அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 14

ஜோனத்தாஸின் வெற்றி.

1. அப்போதொருநாள் சவுலின் குமாரனாகிய ஜோனத்தாஸ் தன் ஆயுத தாரியான வாலனை நோக்கி: இவ்விடத் துக்கப்பால் இருக்கிற பிலிஸ்தியர் தானை யத் தண்டைக்குப் போவோம் வா என்றான். அதை அவன் தன் தகப்பனுக் குத் தெரிவிக்கவில்லை.

2. அந்நேரத்தில் சவுல் காபாவின் கடைசி எல்லையாகிய மக்ரோனிலிருந்த ஒரு மாதள மரத்தின் கீழ் தங்கியிருந் தான். அவனுடனிருந்த ஜனம் ஏறக் குறைய அறுநூறு பேர்.

3. சீலோவில் ஆண்டவருடைய குரு வாகிய ஏலிக்குப் பிறந்த சினேசின் குமாரனாகிய இக்காபோதின் சகோ தரனான அக்கிதோபின் மகனாகிய ஆக்கியாஸ் எப்போதைத் தரித்துக் கொண்டிருந்தான். ஆனால் ஜோனத் தாஸ் எங்கே போனானென்று ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.

4. ஜோனத்தாஸ் பிலிஸ்தியர் தானைய மட்டும் ஏற முயன்றும் மேட்டு வழிக்கு இரு புறத்திலுஞ் செங்குத்தான பாறைகளிலுந்தன. பாறைகளும் அங்கு மிங்கும் பல்லுகளைப் போன்ற செங் குத்தாயிருந்த சிகரங்களுமிருந்தன; இவைகளில் ஒன்றுக்குப் போசெஸ் என்றும் மற்றொன்றுக்குச் சேனே என்றும் பேர் இருந்தது.

5. அதுகளில் ஒன்று வடக்கே மக்மா சுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே காபாவுக்கு எதிராகவும் எழும்பி இருந்தது.

6. ஜோனத்தாஸ் தன் ஆயுததாரி யாகிய வாலனைப் பார்த்து விருத்தசேத னம் இல்லாதவர்களுடைய தானையத் துக்குப் போவோம் வா. சிலவிசை ஆண்டவர் நமக்குச் சனுவாயிருப்பார். ஏனெனில் அநேகம்பேரைக் கொண்டுஞ் சரி கொஞ்சம் பேரைக் கொண்டுஞ் சரி மீட்டிரட்சிப்பது ஆண்டவருக்குத் தடையில்லை.

7. அவனுடைய ஆயுததாரி: உம் புத்திக்கு இஷ்டமானதை எல்லாஞ் செய் யும். நீர் உமது இஷ்டப்படி நடந்து போகலாம்; எங்கே சென்றாலும் நானும் உம்மோடுகூட வருகிறேனென்று அவ னுக்குச் சொன்னான்.

8. அதற்கு ஜோனத்தாஸ்: இதோ நாம் அந்த மனிதர்களிடத்திற்குப் போவோம்; நாம் அவர்களுக்குத் தென்படும்போது,

9. நாங்களே உங்களிடத்திற்கு வரும் வரைக்கும் நீங்கள் நில்லுங்கள் என்று அவர்கள் நம்மிடத்தில் பேசினால் நமதிடத்தை விட்டு அவர்களிடத்திற்குப் போகவேண்டாம்.

10. அவர்கள் எங்களிடத்திற்கு வாருங்களென்று சொன்னால் போவோம். ஏனெனில் ஆண்டவர் அவர்களை நமது கைகளில் ஒப்பித்தா ரென்பதற்கு அதுவே அடையாளம்.

11. அப்படியே இருவரும் பிலிஸ் தியர் தானையத்திற்குமுன் தோன்றின போது பிலிஸ்தியர்: இதோ எபிறேயர் ஒளித்திருந்த வங்குகளை விட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,

12. தானையத்தினின்று ஜோனத்தா சிடத்திலும் அவனுடைய ஆயுததாரி யிடத்திலும் பேசி: எங்களிடத்திற்கு ஏறி வாருங்கள். உங்களுக்கு ஒரு காரியங் காட்டுவோமென்று சொன்னார்கள். அப்போது ஜோனத்தாஸ்: போவோம், என்னைப் பின்செல்லு; ஆண்டவர் இஸ்றாயேல் கையில் அவர் களை ஒப்பித்துவிட்டார் என்று ஆயுததாரிக்குச் சொல்லி, 

13. ஜோனத்தாஸ் கைகளாலும் கால்களாலும் நகர்ந்து ஏறினான்; அவ னுடைய ஆயுததாரியும் அவனுக்குப் பின் னாலே ஏறினான். அப்பொழுது (பிலிஸ் தியரில்) சிலர் ஜோனத்தாஸ்முன் மடிந்து விழுந்தார்கள். அவன் பின்னாலே வந்த இவனுடைய ஆயுததாரியும் பல பேரை வெட்டிக் கொன்றான்.

14. ஜோனத்தாசும் அவனுடைய ஆயுததாரியும் அடித்த இந்த முதல் அடியிலே ஏறக்குறைய இருபது பேர் அரையேர் நிலமான விசாலத்திலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

15. பாளையத்திலும், நாட்டிலும் ஆச்சரியத்துக்குரிய பயங்கரமுண்டா யிற்று. கொள்ளையிடப் போயிருந்தவர் களின் கூட்டத்தின் ஜனங்களெல்லாம் திடுக்கெனத் திகில்பட்டார்கள். பூமியும் அதிர்ந்தது. இது தேவனால் உண்டான புதுமைபோல் சம்பவித்தது.

16. இதோ வெகு ஜனம் விழுந்து கிடக்கிறதையும், அங்குமிங்கும் ஓடுகிற தையும் பெஞ்சமீனுடைய கபாவிலிருந்த சவுலின் காவற்காரர்கள் கண்டார்கள்.

17. சவுல் தன்னோடுயிருந்தவர்களை நோக்கி: நம்மைவிட்டுப் போனவனார்? விசாரித்துப் பாருங்கள் என்று சொன்னான். இலக்கம் பார்க்கையில் ஜோனத்தாசும், அவனுடைய ஆயுததாரி யும் இல்லாமலிருப்பதாகக் காணப்பட் டது.

18. அப்பொழுது சவுல் அக்கியாசைப் பார்த்து: தேவனுடைய பெட்டகத்தை விசாரித்துக் கேளுமென்றான். உள்ளபடி அந்நாளிலே தேவனுடைய பெட்டகம் இஸ்றாயேல் குமாரர்களிடம் இருந்தது.

19. சவுல் ஆசாரியனிடத்தில் பேசிக் கொண்டிருக்கையிலே பிலிஸ்தியர் பாளையத்தில் பலத்த கோஷ்டங் கிளம் பினது. அது கொஞ்சங் கொஞ்சமாய் அதிகரித்து வெகு தெளிவாய் முழங்கினது. அப்போது சவுல்: உன் கையை மடக்கு என்று ஆசாரியனுக்குச் சொன்னான்.

20. சவுலும் அவனோடு இருந்த எல்லா ஜனங்களும் ஆர்ப்பரித்துப் போர்க் கள மட்டும் போனபோது, அதோ பிலிஸ்தியரில் ஒவ்வொருவன் பட்டயந் தன் அண்டையிலிருந்தவனுக்கு விரோத மாய்ப் பிரயோகிக்கப்பட்டதாயிருந்தது. அதனால் பெரிய சங்காரம் உண்டா யிற்று.

21. இதைக் கண்டு இரண்டு மூன்று நாளைக்கு முன் பிலிஸ்தியரோடுகூடி அவர்களுடன் பாளையத்தில் போயி ருந்த எபிரேயர்கள் சவுல் ஜோனத்தாசோ டிருந்த இஸ்றாயேலருடன் சேர்ந்து கொள்ளத் திரும்பி வந்தார்கள்.

22. எப்பிராயீம் மலையில் பதுங்கி யிருந்த இஸ்றாயேலியர்களெல்லாம், பிலிஸ்தியர் ஓட்டம் பிடித்தார்கள் என்று கேள்விப்பட்டு யுத்தத்திலே அவர் களோடு கூடிக் கொண்டார்கள்; இந்நேரம் ஏறக்குறைய பதினாயிரம் பேர் சவுலின் பக்கத்தில் இருந்தார்கள்.

23. அன்றையத் தினம் ஆண்டவர் இஸ்றாயேலை இரட்சித்தார், யுத்தம் வெத்தாவென் வரைக்கும் நடந்தது.

24. இஸ்றாயேல் மனிதர்கள் அந் நாளிலே ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். அப் பொழுது சவுல் ஜனங்களைப் பார்த்து: நான் என் சத்துருக்களின கையிலே பழி வாங்கப்போகிறேன். சாயுங்காலமட்டும் எவன் சாப்பிடுவானோ அவன் சபிக்கப் பட்டவனென்று ஆணையிட்டு வேண் டிக் கொண்டான். அன்று ஜனங்களில் ஒருவரும் போஜனம் பண்ணவேயில்லை.

25. அவர்களெல்லாம் காட்டுப் பூமியில் வந்தார்கள்; அங்கு தரைமேல் தேனிருந்தது.

26. அவர்கள் சாதாரணமாய் ஒரு காட்டில் நுழைந்து தேன் ஒழுகுகிறதைக் கண்டாலும் எவனும் கையை வாயில் வைத்தவனல்ல, ஜனங்கள் ஆணைக்குப் பயந்திருந்தார்கள்.

27. ஆனால் ஜோனத்தாஸ் அவனு டைய தகப்பன் ஜனங்களுக்குக் கட்ட ளையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலின் நுனியை நீட்டித் தேன்கூட்டிற் குத்தி அதைக் கையால் வாயில் வைத்தான், அவன் கண்கள் தெளிவாயின.

28. அப்பொழுது ஜனங்களில் ஒரு வன்: இன்றைக்கு உன் தகப்பன் ஆçயிட்டு எவன் போஜனஞ் செய் வானோ அவன் சபிக்கப்பட்டவனென்று மிகவும் விடாய்த்திருந்த ஜனங்களுக்கு உறுதியான கட்டளை கொடுத்தாரே என்றான்.

29. அதற்கு ஜோனத்தாஸ்: என் தகப்பன் அதினாலே ஜனங்களுக்கு வீண் தொந்தரவு கொடுத்தார். அந்தத் தேனில் நான் கொஞ்சஞ் சாப்பிட்டதினாலே என் கண்கள் தெளிவானதை நீங்கள் கண்டீர் களல்லோ?

30. ஜனங்களுக்கு அகப்பட்ட சத்துருக்களின் கொள்ளையிலே அவர்கள் ஏதேனும் பொசித்திருநதால் எவ்வளவு திடனாயிருப்பார்கள். பிலிஸ்தியருக்குள் ளுண்டான சங்காரம் எவ்வளவு பெரிதாயிருக்கும் என்று மறுவுத்தாரஞ் சொன்னான்.

31. அன்றையத் தினம் அவர்கள் மக்மாஸ் துவக்கி அயியாலோன் வரைக் கும் பிலிஸ்தியரை முறிய அடித்தார்கள். ஜனங்கள் மிகவுங் களைத்திருந்தார்கள்.

32. அவர்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து ஆடு மாடுகளையுங் கன்றுகளை யும் பிடித்துக் கொண்டு வந்து தரையிலே போட்டு அடித்து இரத்தத்துடன் சாப்பிட்டார்கள்.

33. அப்பொழுது இதோ இரத்தத் துடன் சாப்பிட்டதனால் ஜனங்கள் ஆண்டவருக்குத் துரோகஞ் செய்தார்கள் என்று யாரோ வந்து சவுலுக்குத் தெரிவித் தார்கள். அதற்கு அவன்: நீங்கள் தேவ கட்டளையை மீறிப் போனீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக் கொண்டு வாருங்கள் என்றான்.

34. மறுபடியும் சவுல் சில பேர்களை அனுப்பி: நீங்கள் சாதாரண ஜனங்களுக் குள்ளே போய்: இரத்தத்தோடு மாமிசஞ் சாப்பிட்டால் ஆண்டவருக்கு ஏற்காத பாவம். அது நடவாதபடிக்கு ஜனங்களில் ஒவ்வொருவனுந் தன் மாட்டையாவது கடாவையாவது சவுலிடத்தில் கொண்டு வந்து அங்கே அடித்துப் பின்பு சாப்பிட லாம் என்று சொல்லச் சொன்னான். ஆகையால் ஜனங்களெல்லோரும் அவரவர் தங்கள் மாட்டை அன்று இராத்திரி தாங்களே கொண்டு வந்து அங்கே அடித்துப் பின்பு சாப்பிடலாம் என்று சொல்லச் சொன்னான். ஆகையால் ஜனங்களெல்லாரும் அவரவர் தங்கள் மாட்டை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து அங்கேதானே அடித்தார்கள். 

35. அதற் பிறகு சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிப் பீடங் கட்டினான். அது அவன் ஆண்டவருக்குக் கட்டின முதலாவது பலிப்பீடமாம்.

36. மறுபடி சவுல்: நாம் இரவில் பிலிஸ் தியர்மேல் பாய்ந்து பொழுது விடியும் பரியந்தஞ் சங்காரம் பண்ணுவோம், அவர்களில் ஒரு மனிதனையும் விட லாகாதென்று சொன்னான். அதற்கு ஜனங்கள்: உமது கண்களுக்கு நலமாய்த் தோன்றுவதை எல்லாஞ் செய்யுமென் றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கு தேவனை அண்டிப்போக வேண்டு மென்று சொன்னான்.

37. அப்படியே: பிலிஸ்தியரைப் பின் தொடர்நது போகலாமா? அவர்களை இஸ்றாயேல் கையில் விடுவீராவென்று சவுல் ஆண்டவரிடத்தில் விசாரித்தான். அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுமொழி சொல்லவில்லை.

38. இதைக் கண்டு சவுல்: ஜனங்களில் பெரியோர்களை எல்லாம் இங்கு சேர்த்து இன்று ஆராலே இந்தப் பாவம் வந்ததென்று பார்த்து அறியுங்கள்;

39. இஸ்றாயேல் இரட்சகராகிய ஆண்டவரே சாட்சி; என் குமாரனாகிய ஜோனத்தாசால் சம்பவித்ததானால் தடையொன்றின்றி அவன் சாகக்கட வானென்று சொன்னான். சகல ஜனங் களுக்குள் ஒருவனும் அவனுக்கு விரோதம் சொல்லவில்லை.

40. சவுல் இஸ்றாயேல் எல்லோரை யும் பார்த்து: நீங்கள் ஒரு பக்கத்தில் இருங்கள். நானும் என் குமாரனாகிய ஜோனத்தாசும் மற்றொரு பக்கத்திலிருப் போம். அதற்கு ஜனங்கள்: உமது கண் களுக்கு நன்மையாய்த் தோன்றுவதைச் செய்யுமென்று சவுலுக்கு மறுமொழி சொன்னார்கள்.

41. சவுல் இஸ்றாயேல் தேவனாகிய ஆண்டவரை நோக்கி: இஸ்றாயேல் தேவனாகிய ஆண்டவரே, இன்று உமதடியானுக்கு நீர் மறுமொழி சொல் லாதிருப்பது ஏன்? அடையாளங் கொடும். இந்தப் பாவம் என பேரி லாவது என் குமாரனாகிய ஜோனத்தாஸ் பேரிலாவது இருந்தால் அதை விளங்கப் பண்ணும்; அல்லது அந்தப் பாவம் உமது பிரசைகளின் பேரிலிருந்தால் அவர் களைப் பரிசுத்தராக்கும். அப்போது ஜோனத்தாஸ் மேலும், சவுலின் மேலுஞ் சீட்டு விழுந்தது. ஜனங்கள் நீங்கினார் கள்.

42. அப்போது சவுல்: எனக்கும் என் குமாரனாகிய ஜோனத்தாசுக்கும் சீட்டுப் போடுங்களென்றான். ஜோனத்தாஸ் பிடிபட்டான்.

43. சவுல் ஜோனத்தாசைப் பார்த்து: நீ செய்ததை எனக்கு வெளிப்படுத்து என, ஜோனத்தாஸ் அவனுக்கு வெளிப்படுத்தி: என் கையிலிருந்த கோலின் நுனி யினாலே கொஞ்சந் தேனை எடுத்து ருசி பார்த்தேன், இதோ அதற்காகச் சாகிறே னென்றான்.

44. அதற்குச் சவுல்: ஜோனத்தாசே, நீ சாகவே சாவாய்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவுஞ் செய்வாராக வென்று சவுல் சொன்னான்.

45. அதற்கு ஜனங்கள்: இஸ்றாயே லில் இவ்வளவு பெரிய இரட்சிப்பைச் செய்த ஜோனத்தாசும் சாவானோ? அது கூடாது. ஆண்டவர் ஜீவனைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; அவன் தலை மயிரில் ஒத்தை மயிருந் தரையில் விழாது. ஏனெனில் தேவன் துணை நிற்க அவன் இன்று அக்காரியத்தை நடப்பித் தான் என்று சொல்லி ஜோனத்தாஸ் சாகாதபடி அவனைத் தப்புவித்தார்கள்.

46. சவுல் பிலிஸ்தியர்களைப பின் தொடராமல் இடைந்துபோனான்; பிலிஸ்தியருந் தங்களிடம் போய்ச் சேர்ந் தார்கள்.

47. இப்படி இஸ்றாயேலை ஆளுகிற சவுலின் இராஜாங்கம் உறுதிப்பட்ட பின்பு அவன் சுற்றிலுமுள்ள மோவாப், அம்மோன், ஏதோம் புத்திரர், சொபா அரசர் பிலிஸ்தியர்களாகிய தன் எல்லாச் சத்துராதிகளோடுஞ் சண்டை போடு வான்; அவன் எங்கு போனாலும் ஜெயங் கொள்ளுவான்.

48. பிறகு அவன் படையைச் சேர்த்துக் கொண்டு அமலேசித்தரை முறிய அடித்தான்; இஸ்றாயேலரைத் தங்களைக் கொள்ளையிடுகிறவர் களுடைய கையினின்று அவர்களை மீட் டிரட்சித்தான்.

49. ஜோனத்தாசும், ழெசுயியும், மெல்க்கிசுயாவும் சவுல் குமாரர்களாய் இருந்தார்கள். அவனுடைய இரண்டு குமாரத்திகளில் மூத்தவளுடைய பேர் மேரோப், சிறியவள் பெயர் மிக்கோல்.

50. சவுலுடைய மனைவியின் பெயர் அக்கினாவாம். இவள் அக்கிமாசின் குமாரத்தி. அவனுடைய படைத் தலைவன் பேர் அப்நேர். இவன் சவுலின் சிறிய தகப்பனாகிய நேரின் குமாரன்.

51. சவுலின் தகப்பனோ சீஸ், அப்நேரின் தகப்பனோ நேர், இவன் அபியேலின் குமாரன்.

52. சவுல் இருந்த நாட்களெல்லாம் பிலிஸ்தியரின்மேல் பலத்த யுத்தம் நடந் தது. சவுல் பலசாலியையாகிலும் பராக் கிரமசாலியையென்கிலும் காண்பானாகில் அவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொள்வான்.