சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 14

1. தன்னை மீறி வார்த்தைகளை வெளியிடாதவனும், பாவ உறுத்தலால் குத்தித் துளைக்கப்படாதவனும் பாக்கியவான்.

2. மன வருத்தமில்லாதவனும், தன் நம்பிக்கையைக் கைவிடாதவனும் பாக்கியவான்.

3. இச்சையுள்ளவனும் கருமியுமான மனிதனுக்கு செல்வங்கள் பயனற்றவை; பொறாமை உள்ளவனுக்குப் பொன் எதற்கு?

4. தன் சொந்த ஆத்துமத்திற்குத் தீங்க செய்து செல்வம் சேர்த்து வைப்பவன், பிறருக்காகச் சேர்த்து வைக்கிறான்; மற்றொருவன் கலகம் செய்து அவனுடைய செல்வங்களை அபகரித்துக்கொள்வான்.

5. தனக்குத்தானே கெட்டவனாயிருப்பவன் எவனுக்கு நல்லவன் ஆவான்? மேலும் தான் சேகரித்த சொத்துக்களால் அவன் திருப்தி யடைய மாட்டான்.

6. தன்னைக் கண்டே பொறாமை கொள்பவனை விட அதிக மோச மானவன் எவனுமில்லை. இதுவே அவன் துர்க்குணத்தின் சம்பாவனை.

7. அவன் ஏதாவது நன்மை செய் தால், தன்னையறியாமலும், விருப்ப மில்லாமலும்தான் செய்வான்; தன் மனதின் தீய தன்மையை அவன் கடைசியில்தான் கண்டுபிடிக்கிறான்.

8. பொறாமையுள்ளவனின் கண் கொடியது. அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் சொந்த ஆத்துமத்தை நிந்திக்கிறான்.

9. இச்சையுள்ளவனின் கண் அவனுடைய அக்கிரமத்தின் பாகத் தைக் கண்டு தாகம் தணிவதில்லை; தன் சொந்த ஆத்துமத்தையே வறண்டுபோகச் செய்து, அதைச் சுட்டெரிக்கும் வரை அவன் திருப்தி யடைய மாட்டான்.

10. தீயதாகிய கண் தீயவற்றையே நோக்கியிருக்கிறது; அவன் தன் அப்பத்தால் திருப்தி கொள்ள மாட்டான்; அதற்கு மாறாக, தன் சொந்தப் பந்தியிலேயே அவன் வறிய வனாகவும், ஏக்க சிந்தனையுள்ளவ னாகவும் இருப்பான்.

11. மகனே உன்னிடம் ஏதேனும் இருந்தால் அதைக் கொண்டு உனக்கு நன்மை செய்து கொள்; தகுதியுள்ள காணிக்கைகளைக் கடவுளுக்குச் செலுத்து.

12. மரணம் தாமதிக்காதென்றும், நரகத்தின் உடன்படிக்கை உனக்குக் காட்டப்பட்டிருக்கிறது என்றும்; ஏனெனில் இவ்வுலக உடன்படிக்கை நிச்சயம் அழிந்துபோகும்.

13. சாகுமுன்பே உன் நண்பனுக்கு நன்மை செய்; உன் சக்திக்குத் தக்கபடி, கை நீட்டி ஏழைக்குக் கொடு.

14. உன் நன்மையின் நாளில் உன்னையே நீ வஞ்சித்துக் கொள் ளாதே; நற்கொடையால் உனக்கு வரும் பங்கு உன்னைக் கடந்து போகாதிருக்கட்டும்.

15. நீ துயரங்களோடும், கடும் உழைப்பாலும் சம்பாதித்தவைகளை மற்றவர்கள் சீட்டுப் போட்டுப் பிரித்துக் கொள்ளும்படி நீ விட்டுச் செல்வாய் அல்லவா?

16. கொடுத்து வாங்கி, உன் ஆத்து மத்தை நியாயப்படுத்திக் கொள்.

17. உன் மரணத்திற்கு முன்பே நீதியானதைச் செய்; ஏனெனில் நரகத்தில் உணவு காணப்படாது.

18. மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், பச்சை மரத்தில் தழைக் கும் இலையைப்போலவும் வாடிப் போகின்றது.

19. அவற்றில் சில வளரும், மற்ற சில விழுந்துவிடும்; மாம்சத்தினுடை யவும் இரத்தத்தினுடையவும் சந்ததி யிலும் அப்படியே ஒருவன் முடிவுக்கு வர, மற்றொருவன் பிறக்கிறான்.

20. அழியக்கூடியதான ஒவ்வொரு வேலையும் கடைசியில் தவறிப் போகும்; அதைச் செய்கிறவனும் அதனோடு அழிந்து போவான்.

21. அப்போது அற்புதமான வேலை ஒவ்வொன்றும் அங்கீகரிக்கப்படும்; அதைச் செய்கிறவனும் அதில் மகிமைப்படுத்தப்படுவான்.

22. ஞானத்தில் நிலைகொள்கிற வனும், தன் நீதியில் தியானிப்பவ னும், தன் மனதில் சகலத்தையும் காண்கிற தேவனுடைய கண்ணைப் பற்றி நினைக்கிறவனுமாகிய மனிதன் பாக்கியவான்.

23. ஞானத்தின் வழிகளைத் தன் இருதயத்தில் நினைத்துப் பார்க்கிற வனும், அதன் இரகசியங்களை நன்றாய் அறிந்து, தடத்தைப் பின் பற்றுகிறவன்போல ஞானத்தைப் பின் தொடர்ந்து அதன் வழிகளில் நிலை கொள்கிறவனும்;

24. அதன் சன்னல்களைப் பார்த் துக்கொண்டு, அதன் வாசலைக் கவனித்துக் கொண்டிருக்கிறவனும்.

25. அதன் வீட்டின் அருகாமை யிலேயே தங்கியிருந்து அதன் சுவர் களில் முளையடித்து அதன் பக்கத் தில், நன்மைகள் என்றென்றைக்கும் தன் கூடாரத்தில் தங்கியிருக்கும்படி அதை அடிக்கிறவனும் பாக்கிய வான்; 

26. அதன் நிழலின் கீழ் அவன் தன் மக்களைத் தங்க வைப்பான்; அதின் கிளைகளின் கீழ் தங்கியிருப்பான்.

27. அதனால் மூடப்பட்டு, உஷ்ணத்தினின்று அவன் காப்பாற் றப்படுவான்; அதன் மகிமையில் இளைப்பாறுவான்.