அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 12

சமுவேல் சனங்களைக் கண்டித்தது.

1. அப்போது சமுவேல் இஸ்றாயேலர் அனைவரையும் நோக்கி: இதோ நீங்கள் என்னிடத்தில் சொன்னபடியெல்லாம் உங்கள் சொல்லைக் கேட்டு உங்களுக்கு ஒரு இராசாவை ஏற்படுத்தினேன்.

2. இப்போது இராசா உங்கள் முன்பாக நடக்கிறான்; நானோ கிழவனாய் நரைத்துப் போனேன்; ஆனதால் என் வால வயது துவக்கி இந் நாள் பரியந்தம் உங்களுடன் சஞ்சரித்த நான் இதோ நிற்கிறேன்.

3. நான் எவனுடைய மாட்டை யாகிலும், கழுதையையாகிலும் எடுத் திருக்கிறேனோ, எவனையாகிலும் இடுக் கண் பண்ணினேனோ, எவன் கையிலா கிலும் வெகுமானம் பெற்றிருக்கிறேனா என்பதைக் குறித்து நீங்கள் ஆண்டவர் முன்பாகவும் அவருடைய கிறீஸ்துவிற்கு முன்பாகவும் என்பேரிற் சொல்லுங்கள். அப்படியுண்டானால் அதை நான் அசட்டை பண்ணி இன்றே உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

4. அதற்கு அவர்கள்: நீர் எங்கள் பேரில் பொய்க் குற்றஞ் சொன்னது மில்லை, எங்களை இடுக்கண் பண்ணின துமில்லை, ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கினதுமில்லை என்று சொன் னார்கள்.

5. மறுபடியும் அவன்: என் கையில் நீங்கள் ஒன்றுங் கண்டுபிடிக்கவில்லை என்பதற்கு ஆண்டவருஞ் சாட்சி, அவருடைய கிறீஸ்துவுஞ் சாட்சியாயிருக் கிறார் என்றான். அதற்கு அவர்கள்: அவரே சாட்சி என்று சொன்னார்கள்.

6. அப்பொழுது சமுவேல் சனங் களுக்குச் சொன்னது: மோயீசனையும், ஆரோனையும் ஏற்படுத்தி எஜிப்த்தது தேசத்தினின்று நமது பிதாக்களைக் கொண்டு வந்தவர் ஆண்டவரே.

7. ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்குஞ் செய்த கிருபைகளுக் கெல்லாம் நான் ஆண்டவர் முன் உங்க ளோடு நியாயம் விசாரித்துப் பேசுவேன், நில்லுங்கள்.

8. யாக்கோபு எஜிப்த்தில் பிரவேசித் தார்; நமது பிதாக்கள் ஆண்டவரை நோக் கிக் கூவினார்கள்: ஆண்டவர் மோயீச னையும் ஆரோனையும் அனுப்பி உங்கள் பிதாக்களை எஜிப்த்து தேசத்தினின்று மீட்டு இந்தவிடத்திலே அவர்களைக் குடியிருக்கப் பண்ணினாரல்லவா?

9. அவர்கள் தங்கள் தேவனாகிய ஆண்டவரை மறந்ததினாலே அவர் ஆசோரின் படைத்தலைவனாகிய சிசாரா வின் கையிலும், பிலிஸ்தியர் கையிலும், மோவாபின் இராசாவின் கையிலும் அவர்களை விட்டுவிட்டார். இவர் களோடு அவர்கள் சண்டை செய்தார்கள்.

10. பின்பு அவர்கள் ஆண்டவரை நோக்கி: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாவாலுக்கும், அஸ்தாரோட்டுக்கும் ஊழியஞ் செய்ததினாலே பாவிகளா னோம்; இப்போது (தேவரீர்) எங்களைச் சத்துருக்களின் கையினின்று மீட்டுவிடும்; உமக்கு ஊழியஞ் செய்வோமென்று கூவிச் சொன்னார்கள் அல்லவா?

11. அப்பொழுது ஆண்டவர் ஜெரோ பாவாலையும், பாதானையும், ஜெப்தே யையும், சமுவேலையும் அனுப்பி சுற்றிலுமிருந்த உங்கள் சத்துராதிகள் கையினின்று உங்களை மீட்டிரட்சித் தார்; நீங்கள் பயமில்லாமல் குடித்தனம் பண்ணிவந்தீர்கள்.

12. பிறகு அம்மோன் குமாரர்களு டைய இராசாவாகிய நாஆஸ் உங்கள் பேரில் எதிர்த்து வருவதைக் கண்டபோது உங்கள் தேவனாகிய ஆண்டவரே உங்களை அரசாண்டு வந் தாலும் நீங்கள் என்னை நோக்கி: அப்படி யல்ல; ஒரு இராசா எங்களை ஆள வேண்டுமென்று சொன்னீர்கள் அல்லவா?

13. இப்போது நீங்கள் தெரிந்து கொண்டு கேட்ட இராசா இதோ இருக்கிறான். இதோ ஆண்டவர் உங்களுக்கு இராசாவைக் கொடுத்தார்.

14. நீங்கள் ஆண்டவருக்குப் பயந்து, அவருக்கு ஊழியஞ் செய்து, அவருடைய குரலைக் கேட்டு ஆண்டவருக்குக் கோபம் மூட்டாமல் இருப்பீர்களாகில் நீங்களும் உங்களை ஆளுகிற இராசாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின் பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.

15. ஆண்டவருடைய குரலைக் கேளாமல் அவர் வாக்குகளுக்கு எதிர்ப் பீர்களாகில் ஆண்டவருடைய கைப் பாரம் உங்கள் பேரிலும் உங்கள் பிதாக் கள் பேரிலும் இருக்கும்.

16. ஆனால் இப்போது கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் செய்யப் போகிற இந்த மகத்தான காரியத்தை நின்று பாருங்கள்.

17. இன்று கோதும்பை அறுப்புநாள் அல்லவா? நான் ஆண்டவரை மன்றாடு வேன். அவர் இடிமுழக்கங்களையும், மழைகளையும் கட்டளையிடுவார். அதனால் நீங்கள் உங்களுக்கு ஒரு இராசா வைக் கேட்டதினாலே நீங்கள் கர்த்த ருடைய பார்வைக்கு முன் பெரிய தின்மையை உங்களுக்குச் செய்து கொண்டீர்களென்று கண்டறிவீர்கள் என்றான்.

18. அப்படியே சமுவேல் ஆண்ட வரை நோக்கிக் கூவி விண்ணப்பஞ் செய்த மாத்திரத்தில் அன்றைய தினமே கர்த்தர் இடி முழக்கங்களையும், மழைகளையுங் கட்டளையிட்டார்.

19. ஜனங்கள் எல்லாஞ் சுவாமிக்குஞ் சமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள். அவர்கள் அனைவோருஞ் சமுவேலைப் பார்த்து: எங்கள் எல்லாப் பாவங்களுடன் எங்களுக்கு இராசாவைக் கேட்ட தின்மையையுஞ் சேர்த்துக் கொண் டோமே; நாங்கள் சாகாதபடி உமது தேவனாகிய ஆண்டவரிடத்தில் உமது அடியார்களுக்காக வேண்டிக் கொள்ளு மென்று சொன்னார்கள்.

20. சமுவேல் அவர்களை நோக்கி: பயப்படாதேயுங்கள். இந்தத் தின்மை எல்லாம் நீங்கள் செய்தீர்கள்; ஆயினும் ஆண்டவரை விட்டு அப்புறம் போக வேண்டாம். ஆனால் உங்கள் முழு இருதயத்தோடு ஆண்டவருக்கு ஊழி யஞ் செய்யுங்கள்.

21. வீண் காரியங்களைப் பின்பற்றிப் போகவேண்டாம்; வீணானவையா யிருப்பதால் அவைகள் உங்களுக்குப் பிரயோ சனமற்றவைகளும், உங்களை மீட்க மாட்டாதவைகளுமாயிருக் கின்றன.

22. ஆண்டவர் தமது மகத்தான நாமத்தைப் பற்றித் தம் பிரசையைக் கைவிடமாட்டார். ஏனெனில் கர்த்தர் உங்களைத் தமது சனமாய் ஆக்குவதாகச் சத்தியம் பண்ணினார்.

23. நான் உங்களுக்காக மன்றாடுகி றதை விட்டுவிடும் பாவம் ஆண்டவரி டத்தில் எனக்கில்லாதே போவதாக! நான் நல்லதும் நேரானதுமான வழியை எப் பொழுதும் உங்களுக்குப் போதிப்பேன்.

24. ஆகையால் நீங்கள் ஆண்டவருக் குப் பயந்து உங்கள் முழு இருதயத் தோடு உண்மையாகவே அவரைச் சேவி யுங்கள். அவர் உங்களிடத்திற் செய்த அதிசயங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? 

25. ஆனால் (பொல்லாப்பானதை விலகாமல்) நீங்கள் துர்க்குணத்திலே நிலைநிற்பீர்களேயாகில் நீங்களும் உங்கள் இராசாவும் ஒருமிக்க நாசமடை வீர்களென்றான்.