அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 09

ஏகுவின் ஆட்சி.

1. அப்போது தீர்க்கத்தரிசியான எலிசே என்பவன் தீர்க்கத்தரிசிகளின் சீஷர்களிலே ஒருவனை அழைத்து: உன் இடையை வரிந்துக் கொண்டு, கையிலே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ராமோத் காலாத்துக்குப் போ;

2. அங்கு சென்றதும் நம்சி குமாரனான யேசபாத்தின் புத்திரனாகிய ஏகு வைக் காண்பாய். அவனை அணுக, அவன் சகோதரர் நடுவினின்று அவனைத் தனிமையாக வரும்படிச்செய்து, அவ னோடுகூட ஒரு அறைக்குள் போவாய்.

3. பின்பு இந்த எண்ணெயின் கிண் ணத்தை எடுத்து, அவனை நோக்கிக் கர்த்தர் சொல்லுகிற வாக்கியத்தைக் கேள்: “உன்னை இஸ்றாயேல் அரசனாக அபிஷேகஞ் செய்தோம்” என்று சொல்லி அவன் சிரசின்மேல் (எண்ணெயை) ஊற் றுவாய். ஊற்றினவுடனே கதவைத் திறந்து அரைக்கணமும் நில்லாது ஓடிப் போவாய் என்றான்.

4. ஆதலின் தீர்க்கத்தரிசியின் தொண் டனான வாலிபன் ராமோத் கலாத்துக்கு உடனே புறப்பட்டு,

5. சேனாதிபதிகள் முதலியோர் இருந்தவிடத்திற்குச் சென்று, ஏகுவைப் பார்த்து: ஐயா பிரபுவே! உம்மிடத்தில் ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்றான். அதற்கு ஏகு: எங்களில் யாரிடத்தில் பேசவேண்டும் எனக் கேட்க, அவன்: பிரபுவே! உம்மிடத்தில் தான் என விடை தந்தனன்.

6. ஏகு எழுந்து ஓரறைக்குள் நுழைந் தான். வாலிபனோ அவன் சிரசின்மீது தைலத்தை ஊற்றி, இஸ்றாயேல் தேவ னான ஆண்டவர் சொல்லுகிறது: நீ ஆண் டவரின் பிரசையாகிய இஸ்றாயேலுக்கு அரசனாக உன்னை அபிஷேகஞ் செய்தோம்.

7. உன் ஆண்டவனாகிய ஆக்காபின் வீட்டாரை அதம்பண்ணுவாயாக; இங்ங னம் எசாபேல் என்பவளின் (கொடிய) கரத்தால் சிந்தப்பட்ட தீர்க்கத்தரிசி களுடைய இரத்தத்திற்கும், கர்த்தரின் எல்லா ஊழியர்களுடைய இரத்தத் திற்கும் நாம் பழிவாங்குவோம்.

8. ஆக்காபு குலத்தவரை நாசஞ் செய் வோம்; ஆக்காபின் குலத்தவரை நாசஞ் செய்வோம்; ஆக்காபின் வீட்டிலுள்ள சிறு பிள்ளைகள் துடங்கி இன்னும் பிற வாத சிசுவும் இஸ்றாயேலில் கடைசி யானவர்கள் பரியந்தம் (எல்லோரையும்) அழித்துப் போடுவோம்.

9. இந்த ஆக்காபு குடும்பத்தை நாபாத் குமாரனான எரோபோவாமின் வீட்டைப் போலும், ஐயா புத்திரனான பாஹாசா வீட்டைப் போலும் நாசம் பண்ணுவோம்.

10.  எசாபேல் (சடலத்தை) ஜெஸ்ரா யேல், வயலிலே நாய்கள் தின்னும்; அதைச் சேமிக்க ஒருவரும் இருக்கமாட் டார்கள் எனச் சொல்லி (வாலிபன்) கத வைத் திறந்து ஓட்டம் பிடித்தான்.

11. புதிய (அரசனான) ஏகு தன் எசமா னின் உத்தியோகஸ்தர் கூடியிருந்த விடத் திற் பிரவேசம் பண்ணினான். அவர்கள் அவனைப் பார்த்து: நல்ல செய்தி தானோ? அந்தப் பித்துக்குள்ளி உம் மிடம் என்னத்தைச் சொல்ல வந்தான் என்றார்கள். அதற்கவன்: அந்த மனிதன் இன்னானென்றும், அவன் இன்ன சங்கதி சொன்னானென்றும் உங்களுக்குத் தெரி யுமன்றோ? என்றான்.

12. அவர்கள் அதற்கு: பரிச்சேதம் எங் களுக்கு ஒன்றுந் தெரியாது; நீரே தெரியச் சொல்லுமே என்றார்கள். அப்போது ஏகு அவர்களை நோக்கி: (அவன்) பற்பல விசே ஷங்களை எனக்குச் சொன்னபின்பு, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளென்று சொல்லி: இஸ்றாயேலின்மீது உன்னை அரசனாக அபிஷேகஞ் செய் தோம் என்கிறார் எனச் செப்பினான்.

13. அவர்கள் இதைக் கேட்டவுடனே ஆரவாரித்தெழுந்து, ஒவ்வொருவருந் தம் போர்வைகளைக் களைந்து ஏகுவின் பாதத்தின்கீழ் பரப்பி வைத்து ஓர்வித சிம்மாசனம் ஏற்படுத்தி, எக்காளம் ஊதி: ஏகு என்பவரே எங்கள் அரசர் என ஆர வாரஞ் செய்தார்கள்.

14. நம்சி யோசபாத் குமாரன் ஏகு, ழோராம் என்போனுக்கு விரோதமாக இரகசிய ஆலோசனை பண்ணத் துடங்கி னான். (அக்காலத்தில்) ழோராம், சீரியா அரசனான அசாயேலுக்கு விரோதமாக இஸ்றாயேல் எல்லாச் சேனைகளோடு கலாத்திலுள்ள இராமோத் பட்டணத்தை முற்றிக்கையிட்டிருந்தான்.

15. இப்படி சீரியா அரசனான அசா யேலுக்கு விரோதமாகச் சமர் செய்கை யில் ழோராம் சீரியரால் காயப்படுத்தப் பட்டு ஜெஸ்றாயேலில் தன்னைச் சொஸ் தப்படுத்திக்கொள்ள வந்திருந்தான். ஏகு தன் கட்சியிலிருந்தவர்களைப் பார்த்து: பட்டணத்திலிருந்து யாராவது வெளியே போனால் ஜெஸ்றாயேலுக்குப் போய் சமாச்சாரஞ் சொல்லுவார்களே. அப்படி நடவாதபடிக்கு நீங்கள் கட்டளை கொடுத்து ஊரிலிருந்து எவரும் வெளியே போவதற்கு உத்தரவில்லை என்று ஆக்கி யாபித்துக்கொள்ளுங்கள் என்று மன்றாடி னான்.

16. அவனோ பால் மாறாமல் புறப் பட்டு ழோராம் வியாதியாய்க் கிடந்த ஜெஸ்றாயேலை நாடி நடந்தான்.

17. ஜெஸ்றாயேல் கோபுரத்தின்மேல் நின்றிருந்த வேவுக்காரன் தன் மனித ரோடு ஏகு வருகிறதைக் கண்ட: அதோ யாரோ ஜனக்கூட்டந் தென்படுகிறது என்றான். அதற்கு ழோராம்: அவர் களுக்கு எதிராக ஒருவன் நம் இரதத்தில் ஏறிப்போய் வருகிறவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானமாய் வருகிறீர்களோ? வெனக் கேட்கச் சொன்னான்.

18. அவ்விதமே ஒருவன் வாகனமேறி ஏகுக்கு எதிர்கொண்டுபோய்: சமாதான மாய் வருகிறீர்களோ என அரசர் கேட்கச் சொன்னார் என்றான். அதற்கு ஏகு சமா தானத்திற்கும் உனக்கும் என்ன உறவு? நீ முன்னில்லாது கடந்து என்பின் வரக் கடவாய் என்றான். அந்நேரத்தில் காவற் காரன்: அதோ அவர்களுக்கு எதிரே போனவன் திரும்பவில்லை என (அரச னுக்கு அறிவித்தான்.

19. ழோராம் என்போன் குதிரைகள் பூட்டிய வேறொரு இரதத்தில் மற்றொரு வனை அனுப்ப, அவன் அவர்கள் முன் பாக வந்து சமாதானந்தானோ? என அரசர் கேட்கிறார் என்றான். அதற்கு ஏகு: சமாதானத்துக்கும் உனக்கும் என்ன? நீ முன்னில்லாத என் பின் வரக்கடவை என்றான்.

20. காவற்காரன்: இரண்டாவது இரத வீரன் அவர்களிடம் போனான்; ஆனால் திரும்பவேயில்லை. வருகிறவனோ நமசி குமாரனான ஏகு என்பவனாகவேண்டும்; அவனைப் போல வெகு துரிதமாக வரு கின்றான் என்றனன்.

21. (அப்போது) ழோராம்: என் இரதத் திற்குக் குதிரைகளைப் பூட்டுங்கள் என்றான். அசுவங்கள் பூட்டப்படவே, இஸ்றாயேல் அரசனான ழோராமும், யூதா அரசன் ஒக்கோசியாசும் தந்தம் இரதத்திலேறி புறப்பட்டு ஏகுக்கு எதிராக நடந்து ஜெஸ்றாயேல் ஊரானான நாபோத்தின் வயலில் அவனைச் சந்தித் தார்கள்.

22. ழோராம் ஏகுவைக் கண்டு: ஏகுவே! உமது வருதல் சமாதானந் தானா? எனக்கேட்டான். அதற்கவன் உமது தாயான எசாபேல் என்பவளது வேசித்தனமும், மாயாவித்தையும் இவ்வளவு பிரபலியமாகவிருக்கச் சமா தானமிருக்கக் கூடுமா? என மாறுத்தாரந் தந்தான்.

23. ழோராம் உடனே லாகானைத் திருப்பி ஓட்டம் பிடித்து ஒக்கோசியாசை நோக்கி: ஒக்கோசியாசே! சதிமோசம் வரப் போகிறதே என்றனன்.

24. அந்நேரத்தில் ஏகு கையிலே வில்லை வளைத்து ழோராம் தோட்கள் நடுவே (அஸ்திரத்தை விட்டான்; அஸ்திர மானது இருதயத்தை ஊடுருவ ழோராம் இரதத்திலிருந்து விழுந்து செத்தான்.

25. ஏகு படைத்தலைவனான பதாசர் என்பவனைப் பார்த்து: அவனை எடுத்து ஜெஸ்ராயேல் ஊரானான நாபோத்தின் வயலில் எறிந்துவிடு; ஏனெனில் நாங்கள் இவன் தகப்பனான ஆக்காபோடுகூட நீயும் நானும் இருக்கும் நாளில் நாங்கள் இருவரும் ஒரே இரதத்தில் இருக்கும் போது, ஆண்டவர் அவனைக் குறித்து பின்வருமாறு தீர்ப்புச் சொல்லி,

26. நேற்று நமது பார்வைக்கு முன்னே நீ சிந்தின நாபாத்துடைய இரத்தத்திற் கும் அவனுடைய பிள்ளைகளது இரத் தத்திற்கும் நாம் அதே வயலில் பழிவாங் காமல் போவோமோ என்றருளினா ரன்றோ? ஆதலால் இப்போது கர்த்த ருடைய வாக்கியத்தின் பிரகாரம், நீ அவனை எடுத்து வயலில் எறியக்கடவா யென்றான்.

27. யூதா அரசனான ஒக்கோசியாஸ் இதைக் கண்டு நந்தவனத்து வீட்டு வழி யாக ஓட்டம் பிடிக்க, ஏகு அவனைப் பின் துடர்ந்து தன் ஜனங்களைப் பார்த்து: இவ னையும் அவன் இரதத்திலேயே கொல்லுங்கள் என்றான். அவர்களும் எபிளாஹாம் அருகாமையில் கவேருக்கு ஏறிப்போகும் இடத்திலே அவனை ஒரு வெட்டு வெட்டினார்கள்; அவனோ மகேதோ வரையில் ஓடி அங்கு இறந்து போனான்.

28. அப்போது அவனுடைய ஊழியர் கள் அவனைத் தூக்கி அவன் இரதத்தில் வைத்து எருசலேமுக்குக் கொண்டுபோய் தாவீது பட்டணத்திலே அவனை அவ னுடைய பிதாக்களோடு அடக்கம் பண்ணினார்கள்.

29. ஆக்காபின் குமாரனான ழோராம் என்போனின் இராஜரீகத்துப் பதினோ ராம் வருஷத்திலே ஒக்கோசியாஸ் யூதா வின்மேல் அரசாண்டான். 

30. பின் ஏகு ஜெஸ்றாயேலில் வந்து சேர்ந்தான். அப்போது எசாபேல் என்ப வள் அவன் வந்த செய்தியை அறிந்து தன் கண்களுக்கு மையிட்டு, தலையை அலங்கரித்துச் சாளரத்தின் வழியாக எட்டிப்பார்த்து,

31. ஏகு பட்டணவாயில் வழியாக வருகிறதைக் கண்டு: தன் எசமானனைக் கொன்ற இந்த (புதுச்) சும்பிரியிருக்க யாராவது சமாதானத்திற்கும் எதிர்நோக் கக் கூடுமானதா? என்றாள்.

32. ஏகு தலைநிமிர்ந்து சன்னலை ஏறெடுத்துப் பார்த்து: ஆர் அங்கே? எனக் கேட்டான். இரண்டு மூன்று அண்ணகர் தங்களைக் காண்பித்து அவனை வணங்கினார்கள்.

33. ஏகு அவர்களை நோக்கி: அவ ளைப் (பிடித்து) கிழே தள்ளிப் போடுங் கள் என்றான்; (உடனே) அவர்கள் (சன்னல் வழியாக) அவளைப் பிடித்து எறிந்தார்கள். மதில் சுவரானது அவள் இரத்தத்தால் நனைந்தது; அன்றியும் அவள் குதிரைகள் கால்களினாலே மிதிக் கப்பட்டனள்.

34. ஏகு போஜனஞ் செய்யவுங் குடிக் கவும் (அரண்மனைக்குள் நுழைந்தபின் தன்னோடிருந்தவர்களைப் பார்த்து:) நீங்கள் போய் அந்த நிர்ப்பாக்கிய ஸ்திரீ யைப் பார்த்து அவளை அடக்கம்பண் ணுங்கள்; ஏனென்றால் அவள் ஒரு இராசாவின் புத்திரியென்று அனுப்பி னான்.

35. அவர்கள் அவளை அடக்கம் பண்ணப் போய்ப் பார்த்தபோதோ அவளுடைய தலையும், இரு கால்களும், கைகளின் பாதியு மாத்திரம் அங்கிருக் கிறது கண்டு,

36. திரும்பி ஏகு என்பவனுக்குச் சங் கதியைத் தெரிவிக்க வந்தார்கள். அதைக் கேட்டு அவன்: கர்த்தர் தமது தாசனாகிய தெஸ்பித்தனான எலியாசின் மூலியமாய்: எசாபேலுடைய மாமிசங்களை நாய்கள் ஜெஸ்ராயேல் வயலிலே தின்னும்; அவ ளுடைய செத்த பிரேதம் ஜெஸ்ராயேல் நிலத்தின்மீது எருவாகும். அதைக் கண்ட யாவரும்: அந்த எசாபேல் என்பவள் இம்மாத்திரந்தானோ என்பார்கள் என்று முன்னாடியே சொல்லியிருந்தாரன்றோ என்றான்.