நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 14

சம்சோன் நடவடிக்கைகள்.

1. சம்சோன் தமினத்தாவுக்குப் போய் அவ்விடத்தில் பிலிஸ்தேயர் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,

2. திரும்பிப் போய்த் தன் தகப்பனையுந் தாயையும் நோக்கி: தமினாத்தாவில் பிலிஸ்தே யர் குமாரத்திகளில் ஒரு மாதைக் கண்டேன். நீங்கள் தயவுசெய்து அவளை என் மனைவி யாகக் கொள்ள வேண்டுமென்றான்.

3. அதற்கு அவன் தகப்பனுந் தாயும்: உன் சகோதரர் குமாரத்திகளிலும், நமது பந்து ஜனங்களிடத்திலும் பெண்ணில்லையா? விருத்தசேதனமில்லாத பிலிஸ்தேயரிடத்தில் நீ ஒரு பெண்ணைப் கொள்ள வேண்டியதென் ன என்றார்கள். அதற்குச் சம்சோன் தகப்ப னைப் பார்த்து: அவளையே எனக்குக் கொள் ளவேண்டும். ஏனென்றால், அவள் என் பார் வைக்குப் பிரியமானவளென்றான்.

4. அவன் பெற்றோர் இது ஆண்டவரு டைய செயலென்றும், அவன் பிலிஸ்தேயரை நிர்மூலம் பண்ணச் சமயங் தேடுகிறானென் றும் அறியாதிருந்தார்கள். ஏனென்றால், அக் காலத்தில் பிலிஸ்தேயர் இஸ்ராயேலை ஆண் டிருந்தார்கள்.

5. ஆகையால் சம்சோன் தன் தாயோடுந் தகப்பனோடுந் தமினாத்துக்குச் சென்றான். அவர்கள் ஊர் அருகாமையில் இருந்த திராட் சத் தோட்டங்களுக்கு வந்தபோது குரூர சிங் கக்குட்டியயான்று கர்ச்சித்துக்கொண்டு அவ னுக்கு எதிரில் வந்தது.

6. ஆண்டவருடைய ஆவி சம்சோன்மேல் இறங்கினதினால் அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும் ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போட்டாப்போலச் சிங்கத்தைக் கிழித்துத் துண்டித்தான். ஆனாலுந் தான் செய்ததைத் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

7. பிறகு அவன் போய்த் தனக்குப் பிரிய மான ஸ்திரீயோடு பேசினான்.

8. சிறிது நாட்சென்று அவளைக் கலியா ணஞ் செய்துகொள்ளத் திரும்பவும் வரும் போது தான் முன் கொன்ற சிங்கத்தின் உடலைப் பார்க்க வழியை விட்டுப் போய்ப் பார்த்தான். அதன் வாயில் தேனீக்கள் கூட்ட முந் தேனும் இருந்தது.

9. அவன் அதைத் தன் கைகளில் எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டே வழி நடந்து தன் தாய் தகப்பனிடத்தில் வந்து அவர்களுக்குத் தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை அருந்தினார்கள். ஆனாலும் அது சிங்கத்தின் உடலினின்று எடுக்கப்பட்டதென்று அவர்க ளுக்கு அறிவித்தானில்லை.

10. அவன் தகப்பன் அந்தப் பெண் இருக் கும் இடஞ் சென்று தன் குமாரன் சம்சோ னுக்கு விருந்து செய்தான். வாலிபருக்கு அப்படி செய்வது வழக்கமாயிருந்தது.

11. பட்டணத்து வாசிகள் அவனைக் கண் டபோது அவனோடு கூடவிருக்கும்படி முப் பது தோழரை அழைத்துவந்தார்கள்.

12. சம்சோன் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு ஒரு விடுகதைச் சொல்லுகிறேன். விருந்து நடக்கும் ஏழு நாளுக்குள்ளாக நீங்கள் அதை விடுவித்தால் நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும், முப்பது அங்கவஸ்திரங் களையுங் கொடுப்பேன்.

13. ஆனால் நீங்கள் அதை விடுவிக்கக்கூடா விட்டால் முப்பது துப்பட்டிகளையும், முப் பது அங்கவஸ்திரங்களையும் நீங்கள் எனக்குத் தரவேண்டியது என்றான். அதற்கு அவர்கள் எங்களுக்குத் தெரியும்படியாய் விடுகதையைச் சொல்லென்றார்கள்.

14. அப்பொழுது சம்சோன் அவர்களைப் பார்த்து. பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்ச ணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் உற்பத்தியாயிற்றென்றான். மூன்று நாளாய் அதை விடுவிக்க அவர்களாலே கூடாதே போயிற்று;

15. ஏழாம் நாள் கிட்டினபோது அவர்கள் சம்சோன் மனைவியைப் பார்த்து: நீ உன் புருஷனை நயம்பண்ணி அந்த விடுகதையின் அர்த்தத்தை உனக்குத் தெரிவிக்கும்படி இணங்கச் செய்; அப்படிச் செய்யாமல் போவாயேயாகில் உன்னையும் உன் தகப்பன் வீட்டையுங் கொளுத்திவிடுவோம். எங்க ளைப் பறிமுதல் செய்யவா எங்களை உன் கலியாணத்துக்கு அழைத்தாய் என்றார்கள்.

16. அவளோ சம்சோனிடத்தில் போய் கண்ணீர் சொரிந்து: நீர் என்னை நேசியாமல் என்னை பகைக்கிறீர்; ஆனதுபற்றித் தானே என் ஜனத்தின் புத்திரருக்கு நீர் சொல்லிய விடுகதையை எனக்குத் தெரிவிக்கவில்லை என்று முறையிட்டாள். அதற்கு அவன் என் தாய் தகப்பனுக்கு முதலாய் நான் அதைச் சொல்லவில்லையே, உனக்கு எப்படிச் சொல் லக்கூடும் என்றான்.

17. விருந்து நடந்த எழு நாளும் அவள் அவன் முன்பாக அழுதாள். ஏழாம் நாளும் அவள் அவனை அலட்டினபடியால் சம்சோன் அவளுக்கு அதை விடுவித்தான். உடனே அவன் அதைத் தன் ஊராருக்கு அறிவித்தாள்.

18. இவர்கள் ஏழாம் நாள் சூரியன் அஸ்த மிக்கிறதற்கு முந்தி அவனை நோக்கி தேனை விட மதுரமுமுண்டோ? சிங்கத்தை விடப் பலமுமுண்டோ என்றார்கள். அதற்கு அவன் என் கிடாரியோடு உழுதீர்கள் ; இல்லாவிட் டால் என் விடுகதையைக் கண்டு பிடிக்கப்போ கிறதில்லை என்றான்.

19. ஆண்டவருடைய ஆவி சம்சோனிடத் தில் இறங்கினதால், அவன் அஸ்கலோனுக் குப் போய் முப்பது பேரைக் கொன்று, அவர் களுடைய வஸ்திரங்களை எடுத்து விடுகதை யைத் தெளிவித்தவர்களுக்குக் கொடுத்தான். மீளவும் மிகவுங் கோபங்கொண்டு தன் தகப்பன் வீட்டிற்குப் போய்விட்டான்.

20. அவனுடைய மனைவியோ, சம்சோ னோடு கூட கலியாணத்துக்கு வந்திருந்த அவன் சிநேகிதர்களில் ஒருவனைப் புது புருஷனாகத் தெரிந்துகொண்டாள்.