நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 12

எப்பிராயீழக்கம் கலாத்துக்கும் நடந்த யுத்தமும்,--ஜெப்தேயின் மரணமும்.

1. அப்போது எப்பிராயீம் வம்சத்தில் கலகமூண்டானது. அவர்கள் வடக்கே சென்று ஜெப்தேயை நோக்கி: அம்மோன் குமாரருக்கு விரோதமாய்ச் சண்டைக்குப் போகையில் நாங்களும் உன்னுடன் யுத்தத்துக்கு வர எங்க ளை ஏன் அழைக்கவில்லை? ஆனதால் உன் வீட்டைச் சுட்டெரித்துப் போடுவோம் என் றார்கள்.

2. அதற்கு அவன்; என் ஜனங்களுக்கும் எனக்கும் அம்மோன் கமாரரோடு கூட வெகு விரோதமிருந்தது; எனக்கு ஒத்தாசையாக நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் சம்மதிக் கவில்லை,

3. அதைக் கண்டபோது , நான் என் ஜீவ னை என் கையிலே பிடித்துக்கொண்டு அம் மோன் குமாரர் தேசத்திற்குப் போய் அவர் களை எதிர்த்தேன். ஆண்டவரும் அவர்களை என் கைகளில் காட்டிக்கொடுத்தார்; நீங்கள் எனக்கு விரோதமாய் எமும்பி வர நான் என்ன குற்றஞ் செய்தேனென்று சொல்லி,

4. ஜெப்தே கலாதிலிருந்த சகலரையுஞ் சேர்த்துக்கொண்டு எப்பிராயீமரோடு யுத்தம் பண்ணி அவர்களை அடித்தான், அதற்கு முகாந்தரம்: எப்பிராயீமர் கலாதைக் குறித்து: கலாத் எப்பிராயீமை விட்டு ஓடிப்போன வன்; அவன் எப்பிராயீமுக்கும் மனாசேயுக் கும் நடுவே குடியிருக்கிறானென்கிற இகழ்ச் சியான வார்த்தையைச் சொல்லியிருந்தார் கள்.

5. எப்பிராயீம் திரும்பவேண்டிய வழியா கிய யோர்தானின் துறைகளைக் கலாதித்தர் பிடித்திருந்தார்கள்; எப்பிராயீமின் ஓடிப்போ னவர்களிலே யாராவது அவ்விடம் வந்து: நான் அக்கரைக்குப்போக உத்தரவளியுங்கள் என்றபோது கலாதித்தர் அவனை நோக்கி: நீ எப்பிராயீமனோ என்பார்கள். அதற்கு அவன் அல்லவென்றால், 

6. அவர்கள் ´ப்போலேத் என்று சொல் லென்பார்கள். (அதற்கு அர்த்தம் கருது.) அவன் ´ப்போலேத் என்று சரியாய் உச்சரிக் கக்கூடாமல் சிபோலேதென்று சொன்னால் அவர்கள் அவனைத் தட்சணமே பிடித்து யோர்தானின் துறையிலேயே கொன்றுபோடு வார்கள். அந்தக்காலத்தில் எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம் பேர் மாண்டார்கள்.

7. கலாதித்தனான ஜெப்தே இஸ்ராயேலை ஆறுவருஷம் ஆண்டான். மரித்து கலாத் பட்டணத்தில் அடக்கட் பண்ணப்பட்டான்.

8. அதன் பிறகு பெத்லேம் ஊரானான அபேசான் இஸ்ராயேலை நியாயம் விசாரித் தான்.

9. அவனுக்கு முப்பது குமாரரும், முப்பது குமாரத்திகளுமிருந்தார்கள். குமாரத்திகளை அசலூர்களில் கலியாணஞ் செய்து கொடுத்து, குமாரருக்கும் முப்பது பெண்களைக் கொண் டு தன் வீட்டில் வைத்திருந்தான். இஸ்ராயேலை ஏழு வருஷம் ஆண்டான்.

10. பின்பு அவன் மரித்து பெத்லேமில் அடக்கப்பட்டான்.

11. அவனுக்குப் பிறகு ஜாபுலோனித்தனா ன ஆயியாலோன் தோன்றி இஸ்ராயேலைப் பத்து வருஷம் ஆண்டான்.

12. அவனும் மரித்து, ஜாபுலோனில் அடக் கம் பண்ணப்பட்டான்.

13.அவனுக்குப் பின் பாராத்தோனித்த னான இலேனின் குமாரன் அப்தோன் இஸ்ராயேலை ஆண்டுவந்தான்.

14. அவனுக்குப் பின் பாராத்தோனித்த னான இலேனின் குமாரன் அப்தோன் இஸ் ராயேலை ஆண்டுவந்தான்.

15. அவனும் மரித்து அமலேக் மலையில் எப்பிராயீமைச் சேர்ந்த தேசத்திலுள்ள பா ராத்தோனில் அடக்கம் பண்ணப்பட்டான்.