ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 10

ஐந்து அரசர் கூடி கபயோன் பட்டணத்தைப் பிடிக்க எத்தனித்ததும்--ஜோசுவா அவர்களை முறிய அடித்ததும்--சூரியனும் சந்திரனும் ஜோசுவாவின் கட்டளைப்படி நின்றதும்--ஐந்து இராசாக்கள் தூக்குமரத்திலே தூக்கப் பட்டதும்--மற்றும் அரசர்கள் செயிக்கப்பட்டதும்.

1, எரிக்கோவுக்கும் அதன் அரசனுக்கும் செய்திருந்தது போல் ஜோசுவா ஆயிக்கும் அதன் அரசனுக்கும் அவ்விதமே செய்து அதைப் பிடித்துப் பாழாக்கினதையும், கபயோனியரும் இஸ்றாயேலரோடு உடன்படிக்கை பண்ணி அவர்கள் பக்கத்தில் வந்து சேர்ந்ததையும், கேள்விப்பட்டு எருசலேமின் இராசாவான அதோனிசெதேக்

2. மிகவும் பயந்தான். உள்ளபடி கபயோன் பட்டணம் இராசதானி நகரம்; ஆயியை விட அதிகப் பெரிதாயிருந்ததுமன்றி அதன் படைவீரர்கள் எல்லோரும் மகா பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.

3. ஆகையால் எருசலேம் அரசனான அதோனிசெதேக் எபிரோன் ஊருக்கு அரசனான ஓகாம் என்பவனுக்கும் ஜெரிமோட்டின் அரசனான பாரிமென்பவனுக்கும் லாக்கீஸ் நகரத்து அரசனான ஜாப்பியா என்பவனையும் எகிலோனின் அரசனான தாமீரென்பவனுக்கும் ஆளனுப்பி:

4. துணைசெய்து நம்மிடத்திலே வந்து சேருங்கள். கபயோன் நம்முடைய பக்கத்தை விட்டு ஜோசுவாவோடும் இஸ்றாயேல் புத்திரரோடுஞ் சேர்ந்தபடியால் அதைப் பிடிக்கப் போவோம் என்று சொல்லச் சொன்னான்.

5. அப்படியே எருசலேமின் இராசா, எபிரோனின் இராசா, ஜெரிமோட்டின் இராசா, லாக்கீஸின் இராசா, எகிலோனின் இராசாவாகிய அமோறையரின் ஐந்து இராசாக்களுங் கூடிக்கொண்டு அவர்களும் அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய்க் கபயோனின் சுற்றுப்புறத்தில் பாளயமிறங்கி அதனை முற்றிக்கைப் போட்டார்கள்.

6. அப்பொழுது முற்றிக்கை போடப்பட்ட கபயோனின் குடிகள் கல்கலாவிலிருக்கின்ற பாளையத்திற்கு ஜோசுவாவிடத்திற்கு ஆள் அனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல் சீக்கிரமாய் இவ்விடத்தில் வந்து எங்களுக்குத் துணை செய்து இரட்சிக்க வேண்டும். பர்வதங்களில் குடியிருக்கிற அமோறையரின் இராசாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.

7. உடனே ஜோசுவாவும் அவனோடு கூட மகா வீரசூரமுள்ள சகல யுத்த புருஷர்களும் கல்கலாவிலிருந்து புறப்பட்டார்கள்.

8. கர்த்தர் ஜோசுவாவை நோக்கி: நீ அவர்களுக்குப் பயப்படாதே. அவர்களை உன் கையில் காட்டிக் கொடுத்தோம். அவர்களில் ஒருவரும் உன் முன்பாக நிற்பதில்லை என்றருளினார்.

9. ஜோசுவா கல்கலாவிலிருந்து இராமுழுதும் நடந்து திடீரென்று அவர்கள் மேல் விழுந்தான்.

10. கர்த்தரோ அவர்களை இஸ்றாயேலியருக்கு முன்பாகக் கலங்கி மலங்கப் பண்ணினார். ஆகையால் (ஜோசுவா) அவர்களைக் கபயோனிலே முறிய அடித்துப் பெட்டொரோனுக்கு ஏறிப்போகிற வழியில் அவர்களைப் பின்சென்று அஜெக்காமட்டும் மசேதாமட்டும் துரத்திச் சங்காரம் பண்ணினான்.

11. இப்படி அவர்கள் இஸ்றாயேல் புத்திரருக்கு முன்பாகப் பெட்டோரொனினின்று இறங்கி ஓடிப் போகையில் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணி அவர்களை அஜெக்கா மட்டுந் துரத்தித் துன்பப் படுத்தினார். இஸ்றாயேல் புத்திரரின் பட்டயத்தால் குத்துண்டு விழுந்தவர்களைப் பார்க்கிலும் அந்தக் கல்மழையால் அடிபட்டுச் செத்தவர்கள் அதிகமானவர்களேயாம்.

12. இப்படி இஸ்றாயேல் புத்திரருடைய முகதாவிலே கர்த்தர் அமோறையரை ஒப்புக் கொடுத்த அந்நாளிலே ஜோசுவா அவர்களுக்கு முன்பாகத் தேவனைப் பார்த்து வேண்டிக் கொண்டு: சூரியனே, நீ கபயோனுக்கு முகமாய்ச் செல்லாதே. சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கு முகமாய்ப் போகாதே என்றான்.

13. எனவே, “நீதிமான்களென்னும்” ஆகமத்தில் எழுதப் பட்டிருக்கிறது போல சூரியனும் சந்திரனும் நிலைமாறாமல் இஸ்றாயேலியர் தங்கள் சத்துருக்களின் மேல் பழிவாங்கித் தீருமட்டும் நிலைநின்றன. இப்படி ஒரு தினப் பிரமாணமாகச் சாயத் தாமதித்துச் சூரியன் நடு வானத்திலே தங்கிக் கொண்டது.

14. இவ்விதமே கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்லுக்கடங்கி இஸ்றாயேலுக்காக யுத்தம் பண்ணினார். அந்நாளைப் போல அவ்வளவு நெடிய நாள் முன்னுமில்லை, பின்னுமில்லை.

15. பிறகு ஜோசுவா இஸ்றாயேலர் அனைவரையும் அழைத்துக் கல்கலாவிலுள்ள பாளயத்திற்குத் திரும்பினான்.

16. ஐந்து இராசாக்களோ அவர்கள் ஓட்டம் பிடித்து மசேதா நகரத்தில் இருந்த ஒரு கெபியில் ஒளித்துக் கொண்டார்கள்.

17. அவர்கள் ஐந்து பேரும் மசேதா ஊரிலுள்ள கெபியிலே ஒளித்திருந்து அகப்பட்டார்களென்று ஜோசுவா சமாச்சாரங் கேள்விப்பட்ட போது,

18. அவன் தன்கூட்டாளிகளை நோக்கி: நீங்கள் போய்ப் பெரிய கற்களைப் புரட்டி கெபியின் வாயிலே போட்டடைத்து இப்படிச் சிறைப்பட்டவர்களின் மேல் காவலாயிருக்கும்படி தகுந்த ஆட்களை வையுங்கள்.

19. வைத்து, நீங்கள் அங்கு தாமதிக்காமல் சத்துருக்களைத் துடர்ந்து துரத்துங்கள். அவர்களில் எவன் இழுப்பாணிகளாய்ப் பிற்பட்டு அகப்படுவார்களோ நீங்கள் அவர்களையயல்லாம் வெட்டுங்கள். அவர்களின் கோட்டைகளைக் கர்த்தர் உங்கள் கைவசமாக்கினார். அவைகளில் அவர்கள் நுழையாதபடிக்குத் தடுக்கக் கடவீர்கள் என்று ஆக்கியாபித்தான்.

20. ஆனதுபற்றி (இஸ்றாயேலின்) பகைஞர் அகோரமான அபஜெயப்பட்டுப் பெரும்பாலோர் வெட்டுண்டு விழுந்தார்கள். எல்லாருமே நிர்மூலமானாகர்களென்று சொன்னாலுஞ் சொல்லலாம். உள்ளபடி அவர்களில் வெகு சிலபேர் மாத்திரந் தப்பித்து அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

21. பின்பு சேனையயல்லாம் மசேதா ஸ்தலத்திலிருந்த பாளயத்திலே ஜோசுவாவினிடத்திற்குத் திரும்பி வந்தது. வீரர்களில் காயப்பட்டவர்களுமில்லை. உயிரை இழந்தவர்களுமில்லை ( என்று கண்டு) இஸ்றாயேல் புத்திரருக்கு விரோதமாய் வாயைத் திறந்து பேச ஒருவனுந் துணியவில்லை.

22. அப்பொழுது ஜோசுவா: கெபியின் வாயைத் திறந்து அதில் ஒளித்துக் கொண்ட ஐந்து இராசாக்களையும் என்னிடத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான்.

23. அவனுடைய தோழர் அப்படியே செய்து எருசலேமின் அரசனும், எபிரோனின் அரசனும், ஜெரிமோட்டின் அரசனும், லாக்கீஸின் அரசனும், எகிலோனின் அரசனும் ஆகிய அவ்வைந்து இராசாக்களைக் கெபியிலிருந்து அவனிடத்திற்குக் கொண்டு வந்தார்கள்.

24. அவர்கள் கொண்டுவரப்பட்ட போது ஜோசுவா இஸ்றாயேலின் புருஷர்களையயல்லாம் அçழ்பபித்துத் தன்னோடு கூட இருந்த சேனாதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டப் போய் இந்த இராசாக்களுடைய கழுத்துகளின் மேல் காலை çயுங்களென்றான். அவர்கள் அவ்விதமே போய்த் தரையில் விழுந்து கிடக்கிறவர்கள் கழுத்துக் களின் மேல் காலை வைத்து மிதிக்கத் தொடங்கினர்.

25. மறுபடியும் ஜோசுவா அவர்களை நோக்கி: உங்களுக்கு அச்சமும் பயமும் வேண்டாம். திடாரிக்கமாய்த் தைரியசாலிகளாயிருங்கள். நீங்கள் எவர்களோடு யுத்தம் பண்ண வேண்டுமோ கர்த்தர் அவர்களையயல்லாம் அப்படியே செய்வார் என்றான்.

26. அதற்குப் பிற்பாடு ஜோசுவா அவர்களைப் பட்டயத்தால் குத்திக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான். சாயுங்காலம் மட்டும் மரங்களிலே தொங்கினார்கள்.

27. சூரியன் அஸ்தமிக்கும் வேளையிலே ஜோசுவா மரங்களிலிருந்து உடல்களை இறக்கத் தன் தோழர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் முன் ஒளித்துக் கொண்டிருந்த அந்தக் கெபியிலே அவர்களைப் போட்டுப் பெருங் கற்களால் கெபியின் வாயை அடைத்தார்கள். அந்தப் பாறைகள் இந்நாள் வரைக்கும் அங்கிருக்கின்றது.

28. அன்றைய தினம் ஜோசுவா தன் வீரசூரத்தால் மசேதா பட்டணத்தைப் பிடித்து, அதின் அரசனையும், எல்லாக் குடிகளையும் பட்டயக் கருக்கினால் குத்தி வெட்டிக் கொன்று போட்டான். அதிலுள்ளவை எல்லாம் ஒன்றுந் தவறாமல் அழித்து விட்டான். முன் எரிக்கோவின் இராசாவுக்கு அவன் செய்தது போல் மசேதாவின் இராசாவுக்கு அவ்விதமே செய்தான்.

29. பிறகு மசேதாவிலிருந்து ஜோசுவா இஸ்றாயேலியர் அனைவரோடுங் கூட லெப்னாவுக்குப் புறப்பட்டு யுத்தம் பண்ண ஆரம்பித்தான்.

30. கர்த்தர் அதையும் அதின் அரசனையும் இஸ்றாயேலியர் கையில் காட்டிக் கொடுத்தார். இவர்கள் தங்கள் பராக்கிரமத்தினால் அதைப் பிடித்து அதிலிருந்த குடிகளையயல்லாம் வெட்டிக் கொன்று போட்டார்கள். ஊரை முழுதும் அழித்துவிட்டு எரிக்கோ இராசாவுக்கு எப்படிச் செய்திருந்தார்களோ, லெப்னா அரசனுக்கும் அப்படியே செய்தார்கள்.

31. லெப்னாவிலிருந்து ஜோசுவா இஸ்றாயேலியர் அனைவரோடுங் கூட லாக்கீசுக்குப் புறப்பட்டுப் போனான். பட்டணத்தைச் சூழச் சேனைக்குக் கட்டளையிட்டு முற்றுகை போட்டான்.

32. கர்த்தர் லாக்கீசை இஸ்றாயேலியர் கையில் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் இரண்டாம் நாளிலே யுத்தம் பண்ணி அதைப் பிடித்து லெப்னாவுக்குச் செய்தது போலக் குடிகளையும் சகல ஜீவன்களையும் பட்டயக் கருக்கினால் அழித்தார்கள்.

33. அக்காலத்திலே காஜேர் இராசாவாகிய கொராம் லாக்கீசுக்குத் துணை செய்ய வந்திருந்தான். ஜோசுவா அவனையும் அவன் சர்வ ஜனங்களையும், ஒருவனையும் மீதியாக வைக்காதபடிக்கு வெட்டிப் போட்டான்.

34. லாக்கீசிலிருந்து ஜோசுவா எகிலோனுக்குப் புறப்பட்டு அந்தப் பட்டணத்தை வளைத்தான்.

35. யுத்தம் பண்ணி அதை அன்றுதானே பிடித்து, லாக்கீசிலே செய்தது போல அதிலுள்ள சகல ஜீவன்களையும் பட்டயத்தால் வெட்டி அழித்தான்.

36. அதன் பின்பு ஜோசுவா எகிலோனிலிருந்து சமஸ்த இஸ்றாயேலியருடன் புறப்பட்டு ஏபிரோனுக்குப் போய் முற்றிக்கைப் போட்டான்.

37. அதையும் பிடித்து அதன் அரசனையும் அதற்கடுத்த சமஸ்த கோட்டைகளையும் அதில் குடியிருந்த சகல சீவன்களையும் ஒருவரையும் தப்பவிடாமல் பட்டயக் கருக்குக்கு இரையாக்கிக் கொன்று போட்டான். எகிலோனுக்குச் செய்தது போல ஏபிரோனுக்கும் செய்து அங்கு கண்ட எல்லா உயிர்களையும் சங்காரம் பண்ணினான்.

38. பிறகு (ஜோசுவா) தாபீருக்குத் திரும்பி வந்து,

39. கையில் பட்டயம் ஏந்திக் கொண்டு அதைப் பிடித்துக் காடாக்கி அதையும் அதன் அரசனையும் சுற்றிலுமிருந்த அரண்களையும் வசப்படுத்தி எல்லாச் சீவன்களையும் பட்டயத்துக் கிரையாகக் கொடுத்து ஊரை முழுவதுங் காடாக்கி விட்டான். ஏபிரோனுக்கும் லெப்னாவுக்கும் அதுகளின் இராசாக்களுக்கும் எவ்விதமாகச் செய்திருந்தானோ தாபீருக்கும் அதன் அரசனுக்கும் அவ்விதமே செய்தான்.

40. இப்படியே ஜோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென் தேசத்தையும் சமபூமியையும் அசெதோட்டையும் அதின் அரசர்களையும் அழித்துப் பாழாக்கினான். ஒருவனையும் தப்பவொட்டாமல் அவைகளில் இருந்த சுவாசமுள்ளவைகளையயல்லாம் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையின்படியே சங்காரம் பண்ணிவிட்டான்.

41. காதேஸ்பார்னே துவக்கிக் காஜா மட்டும் கபயோன் முதல் கோசன் தேசம் அனைத்தையும் (அழித்து),

42. அங்கிருந்த இராசாக்கள் அனைவரையும் இவர்களுக்குக் கீழ்ப்பட்டு நின்ற நாடுகளையும் ஜோசுவா ஒரே எடுப்பிலே பிடித்துப் பாழாக்கினான். ஏனென்றால் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் அவன் பாரிசத்தில் யுத்தம் பண்ணினார்.

43. பின்பு அவன் எல்லா இஸ்றாயேலியரோடுகூடக் கல்கலாவிலிருந்த பாளையத்திற்குத் திரும்பினான்.