சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 13

ஆங்காரிகளோடும், ஆஸ்திக்காரரோடும், வலியவர்களோடும், கூடுவதினால் உண்டாகும் ஆபத்து.

1. கீலைத் தொடுகிறவன் கறைப்படுவான்; ஆங்காரியோடு உறவாடுகிறவன் ஆங்காரத்தை அணிந்து கொள்வான்.

2. தன்னைவிட மேன்மை உள்ளவனோடு உறவாடுகிறவன் தன் மீது ஒரு பாரத்தைச் சுமத்திக்கொள்கிறான்; உன்னிலும் அதிக செல்வமுள்ளவனோடு நட்புக் கொள்ளாதே.

3. மண் பானைக்கு இரும்புப் பானையோடு சம்பந்தமென்ன? ஒன்றோடொன்று மோதினால் மண்பானை உடைந்துபோகும்.

4. செல்வந்தன் தவறு செய்தாலும், கோபப்படுகிறான். ஆனால் ஏழை தனக்குத் தீங்கு செய்யப்பட்டாலும் மவுனங்காக்க வேண்டும்.

5. நீ அவனுக்குக் கொடுத்தால் அவன் உன்னைப் பயன்படுத்திக் கொள்வான்; உன்னிடம் ஒன்றுமில்லை என்றால் அவன் உன்னைக் கைவிடுவான்.

6. உன்னிடம் ஏதாவது இருந்தால் உன்னுடன் சேர்ந்து வாழ்ந்து, உன்னை ஒன்றுமில்லாதவன் ஆக்குவான்; அவன் உன்னைக் குறித்து வருத்தப்பட மாட்டான்.

7. அவனுக்கு நீ தேவை என்றால், அவன் உன்னை ஏமாற்றுவான்; உன்னைப் பார்த்துப் புன்னகைத்து, உன்னை நம்பச் செய்வான்; அவன் உன்னோடு நயந்து பேசி, உனக்கு என்ன வேண்டும் என்பான்.

8. உன்னை வறண்டு போகச் செய்யும் வரை, இரண்டு மூன்று முறை அவன் தன் விருந்துகளால் உன்னை மயக்குவான்; கடைசியில் உன்னைப் பார்த்து நகைப்பான். பிறகு தான் உன்னைக் காணும்போது, உன்னைக் கைவிட்டுவிடுவான்; உன்னை பார்த்துத் தன் தலையை அசைப்பான்.

9. சர்வேசுரனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்து; அவருடைய கரத்திற்காகக் காத்திரு.

10. வஞ்சகத்தால் மூடனாக்கப் பட்டு, நீ தாழ்த்தப்படாதபடிக்குச் சாக்கிரதையாயிரு.

11. தாழ்த்தப்பட்டதால் மூடத் தன்மைக்கு உள்ளாகாதபடிக்கு உன் ஞானத்தில் தாழ்ந்தவனாய் இராதே.

12. உன்னிலும் வலியவன் ஒருவன் உன்னை அழைத்திருப்பான் என்றால், நீ அவனிடமிருந்து விலகிப் போ; ஏனெனில், அப்படிச் செய்வதால் உன்னை மீண்டும் கூப்பிடுவான்.

13. நீ தள்ளி வைக்கப்படாதபடி, அவனுக்குத் தொந்தரவாக இராதே; நீ மறக்கப்பட்டு விடாதபடி, அவனிடமிருந்து தொலைவாகவும் இருந்து விடாதே. 

14. அவனுக்குச் சரிசமானமான வனைப்போல் அவனுடன் நீண்ட நேரம் பேசத் துடிக்காதே; அவனது நீண்ட பேச்சுக்களை நம்பாதே; ஏனெனில் அதிகம் பேசுவதால் அவன் உன்னைத் தந்திரமாய் ஏமாற்றி, உன் இரகசியங் களை அறியும்படி உன்னைச் சோதிப் பான்.

15. அவனுடைய கொடூர மனம் உன் வார்த்தைகளை அவன் மறைத்து வைப்பான். உன்னை நோகச் செய் யவோ, சிறையில் அடைப்பதற்கோ அவன் பின்வாங்க மாட்டான்.

16. நீ சாக்கிரதையாயிரு; நீ கேட் பதைக் கவனமாக ஆராய்ந்து பார்; நீ உன் அழிவின் ஆபத்தில் நடக்கிறாய்.

17. அந்தக் காரியங்களை நீ கேட்கும்போது, அவைகளெல்லாம் கனவில் கேட்பதுபோல் எண்ணு; அப்போது நீ விழிப்பாயிருப்பாய்.

18. உன் சீவியம் முழுவதிலும் சர்வேசுரனை நேசி; உன் இரட்சணி யத்திற்காக அவரை மன்றாடு.

19. ஒவ்வொரு மிருகமும் தன்னைப் போன்றதை நேசிக்கிறது; அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் தனக்கு மிக நெருக்கமானவனை நேசிக்கிறான்.

20. மாம்சமெல்லாம் தனக்கு ஒத்த மாம்சத்தோடு இணைசேர்கிறது; சகல மனிதனும் தனக்கு ஒத்தவ னோடு தன்னை இணைத்துக்கொள் கிறான்.

21. ஓநாய் எப்போதாவது ஆட்டோடு நட்புக்கொள்ளுமானால் பாவியும் நீதிமானோடு நட்புக்கொள்ளலாம்.

22. பரிசுத்தனான மனிதனுக்கு நாயுடன் சம்பந்தமென்ன? செல்வந்தனுக்கு ஏழையோடு பங்கு என்ன?

23. காட்டுக் கழுதை வனாந்தரத் தில் சிங்கத்திற்கு இரையாகிறது போல ஏழைகள் செல்வந்தர்களால் விழுங்கப்படுகிறார்கள்.

24. ஆங்காரிக்குத் தாழ்ச்சி அருவருப் பாயிருக்கிறது; செல்வந்தன் ஏழையை அருவருக்கிறான்.

25. செல்வந்தன் கலக்கமுறும் போது நண்பர்களால் தேற்றப்படு கிறான்; ஆனால ஏழை விழும்போது தன்னை அறிந்தவர்களால் தள்ளப் படுகிறான்.

26. பணக்காரன் ஏமாற்றப்படும் போது உதவுகிறவர்கள் அனேகர்; அவன் அகந்தையாய்ப் பேசினாலும் அவனை நியாயப்படுத்தினார்கள்.

27. ஏழை ஏமாற்றப்பட்டால், அவனே கண்டிக்கவும்படுவான். அவன் ஞானத்தோடு பேசினாலும், அவனுக்கு இடம் கொடுக்கப்படுவது இல்லை.

28. ஆஸ்திக்காரன் பேசியபோது எல்லோரும் மவுனமாயிருந்தார்கள்; அவன் பேசியதை வானளாவப் புகழ்ந்தார்கள்.

29. ஏழை பேசியபோது, இவன் யார் என்கிறார்கள். அவன் கால் தடுக்கினால், அவர்கள் அவனை விழத்தாட்டுவார்கள்.

30. தன் மனச்சாட்சியில் பாவ மில்லாதவனுக்கு செல்வங்கள் நல்லவையாயிருக்கின்றன; அவபக்தி யுள்ளவர்களின் வாயில் தரித்திரம் மிகக் கொடியதாயிருக்கும். 

31. நன்மையிலானாலும் தின்மை யினாலும், மனிதனுடைய இருதயம் அவனுடைய முகத்தை மாற்றுகிறது.

32. அரிதாயும் பிரயாசையோடும் தான் நல்லவனுடைய இருதயத்தின் அடையாளத்தையும், அவனுடைய மலர்ந்த முத்தையுங் காண்பாய்.