சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 09

ஆண்டவரின் வருகை.

1. ஆதிராக் தேசத்துக்கு விரோதமாயும், அதன் நம்பிக்கை ஸ்தானமாகிய தமாஸ்கசுக்கு விரோதமாயும் (எனக்கு உண்டான) ஆண்டவரின் நிற்பந்தக் காட்சியானது: ஏனெனில் ஆண்டவருக்கு (யூத) மாந்தர் மீதும், இஸ்றாயேல் சமஸ்த கோத்திரங்கண்மீதும் (மிகு கவலைக்) கண் உண்டாயிற்று.

2. எமாத்தும், தீரம், சிதோனும் அதின் வரம்புக்குட்பட்டதாகும் (இவை களுக்கு நிற்பந்தம் நேரிடும்;) ஏனெனில், அவைகள் தம் ஞானத்தை மிதமின்றி பாராட்டிக் கொண்டன.

3. தீர்நகர் தனக்கு அலங்கஞ் சமைத் துக்கொண்டு, வெள்ளியைப் புழுதியெனவும், பொன்னைத் தெருக்கட் சேறெனவும் (அவ்வளவு ஏராளமாய்ச்) சேகரித்துக் கொண்டது.

4. ஆனால் ஆண்டவர் அதனைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின்மீது அதுக் குண்டாய வல்லபத்தைச் சிதைத்துவிடு வர்; அதுவுந் தீக்கிரையாகும்.

5. அஸ்காலோன் (தன் வீழ்ச்சியைப்) பார்த்துப் பயப்பிராந்தி கொள்ளும்; காசாவும், ஆறாத் துயர் கொள்ளும்; அக்காரோனோ தன் நம்பிக்கை (எல்லாம்) மங்கிப் போனதைக் குறித்துத் (துக்கித்து நிற்கும்;) காசாவினின்று அரசன் ஒழிந்து போவன்; அஸ்காலோன் குடிகளின்றி யிருக்கும்.

6. ஆசோத்தில் ஓர் அந்நியன் ஆசனங் கொள்வன்; பிலிஸ்தியரின் அகங்காரத்தை அழித்தேவிடுவோம்.

7. அதின் வாயினின்று (பர தேவ பலியின்) குருதியை அகற்றுவோம்; அதின் பற்களின் நடுவினின்று அரோசிக (மாமிசத்தைப்) பிடுங்கிவிடுவோம்; அப்போதுதான் அதுவும் ஆண்டவருக் குச் சுவாதீனப்படும்; யூதாவில் பிரபுவைப் போல் இருக்கும்; அக்கா ரோன் எபூசேயனைப் போல் (எருசலேம் வாசி)யாகும்.

* 7-ம் வசனம். விக்கிரக ஆராதனையைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

8. நாற்புறமுஞ் சுற்றிச் சேவகஞ் செய்வோரால் நமது ஆலயத்தைச் சூழச் செய்வோம்; (நமது பிரசையாகிய) அவர்களிடம் இனி வரியிறைக் கேட்பான் குறுக்கே வரான், ஏனெனில், இப்போது பிரசையைக் (கிருபைக்) கண் களால் பார்க்கின்றோம்.

* 8-ம் வசனம். சேவகஞ் செய்வோரால்--மக்காபேயர் 13, அப்போஸ்தலர்களைக் குறிப்பிடுகிறது.

9. சீயோன் மாதே! மிகு களிகூர்வையாக; எருசலேம் மாதே! அகமகிழ்வையாக, நீதிமானும் இரட்சகனுமான உன் அரசன் உன்னிடம் இதோ வருகின்றனர்; அவர் எளியராய்ப் பெட்டைக் கழுதை மீதும், கழுதைக்குட்டி மீதும் ஆரோகணராய் (வருகின்றனர்.)

10. (அவர் நாளில் போர்) இரதங்களையும், எருசலேமின் அசுவங்களையும் அழித்துவிடுவோம்; சமர் (ஆயுதங்களாகிய) கோதண்டங்கள் முறிக்கப்படுவன; சாதி சனங்களுக்கு அவர் சமாதானத்தைப் போதிப்பர்; அவர் வல்லபமோ ஒரு சமுத்திரந் தொட்டு மறு சமுத்திரம் வரையிலும், (யோர்தான்) நதி தொடக்கமாய் உலகக் கடைக்கோடி வரைக்கும் (விரியுமாமே.)

11. (கிறீஸ்துவே!) நீர்தான் உமது குருதி தோய்ந்த உடன்படிக்கையால் உமது சிறைகளை நீரில்லாத் தடாகப் (பாதாளத்தினின்று) மீட்டருளியது.

* 11-ம் வசனம். காட்சி. 16:12; இசா. 11:15.

12. “நம்பிக்கையுடைய சிறைகாள்! அரணுக்குத் திரும்பி வாருங்கள் மிகுந்த (நன்மைகளை) உங்களுக்கு அருள்வோமென” இன்று கூறாநின்றனர்.

13. ஏனெனில், யூதாவைக் கோதண்ட மென நாணேற்றினம்; எப்பிராயீமை (அம்பறாத்தூணியென) நிரப்பினம்; சீயோனே! உன் மக்களை (ஏவி,) கிரேசியா! உன் புத்திரர்மீது விடுவோம்; (சீயோனே!) வீரசூரர் வாளென உன்னை நாட்டுவோம்.

14. (ஆம்) தேவனாகிய ஆண்டவர் அவர்கள்மீது தோன்றுவர்; இடியெனத் தம் அஸ்திரபாணங்களை விடுவர்; தேவ னாகிய ஆண்டவர் எக்காளமூதி, தென் திசைய சூறாவளி நடுவில் (பின் உதவி யாய்) நடப்பர்.

15. சேனைகளின் ஆண்டவர் அவர் கட்கு உதவி நிற்க, அவர்கள் (சத்துருக் களை) விழுங்குவர்; கவண் கற்களால் (அவர்களைக்) கீழ்ப்படுத்துவர்; (அவர் கள் குருதியைப் பருக) இரசத்தாலாயது போல் வெறித்துப்போவர்; (பலிப்) பாத் திரங்கள்போலும், பீடக் கொம்புகள் போலும் (குருதி வழிய) பூரித்து நிற்பர்.

16. அந்நாளில் அவர்கள் தேவ னாகிய ஆண்டவர் (ஆயனைப்போல்) அவர்களைத் தம் பிரசையாகிய மந்தை யெனத் தாபரிப்பர்; அவர் நாட்டில் அவர்கள் அர்ச்சிக்கப்பெற்ற கற்களாக நாட்டப்படுவார்கள்.

17. பலமுடையராயாக்குங் கோதுமையும், கன்னியரை முளைப்பிக்கும் முந்திரிகை இரசமுமல்லாது, அவரிடத்து நல்லதும் மனோகரமுமுடையது வேறுமுளதோ?

* 17-ம் வசனம். தேவ நற்கருணையைக் குறிப்பிடுகிறது.