அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 11

சலொமோன் மரணம்.

1.  இராசாவாகிய சலொமோன், பரா வோனின் குமாரத்தியை நேசித்தது மல்லாமல் அவன் மோவாபியரும், அம் மோனியரும், இதுமேயரும், சீதோனிய ரும், ஏத்தையருமாகிய அந்நிய ஜாதி யாரான அநேகம் ஸ்திரீகளின்மேலும் இச்சை வைத்தான்.

2. அந்த அந்நிய தேசத்து ஜனங் களைக் குறித்து கர்த்தர் இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அத் தேசத்துப் பெண்களைக் கொள்ளவுங் கூடாது; அத் தேசத்து ஆண்களுக்கு உங்கள் பெண் களைக் கொடுக்கவுங் கூடாது; ஏனெனில் அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர் களை வணங்கும்படியாய் உங்கள் இருத யத்தை மாற்றிவிடுவார்களென்று சொல் லியிருந்தார்.  அப்படிப்பட்ட ஸ்திரீகளின் மேல் சலொமோன் அதிக ஆசை வைத் தான்.

3. அப்படியே அவனுக்கு எழுநூறு இராச மனையாட்டிகளும், முந்நூறு வைப்பாட்டிகளுமிருந்தார்கள்.  அந்த ஸ்திரீகள் அவனுடைய இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.

4. சலொமோன் விருத்தாப்பியனா யிருந்த காலத்தில் அவனுடைய மனைவி கள் அவன் இருதயத்தை அந்நிய தேவர் களைப் பின்பற்றும்படி கெடுத்து விட் டார்கள்.  அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல் தன் தேவனாகிய கடவுளோடு உத்தமமாயிருந்ததில்லை.

5. சலொமோன் சீதோனியரின் தேவதையாகிய அஸ்தாரோத்தையும் அம்மோனியரின் குல தெய்வமாகிய மோலோக்கையும் பின்பற்றினான்.

6. சலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரைப் பூரண மாய்ப் பின்பற்றாமல் கர்த்தருடைய சமுகத்துக்கு ஏற்காததைச் செய்தான்.

7. அப்பொழுது சலொமோன் எருச லேமுக்கு எதிரான மலையிலே மோவா பியரின்  விக்கிரகமாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் விக்கிரகமாகிய மோலோக்குக்கும் மேடைக் கோவிலைக் கட்டினான்.

8. இப்படியே தங்கள் தேவர்களுக் குத் தூபங் காட்டிப் பலியிடுகிற அந்நிய ஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லோருக் குஞ் சலொமோன் செய்தான்.

9. ஆகையால் சலொமோனுக்கு இனனொரு விசை தரிசனமான கர்த்தர் அவன் இருதயம் இஸ்றாயேலின் தேவ னாகிய ஆண்டவரை நீக்கி விட்டதினிமித் தம் அவனைத் தண்டித்தார்.  

10. அவன் அந்நிய தேவர்களைப் பின் பற்ற வேண்டாமென்று தேவன் கண்டிப் பாய் அவனுக்குச் சொல்லியிருந்த போதிலும் அவன் அந்தக் கட்டளைப்படி நடக்கவில்லை.

11. ஆகையால் கர்த்தர் சலொ மோனை நோக்கி: நாம் உனக்குக் கட்டளையிட்ட நமது உடன்படிக்கை யையும், நமது கற்பனைகளையும் நீ கைக் கொள்ளாமற் போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால் உன் இராச்சியத்தை அலங்கோலப்படுத்தி இரண்டாக்கி உன் னிடத்திலிருந்து பிடுங்கி அதை உன் ஊழியக்காரரில் ஒருவனுக்குக் கொடுப் போம்.

12. ஆனாலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம் நாம் உன் நாட்களிலே இதைச் செய்வதில்çல் உன் குமார னுடைய கையினின்று அதைப் பிரித்துப் போடுவோம்.

13. ஆகிலும் இராச்சியம் முழுவதை யும் நாம் பிடுங்காமல் நமது தாசனாகிய தாவீதினிமித்தமும், நாம் தெரிந்து கொண்ட எருசலேமினிமித்தமும் ஒரு கோத்திரத்தை உன் குமாரனுக்குக் கொடுப்போமென்றார்.

14. பிறகு கர்த்தர் இதோமிலிருந்த இராச குலத்தில் இதுமேயனாகிய   ஆதாத் என்பவனைச் சலொமோனுக்கு விரோதமாய் எழுப்பினார்.

15. ஏனெனில் தாவீது இதுமேயி லிருக்குங் கலத்தில் படைத்தலைவனா கிய யோவாப் இதுமேயிலுள்ள ஆண் மக்களையெல்லாஞ் சங்கரித்து, வெட் டுண்டவர்களை அடக்கம் பண்ணப் போனபோது,

16. அங்கே யோவாபும் இஸ்றாயேல் படைச் சேவகர்களும் ஆறுமாதம் இருந்து இதுமேயிலிருந்த ஆண் மக்களைச் சங்காரம் பண்ணுகையிலே,

17. ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில இதுமேயரும் எஜிப்த்திற்கு ஓடிப் போனார்கள்; ஆதாதோ அப்போது சிறு பிள்ளையாயிருந்தான்.

18. அவர்கள் மதியானிலிருந்து புறப் பட்டுப் பாரானுக்குச் சென்று பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு எஜிப்த்திற்குப் பராவோன் என்னும் எஜிப்த்தின் இராசாவினிடத்திற்குப் போனார்கள்; இவன் ஆதாதுக்கு ஒரு வீடு கொடுத்து அவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி நிலத்தையும் கொடுத் தான்.

19. ஆதாத் பராவோனுக்கு எவ்வளவு பிரியப்பட்டுப் போனானென்றால், பராவோன் இராஜ ஸ்திரீயாகிய தாப் னேஸ் என்னுந் தன் மனைவியின் உடன்பிறந்த சகோதரியை அவனுக்கு விவாகஞ் செய்து வைத்தான்.

20. (தாப்னேசின்) சகோதரியாகிய இவள் அவனுக்குக் கெனுபாத்தென்னும் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனைத் தாப்னேஸ் பாரவோன் வீட்டிலே வளர்த் தாள்.  அப்படியே கெனுபாத் பராவோன் வீட்டில் அவனுடைய குமாரருடனிருந் தான்.

21. தாவீது தன் பிதாக்களோடு நித் திரை அடைந்தானென்றும், படைத் தலைவனாகிய யோவாப் இறந்து போனான் என்றும் எஜிப்த்தில் ஆதாத் கேள்விப்பட்டபோது அவன் பரா  வோனை நோக்கி: நான் என் சுயதேசத் துக்குப் போக இச்சிக்கிறேன். என்னை அனுப்பவேண்டுமென்றான்.

22. அதற்குப் பராவோன்: நீ உன் சுய தேசத்திற்குப் போக விரும்புகிறதற்கு என் னிடத்தில் உனக்கு என்ன குறையிருக் கிறது என்று கேட்டான்.  அதற்கவன்: ஒரு குறைவுமில்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேனென்றான்.

23. கர்த்தர் எலியாதாவின் குமார னாகிய ராசோனையுஞ் சலொமோனுக்கு விரோதமாய் எழுப்பினார்; அவன் தனது ஆண்டவனாகிய ஆதரேசென்னுஞ் சோபாவின் இராசாவை விட்டு ஓடிப் போய்,

24. தாவீது அவர்களைக் கொன்று போடுகையில் அவன் தன்னோடு சிலரைச் சேர்த்துக் கொண்டு அந்தத் திரு டர் கூட்டத்திற்குத் தலைவனானான். இவர்கள் தாமாசுக்குப் போய் அவ்விடத் தில் குடியேறி தாமாசுக்கு இவனை இராசாவாக்கினார்கள்.

25. ராசோன் சலொமோனுடைய காலமெல்லாம் இஸ்றாயேலுக்கு விரோதி யானான்.  ஆதாத் பொல்லாப்பைச் செய்து இஸ்றாயேலைப் பகைத்தான், அவன் சீரியாவிலே இராசாவாயிருந்து,

26. சரேதா ஊரிலுள்ள எப்பிராத்தை யனான நாபாத் குமாரன் எரோபோவாம் என்னுஞ் சலொமோனின் ஊழியக்காரரி லொருவன் இராசாவுக்கு விரோதமா யெழும்பினான்.  அவனுடைய தாய் சர்வா என்று பேர்கொண்ட ஒரு   விதவை.

27. அவன் இராசாவுக்கு விரோதமா யெழும்பினதற்கு முகாந்தரமென்ன வென்றால், சலொமோன் மெல்லோ çக் கட்டித் தன தகப்பனாகிய தாவீதினு டைய நகரத்தின் இடிந்துபோன இடங் களைப் பழுதுபார்த்திருந்தான்.

28.  எரோபோவாம் என்பவன் தைரிய பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் புத்திசாலியுங் காரிய சமர்த்தனு மான வாலிபனென்று சலொமோன் கண்டு யோசேப் வமிசத்தாரின் கோத் திரத்துக்கெல்லாம் அவனைப் பகுதி களுக்குக் காரியஸ்தனாக நியமித்தான்.

29. அக்காலத்திலே எரோபோவாம் எருசலேமிலிருந்து வெளியே போகிற போது சிலோனித்தானாகிய அகியாஸ் என்னுந் தீர்க்கத்தரிசி புது சால்வை   யைப் போர்த்துக் கொண்டிருந்து வழியிலே அவனைக் கண்டான்; இரு வரும் வயல் வெளியே தனித்திருக் கையில், 

30. அகியாஸ் தான் போர்த்துக் கொண்டிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித் துப் போட்டு,

31. எரோபோவாமை நோக்கி: நீ பத்து துண்டுகளை எடுத்துக் கொள்; இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் சலொமோனுடைய கையிலிருந்து வருகிற இராச்சியபாரத்தைப் பிடுங்கிப் பிரித்து உனக்குப் பத்துக் கோத்திரத்தைக் கொடுப்போம்.

32. ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும் இஸ்றாயேல் கோத் திரங்களிலெல்லாம் நாம் தெரிநது கொண்ட எருசலேம் நகரத்துக்காகவும் ஒரு கோத்திரம் அவனுக்கிருக்கும்.

33. ஏனெனில் சலொமோன் நம்மை விட்டு விலகி சீதோனியரின் தேவதை யாகிய அஸ்தரோத்தையும், மோவாபின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மோலோக்கை யும் தொழுதுகொண்டு, அவன் தன் தகப்பனாகிய தாவீதைப் போல் நமது சமுகத்துக்கு முன் நமது கட்டளை கற்பனைகளையும் நமது நியாயங் களையும் அநுசரிக்கத்தக்கதாக நமது வழிகளில் நடவாமற்போனபடியால் அப்படிச் செய்வோம்.

34. ஆனாலும் இராச்சியம் முழுவதை யும் நாம் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை; நம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவனும், நமது கற்பனை களையும், நமது கட்டளைகளையும் அநுசரித்தவனுமான நமது தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோ டிருக்கும் நாளெல்லாம் நாம் அவனை அதிபதியாக வைப்போம்.

35. ஆனாலும் இராச்சியபாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து அதிலே பத்துக் கோத்திரத்தை உனக்குக் கொடுப்போம்.

36. நமது நாமம் விளங்கத்தக்கதாக நாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே, நமது சமுகத்தில் நமது தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கவேண்டுமென்ற நாம் அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்போம்.

37. நீயோ (எரோபோவாமே) உன் மன விருப்பத்தின்படி ஆண்டுகொண்டு இஸ்றாயேலின்மேல் இராசாவாயிருப் பதற்காக நாம் உன்னைத் தெரிந்து கொள்ளுவோம்.

38. நாம் உனக்குக் கட்டளையிட் டவைகளை யெல்லாம் நீ கேட்டு, நமது வழிகளில் நடந்து, நமது கற்பனைகளை யும் நமது கட்டளைகளையும் அநுச ரித்து, நமது பார்வைக்குச் செம்மையான தைச் செய்து வருவாயானால், நாம் உன்னோடிருந்து நமது தாவீதுக்குக் கட்டினதுபோல், உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்றாயேலை உனக் குத் தருவோம்.

39. இப்படி செய்வதால் நாம் தாவீ தின் சந்நிதியைச் சிறுமைப்படுத்து வோம்; ஆனாலும் எந்நாளும் அப்படி யிராது என்று சொன்னாரென்றான்.

40. அதினிமித்தஞ் சலொமோன் எரோபோவாமைக் கொல்ல வகை தேடினான்; ஆனால் அவன் எஜிப்திற்கு ஓடிப் போய் செசாக் என்னும் எஜிப்த்தில் இராசாவிடத்தில் சேர்ந்து சலொமோன் மரணமடையுமட்டும் அவ்விடத்திலிருந் தான்.

41. சலொமோனின் மற்ற நடபடி களும், அவன் செய்த அனைத்தும், அவ னுடைய ஞானமும், சலொமோனுடைய இராச்சிய நடபடிக்கைப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

42. சலொமோன் எருசலேமிலே இஸ் றாயேலை எல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்.

43. பின்பு சலொமோன் தன் பிதாக் களோடு நித்திரையடைந்து தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரொபோவாம் அவன் ஸ்தானத்தில் இராசாவானான்.