன் நா ஆமா, மஸேதா ஆகப் பதினாறு பட்டணங்களும் அவைகளைச் சேர்ந்த கிராமங்களுமே.

42. லபனா, ஏட்டேர், ஆசான்,

43. ஜெப்டா, எஸ்னா, நெசீப்,

44. கைலா, அக்ஜீப், மரேஸா; ஆக ஒன்பது பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

45. அக்கரோனும், அதைச் சேர்ந்த கிராமங்களும் சிற்றூர்களும்,

46. அக்கரோன் தொடங்கி சமுத்திரம் மட்டும் அஜோத்தின் வழியிலுள்ள சமஸ்த கிராமங்களும் சிற்றூர்களுமே.

47. அஜோத்தும் அதைச் சேர்ந்த ஊர்களும், சிற்றூர்களும், காஜாவும் எஜிப்த்தின் நதி மட்டும் கிடைக்கும் ஊர்களும், சிற்றூர்களுமே. பிறகு பெரிய சமுத்திரமே எல்லை.

48. மலையில்: சாமீர், ஜெட்டர், சொக்கோட்,

49. தன்னா, கரியட், சென்னா என்னும் தாபீர்,

50. அனப், இஸ்தேமோ, ஆனீம்,

51. கோசன், ஓலன், கிலோ, ஆகப் பதினொரு பட்டணங்களும் அவைகளுக்கடுத்த கிராமங்களும்.

52. அராப், ரூமா, எசான்,

53. ஜானும், பெட்டாப்புவா, அப்பேக்கா,

54. அட்மாட்டா, கரியட் அர்பே, அதாவது: எபிரோன், சியோர், ஆக ஒன்பது பட்டணங்களும், அவைகளைச் சேர்ந்த கிராமங்களுமே.

55. மாயோன், கர்மேல் ஜீப், ஜோத்தா,

56. ஜெஸ்றாயல், ஜூக்கதம், ஜனோவே,

57. அக்காயீன், கபவா, தம்னா, ஆக பத்துப் பட்டணங்களும், அவைகளைச் சேர்ந்த கிராமங்களுமே.

58. ஆலுல், பேசூர், கெதொர்,

59. மரேட், பெட்டனோட், எலதேக்கோன், ஆக ஆறு பட்டணங்களும், அவைகளைச் சேர்ந்த கிராமங்களுமே.

60. கரியட்பவால், அதாவது, சரியட்டியரீம் ஆகிய நாடுகளின் பட்டணம், அரேபா ஆக இரண்டு பட்டணங்களும் அவைகளுக்கடுத்த கிராமங்களுமே.

61. வனாந்தரத்தில், பெட்டரபா, மெத்தின், சக்கக்கா,

62. நெப்ஸன், உப்பளப் பட்டணம், என்காதி, ஆக ஆறு பட்டணங்களும், அவைகளுக்கடுத்த கிராமங்களுமே.

63. எருசலேமில் குடியிருந்த ஜெபுசையனை யூதா புத்திரர் நிர்மூலமாக்கக் கூடாமற் போயிற்று. ஆகையால் இந்நாள் மட்டும் ஜெபுசையர் யூதா புத்திரரோடுகூட எருசலேமில் வாசம் பண்ணுகிறார்கள்.