அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 10

அம்மோன், சீரியரைத் தாவீது வென்றது.

1.  இவற்றின்பின்பு சம்பவித்ததே தெனில் அம்மோன் புத்திரரின் அரசன் மரித்தான். அவன் குமாரனாகிய ஆனோன் அவனுக்குப் பதிலாகச் சிம்மா சனத்தின் மீதேறினான்.

2. அப்பொழுது தாவீது: ஆனோ னின்  தகப்பனாகிய நாஹாஸ் எனக்குத் தயை செய்தது போல் நானும் அவனுக் குத் தயை செய்வேனென்று சொல்லி அவன் தகப்பனுடைய மரணத்துக்காக அவனுக்கு ஆறுதல் சொல்லத் தன் ஊழியரை அனுப்பினான்.  ஆனால் தாவீ துடைய ஊழியர்கள் அம்மோன் புத்திர ரின் தேசத்திலே சேர்ந்த போது,

3. அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனான ஆனோனை நோக்கி: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர் களை உம்மிடத்தில் அனுப்பினது உம்முடைய தகப்பனைக் கனப்படுத்த வேணுமென்று நினைக்கிறீரோ?  அவனு டைய முகாந்தரம் அதல்ல;  அவன் இந்தப் பட்டணத்தின் ஸ்திதியைப் பார்த்து அதைப் பிடித்து அழிக்க வேணுமென்று தானே தன் ஊழியர் களை உம்மிடத்தில் அனுப்பினானென் றார்கள்.

4. அப்பொழுது ஆனோன் தாவீதின் ஊழியரைப் பிடித்து அவர்களுடைய ஒரு பக்கத்துத் தாடியைச் சிரைத்து அவர் களுடைய வஸ்திரங்களைப் பேர்பாதி யாய்க் கத்தரித்து ஆசனமட்டும் வைத்து விட்டு அவர்களை அனுப்பிவிட்டான்.

5. அது தாவீதுக்கு அறிவிக்கப் படவே, அந்த மனுஷர் மிகவும் வெட்கப் பட்டிருந்தது பற்றி இராசா அவர்களுக் குத் தூதரை அனுப்பி: உங்கள் தாடி வளருட்டும் நீங்கள் எரிக்கோவிலிருந்து பிறகு வாருங்களென்று சொல்லச் சொன் னான்.

6. அம்மோன் புத்திரரோவெனில் தாங்கள் தாவீதுக்கு அவமானம் பண்ணினதாகக் கண்டு ரோஹோப் சீரியர்களிலுஞ் சோபர சீரியர்களிலும் இருபதினாயிரங் காலாட்களையும், மாஹாக்காவின் அரசனிடத்தில் ஆயிரம் வீரரையும், கூலிப் படையாக அழைப் பித்தார்கள்.

7. அதைத் தாவீது கேள்விப்பட்ட போது யோவாபையும் பராக்கிரமசாலி களுடைய சமஸ்த படையையும் அனுப் பினான்.

8. அம்மோன் புத்திரர் புறப்பட்டு ஒலிமுக வாயிலண்டையிலேதானே போர் செய்ய அணிவகுத்துக் காத்திருந்தார்கள்; ஆனால் சோபாவின் சீரியர்களும், ரோஹோப்பின் சீரியர் களும் மாஹாக்காவிலும், இஸ்தோபி லுமிருந்து வந்திருந்த சேவகர்களும் வெளியில் பிரத்தியேகமாய் இருந்தார் கள்.

9. யோவாப் படைமுகந் தனக்கு முன் முன்னும் பின்னுமாக யுத்தத்திற்கு முஸ்திப்பாயிருக்கிறதைக் கண்டு இஸ்றா யேலிய பராக்கிரமசாலியானவர்களில் அதி பலவான்களான வீரர்களைப் பிரித் தெடுத்து அவர்ளைச் சீரியர்களுக்கு எதிராகவே அணிவகுத்து நிறுத்தி,

10. மற்றப் படைவீரர்களைத் தன் சகோதரனாகிய அபிஸாயிடத்தில் ஒப்பு வித்தான்; அபிஸாயி அம்மோன் புத்திர ருக்கு எதிராக அவர்களை படைவகுத்து நிறுத்தினான்.

11. யோவாப் (சகோதரனைப் பார்த்து:) சீரியர் கை மிஞ்சி வந்தால் நீ எனக்கு உதவி செய்ய வேண்டும்; அம்மோன் புத்திரர் கை மிஞ்சி வருமா னாலோ நான் உனக்கு உதவி செய்வேன்.

12. நீ தைரியமாயிரு; நம்முடைய ஜனத்துக்காகவும், நம்முடைய தேவ னுடைய பட்டணத்துக்காகவும் யுத்தம் பண்ணுவோம்.  கர்த்தரோ தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

13. என்ற பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமுஞ் சீரியர்மேல் யுத்தம் பண்ணத் தொடங்கின மாத்திரத் தில் சீரியர் அவனுக்குப் பயந்து முறிந் தோடிப் போனார்கள்.

14. சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர்கள் கண்டபோது அவர்களும் அபிஸாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்துக்குள் நுழைந் தார்கள்; அப்பொழுது யோவாப் அம்மோன் புத்திரரை விட்டு எருசலே முக்குத் திரும்பி வந்தான்.

15. இஸ்றாயேலுக்கு முன்பாகத் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது ஒருங்குடன் கூடினார்கள்.

16. ஆதரேஜேர் தூதரை அனுப்பி, நதிக்கப்பாலிருந்த சீரியரை வரச் செய்து அவர்களுடைய படையையுங் கொண்டு வந்தான் ஆதரேஜேருடைய தளக்கர்த்த னான ஸோபாக் அவர்களுக்குத் தலைவ னானான்.

17. அது தாவீதுக்கு அறிக்கையிடப் பட்ட மாத்திரத்தில் அவன் இஸ்றா யேலை எல்லாங் கூட்டிக்கொண்டு யோர் தானைக் கடந்து எலாமுக்குப் போன போது சீரியர் தாவீதுக்கு எதிராகத் தங்க்ள இராணுவங்களை அணிவகுத்து அவ னோடு யுத்தம் பண்ணுகையில்,

18. சீரியர்கள் இஸ்றாயேலின் முகத்தே ஓட்டம் பிடிக்கத் தாவீதும் சீரியரில் எழுநூறு இரத வீரர்களையும், நாற்பதினாயிரங் குதிரை வீரர்களையுங் கொன்று அவர்களுடைய படைத் தலை வனாகிய சோபாக்கையுஞ் சாகும்படி வெட்டிப் போட்டான்.

19. அப்பொழுது ஆதரேஜேரோடு ஒரு கையாயிருந்த அரசரெல்லாந் தாங்கள் இஸ்றாயேலியராலே தோற் கடிக்கப்பட்டதைக் கண்டு திடுக்கிட்டு ஐம்பத்தெண்ணாயிரஞ் சேவகரோடுகூட ஓட்டம் பிடித்தார்கள்.  பிறகு அவர்கள் இஸ்றாயேலோடு சமாதானம் பண்ணி இஸ்றாயேலுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.  அந்நாள் முதல் அம்மோன் புத்திரருக்கு உதவி செய்ய அவர்கள் துணியவில்லை.