அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 14

அப்சலோன் ஜெருசலேமுக்குக் கொண்டு வரப்பட்டது.

1.  இராசாவின் இருதயத்திலே அப்ச லோனின் ஞாபகம் இன்னும் இருக்கிற தென்று சார்வியாளின் குமாரன் யோவாப் கண்டு,

2. தேக்குவாவூருக்கு ஆளனுப்பி, அங்கிருந்த மகா புத்திசாலியான ஒரு ஸ்திரீயை அழைப்பித்து; நீ இழவு கொண் டாடுகிறவளைப் போலப் பாசாங்கு பண்ணித் துக்க வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு எண்ணெய்ப் பூசிக் கொள்ளா மல் இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கித்திருக்கிற ஸ்திரீயைப்போல் வேஷம் போட்டு,

3. இராசாவின் அண்டைக்குப் போய் நான் உனக்குச் சொல்லப் போகிற படியே அவனிடத்தில் பேசவேண்டியதா யிருக்குமென்று சொல்லி அவள் சொல்ல வேண்டிய வார்த்தைகளை யோவாப் அவளுக்குக் கற்றுக்கொடுத்தான்.

4. அப்பிரகாரமே தேக்குவா ஸ்திரீ யானவள் இராசாவின் சமுகத்தில் பிரவேசித்து, தரையில் விழுந்து வணங்கி: இராசாவே என்னை இரட்சியும் என்றாள்.

5. இராசா அவளைப் பாரத்து: உனக்கு என்ன வேண்டுமென்று கேட்ட தற்கு அவள்: ஐயோ! என் அன்புடை யான் சீவித்துப் போனான். நான் விதவையான ஸ்திரீ;

6. உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.  அவர்கள் இருவ ரும் வயலிலே சண்டை பிடித்துக் கொண் டிருக்க, அவர்களைப் பிரித்து விலக்க ஒருவருமில்லாமல் ஒருவன் மற்றொரு வனை அடித்துக் கொன்று போட்டான்.

7. இப்பொழுதோ வம்சத்தார் அனைவரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பித் தன் சகோதர னைக் கொன்றுபோட்டவனை நீ ஒப்பித்து விடு; அவன் கொன்ற தன் சகோதரனுடைய உயிர்க்குப் பதிலாய் நாங்கள் அவனைக் கொலை செய்து சுதந்தரவாளனை அழித்துப் போடு வோம் என்கிறார்கள்.  இப்படி என் புருஷ னுக்குப் பூமியிலே பேருமில்லாமல் பிள்ளையில்லாமல் இருக்கும்படியாக எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியைற அவித்துப் போட மனதா யிருக்கிறார்களே என்றாள்.

8. இராசா அந்த ஸ்திரீயைப் பார்த்து, நாம் உன் காரியத்தைக் குறித்து உத்தரவு கொடுப்போம்.  நீ உன் வீட்டுக் குப் போகலாமென,

9. அந்தத் தேக்குவா ஸ்திரீ அரசனை நோக்கி: என் ஆண்டவனான இராசாவே, பழியிருந்தாலும் அது என்மேலும், என் தகப்பனுடைய வீட்டின்மேலும் வரட் டும்.  இராசாவின் மேலும், அவருடைய சிம்மாசனத்தின்மேலும் குற்றமில்லா திருக்கக் கடவதென்றான்.

10. அதற்கு இராசா: எவன் உனக்கு விரோதஞ் செய்வானோ அவனை என்னிடத்தில் கொண்டு வா; அவன் இனி உன்னைத் தொட மாட்டான்    என,

11. அவள்: இரத்தப் பழிவங்குகிறவர் கள் பலபேராக எழும்பி இறந்து போன என் குமாரனைப் பற்றி மீதியாயிருக்கிற என் புத்திரனை அழிக்காதபடிக்கு இராசா தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைத்துப் பார்த்துக் கொள்ளக்கடவா ராக என்றாள்.  இதற்கு இராசா: கர்த்த ருடைய சீவனாணை!  உன் குமார னுடைய தலை மயிர்களில் ஒன்றாவது தரையிலே விழாது என்று சத்தியமாய்ச் சொன்னான்.

12. அப்பொழுது அந்த ஸ்திரீ: அடியாள் என் இராசாவாகிய என் ஆண்டவரோடு ஒரு வார்த்தைச் சொல் லட்டுமாவென்று வினவ, அவன் சொல் லென்றான்.

13. அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை தேவ பிரசைக்கு விரோதமாய் நீர் இப்படிப்பட்ட நிலையை ஏன் கொண்டிருக்கிறீர்?  இராசா தன் குமார னைத் துரத்திப் போட்டாரே.  அவனைத் திரும்ப அழைக்காவிட்டால் அவர் இப் போது சொல்லிய வார்த்தை அவருக்குப் பாவமாகாதா?

14. நாம் எல்லாரும் மரிப்பது நிச்சயமே. தரையில் ஓடுகிற தண்ணீர் திரும்பாததுபோல நாம் விழுந்து திரும்ப வர மாட்டோம்.  ஆத்துமாக்கள் கெட்டுப் போகும்படி தேவன் சித்தமா யிருக்கவில்லை.  ஆனதுபற்றித் தள்ளுண் டவன் முற்றிலுங் கெட்டுப்போகாத படிக்கு அவர் கண்டும் பொறுத்து தாமதம் பண்ணிக்கொண்டு வருகிறார்.

15. அப்படியிருக்க நான் என் ஆண்ட வராகிய இராசாவிடத்தில் நாலு பேர் கேட்க இந்தச் சங்கதியைப் பேசவந்தேன். உம்முடைய அடியாள் தனக்குள்ளே தீர்மானம் பண்ணி: நான் அரசன் அண்டை போய்ப் பேசட்டும்; அவர் ஒரு வேளை தம் அடியாளுடைய விண்ணப் பத்தை அங்கீகரித்துக் கொள்வாரே என்றெண்ணி வந்தேன்.

16. ஏற்கெனவே இராசா அடியே னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு என்னையும், என் குமாரரையும் ஏகமாய் தேவனுடைய சுதந்தரத்திற்குப் புறம் பாக்கி அழிக்கக் கருதின சகலருடைய கைக்குத் தம் அடியாளைத் தப்புவிக்கச் செய்தார்.

17. ஆகையால் இராசாவாகிய என் ஆண்டவரே, பலியைப் போல் கட்டாய மாய் நிறைவேற வேணுமென்று அடி யாள் கோருகின்றேன்.  தேவதூதனைப் போல் என் ஆண்டவராகிய இராசா சாபத்தினாலும் ஆசீர்வாதத்தினாலும் அசைக்கப்படவே மாட்டார்.  இதற்காக அல்லோ உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்முடனே இருக்கிறா ரென்றாள்.

18. இதற்குப் பிரத்தியுத்தாரமாக இராசா அந்த ஸ்திரீயை நோக்கி: நான் உன்னை ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: ஒன்றும் மறைக்காதே என்றான்.  அதற்கு அந்த ஸ்திரீ (அது என்ன)? என் ஆண்டவ ராகிய இராசா அதை எனக்குச் சொல்ல வேண்டுமென்றாள்.

19. அப்பொழுது அரசன்: இதற்கெல் லாம் யோவாப் உனக்கு உட்கையா யிருக்கவில்லையாவென்று கேட்டான்.  அதற்கு மறுமொழியாக அந்த ஸ்திரீ: என் ஆண்டவராகிய இராசாவே, தேவரீ ருடைய சீவனாணை! இராசாவாகிய என் ஆண்டவர் சொன்னதெல்லாம் வலது பக்கத்திலாவது இடது பக்கத்திலாவது சாயாமல் சரியாய்த்தானிருக்கிறது.  உமது ஊழியனாகிய யோவாபே எனக்கு அதைக் கற்பித்தான்.  நான் சொல்லிய வார்த்தைகளையெல்லாம் அவன் உமது அடியாளுடைய வாயிலே போட்டான்.

20. நான் இந்த வார்த்தைகளை உவமையைப் போல் சொல்ல வேணு மென்று உம் ஊழியனாகிய யோவாப் கட்டளையிட்டான்.  ஆனாலும் இவ் வுலக இரகசியங்களை எல்லாந் தேவரீர் அறிந்திருக்கிறீரே. ஏனெனில் இராசா வாகிய என் ஆண்டவரே, தேவதூத னைப் போல நீர் ஞானம் நிறைந்தவரா யிருக்கிறீர் என்றான்.

21. பிறகு இராசா யோவாபைப் பார்த்து: இதோ என் கோபம் ஒழிந்து போயிற்று.  நீ கேட்டபடி செய்கிறேன்.  நீ போய் அப்சலோன் என்னும் என் குமாரனை அழைத்துக் கொண்டு வாவென்றான்.

22. அப்பொழுது யோவாப் தரை யிலே முகங் குப்புற விழுந்து வணங்கி இராசாவைப் போற்றி வாழ்த்தினான்; பிறகு தாவீதை நோக்கி: என் ஆண்டவ னாகிய இராசாவே, நீர் உம் ஊழிய னுடைய வார்த்தையைக் கேட்டதி னாலே உம்முடைய கண்களில் எனக்குத் தயைக் கிடைத்ததென்று நான் இன்று கண்டுபிடிக்கலாயினேன் என்றான்.

23. பின்பு யோவாப் எழுந்து ழெஸ் ஸூருக்குப் போய் அப்சலோனை எருச லேமுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான்.

24. ஆனால் அரசன்: அவன் தன் வீட் டுக்குத் திரும்பிப் போகட்டும்.  அவன் என் முகத்தைப் பார்க்க வேண்டிய தில்லை என்று சொன்னதினாலே அப்ச லோன் இராசாவின் முகத்தைப் பாரா மலே தன் வீட்டுக்குத் திரும்பிச் சென் றான்.

25. ஆனால் சமஸ்த இஸ்றாயேலிய ருக்குள்ளே அப்சலோனுக்கு ஒப்பாகச் சவுந்தரியமுள்ளவனுமில்லை; எல்லோ ருக்குஞ் சிநேக பாத்திரனுமில்லை; உள்ளங்கால் துடங்கி உச்சந்தலை மட்டும் அவனில் ஒரு பழுதுங் கிடை யாது.

26. அவனுடைய கேசம் அவன் தலைக்கு அதி பாரமாயிருந்ததினாலே வருஷாந்தரம் அதைக் கத்தரிக்க வேண் டியதாயிருக்கும். கத்தரிக்கும்போது அவன் தலைமயிர் இராச நிறையின்படி இருநூறு சீக்கல் நிறையாயிருக்கும்.

27. அப்சலோனுக்கு மூன்று குமார ரும், தாமார் என்னப்பட்ட அதி சோபன ரூபவதியான ஒரு குமாரத்தியும் பிறந் திருந்தனர்.

28. அப்சலோன் இராசாவின் முகத் தைக் காணாமலே இரண்டு வருஷம் எருசலேமில் வாசம் பண்ணினான்.  

29. கடைசியிலே அவன் யோவா புக்கு ஆள் அனுப்பி இராசாவினிடத்தில் போய் பேசும்படி தன்னிடம் வரச் சொன்னான்.  யோவாபோ அவனிடத்தில் வரச் சம்மதிக்கவில்லை; அப்சலோன் இன்னொரு விசை அவனைக் கூப்பிட ஆளனுப்பினதற்கு: அவன்: இல்லை வர மாட்டேனென்று பதில் சொல்லச் சொன் னான்.

30. அப்பொழுது அப்சலோன் தன் ஊழியரைப் பார்த்து: உங்களுக்குத் தெரி யும்.  என் வயலுக்கு அருகே யோவாபின் நிலமிருக்கிறது.  அதில் வாற்கோதுமை விளைந்திருக்கிறது. நீங்கள் போய் அதை தீக்கொளுத்தி நாசம் பண்ணுங்கள் என, அப்பிரகாரமே அவர்கள் போய்ப் பயி ரைச் சுட்டெரித்துப் போட்டார்கள். யோவாபின் வேலைக்காரரோ தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போட்டு (எசமானிடத்திற்கு) வந்து, அவனைப் பார்த்து: அப்சலோனின் ஊழியர்கள் உங்கள் நிலத்தின் ஒரு பங்கை தீப்போட்டு நாசம் பண்ணினார்களென்று செய்தி சொல்ல,

31. கேட்டு யோவாப் எழுந்து அப்ச லோனிடம் அவன் வீட்டிற்குள் போய், உம் ஊழியர்கள் என் நிலத்துப் பயிரைத் தீப்போட்டு அழித்தார்களே!  என்ன முகாந்திரம் என்று விசாரிக்க,

32. அப்சலோன் யோவாபை நோக்கி, ழெஸ்ஸூரிலிருந்து நான ஏன் வந்தேன்? அங்கே இருந்துவிட்டாலே எனக்கு நல மாயிருக்கும் என்று நீர் இராசாவினிடத் திற்குப் போய்ச் சொல்லும்படி உம்மை அலட்டிக் கேட்க ஆளனுப்பினேன்.  ஆகையால் மறுபடியும் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்; நான் இராசாவின் முகத்தைப் பார்க்கும்படி நீர் செய்ய வேண்டும்.  இராசா என் குற்றத்தை மறந்து மன்னிப்புக் கொடுக்க மாட்டே னென்றால் அவர் என்னைக் கொன்று போடுகிறது தாவிளையென்று சொன் னான்.

33. அப்புறம் யோவாப் அரசனிடத் திற்குப் போய், எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான். அப்போது அப்சலோன் அழைக்கப்பட்டு அரச னிடத்தில் வந்து அவன் முன்பாகத் தரையிலே முகங் குப்புற விழுந்தான்.  இராசா அப்சலோனை மார்போடு தழுவி முத்தமிட்டான்.