அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 11

சவுல் செய்த யுத்தம்.

1. ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின் சம்பவித்ததேதெனில்: அம்மோனித் தனாகிய நாஆஸ் எழும்பி காபாவில் ழாபேஸ் பேரில் சண்டையிடத் துவக்கினான். ழாபேஸ் மனிதர்களெல்லாம் நாஆசை நோக்கி: எங்களோடு உடன்படிக்கை பண்ணும்; அப்போது உன்னைச் சேவிப்போமென்று சொன்னார்கள்.

2. அம்மோனித்தனாகிய நாஆஸ் மறுமொழியாக: உங்கள் எல்லாருடைய வலது கண்களைப் பிடுங்குவேன்; இஸ்றா யேல் எல்லாம் உங்களை நிந்திக்கச் செய் வேன், இதுதான் நான் உங்களுடன் செய்யும் உடன்படிககை என்றான்.

3. அதற்கு ழாபேசின் மூப்பர்கள: இஸ்றாயேல் எல்லைகள் முழுதுக்குந் தூதர்களை அனுப்பும்படிக்கு எங்களுக்கு ஏழுநாள் தவணை கொடு; எங்களைக் காப்பாற்றுபவன் ஒருவனும் இல்லாவிட் டால் உன்னிடந் திரும்பி வருவோ மென்றார்கள்.

4. தூதர்கள் சவுலின் ஊராகிய காபாவில் வந்து ஜனங்கள் கேட்க அந்தச் செய்திகளை எல்லாஞ் சொன்னார்கள். பிரசைகளெல்லாங் குரலைத் திறந்து அழுதார்கள்.

5. அவர்கள் அழுத நேரத்தில் இதோ சவுல் வயலினின்று எருதுகளைப் பின்துடர்ந்து வந்துகொண்டிருந்தான். ஜனங்கள் அழுகிறதற்கு என்ன இருக் கிறது என்றான். ழாபேஸ் மனிதர்கள் சொல்லிய செய்திகளை அவனுக்கு விவரித்தார்கள்.

6. சவுல் இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் ஆண்டவருடைய ஆவி அவன் மேலிறங்கினது; அவன் மிகுதியுங் கோபமூண்டவனாகி:

7. தன் இரு எருதுகளையும் பிடித்துத் துண்டுகளாக வெட்டி அந்தத் தூதர்கள் கையிலே கொடுத்து இஸ்றா யேல் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பி, சவுலையும், சமுவேலையும் பின்செல் லாதவன் எவனோ அவனுடைய மாடுகளுக்கு இவ்விதமாய்ச் செய்யப் படும் என்று சொல்லி அனுப்பினான். ஆண்டவரால் உண்டான பயங்கரம் பிரசையைப் பிடித்துக் கொண்டது. ஒரே மனிதனைப் போல் எல்லோருங் கூடிப் புறப்பட்டார்கள்.

8. (சவுல்) அவர்களைப் பெசேக்கிலே கணக்குப் பார்த்தான், இஸ்றாயேல் குமாரர்கள் முப்பதினாயிரம் பேருமா யிருந்தார்கள்.

9. அவர்கள் வந்த தூதர்களைப் பார்த்து: நாளைக்கு வெயில் கடுமையா யெரிக்கும்போது உங்களுக்கு இரட்சிப்பு கிடைக்கும் என்று காபாவின் ழாபேசி லிருக்கிற மனிதர்களுக்குச் சொல்லுவீர் களென்று சொன்னார்கள். தூதர்கள் வந்து ழாபேஸ் மனிதர்களுக்குத் தெரி வித்தார்கள். இவர்கள் சந்தோஷப்பட் டார்கள்.

10. பிறகு ழாபேசியர்: காலையில் உங்களிடத்துக்கு எழுந்து வருவோம். உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் எங்களுக்குச் செய்யுங்களென்று சொன் னார்கள்.

11. அப்புறம் மறுநாள் வந்தபோது சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து விடியற்காலத்திலே பாளையத் திற்குள் வந்து வெயில் எரிக்கிற வரைக்கும் அம்மோனித்தர்களை முறிய அடித்தான். தப்பினவர்களில் இரண்டு பேராகிலுஞ் சேர்ந்து ஓடிப் போகாத படிக்கு எல்லாருஞ் சிதறடிக்கப்பட்டார் கள்.

12. அப்பொழுது ஜனங்கள் சமு வேலை நோக்கி: சவுலா நம்மை ஆளப் போகிறானென்று சொன்னவர்கள் ஆர்? அந்த மனிதர்களை ஒப்புக்கொடுங்கள், அவர்களைக் கொல்லுவோமென்றார் கள்.

13. அதற்குச் சவுல்: இன்று ஆண்டவர் இஸ்றாயேலை இரட்சித்தபடியால் இன்றைய தினம் ஒருவனையுங் கொல்ல லாகாதென்று சொன்னான்.

14. அப்பொழுது சமுவேல் ஜனங் களைப் பார்த்து: வாருங்கள் கல்கலா வுக்குப் போவோம். அவ்விடத்திலே சவுலை இராஜாவாக ஏற்படுத்துவோ மென்று சொல்ல,

15. ஜனங்களெல்லாம் கல்கலா வுக்குப் போய் அங்கு ஆண்டவருடைய சந்நிதியில் கல்கலாவிலே சவுலை இராசா வாக்கினார்கள்; அங்கு ஆண்டவருக்கு சமாதானப் பலிகளைப் பலியிட்டார்கள்; அங்கு சவுலும் சந்தோஷங் கொண்டாடி னான்; இஸ்றாயேல் மனிதர்கள் எல்லோரும் அதிகமாய் ஆனந்தித்து அக்களித்தார்கள்.