அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 13

கீழ்ப்படியாமைக்குத் தண்டனை.

1.  எரோபோவாம் தூபங் காட்டப் பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய கட்டளையின்படியே யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,

2. கர்த்தருடைய பேரால் அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே, பலி பீடமே, இதோ தாவீதின் கோத்திரத்தில் யொசியாஸ் என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உனக்கின்னாளிலே தூபங் காட்டுகிற உயர் மேடைகளின் ஆசாரியர்களை உன் மேல் பலியிடுவான்.  மனுஷர் எலும்பு களையும், உன் மேல் சுட்டெரித்துப் போடுவான் என்பதைக் கடவுள் உரைக் கிறாரென்று கூறினான்.

3. இது கர்த்தருடைய வாக்கென்று இராசா உணரும்படிக்கு, அன்று தானே ஓர் அடையாளங் காண்பித்து: இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து அதின் மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம் என்றான.

4. பெத்தேலிலிருக்கிற அந்தப் பலி பீடத்திற்கு விருத்துவமாய் தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை இராசா வாகிய எரோபோவாம் கேட்டவுடன் அவனைப் பிடியுங்களென்று பலிபீடத் திலிருந்து தன கையை நீட்டினான.  அவனுக்கு விரோதமாய் அரசன் நீட்டின கை முடக்க மாட்டாமல் அட்சணமே மரத்துப் போயிற்று.

5. தேவ மனிதன் கர்த்தரின் பேரால் சொன்ன அத்தாட்சியின்படியே பலி பீடம் அந்நேரத்தில் வெடித்து அதின் பேரிலிருந்த சாம்பல் கொட்டுண்டு போயிற்று.

6. அப்போது இராசா தேவ மனுஷ னைப் பார்த்து: நீர் உம்முடைய தேவ னாகிய கர்த்தரை எனக்காக நோக்கிப் பிரார்த்தித்து, என் கை வழங்குஞ் சக்தியை அடைய மன்றாடுமென்றான்.  எனவே, தேவ மனுஷனும் கர்த்தரை நோக்கிப் பிரார்த்திக்க, இராசாவுக்கு முன்போல் கை வழங்கிச் சீர்ப்பட்டது.  

7. அப்பொழுது இராசா தேவ மனு ஷனை நோக்கி: நீ என்னோடு போசனஞ் செய்ய என் வீட்டுக்கு வா, நான் உனக்கு ஈடுகளைத் தந்து உபசரிப்பேனென்றான்.

8. தேவ மனுஷனோ இராசாவை நோக்கி: நீர் எனக்கு உமது வீட்டில் பாதி கொடுத்தாலும் நான் உம்மோடுகூட வரவுமாட்டேன், உமது வீட்டில் வந் போஜனஞ் செய்து பானம் பண்ணவு மாட்டேன்.

9. ஏனென்றால்: நீ அப்பம் புசியாம லுந் தண்ணீர் குடியாமலும் போன வழி யாய்த் திரும்பாமலுமிருப்பாயாக என்று கர்த்தர் எனக்குக் கட்டளை இட்டிருக் கிறாரெனறு சொல்லி,

10. பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல் வேறு வழியாயப் போய் விட்டான்.

11. விருத்தாப்பியனான ஒரு தீர்க்கத் தரிசி பெத்தேலில் குடியிருந்தான். அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையத் தினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் இராசாவோடு சொன்ன வார்த்தைகளை யுந் தங்கள் தகப்பனுக்கு அறிவித் தார்கள்.

12. அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: அம்மனிதன் எந்த வழியாய்ச் சென்றான் என, அதற்கு அவர்கள்: யூதா விலிருந்து வந்த தேவ மனுஷன் போன வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.

13. அவன் தன் குமாரருடனே: கழுதைக்குச் சேணமிடுங்களென, அவர் களுங் கழுதைக்குச் சேணமிட்டுக் கொண்டு வர, அவன் அதின் மேல் ஏறி,

14. தேவ மனுஷனைத் துடர்ந்து போய், ஒரு தெரேபிண்ட் மரத்தினடி  யில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு, யூதாவிலிருந்து வந்த தேவ மனுஷன் நீர்தானோவென்று அவனைக் கேட்ட தற்கு, அவன்: நான்தானென்றான்.

15. என்றதைக் கேட்டு அவனை: நீர் என்னோடு வீட்டுக்கு வாரும், வந்து போசனஞ் செய்யுமென்றான்.

16. அதற்கு அவன்: நான் உம்மோடு திரும்பவுமாட்டேன், உமது வீட்டுக்குள் நுழையவுமாட்டேன், அவ்விடம் போச னஞ் செய்து பானம் பண்ணவுமாட் டேன்.

17. ஏனென்றால்: நீ அப்பம் புசிக் காமலுந் தண்ணீர் குடியாமலும் நீ போன வழியாய்த் திரும்பாமலும் இருப்பாயாக வென்று கர்த்தர் எனக்குக் கட்டளையிட் டிருக்கிறாரென்றான்.

18. அதற்கு அவன: உம்மைப் போல் நானுந் தீர்க்கத்தரிசிதான்; அவன் புசித்துத் தண்ணீர்குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ வென்று ஒரு தூதன் கர்த்தருடைய பேரால் எனக்குச் சொன்னாரென்று உரைத்து அவனை ஏய்த்தான்.

19. அப்போது தேவ மனிதன் இவ னோடு திரும்பிப் போய் இவன் வீட்டில் போசனஞ் செய்து பானம் பண்ணி னான்.

20. அவர்கள் பந்தியில் அமர்ந்திருக் கிற போது அவனைத் திருப்பிக்கொண்டு வந்த விருத்தாப்பியத் தீர்க்கத்தரிசிக்குத் தேவ வாக்கு திருவுளமானதால்,

21. அவன் யூதாவிலிருந்து வந்த தேவ மனுஷனைப் பார்த்து சப்தமிட்டு: உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,

22. அப்பம் புசிக்கவும், தண்ணீர் குடிக் கவும் வேண்டாமென்று தேவன் உமக்குக் கட்டளை கொடுத்திருக்க நீர் அவர் விலக்கின ஸ்தலத்திற்குத் திரும்பி  அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால் உம்முடைய பிரேதம் உமது பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லையென்று கர்த்தர் திருவுளம்பற்றினாரென்றான்.

23. தேவ மனுஷன் போசனஞ் செய்து பானம் பண்ணின பிற்பாடு விருத்தாப் பிய தீர்க்கத்தரிசி தான் அழைத்து வந்த  தேவ மனுஷனுக்காகத் தன் கழுதைக்குச் சேணமிட்டுக் கொடுத்தான்.

24. தேவ மனுஷன் பிரயாணமாகி திரும்பி வழி நடந்து போகையில், ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்பட்டு அவனைக் கொன்றுபோட்டது.  அவன் பிரேதம் வழியில் கிடந்தது. கழுதை அதின் அண்டையிலே நின்றது. சிங்கமும் பிரேதத்தண்டையில் நின்றது.

25. அவ்வழியே சென்ற சில மனிதர் கள் வழியில் கிடக்கிற பிரேதத்தையும் பிரேதத்தண்டையில் நிற்கிற சிங்கத்தை யுங் கண்டு விருத்தாப்பிய தீர்க்கத்தரிசி வசிக்கிற பட்டணத்தில் அதைப் பிரஸ் தாபித்துச் சொன்னார்கள்.

26. அவனை அவ்வழியிலிருந்து திரும் பப் பண்ணின தீர்க்கத்தரிசி அதைக் கேட்டபோது: அவன் கர்த்தருடைய  வாக்கை மீறினபடியன்றோ கர்த்தர் அவனை அடித்துக் கொன்றுபோட்ட தென்று சொல்லி,

27. தன் குமாரரை நோக்கி: கழுதைக் குச் சேணமிடுங்களென்றான்.  அவர் களுங் கழுதைக்குச் சேணமிட்டுக் கொண்டு வந்தார்கள்.

28. அப்பொழுது அவன் போய் வழி யில் அவன் பிரேதங் கிடக்கிறதையும் பிரேதத்தண்டையில் கழுதையுஞ் சிங்க மும் நிற்கிறதையுங் கண்டான். அந்தச் சிங்கமோ பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதைக்குத் தீங்கு செய்யவுமில்லை.

29. அப்போது விருத்தாப்பியானான தீர்க்கத்தரிசி தேவ மனிதனின் பிரேதத் தை எடுத்துக் கழுதையின்மேல் வைத்துத் துக்கங் கொண்டாடத் தன் பட்டணத்துக் குக் கொண்டு வந்தான். 

30. அவனுடைய பிரேதத்தைத் தங்க ளுடைய கல்லறையில் வைத்து: ஐயோ!  ஐயோ!  என் சகோதரனே! என்று புலம் பித் துக்கங் கொண்டாடினார்கள்.

31. அவர்கள் துக்கங் கொண்டாடின பிற்பாடு அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது தேவ மனிதன் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம் பண்ணி, அவன் எலும்புகளண்டையில் என் எலும்புகளையும் வையுங்கள்.

32. பெத்தேலிலிருக்கிற பலி பீடத்திற் கும் சமாரியாவின் பட்டணங்களிலிருக் கிற உயர்ந்த மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் அவன் விருத்துவ மாய்க் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறுமென்றான்.

33. இதெல்லாம் இப்படியானபோதி லும் எரோபோவாம் தன் அதிகக் கெட்ட நடபடிகளை விட்டுத் திரும்பாமல் மறு படியும் ஜனத்தில் ஈனமானவர்களை உயர்ந்த மேடைகளின் ஆசாரியராக்கி னான்.  எவனுக்கிஷ்டமோ அவன் தன் கரங்களிலே (ஒப்புக்கொடுக்கும் வஸ்துவைப் பிடித்துக் கொண்டு) உயர்ந்த மேடைகளின் ஆசாரியனாகி விடுவான்.

34. எரோபோவாமின் சந்ததி பூமி யின்மேல் நிலைகொள்ளாது சிதறுண் டழிந்து போனதற்கு இப்பாவமே காரண மாயிருந்தது.