அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 14

அமாசியாசின் ஆட்சி

1. இஸ்றாயேலின் அரசனான யோவக்காசின் குமாரனான யோவாஸ் என்போனது இராசரீகத்தின் இரண்டாம் வருஷத்திலே, யூதா அரசனான யோவா சின் புத்திரனாகிய அமாசியாஸ் இராச் சியபாரம் பண்ணத்துடங்கினான்.

2. அவன் இராசாவான போது இருபத்தைந்து வயதாயிருநது எருசலே மில் இருபது வருடம் அரசாண்டான். எருசலம் பட்டணத்தாளான அவன் தாயின் பேர் ஜோவாதானாள். 

3. அவன் ஆண்டவரின் சமுகத்துக்கு நேர்மையானதையே செய்தான்; ஆனா லும் தன் பிதாவாகிய தாவீதன் போலல்ல, தன் தகப்பனான யோவாஸ் செய்தபடியெல்லாம் தானுஞ் செய்தான்.

4. உயர்ந்த இடங்களை அழித்தா னில்லை; பிரசைகள் இன்னும் மேடைகளிலே பலியிட்டுக்கொண்டும், தூபங்களைக் காட்டிக்கொண்டுமிருந் தனர்.

5. இராச்சியபாரம் அவன் கையில் எதிர்ப்பட்டபோது அவனுடைய தகப்ப னான அரசனைக் கொலை செய்த காரி யஸ்தரைக் கொன்றுபோட்டான்.

6. ஆனாலும்: பிள்ளைகளின் நிமித் தம் பிதாக்கள் சாகவேண்டாம்; பிதாக் களின் நிமித்தம் பிள்ளைகள் மரிக்க வேண்டாம். அவனவன் தான் தான் செய்த பாவத்திற்காகச் சாகக்கடவன் எனக் கர்த்தர் ஆக்கியாபித்த பிரகாரம் மோயீசன் நியாய பிரமாணப் புத்தகத் தில் எழுதப்பட்டுள்ளது போல, அமாசி யாஸ் தன் தகப்பனைக் கொலை செய் தவர்களுடைய பிள்ளைகளைக் கொன்று போட்டதில்லை.

7. அவன் சலின் கணவாயில் பதினா யிரம் இதுமேயரை முறிய அடித்து யுத்தஞ் செய்து (கற்பாறையிலிருந்த அவர்களுடைய கோட்டையைப்) பிடித்து அதற்கு இதுபரியந்தம் வழங்கு கிற எக்தேயெல் என்னும் பெயரைக் கொடுத்தனன்.

8. அப்போது அமாசியாஸ் இஸ்றா யேலின் அரசனான ஏகுவின குமார னாகிய யோவாக்கசின் புத்திரனான யோவாசிடத்தில் ஆளனுப்பி: நாம் ஒருவரையொருவர் சந்திப்பது நலம்; என்னைப் பார்க்க வாருமெனறு சொல் லச் சொன்னான்.

9. அதற்கு இஸ்றாயேல் அரசனான யோவாஸ் யூதாவின் அரசனான அமாசி யாசிடத்திற்கு ஆளனுப்பி: லிபானிலுள்ள நெரிஞ்சிச் செடியானது லிபானிலிருக்கும் கேதுருமரத்திடம் தூதனுப்பி: என் மகனுக்கு உமது பெண்ணை மனைவி யாகத் தரவேண்டும் என்றதாம்; ஆனால் அந்த லிபான் கானகத்து மிருகசாதிகள் அந்த வழி போகையில் நெரிஞ்சிச் செடி யைக் காலாலே மிதித்துப் போட்டன வாம்.

10. நீர் இதுமேயரை மடங்க அடித்த தினாலே உமதிருதயம் மமதை கொண் டெழுந்தது. நீர் (அடைந்த) மகிமையில் சந்தோஷமாயிருந்து உமது வீட்டிலிரும்; நீரும் உம்மோடு யூதாவும் விழும்படி யாய்ப் பொல்லாப்பைத் தேடிக் கொள் வானேன் எனச் சொல்லச் சொன்னாள்.

11. ஆயினும் அமாசியாஸ் செவி கொடுத்ததில்லை: (ஆதலின்) இஸ்றா யேல் அரசனான யோவான் எழுந்து வந் தான். இவனும் யூதா அரசன் அமாசி யாசும் யூதாவின் நகரமான பெத்சாமேஸ் அருகாமையிலே ஒருவருக்கொருவர் எதிர்த்தபோது,

12. யூதாவின் ஜனங்கள் இஸ்றாயேலி யருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங் கள் கூடாரங்களுக்கு ஓடிப் போனார்கள்.

13. இஸ்றாயேல் அரசனான யோவாஸ் பெத்சாமேஸ் (சண்டையில்) ஒக்கோசி யாஸ் குமாரனான யோவாசின் புத்திர னும், யூதா அரசனுமான அமாசியாஸ் என்போனை (சிறையாகப்) பிடித்து எருசலேமுக்குச் சென்றான். எருசலே மின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல் பரியந்தம் நானூறு முழநீளம் இடித்துப் போட்டு,

14. ஆண்டவருடைய ஆலயத்திலும் இராசாவுடைய பொக்கிஷத்திலுமிருந்த பொன் வெள்ளி தட்டுமுட்டு சாமான் களனைத்தையும், பிணையாளியான சில பேர்களையும் பிடித்துக் கொண்டு சமாரி யாவுக்குத் திரும்பிப் போனான்.

15. யோவாஸ் செய்த மற்றுமுள்ள வர்த்தமானங்களும் யூதா அரசனான அமாசியாசோடு யுத்தம் பண்ணிக் காண் பித்த தீவிரமும், இஸ்றாயேல் அரசரது இராசாங்கச் சம்பவச் சங்கிகமென்னும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

16. யோவாஸ் தன் பிதாக்களோடு நித்திரையடைந்த பின் சமாரியா ஊரிலே இஸ்றாயேல் அரசருடைய கல்லறை யிலே அடக்கம் செய்யப்பட்டனன். அவனுக்குப் பதிலாக அவனுடைய குமாரனாகிய எரோபோவாம் இராசா வானான்.

17. இஸ்றாயேல் அரசனான யோவா க்காசின் குமாரன் யோவாசென்போன் மரணமடைந்த பின்னர், யூதாவின் அரச னான யோவாசுடைய குமாரனான அமா சியாஸ் இன்னும் பதினைந்து வருடம் உயிரோடிருந்தான்.

18. அமாசியாசின் மற்ற வர்த்த மானங்கள் யூதா அரசரது இராசாங்கச் சம்பவச் சங்கிரகமென்னும் புத்தகத்தில் அல்லவா வரையப்பட்டுள்ளன.

19. எருசலேமில் அவனுக்கு விரோத மாக ஒரு கலகக் கட்சி ஏற்பட, அவன் லாக்கீஸ்பட்டணத்திற்கு ஓட்டம்பிடித் தான்; கட்சிக்காரர் அவன் பிறகே லாக்கீசுக்கு ஆளனுப்பினார்கள். இவர் கள் அங்கு அவனைக் கொன்றுபோட்டு,

20. அவன் சடலத்தை அசுவங்களின் மேலேற்றிக் கொணர்ந்து அவனுடைய பிதாக்கள் கல்லறையில் தாவீது பட்டண் திலே அவனை அடக்கம் பண்ணினார்கள்.

21. யூதா ஜனங்கள் எல்லோரும் கூடிப் பதினாறு வயதுள்ள அசாரியாஸ் என்போனைத் தெரிந்தெடுத்து, அவனை அவன் தகப்பனாகிய அமாசியாசுக்குப் பதிலாக இராசாவாக ஏற்படுத்தினர்.

22. இராசா தன் பிதாக்களோடு கண் வளர்ந்த பின்னர் இவன் எலாத் பட்ட ணத்தைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக் கொண்டான்.

23. யூதா அரசனான யோவாசுடைய குமாரனான அமாசியாஸ் (அரசாண்ட) பதினைந்தாம் வருடத்தில், இஸ்றாயேல் அரசனான யோவாசுடைய மகன் எரோ போவாம் என்போன் சமாரியாவில் இராஜரீகஞ் செய்யத் துவக்கி, நாற்பத் தொரு வருடம் அரசாண்டான்.

24. இவன் ஆண்டவருடைய சமுகத் திற்கு தின்மையானதைச் செய்தான். இஸ்றாயேலைப் பாவஞ் செய்யப் பண் ணின நாபாத் குமாரனான எரோபோ வாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.

25. இஸ்றாயேலின் தேவனான கர்த்தர் தமது சிஷியனான ஓப்பேரைச் சேர்ந்த கேட்டூரானாகிய அமாத்தியின் குமாரனான யோனாஸ் என்னுந் தீர்க்கத் தரிசியைக் கொண்டு திருவுளம்பற்றிய வாக்கியப்பிரகாரம் எரோபோவாம் தானே எமாத் எல்லை முதல் வனாந்தர சமுத்திரம் வரையில் இஸ்றாயேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண் டான்.

26. ஆண்டவர் இஸ்றாயேலின் உபத்திரவம் மிதமிஞ்சி இருக்கிறதையுஞ் சிறையில் அடைப்பட்டவர்களும் ஜனங் களில் கடைப்பட்டவர்களு முதலாய் எல்லோருமே நெருக்கப்பட்டிருக்கிறதை யும் இஸ்றாயேலுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லாதிருக்கிறதையுங் கண் ணுற்றார்.

27. இஸ்றாயேலின் நாமத்தை வானத் தின் கீழிருந்து அழித்துப் போடுவோ மென்று கர்த்தர் சொல்வதைப்பார்க் கிலும் யோவாசின் குமாரனான எரோபோவாமின் மூலியமாய் அவர் களை இரட்சிக்கத் திருவுளமானார்.

28. எரோபோவாமின் மற்ற வர்த்த மானங்களும், அவன் செய்த யாவும், சண்டையில் அவன் காட்டிய வீரசெளரி யமும், யூதாவிடத்திருந்த தாமாஸ்கு பட்டணத்தையும், எமாத்தையும் இஸ்றா யேலுக்காகத் திரும்பச் சேர்த்துக் கொண்டவிதமும், இஸ்றாயேல் அரசர் களது இராசாங்கச் சம்பவச் சங்கிரகமென் னும் புத்தகத்தில் வரையப்பட்டுள்ளன.

29. எரோபோவாம் தன் பிதாக்க ளான இஸ்றாயேல் அரசரோடு கண் வளர்ந்தான்; அவனுக்குப் பதிலாக அவன் புத்திரனான சக்காரியாஸ் அரசாண்டான்.