அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 12

பத்துக் கோத்திரங்களின் பிரிவினை.

1. ரொபோவாமை இராசாவாக்கும் படி இஸ்றாயேலியர் எல்லோரும் சிக்கே மில் வந்து கூடியிருந்தபடியால், இவனும் சிக்கேமுக்கு வந்தான்.

2. இராசாவாகிய சலொமோனுக்குப் பயந்து ஓடிப் போய் எஜிப்த்திலே குடியிருந்த நாபாத்தின் குமாரனாகிய எரோபாவாமோ, சலொமோன மரண மடைந்ததைக் கேள்வியுற்று அங்கிருந்து திரும்பி வநதான.  

3. ஏனெனில் எரோபோவாமுககு ஆள் அனுப்பி, அவனை வரவழைத்தார் கள். அப்படியே அவனும் வர, இஸ்றா யேல் சபை அனைத்தும் ரொபோவா மிடம் வந்து அவனை நோக்கி:

4. உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள் மேல் வைத்தார்.  இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் கொடுங்கோன்மையாய் ஆண்ட விதத் தைச் சற்றே மாற்றி அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகு வாக்கவேண்டும்; அப்படி செய்வீராகில் நாங்கள் உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

5. அதற்கு ரொபோவாம்: நீங்கள் போய் மூன்றுநாள் பொறுத்து என்னிடத் தில் திரும்பி வாருங்கள் என்றான்.  அப் படியே ஜனங்கள் போய்விட்டார்கள்.

6. அப்பொழுது இராசாவாகிய ரொபோவாம் தன் தகப்பனாகிய சலொமோன் உயிரோடிருக்கையில் அவர்  சமுகத்தில் நின்ற முதியோரோடு ஆலோ சனைப் பண்ணி: இந்த ஜனங்களுக்கு   மறு உத்தரவு கொடுக்க நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட் டான்.

7. அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களைச் சகித்து அவர்களுக்கு இணங்கி அவர்கள் கேட்டபடி செய்து நயமான வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்வீரானால் எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராய் இருப்பார் களென்றார்கள்.

8. முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை ரொபோவாம் தள்ளி விட்டுத் தன்னோடு வளர்ந்து தன் சமுகத்தில் நின்று வாலிபரோடு ஆலோ சனை பண்ணி,

9. அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் மேல் வைத்த நுகத்தை இலகுவாக்குமென்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனத்துக்கு மறுமொழி கொடுக்க நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்களென்றான்.

10. அப்போது அவனோடு வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் கொடுமையாய் ஆண்டு வந்தார்.  நீர் இளக்காரம் பண்ணும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனங் களுக்கு நீர் சொல்லவேண்டியது என்ன வென்றால்: என் சுண்டு விரல் என் தகப் பனுடைய உடலைப் பார்க்கிலும் பரும னாயிருக்கும்.

11. எப்போதும் என் தகப்பன் பார மான நுகத்தை உங்கள் மேல் வைத்தார். நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்கு வேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்கு களால் அடித்தார்; நானோ உங்களை முள் முனை சாட்டைகளினால் தண்டிப் பேனென்று நீர் அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.

12. மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்களென்று இராசா சொல்லியிருந்த படியே எரோபோவாமுஞ் சகல ஜனங் களும் மூன்றாம் நாளிலே ரொபோவா மிடத்திலே வந்தார்கள்.

13. அப்பொழுது இராச முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு ஜனங்களோடு அதிக கண் டிப்பாய்ப் பேசினான்.

14. வாலிபர்களுடைய ஆலோசனை யின்படி அவன் அவர்களைப் பார்த்து: என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பார மாக்கினார், நான் உங்கள் நுகத்தை   அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினால் தண்டித்தார், நான் உங்களை முள்முனை சாட்டை களினால் தண்டிப்பேனென்று ஜனங் களுக்கு உத்தாரங் கொடுத்தான்.

15. இப்படி இராசா ஜனங்களுக்குச் செவிகொடாமல் போனான்; ஏனெ     னில் சிலோனித்தனாகிய அகியாசைக் கொண்டு கர்த்தர் நாபாத்தின் குமார னாகிய எரோபோவாமுக்குச் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி ஆண்டவர் அவனைக் கைவிட்டிருந்தார்.

16. இராசா தங்களுக்குச் செவி கொடாததை இஸ்றாயேலியர் எல்லோ ருங் கண்டபோது அவர்கள் இராசாவுக்கு மறு உத்தாரமாக: தாவீதோடு எங்க ளுக்குப் பங்கேது? இசாயின் குமார னிடத்தில் எங்களுக்கு என்ன சுதந்தரம் இருக்கிறது? இஸ்றாயேலே உன் கூடாரத்துக்குப் போய்விடு.  தாவீதின் குமாரரே உங்கள் வீட்டுக் காரியத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்களென்று சொல்லி இஸ்றாயேலியர் தங்கள் கூடா ரங்களுக்குப் போய்விட்டார்கள்.

17. ஆனாலும் யூதாவின் பட்டணங் களிலே குடியிருந்த இஸ்றாயேல் புத்திரர் மேல் ரொபோவாம் இராச்சியபாரஞ் செய்து வந்தான்.

18. பின்பு இராசாவாகிய ரொபோ வாம் பகுதிகளுக்கு காரியஸ்தனாகிய அதுராமை அனுப்பினான்.  இஸ்றாயேலி யர் எல்லாரும் அவனைக் கல்லாலெறிந்து கொன்றார்கள்.  அப்போது இராசா வாகிய ரொபோவாம் தீவிரமாய் இரதத்தின் மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.

19. அப்படியே இந்நாள் வரைக்கும் இஸ்றாயேலியர் தாவீதின் வமிசத்தை விட்டுப் பிரிந்து போயிருக்கிறார்கள்.

20. எரோபோவாம் திரும்பி வந்தா னென்று இஸ்றாயேலியரெல்லாருக்குங் கேள்வியானபோது, அவர்கள் ஒரு பெருஞ் சபை கூட்டி அவனை வரவழைத்து அவனை சமஸ்த இஸ்றாயேலின்மேலும் இராசாவாக நேமித்தார்கள்;  அந்நாள் துவக்கி யூதா கோத்திரத்தாரன்றி வேறொருவரும் தாவீதின் வமிசத்தைப் பின்பற்றவில்லை.

21. ரொபோவாமோ எருசலேமுக்கு வந்து இஸ்றாயேல் வமிசத்தாரோடு யுத்தம் பண்ணவும், இராச்சியத்தை சலொமோனின் குமாரனாகிய ரொபோ வாமுக்குக் கைவசப்படுத்திக் கொள்ள வும் யூதாவின் வீட்டாரையும் பெஞ்ச மீன் கோத்திரத்தாரையுங் கூட்டினான். தெரிந்தெடுத்த லட்சத்து எண்பதி னாயிரம் யுத்த வீரர்களாயிருந்தார்கள்.

22. அப்போது தேவனுடைய மனுஷ னாகிய செமேயாசுக்குக் கர்த்தர் சொன்ன தாவது:

23. நீ யூதாவின் இராசாவாகிய ரொபோவாம் என்னுஞ் சலொமோனின் குமாரனையும் யூதா கோத்திரத்தார் அனைவரையும் பெஞ்சமீனரையும் மற்ற ஜனங்களையும் நோக்கிச் சொல்ல வேண் டியதேதெனில், 

24. கர்த்தர் சொல்லுகிறதாவது: நீங் கள் படை எடுக்கவும் இஸ்றாயேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம் பண்ணவும் போகாதீர்கள்; அவரவர் தம் தம் வீட்டிற்குத் திரும்புங்கள்,  நம்மாலேயே இந்தக் காரியம் நடந்ததென்று சொல்லென்றார். அப்போது அவர்கள் கர்த்தர் சொல்லிய தைக் கேட்டுக் கர்த்தருடைய கட்டளை யின் படியே திரும்பிப் போய்விட்டார் கள்.

25. எரோபோவாமோ எப்பிராயீம் மலையின் பேரில் சிக்கேமைப் (புதி தாய்க்) கட்டி அதில் வாசஞ் செய்தான்.  பிறகு அங்கிருந்து போய் பானுவேலை யும் அப்படியே கட்டினான்.

26. அப்பொழுது எரோபோவாம் தன் மனதிற்கொண்ட சிந்தனை யாதெனில்: இப்போது இராச்சிய(மெல்லாம்) தாவீது வமிசப் பக்கமாய்த் திரும்பி வரும் போலாச்சுது.

27. இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கடவுளுடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப் போனால் அவர்களின் இருதயம் யூதாவின் இராசாவாகிய ரொபோவாம் என்னும் தங்கள் ஆண்டவன் பாரிசமாகிய என்னைக் கொன்றுபோட்டு அவனோடு சேர்ந்து கொள்ளுவார்களென்று, 

28. எரோபோவாம் தனக்குள் நெடு நேரம் யோசனை செய்து, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளைச் செய் வித்து: ஜனங்களை நோக்கி இனி நீங்கள் எருசலேமுக்குப் போகாதேயுங்கள்; இஸ் றாயேலியரே இதோ எஜிப்து தேசத்தி லிருந்து உங்களை மீட்டுக்கொண்டு வந்த உங்கள் தெய்வங்கள் என்று சொல்லி, 

29. ஒன்றைப் பெத்தேலிலும் மற் றொன்றைத் தானிலும் ஸ்தாபித்தான்.

30. இந்தக் காரியம் பாவத்துக்கேது வாயிற்று.  ஜனங்கள் இந்தக் கன்று குட்டியை வந்திக்கத் தான் மட்டும் போவார்கள். 

31. அது தவிர எரோபோவாம் உயர்ந்த மேடைகளின்பேரில் கோவில் களைக் கட்டி லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரிய ராக்கினான்.

32. யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டி கைக்கொப்பாக, எட்டாம் மாதம் பதி னைந்தாந் தேதியிலே எரோபோவாம் ஒரு பணடிகையைக் கொண்டாடச் செய்தான்.  பின்னும் அப்படியே பெத்தே லிலே செய்து தான் உண்டுபண்ணி வைத்த கன்றுக்குட்டிகளையும் பீடத் திலேற்றிப் பலியிட்டுத் தான் உண்டு பண்ணின உயர்ந்த மேடுகளின் ஆசாரி யர்களையும் பெத்தேலிலே ஸ்தாபித் தான்.

33. அன்றியும் அவன் தன் மனம் போல் நியமித்த எட்டாம் மாதம் பதி னைந்தாந் தேதியிலே பெத்தேலில் தான் கட்டின பலிபீடத்துக்குப் போய் இஸ்றா யேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்திப் பலிபீடத்தின் மேலேறித் தூபங் காட்டினான்.