ஓசே ஆகமம் - அதிகாரம் - 12

இஸ்றாயேல் எஜிப்த்தியரை நம்பி மோசம் போகும், - கர்த்தர் அதைத் தண்டிப்பார்.

1. எப்பிராயீம் வெறுங் காற்றைப் புசித்துக் கொண்டலைப் பின்தொடர்கின்றது; சதா அபத்தத்தோடு அபத்தத்தை இழைப்பதுந் தன் கேட்டை விருத்தி செய்வதுமாயிருக்கின்றது; அசீரியரோடு உடன்படிக்கை நிறைவேற்றினது; எஜிப்த்துக்கு எண்ணெய்யைப் பரிதானமாகக் கொண்டுபோனது.

2. ஆதலின் யூதாபேரில் ஆண்டவருடைய தீர்வை உண்டாகப் போகிறது; யாக்கோபுக்கு இப்போதே அதின் வழிப்பாடுகள், கைங்கிரியாதிகள் தகமைக்கொப்பத் தண்டனை பிறக்கப் போகிறது.

3. (யாக்கோபு) தாய் கற்பகரத்தில் தன் தமையனை வலங்கொண்டு தலை யாயினன்; ஒரு வானவனோடு சமராட சத்துவம் படைத்தனன்.

4. அசரீரியை வென்று மேலிட்டு அவனைக் கண்ணீருதிர்த்து மன்றாடி னன்; பேட்டலில் ஆண்டவரைத் தரிசித்தனன்; அங்குதான் அவர் அவன் மூலமாக நம்மிடம் பேசினர்.

* 4-ம் வசனம். மன்றாடினன்: தன் தமையன் எசாயுவின் கோபத்தை அமர்த்தி, அவனை இதஞ் செய்விக்க யாக்கோபு சம்மனசானவரை மன்றாடினன்.

5. இங்ஙனஞ் சேனைகளின் ஆண்டவர், அவன் சதா சிந்தை கொள்ள வேண்டிய தேவனாயினர்.

6. யாக்கோபே! இப்போதாகிலும் உன் தேவனிடம் மனந்திரும்பு; (உன் பிதாவைப்போல்) இரக்கத்தையும், நீதி யையும் அநுஷ்டித்து, உன் தேவன்மீது எப்போதும் நம்பிக்கை வைப்பாயாக.

7. ஆயினும் இஸ்றாயேல் கனானே யனைப் போல் வஞ்சகத் தராசு படி கைக்கொண்டு, தூறு பேசப் பிரீதியாயிருக் கிறது.

8. ஏனெனில், எப்பிராயீம் மதி கெட்டு, ஆயினும் நல்ல விக்கிரகம் எனக் குக் கிடைத்த விசேஷத்தால் நான் செல்வவானாயினேன்; என் கருமங்கள் இயாவற்றிலும் யான் செய்த பாதகம் ஒன்றேனும் என்னை வருத்தவறியா என்றது.

9. எப்பிராயீமே! தவறு பேசுவ தென்னே? உன் தேவனாகிய நாமல்லோ எஜிப்த்து தேசத்தினின்று உன்னை மீட்டது முதல் உன் இல்லத்தில் இன்னும் நீ சுகமாய் அமர்ந்திருந்து, உற்சவக் கொண்டாட்டக் களிப்பு அனுபவிக்கச் செய்தோம்.

10. தீர்க்கத்தரிசிகளுககு அனந்த காட்சிகள் தந்து, அவர்கள் வாயிலாகப் பேசியது நாமே; தீர்க்கவசனர்களால் உங்களுக்கு உருவ அலங்காரம் ஒப்பனை அலங்காரமாய்க் காட்டப்பட்டது நாமே.

* 10-ம் வசனம். எப்பிராயீம் காற்றைப்போல் வியர்த்த காரியங்களைச் செய்கிறதும், அபத்த தேவர்களை ஏற்படுத்துவதும், ஆராதிப்பதும், மெய்யங் கடவுளர்மேல் நம்பிக்கை வையாது அசீரியருக்கு விருத்துவமாய் எஜிப்த்திடம் உதவி கேட்பதும் ஆகிய நன்றியில்லாச் செய்கை களையும், யூதாவுக்கும் யாக்கோபுக்கும் அவரவர் கைங்கரியத்துக்குத் தக்க தண்டனையை ஆண்டவர் விதிப்பாரென்றும் யாக்கோபுக்கு ஆண்டவர் செய்த நன்மைகளையும், அவனுடைய சந்ததியார் காட்டிய நன்றிகெட்டதன்மையையும் தீர்க்கவசனர் எடுத்துக் கூறு கிறார்.

11. கலாஹாத்தில் விக்கிரகம் நன்மை ஒன்றுஞ் செய்யாதிருக்கச்சே நீங்கள் கல்காவில் இரிஷப விக்கிரகங்களுக்கு வியர்த்தமாய்ப் பலியிடுகிறீர்களே; ஏனெனில், அவைகளின் பீடங்கள் வெளித் தோட்டத்திய கற்குவியல்போல் ஆயின.

12. யாக்கோப் என்போன் சீரிய நாட்டிற்கோடவும், இஸ்றாயேலன் மனைவிகளுக்காகக் தொண்டூழியஞ் செய்யவும், லாபான் வீட்டில் ஆடு மேய்க் கவுமாயிருந்தனன்.

13. கைதிபோல் கிடந்த இஸ்றா யேலை எஜிப்த்தினின்று தீர்க்கத்தரிசியைக் கொண்டு புறப்படச் செய்தோம்; அத்தீர்க்கவசனி அதைப் பாதுகாத்து வந்தனன்.

14. இங்ஙனமிருக்க எப்பிராயீமோ நமக்குக் கோபமூட்டும்படியான கைப் புள கிருத்தியங்களைச் செய்தது; அது சிந்திய குருதி அதின்பேரிலேயே விழும்; அது செய்த அபகீர்த்திக்கு அதன் ஆண்டவர் பதிலளிப்பார்.

* 11-14-ம் வசனம். இஸ்றாயேல் தெய்வங்கள் திரணமெனவும், ஒப்புக்கொடுக்கும் பலிகள் வியர்த்தமெனவும், இவைகளினால் ஆண்டவருக்குக் கோபம் உண்டாக, அதை அவமானத்திற்கு உட்படுத்துவாரென்றும் தீர்க்கத்தரிசியர் கூறுகின்றனர்.