அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 13

அம்னோன் கொலை செய்யப்பட்டது.

1.  இதற்குப் பின்பு சம்பவித்ததென் னவெனில்: அம்னோன் என்னுந் தாவீ தின் குமாரன அப்சலேனாகிய தாவீதின் மற்றொரு குமாரனுடைய சகோதரியின் மேல் மோகங் கொண்டான். இவள் பேர்  தாமார், மகா சவுந்தரியமுள்ள பெண்.

2. அவன் தாமாரைக் குறித்து எவ்வளவு காதலித்தானெனில் அவளு டைய ஏக்கத்தினால் வியாதியாய் விழுந் தான்.  (இருந்தாலும்) அவள் கன்னிப் பெண்ணானபடியால் அவளுடன் தகாத தைச் செய்வது கூடாத காரியம்போல் இருக்குமென்று அவனுக்குத் தோன்றி னது.

3. அப்படியிருக்க அம்னோனுக்கு யோனதாபென்று ஒரு சிநேகிதனிருந் தான்.  இவன் தாவீதுடைய சகோதர னான செத்மாவின் குமாரன்.  அந்த யோனதாப் மகா தந்திரசாலி.

4. இவன் அம்னோனைப் பார்த்து: இராசகுமாரனே, நீ நாளுக்கு நாள் இப்படி மெலிந்துபோகிறது முகாந்தர மென்ன; எனக்குச் சொல்லமாட்டாயா என்றான்.  அதற்கு அம்னோன்: என் சகோதரனான அப்சலோனின் சகோதரி யாகிய தாமாரென்கிறவளின் மேல் ஆசை வைத்திருக்கிறேனென்றான்.

5. யோனதாப் அவனை நோக்கி: நீ வியாதிக்காரனைப்போல் உன் படுக்கை யின்மேல் படுத்துக்கொள்.  உன் தகப் பன் உன்னைப் பார்க்கிறதற்கு வரும் போது நீ அவரைப் பார்த்து: என் சகோ தரியாகிய தாமார் எனக்குப் போசனங் கொடுத்து அவள் கையினாலே நான் சாப்பிடத்தக்க ஒரு பதார்த்தஞ் சமைக்கும்படி தாங்கள் தயவுசெய்து அனுப்ப வேண்டுமென்று சொல்லென் றான்.

6. அப்பிரகாரமே அம்னோன் தான் வியாதிக்காரனென்று பாசாங்கு பண்ணி னான்.  அரசன் அவனைப் பார்க்க வந்தான்.  அம்னோன் அவனை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படி என் கண்களுக்கு முன்பாக இரண்டு பணியா ரங்களைப் பண்ணிக் கொடுக்க உத்தரவு செய்யக் கோருகிறேனென்றான்.

7. ஆனது பற்றித் தாவீது வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி: நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் பண்ணிக் கொடுவென்று சொல்லச் சொன்னான்.

8. தாமார் தன் சகோதரன் அம் னோன் வீட்டுக்கு வந்தாள்; அவன் படுத்துக் கொண்டிருந்தான்.  அவள் மாவெடுத்துப் பிசைந்து வேண்டியமட் டும் கூழாக்கி அவன் கண்களுக்கு முன் பாகப் பணியாரங்களைச் சுட்டு,

9. சட்டியிலிருந்து கொட்டி யெடுத்து அவனுக்கு முன்பாக வைத் தான்.  அம்னோன்: இங்கே இருக்கிறவர் கள் எல்லோரும் வெளியே போனா லன்றி நான் புசிக்கமாட்டேன் என்  றான்.  அவ்விதமே மற்றுமுள்ளோரும் வெளியே போன பிற்பாடு,

10. அம்னோன் தாமாரை நோக்கி: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு நீ அடுத்த சிற்றறையில் பணியாரங் கொண்டுவா வென்றான்.  தாமார் தான் செய்த பலகாரங்களை சிற்றறை வீட்டிலிருந்த தன் சகோதரனாகிய அம்னோன் அண்டையில் கொண்டு வந்து,

11. அவனுக்குக் கொடுக்கையில், அவன் அவள் கையைப் பிடித்து: சகோதரியே நீ வந்து என்னுடன் சயனி என்றான்.

12. அதற்கு அவள்: வேண்டாம், சகோதரனே, என்னை அவமானப்படுத் தாதே.  இஸ்றாயேலிலே இப்படி செய் யத் தகாது.  இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தை நீ செய்யலாமா?

13. அதைச் செய்வதினால் எனக்குப் பொறுக்கப்படாத அவமானம் வருமே; நீயும் இஸ்றாயேலிலே மதிகெட்டவர் களில் ஒருவனாயிருப்பாயன்றோ.  இராசாவோடு நீ பேசலாமே;  அவர் என்னை உனக்கு மனைவியாகத் தராமல் மறுக்கமாட்டாரென்றாள்.

14. அவள் எவ்வளவு உருக்கமாய்ச் சொல்லிக் கேட்டாலும் அம்னோன் ஒன்றுக்குஞ் செவிகொடாமல் பலவந்த மாய் அவளைப் பிடித்துக் கற்பழித்துப் போட்டான்.

15. அதற்குப் பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுக்கத் தொடங்கி னான்.  முன் அவளை எவ்வளவுக்கு விரும்பியிருந்தானோ இப்போது அவளை அதிகமாகப் பகைத்து வெறுத் தான். அவளை பார்த்து நீ எழுந்து போவென்றான்.  அவளைப் பார்த்து நீ எழுந்து போவென்றான்.

16. அப்பொழுது அவள்: நீ முந்திச் செய்த அநியாயத்தை விட, இப்போது நீ என்னைத் துரத்திவிடுகிறது அதிக அநியாயமென்று சொன்னாள்.  அவளோ அவளுடைய சொல்லைக் கேட்க மனதில் லாமல்,

17. தனக்குப் பணிவிடை செய்திருந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ என்னிட மிருந்து இவளை வெளியில் தள்ளி அவள் பிறகாலே கதவைப் பூட்டென்றான்.

18. இராச கன்னிப் பெண்கள் உடுத் திக் கொள்ளும் நெடுஞ் சேலையைத் தாமார் தரித்துக் கொண்டிருந்தாள்.  தள்ளிக் கதவைப் பூட்டினான்.

19. அவள் தன் தலையின்மேல் சாம் பலை வாரிப் போட்டுக் கொண்டு தன் நெடும் வஸ்திரத்தைக் கிழித்துத் தன்னிரு கையாலே தன் முகத்தை மூடிச் சப்தமிட் டழுது வீட்டுக்குப் போனாள்.

20. அப்போது அவளுடைய சகோதர னாகிய அப்சலோன் அவளை நோக்கி: என்ன உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடு சயனித்தானோ?  சகோ தரியே நீ தற்காலம் ஒன்றுஞ் சொல்லாதே, அவன் உன் சகோதரனல்லவா?  இதின் நிமித்தம் நீ உன் மனதிலே விசனப் படாதே எனறான்.  அப்படியே தாமார் தன்  சகோதரனாகிய அப்சலோனின் வீட்டிலே துக்கித்துக் கொண்டு இருந்து விட்டான்.

21. தாவீது இராசா இந்தச் சமாச்சாரங் கேள்விப்பட்டு மிகவுங் கிலேசித்துக் கோபித்துக் கொண்டான்.  ஆனால் அம்னோன் தன்னுடைய மூத்த குமார னென்று அவனைச் சிநேகிக்கிறபடியால் அவனை வருத்தப்படுத்த மனமொப் பாமல் மெளனமாயிருந்து விட்டான்.

22. அப்சலோனோ அம்னோனோடு நன்மையாவது தின்மையாவது ஒன்றும் பேசவில்லை.  ஆனால் அம்னோன் தன் சகோதரியான தாமாரை அவமானப் படுத்திய விஷயத்தைப்பற்றி அப்சலோன் அவன்மேல் பகை வைத்தான்.

23. இரண்டு வருஷஞ் சென்றபின்பு எப்பிராயீமுக்குச் சமீபத்திலுள்ள பால்- ஆசோரில் அப்சலோனுடைய ஆடுக ளுக்கு மயிர் கத்தரிக்குங் காலம் வந்தது. (அத்தறுவாயிலே) அப்சலோன் இராச குமாரர் எல்லோரையும் (விருந்துக்கு) அழைத்தான்.

24. அவன் இராசாவினிடம் போய் அவனை நோக்கி: அடியேனுடைய ஆடு களை மயிர் கத்திரிக்கிறார்களே.  இராசா வும் அவருடைய ஊழியர்களும் உமது அடியான் வீட்டுக்கு வரும்படி வேண்டிக் கொள்ளுகிறேன் என்றான்.

25. அப்போது இராசா அப்சலோ னைப் பார்த்து: வேண்டாம் என் மகனே, நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்குப் பெரிய செலவாகுமே என்றான்.  ஆனால் அவன் அவனை வருந்திக் கேட்டபடி யால் அரசன் வரச் சம்மதியாதபோதிலும் அவனை ஆசீர்வதித்தான்.

26. அப்சலோன் மறுபடியுந் தகப் பனை நோக்கி: நீர் வராவிடினும் என் சகோதரன் அம்னோனாவது எங்களுடன் வரப் பிரார்த்திக்கின்றேன் என்றான்.  அதற்கு இராசா: அவன் உன்னுடன் வர வேண்டியதில்லை என்றான்.  

27. பின்னையும் அப்சலோன் அவ னைக் கட்டாயப்படுத்தினதினால் கடைசியிலே இராசா அம்னோனையும், சகல இராச குமாரர்களையம் அவனுடன் அனுப்பிவிட்டான்.  அப்சலோனோ இராச விருந்துக்கு ஒப்பான ஓர் விருந்தை முஸ்திப்பு செய்திருந்தான்.

28. ஆனால் அப்சலோன் தன் ஊழி யர்களை நோக்கி: அம்னோன் திராட்ச இரசத்தைக் குடித்து மயக்கமாயிருக்குஞ் சமயத்தை நன்றாகப் பார்த்திருங்கள்.  அந்நேரத்தில் நான் அம்னோனை அடி யுங்களென்று சொல்வேன், உடனே நீங்கள் அவனைக் கொன்றுபோடுங்கள்; பயப்படவேண்டாம்.  நான் அல்லோ உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; நீங் கள் திடங் கொண்டு தைரியமான வீரரா யிருங்களென்று சொல்லி ஆக்கியாபித் திருந்தான்.

29. ஆகையால் அப்சலோனின் ஊழி யர், அப்சலோன் அவர்களுக்குக் கட்ட ளையிட்ட பிரகாரமே அம்னோனுக்குச் செய்தார்கள்.  (இதைக் கண்டு) இராச குமாரர் அனைவரும் எழுந்திருந்து தங்கள் தங்கள் கோவேறு கழுதைகளின் மேல் ஏறி ஓடிப் போனார்கள்.

30. அவர்கள் இன்னும் வழியிலிருக் கிற போதே, அப்சலோன் அரச புத்திரர் எல்லோரையுங் கொன்றுபோட்டான்; அவர்களில் ஒருவனாகிலும் மீந்திருக்க விடவில்லையென்கிற செய்தி தாவீதுக்கு வந்தது.

31. அப்போது அரசன் எழுந்து தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையில் விழுந்தான். அவனுக்கு ஊழியஞ் செய்யும் வேலைக்காரர் எல்லோருந் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டார்கள்.

32. ஆனால் தாவீதுடைய சகோதர னான செம்மாவின் குமாரனான யோனதாப் வந்து: இராச குமாரரான வாலிபர் எல்லோருங் கொலை செய்யப் பட்டார்கள் என ஆண்டவனாகிய இராசா நினைக்க வேண்டாம்.  அம் னோன் மாத்திரஞ் செத்தான்.  ஏனெ னில், அவன் தன் சகோதரியைக் கற்பழித்த நாள் முதற்கொண்டு அப்ச லோன் அவனைக் கொலை செய்வதாகச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

33.  ஆதலால் இராச குமாரர்கள் எல்லாம் இறந்து விட்டார்களென்கிற பேச்சை இராசாவாகிய என் ஆண்டவன் நம்பவேண்டாம்.  அம்னோன் ஒருவனே செத்தான்;

34. (அதற்குள்ளே) அப்சலோன் ஓடிப் போய்விட்டான் என்றான்.  அந்நேரத்திலே சாமங் காக்கிற சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க் கையில் அதோ திரளான சனங்கள் மலையின் ஓரமாயுள்ள சுற்று வழியாய் வந்து கொண்டிருந்தார்கள்.

35. அப்பொழுது யோனதாப் அர சனை நோக்கி: இதோ இராசகுமாரர் வரு கின்றார்கள்; அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.

36. அவன் பேசி முடியவே, இராச குமாரர்கள் வந்து பிரவேசித்துச் சப்த மிட்டு அழுதார்கள்.  இராசாவும் அவன் ஊழியர் அனைவரும் புலம்பலாய்ப் புலம்பினார்கள்.

37. அப்சலோனோ ஓடிப்போய் ழெஸ்ஸூர் அரசனான அம்மியூதின் குமாரனாகிய தொலோமாயிடத்திற்குச் சென்றான்.  தாவீதோ தினந்தோறுந் தன் குமாரனுக்காகத் துக்கித்துக் கொண்டிருந் தான்.

38. அப்சலோன் ழெஸ்ஸூரில் ஓடிப் போய் அங்கே மூன்று வருஷம் இருந் தான்.

39. தாவீது இராசா அம்னோனுடைய மரணத்தின் ஏக்கத்தை மறந்தபோது இனி அப்சலோனைப் பின்றொடரும் நிலையை விட்டுவிட்டான்.