நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 13

இஸ்ராயேலர் பிலிஸ்தேயர் கையில் அகப்பட்டதும், -- சம்சோன் பிறப்பும்.

1. மறுபடியும் இஸ்ராயேல் மக்கள் கர்த்தருடைய சமுகத்தில் துரோகிகளானதால் அவர் அவர்களைப் பத்து வருஷகாலமாய்ப் பிலிஸ்தேயர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

2. தான் கோத்திரத்தானாகிய சாரா ஊரில் மனுவேயென்ற ஒருவனிருந்தான்; அவன் பெண்ஜாதி மலடியாயிருந்தான்.

3. அவளுக்குக் கர்த்தருடைய சம்மனசான வர் தோன்றி அவளை நோக்கி: நீ மலடியாய்ப் பிள்ளைகள் இல்லாதிருக்கிறவள்: நீ கர்ப்பந் தரித்துக் குமாரனைப் பெறுவாய்;

4. ஆனதால் நீ திராட்ச இரசத்தையாவது இலாகிரியான வஸ்துவையாவது உட்கொள் ளாதபடிக்கும், அசுத்தப் பதார்த்தங்களை உண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருக்கக் கடவாய்.

5. ஏனென்றால், நீ கற்பந் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்: அவனுடைய தலையின் மேல் நாவிதன் கத்தி படலாகாது. அவன் தாய் உதிரத்திலுண்டாகிப் பிறந்தது முதல் சர்வேசு ரனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட நாசரேய னாயிருப்பான். அவனே இஸ்ராயேலரைப் பிலிஸ்தினர் கைகளினின்று மீட்டு இரட்சிப் பானென்றார்.

6. அப்பொழுது அவள் தன் புருஷனிடம் வந்து அவனை நோக்கி: பார்க்க பயங்கரத்துக் குரிய சம்மனசு முகத்தையுடைய தேவனுடை ய மனுஷனொருவன் என்னிடம் வந்தார். அவர் யாரென்றும், எவ்விடமிருந்து வந்தவ ரென்றும், பேரென்னவென்றும் நான் கேட்ட தற்கு, அவர் இவையயல்லாமல் வெளிப்படுத் தாமல்,

7. என்னை நோக்கி: நீ கர்ப்பந்தரித்துக் குமாரனைப் பெறுவாய்; திராட்ச இரசத்தை யும், இலாகிரியான வஸ்துக்களையும் பானம் பண்ணாமலும், அசுத்த உணவுகளைச் சாப்பிடாமலும் இருக்க ஜாக்கிரதையாயிருப் பாய், ஏனென்றால், அவன் பிறந்தது முதல் சாகிறவரைக்கும் தன் உயிர்காலமெல்லாம் சர்வேசுரனுடைய நசரேயனாயிருப்பான் என்றார் என்றாள்.

8. ஆகையால் மனுவே, ஆண்டவரை நோ க்கி: ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனு டைய மனுஷன் மறுபடியும் எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்கு நாங்கள் செய்யவேண்டியவைகளை எங்களுக்குக் கற்பித்தருளும்படியாய்ப் பிரார்த்திக்கிறே னென்றான்.

9. மனுவேயின் மனறாட்டை ஆண்டவர் கேட்டார். வயல் வெளியில் உட்கார்ந்திருந்த அவன் மனைவிக்குத் தேவனுடைய தூதன் திரம்பவுந் தரிசனமானார்; அவளுடைய புரு ஷன் மனுவே அவளோடிருந்ததில்லை; அவள் தூதனைக் கண்டபோது,

10. தீவிரமாய் எழுந்து, தன் புருஷனிடத் தில் ஓடி: இதோ நான் முன் கண்ட மனிதன் தரிசனமாயிருக்கிறார் என்று அறிவித்தாள்.

11. அவன் எழுந்து, தன் மனைவியின் பின் னாலே சென்று, அந்த மனிதனிடத்தில் வந்து அவரை நோக்கி: இந்த ஸ்திரீயோடு பேசின வர் நீர்தானாவென்று கேட்டான். அதற்கு அவர் நான்தானென்றார்.

12. அப்பொழுது மனுவே: நீர் சொன்னது நிறைவேறின பிறகு பிள்ளை செய்யவேண் டியதென்ன? விலக்கவேண்டியவைகள் என் னவென்றான்.

13. ஆண்டவருடைய சம்மனசானவர் மனுவேயைப் பார்த்து: உன் மனைவி நான் சொன்ன பிரகாரம் நடந்துகொள்ளட்டும்;

14. திராட்சக் கொடியினின்று வருகிற யா தொன்றையுஞ் சாப்பிடாதிருக்கவேண் டும்:ன திராட்ச இரசத்தையும் இலாகிரி வஸ்துக்களை யும் பானஞ் செய்யாமலும், தீ தான உணவு களைப் புசியாமலும் இருக்கவேண்டும்; நான் கற்பித்ததையயல்லாங் கைக்கொண்ட நுசரிக் கடவாளென்றார்.

15. அப்போது மனுவே தேவதூதனை நோக்கி: என் மன்றாட்டைக் கேட்டருளும்; நாங்கள் ஒரு வெள்ளாட்டுக் குட்டியை உமக் காகச் சமையல் செய்ய உத்தரவாகவேணு மென்றான்.

16. அதற்குச் சம்மனசானவர்: நீ என்னைக் கட்டாயப்படுத்தினாலும் நான் உன் உண வைச் சாப்பிடமாட்டேன். நீ சர்வாங்கத் தகனப்பலியிடமனதாயிருந்தால் அதை ஆண் டவருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் ஆண்டவருடைய சம்மனசானவர் என்று மனுவே அறியாதிருந்தான்;

17. அப்போது அவன் அவரை மறுபடியும் நோக்கி: நீர் சொல்லிய வாக்கு நிறைவேறும் போது நாங்கள் உமக்குத் தோத்திரஞ் செய் யும்படிக்கு உம்முடைய நாமம் என்னவென்று கேட்டான்.

18. அதற்குத் தேவதூதன்: ஆச்சரியத்துக் குரிய என் பேரை நீ கேட்க காரணமென்ன வென்றார்.

19. ஆகையால் மனுவே போய் வெள்ளாட் டுக் குட்டியையும்பானப்பலிகளையுங் கொ ண்டுவந்து, கல்லின்மேல் வைத்து, அற்புதாதிச யங்களைச் செய்யும் ஆண்டவருக்குச் செலுத் தி ஒப்புக்கொடுத்தான். அவனும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

20. பலிபீடத்திலிருந்து அக்கினிச் சுவாலை வானத்திற்கு எழும்புகையில் அந்தச் சுவாலை யில் தேவதூதனும் எழும்பினார். மனுவேயும் அவன் மனைவியும் அதைக் கண்டபோது, தரையில் குப்புறவிழுந்தார்கள்.

21. பின்பு தேவதூதன் இனி அவர்களுக் குக் காணப்படவில்லை. அதனால் அவர் கர்த் தருடைய தூதனென்று மனுவே கண்டு பிடித்து,

22. தன் மனைவியை நோக்கி: நாம் சர் வேசுரனைக் கண்டதால் சாகவே சாவோ மென்றான்.

23. அதற்கு அவன் மனைவி: ஆண்டவ ருக்கு நம்மைக் கொல்ல மனதாயிருந்தால் நாம் ஒப்புக்கொடுத்த சர்வாங்கத் தகனபலியையும் பானப்பலிகளையும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டா; நமக்கு இதுகளையயல்லாங் காண்பித் திருக்கமாட்டார்; வருங் காரியங்களை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

24. பிறகு அவன் ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சம்சோனென்று பெயரிட்டான. பிள்ளை வளர்ந்து ஆண்டவரால் ஆசீர்வதிக் கப்பட்டான்.

25. பிறகு அவன் சாராவுக்கும் எஸ்தாவே லுக்கும் நடுவிலுள்ள தானின் பாளையத்திருக் கும்போதே ஆண்டவருடைய ஆவி அவன்பே ரில் இருக்கத் தொடங்கிற்று.