அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 12

யோவாசின் ஆட்சி.

1.  ஏகு இராசரீகஞ் செய்யும் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் இராசாவாகி எருசலேமிலே நாற்பது வருஷம் இராச் சியபாரஞ் செய்தான். பெத்சாபே ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சேபியாள்.

2. குருவான யோயியாதா யோவா சுக்குப் புத்தி சொல்லி வந்த நாளெல்லாம் அவன் ஆண்டவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

3. ஆயினும் அவன் மேடைகளை அழித்துப்போட்டானில்லை; சனங்கள் இன்னும் (அவை கண்மேல்) பலியிட்டுக் கொண்டும், தூபங்காட்டியுமிருந் தார்கள்.

4. அப்பொழுது யோவாஸ் குருப்பிர சாதிகளை நோக்கி: கர்த்தருக்குப் பிரதிஷ் டையாகி, வழிப்போக்கர்களாலே ஆண் டவருடைய தேவாலயத்தில் கொண்டு வரப்படுகிற எல்லாப் பணங்களையும் ஒருவனுடைய மீட்புக்காகக் கொடுக்கப் படுகிற பணத்தையும், சனங்கள் சுய மனோபீஷ்டப்பிரகாரங் (காணிக்கை யாகக்) கொண்டுவருகிற பணத்தையும், 

5. ஆசாரியர் அவரவர்கள் தம் தம் வரிசைக் கிரமப்பிரகாரம் வாங்கிக் கொண்டு (தேவாலயத்தில்) ஏதேது பழுதுபார்க்க வேண்டுமோ அதைக் கொண்டு அந்தப் பழுதுகளைப் பார்ப் பார்களாக என்றான்.

6. ஆனாலும் யோவாஸ் அரசனின் (இராஜரீகத்து) இருபத்துமுன்றாம் வருட பரியந்தங் குருப்பிரசாதிகள் தேவாலயத் தில் பழுது பார்த்தார்களில்லையாதலால்,

7. யோவாஸ் அரசன் பெரிய ஆசாரி யனையும் (மற்றுமுள்ள) குருப்பிரசாதி களையும் வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் தேவாலயத்தில் பழுது பாராதே போனதென்ன? நீங்கள் வரி சைக்கிரமமாய் (வாங்கிவந்த) பணத்தை இனிமேற்பட வாங்கலாகாது; மேலும் நீங் கள் (இதற்கு முன் வாங்கிவந்ததை) உத்த ரித்துத் தேவாலயம் பழுது பார்ப்போருக் குச் செலுத்திவிடுவீர்களாக என்றான்.

8. அதுமுதல் குருக்கள் பிரசைகளின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளக் கூடாதென்றும், தேவாலயத்தைப் பழுது பார்க்கக் கூடாதென்றுங் கட்டளையிட் டான்.

9. யோயியாதாவென்னும் பெரிய குரு ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதின் மேல் மூடியில் துவாரமுமிட்டு, அதனை ஆண்டவருடைய ஆலயத்தில் நுழைபவர்கட்கு வலது பக்கமாகப் பீடத் தண்டையில் வைக்க, வாசற்படியைக் காத்திருந்த குருக்கள் ஆண்டவருடைய ஆலயத்துக்கு வரும் பணம் அனைத்தை யும் அதில் போட்டு வந்தனர்.

10. அவ்வுண்டிப் பெட்டியில் மிகுந்த பணம் உண்டென்று கண்டால் அரச னுடைய சம்பிரதியும் பெரிய குருவும் வந்து, ஆண்டவருடைய தேவாலயத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொட்டி எண்ணுவார்கள்.

11. பின்னும் அவர்கள் அதை எண்ணி யும் நிறுத்தும் ஆனபிற்பாடு அதை ஆண்டவருடைய ஆலயத்துக் கொற்றர் களுக்குத் தலைமையானவனுடைய வசத்தில் அளிப்பார்கள். அப்பணமானது தேவாலயத்தைப் பழுதுபார்த்திருக்குங் கொற்றர்களுக்கும், தச்சர்களுக்கும்,

12. கல்லுளி சித்தர்களுக்கும், மரங் களையும் பொளிந்த கல்லுகளையுங் கொள்ளுகிறதற்கும், இப்படி தேவால யத்தைப் பழுதுபார்த்து முடிப்பதற்குச் செல்லும் எல்லாச் செலவுகளுக்கும் உபயோகப்படுத்தப்படும்.

13. ஆயினும் அது தேவாலயத்திற் கவசரமான பாத்திரங்கள், முள்ளுக்கள், கரண்டிகள், தூபக்கலசங்கள், எக்காளங் கள், பொன் வெள்ளிக் கிண்ணங்கள் முத லியவை உண்டுபண்ணுவதற்கு உபயோ கப்படுத்தப்படாது.

14. ஆண்டவருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க அலுவலாயிருந்தவர்கட்கு மாத்திரமே அந்தப் பணங் கொடுக்கப் படும். 

15. தொழிலாட்களுக்குக் கொடுக் கும் படிப் பணத்தைப் பெற்றுக்கொண்ட மனிதரிடத்தில் கணக்குக் கேட்கவும் படாது. இவர்கள் கபடில்லாமல் பிரமா ணிக்கமாய்ச் செலவிடுவார்கள்.

16. குற்றத்திற்கும் பாவத்திற்கும் பரிகாரமாகக் கொடுக்கப்படும் பணமோ அதை ஆண்டவரின் ஆலயத்தில் சேர்க்கப் படாது; ஏனெனில், அஃது குருப்பிரசாதி கட்குச் சொந்தமாயிருந்தது.

17. சீரியா தேசத்தரசனான அசாயேல் என்போன் வந்து: (யூதா அரசனுக்குச் சொந்தமான) கேட் பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ணி அதைப் பிடித்தான். பின்பு அவன் எருசலேமைப் பிடிக்க வேணுமென்று புறப்பட்டு வந்தான்.

18. ஆதலால் யூதாவின் அரசனான யோவாஸ் தன் பிதாக்களாகிய யோச பாத், யோராம், ஒக்கோசியாஸ், என்னும் யூதா இராசாக்களாலும், தன்னாலுங் கர்த்தருக்குப் பிரதிஷ்டைச் செய்யப் பட்ட யாவையுங் கர்த்தருடைய ஆலயத் துப் பொக்கிஷத்திலும், அரண்மனையிலும் அகப்படக்கூடிய எல்லாப் பணத் தையும் எடுத்து, சீரியா அரசனான அசாயேலுக்கு அனுப்பினான். அப்பொ ழுது அவன் எருசலேமை விட்டுத் திரும் பிப்போனான்.

19. யோவாஸ் அரசனின் மற்ற வர்த்த மானங்களும் அவன் செய்தவை யாவும், யூதாவின் அரசர்களுடைய சம்பவசங்கிர கமென்னும் புத்தகத்தில் எழுதப்பட் டுள்ளன.

20. யோவாசின் காரியஸ்தர்கள் அவனுக்கு விரோதமாகக் கிளம்பி, தங்களுக்குள் சதியாலோசனை பண்ணிக் கொண்டு செல்லா வென்னும் இறக்கத் திலிருக்கிற மெல்லோ அரண்மனையில் அவனைக் கொன்றார்கள்.

21. அவனைக் கொன்றவர்கள் செம காத் குமாரன் யோசக்கார், சோமர் புத்தி ரன் யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர்களேயாம். இறந்து போன அவனைத் தாவீது பட்டணத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கஞ் செய் தார்கள். அவனுக்குப் பதிலாக அவன் குமாரன் அமாசியாஸ் அரசாண்டான்.