அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 13

யோவாக்காசின் ஆட்சியும், எலிசேயின் மரணமும்.

1.  யூதா அரசனான ஒக்கோசியாசின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்து மூன்றாம் வருடத்தில் ஏகுவின் குமாரன் யோவக்காஸ் எஸ்போன் சமாரியா பட்ட ணத்திலே இஸ்றாயேலின்மேல் பதினேழு வருடம் இராச்சியபாரம் பண்ணி னான்.

2. அவன் கர்த்தருடைய பார்வைக் குப் பொல்லாததையே செய்துவந்தான். இஸ்றாயேலைப் பாவத்தில் விழச் செய்த நாபாத் குமாரன் எரோபோவாமின் அக்கிரமங்களையே பின்பற்றினாலொ ழிய அவைகளை விட்டு விலகவேயில்லை.

3. ஆகையால் ஆண்டவருக்கு இஸ் றாயேலின்மேல் கோபம் மூண்டு அவர் களைச் சீரியா அரசனான அசாயேலின் கையிலும், அசாயேலின் புத்திரனான பெனாதாத் கையிலும் ஒப்படைத்தார்.

4. ஆனால் யோவாக்காஸ் ஆண்டவ ருடைய சமுகத்தை நோக்கி: இரந்து மன் றாடினான். ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார். சீரியாவின் அரசன் இஸ்றாயே லருக்குப் பண்ணும் உபத்திரியத்தால் அவர்கள் மகா அவதிப்பட்டிருந்தது கண்டு கர்த்தர் மனதிரங்கி,

5. இஸ்றாயேலுக்கு ஒரு இரட் சகனை அநுக்கிரகிக்க, இஸ்றாயேலர் சீரியருடைய கரத்தினின்று விடுபட்டார் கள். இஸ்றாயேல் மக்கள் முன்போலத் தங்கள் கூடாரங்களிலே (அமரிக்கை யாய்க்) குடியிருந்தார்கள்.

6. ஆகிலும் இஸ்றாயேலர் பாவஞ் செய்வதற்குக் காரணமாயிருந்த எரோ போவாம் வீட்டாருடைய பாவங்களை அவர்கள் விட்டுவிலகாது அதிலே நடந்து வந்தனர். சமாரியாவிலிருந்த விக்கிரகச் சோலையும்அழிக்கப்படாமல் நின்றது.

7. யோவாக்காசுக்கு அவன் சனங் களில் ஐம்பது குதிரை வீரரும் பத்து இர தங்களும் பதினாயிரம் பதாதிகளும் மாத் திரம் மீதியாயிருந்ததொழிய வேறில்லை. ஏனெனில், சீரியா தேசத்தரசன் அவர் களை நாசஞ் செய்து போரடிகளத்துத் துரும்புபோல நொறுக்கிப் போட்டிருந் தான்.

8. யோவாக்காசின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவன் செய்த யாவும், அவனுடைய வீரசூரத்துவமும் இஸ்றாயேல் அரசரது சம்பவசங்கிரக மென்னும் புத்தகத்தில் வரையப்பட் டுள்ளன. 

9. யோவாக்காஸ் தன் பிதாக்க ளோடு நித்திரையானதால், சமாரியாவில் அவனைச் சேமித்தார்கள். அவன் குமா ரன் யோவாஸ் என்போன் அவனுக்குப் பதிலாக அரசாண்டான்.

10. யூதாவின் அரசனாகிய யோவாஸு டைய முப்பத்தேழாம் வருடத்தில், யோவாக்காசின் குமாரனான யோவாஸ் சமாரியாவில் இஸ்றாயேலின்மேல் இரா சாவாகிப் பதினாறு வருடம் இராச்சிய பரிபாலனஞ் செய்தனன்.

11. அவன் ஆண்டவருடைய சமுகத் துக்குத் தின்மையானதைச் செய்தான்; இஸ்றாயேலியர் பாவஞ் செய்வதற்குக் காரணமாயிருந்த நாபாத் குமாரனான எரோபோவாமின் பாவங்களினின்று வில காது அவைகளில்தானே உலாவி வந்தான்.

12. யோவாசின் மற்ற வர்த்தமானங் களும், அவனுடைய கிரியைகளும், வீர சூரமும், யூதா அரசனான அமாசியா சோடு அவன் செய்த சண்டையின் வித மும் இவைகள் யாவும் இஸ்றாயேல் அரச ரது இராசாங்கச் சம்பவசங்கிரகமென் னும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

13. (கடைசியாக) யோவாஸ் தன் பிதாக்களோடு கண்வளர்ந்த பின் அவன் புத்திரன் எரோபோவாம் என்போன் அவன் சிம்மாசனத்திலே ஏறினான். யோவாசோ சமாரியாவில் இஸ்றாயே லின் இராசாக்களோடு அடக்கம் பண்ணப்பட்டான்.

14. அது நிற்க, எலிசேய்க்கு வர வேண்டிய கடைசி வியாதி அவருக்குக் கண்டது. அவர் இப்படி வியாதியாய்க் கிடக்கிறபோது இஸ்றாயேல் அரசனான யோவாஸ் என்போன் அவரிடஞ் சென்று: என் பிதாவே! என் ஐயனே! இஸ்றாயே லுக்கு இரதமே! அதின் சாரதியே! என்று அவருக்கு முன்பாக நின்று பிரலாபிக்கத் துடங்கினான்.

15. எலிசே அவனைப் பார்த்து: நீர் எனக்கு ஒரு வில்லையும் அம்புகளையுங் கொண்டு வாரும் என்றான். இஸ்றா யேல் அரசன் ஒரு வில்லும் அஸ்திர பாணங்களுங் கொண்டுவர,

16. அப்பொழுது எலிசே இராசாவை நோக்கி: உம்முடைய கையை இந்த வில்லின் மேல் வையும் என்றான். அவன் தன் கரத்தை வில்லின்மேல் வைத்த போது, எலிசே தன் கைகளை அரசனின் கைகளின்மேல் வைத்து,

17. அவனைப் பார்த்து: கீழ்த் திசையை நோக்குகிற சன்னலைத் திறவும் என்றான். அவன் அதனைத் திறந்த வுடனே எலிசே: ஒரு அம்பை எய்யும் என்றான். அவன் அங்ஙனம் எய்தான். (அப்போது) எலிசே: அஃது ஆண்டவ ருடைய இரட்சணியத்தின் அம்பு. சீரியரில் நின்று விடுதலையாக்கும் இரட் சிப்பின் அம்பாம். நீர் ஆபேக்கிலே சீரிய ரைத் தீர முறியவடிப்பீர் என்றார்.

18. மறுபடியும் அம்புகளைக் கையி லெடும் என்றான். அவைகளை அவ னெடுக்கவே, மறுபடியும் எலிசே தரையிலே அடியும் என்றான். அவன் மூன்று முறையும் அடித்து நின்றான்.

19. கர்த்தரின் மனிதன் அவன்மேல் கோபதாபங் கொண்டவராய்: நீர் ஐந்து, ஆறு, அல்லது ஏழு விசை அடித்திருந் தாலே சீரியரைத் தீரச் சங்காரஞ் செய் திருப்பீர்; இப்போதோ அவர்களை மூன்று விசை மாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.

20. எலிசே மரணம் அடைந்தான்; அவனை அடக்கம் பண்ணினார்கள். அதே வருஷத்தில் மோவாபியரான கள்ளர்கள் (இஸ்றாயேல்) நாட்டில் வந்தனர்.

21. அப்போது இஸ்றாயேலரிலே சிலர் ஒரு மனிதனை அடக்கம் பண்ணப் போகையில் அந்தக் கள்ளர்களைக் கண்டு பிணத்தை எலிசேயின் கல்லறையில் போட்டார்கள்; அந்தப் பிரேதம் எலிசேயின் எலும்புகளின் மேல் பட்ட மாத்திரத்திலே அம் மனிதன் உயிர்த்து எழுந்து நின்றான்.

22. நிற்க, யோவக்காசின் நாட்களி லெல்லாஞ் சீரியா அரசனான அசாயேல் இஸ்றாயேலிரை உபத்திரவப்படுத்தி வந் தான்.

23. கடைசியிலே ஆண்டவர் அவர் களுக்கு இரங்கினவராய் அபிரகாம், ஈசாக், யாக்கோப் என்போரோடு தாம் செய்திருந்த உடன்படிக்கையினிமித்தம் அவர்களை நினைத்தருளினார்; ஆதலால் அவர் இந்நாள்பரியந்தம் அவர்களை நாசஞ் செய்யவும், அவர்களை முற்றுந் தள்ளி விடவும் மனமொப்பாமலிருந்து விட்டார்.

24. பின்னுஞ் சீரியாவின் அரசனான அசாயேல் லோகாந்திரஞ் செல்ல, அவன் குமாரன் பெனாதாத் அவனுக்குப்பின் இராசரீகம் பண்ணினான்.

25. யோவக்காசின் புத்திரனான யோவாஸ் அசாயேலோடு யுத்தம் பண் ணித் தன் பிதாவாகிய யோவக்காசின் புத்திரனான யோவாஸ் அசாயேலோடு யுத்தம் பண்ணித் தன் பிதாவாகிய யோவாக்காசின் கையினின்று அவன் செயங்கொண்டு பிடித்திருந்த பட்டணங் களையெல்லாம், அவன் குமாரனான பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்து, அவனை மூன்றுவிசையும் முறிய அடித்தான். ஆதலால் பெனா தாத் இஸ்றாயேலின் பட்டணங்களை அவனுக்கு உத்தரிக்க வேண்டியவ னானான்.