சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 12

யூதா, எருசலேம் புலம்பல்.

1.  இஸ்றாயேலுக்கு விரோதமதாகிய பயங்கரமுள்ள தேவ தீர்க்கவசனம். விண்ணை விரித்தவரும் மண்ணுலகை நாட்டியவரும், மானிடப் புத்திதனை அவனில் பொருத்தியவருமாகிய ஆண்டவர் செப்புவதேதெனில்: 

2. எருசலேமை யாம் சகல சாதி சனங்கட்கு முன் வெற்றிகொள்ளும் (இடத்திய) கதவென ஸ்தாபிப்போம்; எருசலேமுக்கு விரோதமாய் (ஏற்படும்) முற்றுகையிடுவாரில் யூதாவுமிருக்கும்.

3. நிச்சயமாகவே யாம் அந்நாளில் எருசலேமைச் சகல பிரசைகட்குள் பெரும் பாரக்கல் என ஸ்தாபிப்போம்; அதனை தூக்குவரெல்லாங் காயமடை வர்; பூதல அரசுகளெல்லாம் அதற்கு விரோதமயாய்க் கிளம்புவன.

4. (ஏனெனில், விருத்துவமாயெழும்) அசுவத்தையெல்லாம் யாம் கிறுகிறுப்புக் கொள்ளச் செய்வோம்; அதின் ஆரோணனையும் உன்மத்தம் (பீடிக்கச் செய்வோம்); நமது (கவலைக்) கண்களை யூதா வீட்டின்மீது திறந்தேயிருப்போமாத லின், பிரசைகள் அசுவமெல்லாம் (இங்ஙனம்) குருடுபடச் செய்வோம் என்கிறார் ஆண்டவர்.

5. அப்போது யூதா அதிபர்: எருசலேம் வாசிகள் தன் தேவனான சேனைகளின் ஆண்டவரிடம் (போதிய) ஞக்துவங் கொள்ளக்கடவர் எனத் தம் இருதயத்தில் பிரார்த்திப்பராமே.

6. அந்நாளில் யூதா அதிபரை யாம் விறகில் (வைத்த) தீக்கொள்ளியெனவும், அறுத்துக் காயவிட்ட புல்லிலிட்ட தீவட்டியெனவும் ஸ்தாபிக்க, அவர் களும் (தம்மைச்) சூழ்ந்திலங்கும் பிரசை கள் யாவரையும் வலதுபுறமும் இடது புறமுமாய் விழுங்குவர்; பிறகு எருசலே மானது (முந்திய) எருசலேம் ஆகவே தன்னிடம் (பெயராது) வசிக்கப்படும்.

7. தாவீதன் வீடானது சிலாகித்துக் கர்வியாதிருக்கவும், எருசலேம் வாசிகள் யூதாவுக்கு விருத்துவமாய் அகங்கரித்து (எழாதிருக்கவும்) யூதாவின் வாசிகளை ஆண்டவர் ஆதியில் (செய்தவாறே) பாதுகாப்பர்.

8. அந்நாளில் ஆண்டவர் எருசலேம் வாசிகளைத் தாபரிக்க: அவர்களில் பல வீனனும் அந்நாளில் தாவீதனைப்போல் (திடகாத்திரனா)யிருப்பன்; தாவீதின் கோத்திரந் தெய்வீகத் (தன்மைத்து) எனவும், தேவதூதர் எனவும் அவர்கண் முன் (பிரகாசிக்கும்.)

9. அந்நாளில் எருசலேமுக்கு விருத்துவமாய் வருஞ் சனங்களை எல்லாம் அழித்துவிடக் கவலைகொள்வோம்.

10. அப்போது தாவீதின் வீட்டின் மீதும், எருசலேம் வாசிகள்மீதும் அநுக்கிரகத்துடையவும், செபத்துடை யவும் ஆவிதனை வருஷிப்போம்; (காயங் களால்) துளைத்த எம்மையே மனமுருகி யவர்கள் நோக்குவார்கள்; ஏக புத்திர னைக் குறித்துக் கலுழ்வது) போல் துக்காக்கிராந்தராய்ப் புலம்புவார்கள்; முதல் பேறானவனின் மரணத்தைக் குறித்துத் துயரமுறுவார்கள்.

* 10-ம் வசனம். அரு. 19:37.

11. மகெத்தோன் வெறு மைதானத்திய (சாவைக் குறித்து) ஆதாதிரம்மோன் பட்டணத்தில் பெருந் துக்கக் கொண் டாட்டம் (ஆவது)போல், எருசலேமில் அப்போது பேரிழவு கொண்டாட்ட மாகும்.

* 11-ம் வசனம். 2 நாளா. 35:22

12. (யூதா) நாடு குடும்பம் குடும்ப மாயப் பிரலாபத்திலிருக்கும்; தாவீதின் வீட்டுக் குடும்பத்தினர் ஒருபுறமும், அவர் பெண்டிர் மறுபுறமும்,

13. நாத்தான் வீட்டுக் குடும்பங்கள் ஒருபாலும், அவர்கள் மாதர் மற்றோர் பாலும், லேவி வீட்டுக் குடும்பங்கள் ஒரு மருங்கும், அவர்கள் பெண்கள் மறு மருங்கும்; செமேயி கோத்திரங்கள் ஒரு முகமும், அவர்கள் பெண்பாலர் மறு முகமுமாய்ப் (புலம்புவார்கள்.)

14. இன்னும் ஏனைய கோத்திரங் களுந் தனித்தனி குடும்பங்களாய்ப் (புலம்ப) அவர்கள் பூவையர் வெவ்வே றாய்ப் (புலம்புவார்கள்.)