அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 14

எரோபோவாமின் ஆட்சியும், மரணமும்.

1.  அக்காலத்திலே எரோபோவாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். 

2. அப்போது எரோபோவாமின் மனைவியென்று ஒருவரும் அறியாத படிக்கு வேறு கோலத்தை அணிந்து நான் இந்த ஜனங்களுக்கு இராசா ஆவேன் என்று எனக்குச் சொன்ன தீர்க்கதரிசி யாகிய அகியாஸ் குடிகொண்டிருக்கிற சிலோவுக்கு நீ போகவேண்டும்.

3. உன்னோடு பத்து அப்பங்களை யும் பலகாரங்களையும் ஒரு கலயந் தேனையும் எடுத்துக் கொண்டு அவ னிடத்திற்குப் போ; பிள்ளைக்குச் சம்ப விக்கப் போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பானென்றான்.

4. அப்படியே எரோபோவாமின் மனைவி முஸ்திப்பாய் புறப்பட்டுச் சிலோவுக்குப் போய் அகியாசின் வீட்டுக் குள் சென்றாள்; அகியாசோ முதிர் வயதானதினால் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதவனாயிருந்தான்.

5. அந் நேரத்தில் கர்த்தர் அகியாசை நோக்கி: இதோ எரோபோவாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமார னைப்பற்றி உன்னிடம் விசேஷங் கேழ்க்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்னின்ன பிரகாரஞ் சொல்லவேண்டும் என்றார்.  பிறகு அவள் அவனிடம் வந்து தன்னை ஓர் அந்நிய ஸ்திரீயைப்போல் பாசாங்கு பண்ணத் துடங்கினாள்.

6. அப்படியே அவள் வாசற்படிக்குள் பிரவேசிக்கும்போது அகியாஸ் அவ ளுடைய நடையின் சப்தத்தைக் கேட்ட வுடனே எரோபோவாமின் மனைவியே!  உட்பிரவேசி.  நீ உன்னை அந்நிய ஸ்திரீ யாகப் பாராட்டுவானேன்?  நான் உனக்கோர் துக்கச் செய்தியை அறிவிக்க அனுப்பப்பட்டேன்.

7.  எரோபோவாமிடம் போய் நீ அவனுக்குச் சொல்லவேண்டியது:  இஸ் றாயேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லு கிறதென்னவென்றால்: ஜனங்களுக்குள் ளாக நாம் உன்னை உயர்த்தி நமது  இஸ்றாயேலின் ஜனத்துக்கு உன்னை அதிபதியாக ஸ்தாபித்தோம்.

8. தாவீது வமிசத்தாரிலிருந்த இராச் சியத்தைப் பிரித்து அதை உன் கையில் கொடுத்தோம், ஆனாலும் நமது கற்ப னைகளைக் கைக்கொண்டு நமது சமுகத் தில் செவ்வையாய் நடந்து தன் முழு இருதயத்தோடும் நம்மைப் பின்பற்றின நமது தாசனாகிய தாவீதைப் போல் நீ இராமல்,

9. உனக்கு முன்னிருந்த எல்லோரை யும் பார்க்கிலும் நீ அதிக தீங்கு புரிந்தாய்.  நமக்குக் கோபம் வருவிக்க வார்ப்பட விக்கிரகங்களாகிய அந்நிய தேவர்களை உண்டாக்கிக் கொண்டு உனக்குப் புறம் பாக நம்மைத் தள்ளிவிட்டாய்.

10. ஆகையால் எரோபோவாம் சந்ததியின் பேரில் சகலவித நிர்ப்பாக்கிய மும் வரப்பண்ணி, எரோபோவாமின் வீட்டிலே சுவரண்டையில் சலவாதிக்கு உட்கார்ந்திருக்கிறவனையும், அடைத்து வைக்கப்பட்டவனையும், இஸ்றாயே லிலுள்ள கடைசியானவனையும் ஆக சகலரையுமே சங்காரம்பண்ணி, குப்பை யைச் சுத்தச் சாரமாகுமட்டும் அழுகி விடச் செய்வது போல் எரோபோவாமின் சந்ததியைச் சுத்தமாய் வாரியெடுத்துப் போடுவோம் என்றார்.

11. எரோபோவாமின் சந்ததியாரில் எவர்கள் பட்டணத்திலே சாவார்களோ அவர்கள் நாய்களுக்கு இரையாவார்கள்; வெளியில் சாகிறவர்களோ ஆகாயத்துப் பறவைகளுக்கு இரையாவார்கள்; இது கர்த்தருடைய வாக்கியம்.

12. ஆகையால் நீ புறப்பட்டு உன் வீட்டுக்குப் போ; நீ எந்நேரத்திலே பட்டணத்துக்குள் அடி வைப்பாயோ அந்நேரத்தில் உன் பிள்ளை சாகும்.

13. அப் பிள்ளைக்காக இஸ்றாயேலி யரெல்லாருந் துக்கங் கொண்டாடி அதை அடக்கம் பண்ணுவார்கள்.  ஏனெனில் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் எரோபோமாவின் சந்ததியில் அந்த ஒரு பிள்ளையின்மட்டில் கிருபைக் கண் கூர்ந்ததினால் அந்த ஒரு பிள்ளை மாத்திரங் கல்லறையில் அடக்கம் பண்ணப்படும்.

14. உள்ளபடி கர்த்தர் தமக்காக இஸ்றாயேலுக்கு ஓர் இராசாவை நியமித்தார்; அவன் காலத்திலே எரோ போவாமின் சந்ததியை நிர்மூலமாக் குவான்; அது இக்காலத்திலேயே சம்பவிக்கும்.

15. தண்ணீரிலே நாணல் அசைவது போல் கர்த்தர் இஸ்றாயேலை அசைத்து அவர்களை உபாதித்து, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த          இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்றா யேலை வேரோடு பிடுங்கி அவர்கள் தங்கள் விக்கிரக ஆராதனைகளுக்குப் பெருந் தோப்புகளை ஏற்படுத்தி கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கின  தால் அவர்களை நதிக்கப்பால் சிதறடிப் பார்.

16. எரோபோவாம் கட்டிக் கொண்ட தும், இஸ்றாயேலைக் கட்டிக் கொள்ளச் செய்ததுமான பாவங்களின் நிமித்தம் இஸ்றாயேல் அடிமைப்பட்டுப் போகு மென்றாரென்றான்.

17. அப்போது எரோபோவாமின் மனைவி பிரயாணமாகித் தேர்சாவுக்குப் புறப்பட்டுவந்து அவள் தன் வீட்டு வாசற்படியில் கால் வைத்தவுடனே பிள்ளை இறந்துவிட்டது.

18. கர்த்தர் தீர்க்கத்தரிசியாகிய அகியாஸ் என்னுந் தமது தாசனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அந்தப் பிள்ளையை அடக்கஞ் செய்து இஸ்றாயேலியரெல்லாருந் துக்கங் கொண்டாடினார்கள்.

19. எரோபோவாம் யுத்தம் பண்ணின தும் அரசாண்டதுமான அவனுடைய  மற்ற வர்த்தமானங்கள் இஸ்றாயேலின் இராசாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கின்றன.

20. எரோபோவாம் இருபத்திரண்டு வருஷம் இராச்சியபாரம் பண்ணினான்.  அவன் தன் பிதாக்களோடு நித்திரையான பின் அவன் குமாரனாகிய நாதாப் சிம்மா சனமேறினான்.

21. சலோமோனின் குமாரனாகிய ரொபோவாமோவெனில் யூதாவின் இராச்சியபாரம் பண்ணினான்; ரொபோ வாம் இராசாவாகிற போது நாற்பத் தொரு வயதாயிருந்து கர்த்தர் தம் முடைய நாமம் விளங்கும்படி இஸ்றா யேல் கோத்திரங்களிலெல்லாந் தெரிந்து கொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் இராச்சியபாரம் பண்ணினான்; அம்மோனித் ஊரா ளாகிய அவனுடைய தாயின் பேர் நாமாள்.

22. யூதா ஜனங்கள் கர்த்தருக்கு விருத் துவமாய்ப் பாவஞ் செய்து தாங்கள் செய்த பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப் பார்க்கிலும் அவருக்கு அதிக கோபத்தை மூட்டி னார்கள்.

23. அவர்களும் உயர்ந்த சகல மேடைகளின்மேலும், அடர்ந்த சகல மரங்களின் கீழும், பலிபீடங்களையும், சிலைகளையும், விக்கிரகத் தோப்புகளை யும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

24. தேசத்திலே பெண்மையான புருஷருமிருந்தார்கள்; கர்த்தர் இஸ்றா யேல் புத்திரருக்கு முன்பாக அழித்துச் சங்கரித்துப் போட்ட ஜனங்களுடைய சகலவித அக்கிரமங்களையுங் கட்டிக் கொண்டார்கள்.

25. ரொபோவாம் இராச்சியபாரம் பண்ணின ஐந்தாம் வருஷத்திலே எஜிப்த் தின் இராசாவாகிய சீசாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,

26. கர்த்தருடைய ஆலயத்தின் பொக் கிஷங்களையும், அரண்மனையின் பொக் கிஷங்களையும், சலோமோன் செய்து வைத்த பொன் கேடயங்கள் ஆகிய எல்லாவ்றையும் எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

27. அவைகளுக்குப் பதிலாக இராசா வாகிய ரொபோவாம் வெண்கலக் கேட யங்களைச் செய்வித்து அவைகளைக் கேடயப் பிரபுக்களின் கையிலும், இராசாவின் வாசலைக் காக்கிறவர்களின் கையிலுங் கொடுத்தான்.

28. இராசா கர்த்தருடைய ஆலயத் துக்குள் பிரவேசிக்கும்போது அரண் மனைச் சேவகர் அவைகளைப் பிடித்துக் கொண்டு இராசாவுக்கு முன் நடந்து போவார்கள். பின்பு அவைகளை ஆயுத சாலையிலே திரும்ப வைப்பார்கள்.

29. ரொபோவாமின் மற்ற வர்த்த மானங்களும் அவன் செய்தவை யாவும் யூதாவினுடைய இராசாக்களின் நாளாகம எழுதியிருக்கிறது.

30. ரொபோவாமுக்கும் எரோபோ வாமுக்கும் அவர்களிருந்த நாளெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

31. ரொபோவாம் தன் பிதாக்க ளோடு நித்திரையடைந்து தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டான்; அம்மோ னித்தாளாகிய அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் இராசா வானான்.