அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 08

தாவீதின் வெற்றிகள்.

1.  இதற்குப் பிற்பாடு சம்பவித்ததே தென்றால்: தாவீது பிலிஸ்தியரை முறிய அடித்து அவர்களைக் கீழ்ப்படுத்தினதால் இஸ்றாயேல் அவர்களுக்குக் கப்பங் கட்டும் கடமை ஒழிந்தது.

2. அவன் மோவாபியரையுந் தோற் கடித்து நூல் கொண்டுவந்து அவர்களைத் தரையிலே சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கச் சொல்லி அவர்கள்மேல் நூல் போட்டு அளந்தான்; அளந்திடப்பட்ட வர்களில் ஒரு பங்கு மனுஷரைக் கொன்று போட்டான்; மற்ற பங்கு மனு ஷரை உயிரோடு வைத்தான்.  (அந்நாள் முதல் மோவாபியர் தாவீதுக்குக் கீழ்ப்பட் டுக் கப்பங் கட்டுகிறவர்களானார்கள்.

3. மறுபடியுந் தாவீது யூப்பிராத் நதியண்டையிலுள்ள தேசத்தைத் தன் வசமாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போகையில் அவன் ரொகோபின் குமார னாகிய ஆகாரேஜேர் என்னுஞ் சோபாலின் அரசனைத் தோற்கடித்தான்.

4. தாவீது அவனுடைய சேனையில் ஆயிரத்து எழுநூறு குதிரை வீரரையும், இருபதினாயிரங் காலாட்களையும் பிடித்து, இரதங்களிலே நூறு இரதங் களை இழுக்கத்தக்க குதிரைகளைத்தவிர, மற்றுமுள்ள குதிரைகளின் பின்னங்கால் நரம்புகளை அறுக்கச் செய்தான்.

5. அன்றியுந் தமாஸ்கு பட்டணத் தாராகிய சீரியர் சோபாவின் அரசனாகிய ஆதரேஜேருக்கு உதவி செய்ய வந்தார் கள்; அவர்களில் இருபத்தீராயிரம் பேர் கள் தாவீதால் வெட்டப்பட்டார்கள்.

6. அப்போது சீரியாவின் தமாஸ்கு பட்டணத்தில் தாவீது தானையங்களை வைத்தான்.  சீரியர் தாவீதுக்குக் கீழ்ப்பட வும் அவனுக்குக் கப்பங் கட்டவும் வேண் டியவரானார்கள்.  தாவீது போன இடத் திலெல்லாங் கர்த்தர் அவனைக் காப்பாற் றினார்.

7. ஆதரேஜேருடைக இராணுவத் தாருடைய பொன் அத்திரசத்திரங் களைத் தாவீதெடுத்து அவைகளை எருச லேமுக்குக் கொண்டுவந்தான்.

8. ஆதரேஜேருடைய பட்டணங் களாகிய பேத்தேயிலிருந்தும், பெரோட் டிலிருந்தும் தாவீதரசன் மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

9. அப்பொழுது ஏமாத் அரசனான தோவு என்பவன் ஆதரேஜேருடைய சேனைகளை எல்லாந் தாவீது முறிய வடித்தானென்று கேள்விப்பட்டான்.

10. அவன் ஆதரேஜேரின் மேலே பகை வைத்திருந்தானாதலால் தாவீது அவனோடு யுத்தம் பண்ணி அவனைத் தோற்கடித்த முகாந்தரமாய் தோவு அவனுக்கு உபசாரம் பண்ணவும், வாழ்த் துதல் சொல்லவும், நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்தவுந் தன் குமார னாகிய யோராமைத் தாவீது இராசா வினிடத்தில் அனுப்பினான்;  யோராம் தன் கையிலே பொன், வெள்ளி வெண்கலப் பாத்திரங்களைக் கொண்டு வந்தான்.

11-12.  தாவீது இந்தப் பாத்திரங்களை வாங்கி, முன்னே தான் அடித்துக் கொள் ளையாடின சீரியர், மோவாபியர், அம் மோனியர், பிலிஸ்தியர், அமலேக்கியர் முதலான சாதியாரிடத்திலும் இராகோப் குமாரனாகிய ஆதரேஜேர் என்னுஞ் சோபாவின் அரசனிடத்திலும் பெற்றுக் கொண்டிருந்த வெள்ளி, பொன் தட்டு முட்டுக்களையுங் கர்த்தருக்கு நியமித் ததுபோல் இவைகளையுங் கர்த்தருக்குப் பிரதிஷ்டைப் பண்ணினான்.

13. தாவீது மறுபடியுங் கீர்த்திபெற் றான்; உள்ளபடி அவன் சீரியர்களின் தேசத்தை வசப்படுத்தி உப்புப் பள்ளத் தாக்கிலே திரும்பின போது பதினெண் ணாயிரம் பேர்களை வெட்டிப் போட் டான்.

14. அதுவுமல்லாமல் தாவீது ஏதோந் தேசமெங்குங் காவலர்களையும், தானை யங்களையும் வைத்தபடியால் ஏதோப் பியர் எல்லோருந் தாவீதைச் சேவிக்கத் துடங்கினர்.  தாவீது போன எல்லாவிடத் திலுங் கர்த்தராலே காப்பாற்றப்பட் டான்.

15. அவ்விதமே தாவீது இஸ்றாயேல் அனைத்தின்மேல் இராஜரீகம் பண்ணித் தன் எல்லா ஜனங்களுக்கும் நியாயமும் நீதியுஞ் செலுத்தி வந்தான்.

16. சார்வியாளின் குமாரனாகிய யோவாப் சேனாதிபதியாயிருந்தான். அகிலூத் குமாரனான ஜோஸப்பாத் தஸ்தாவேசு முதலிய தஸ்திரங்களைக் காப்பாற்றும் உத்தியோகத்திலிருந்    தான்.

17. அக்கித்தோபின் குமாரன் சாதோக் என்பவனும், அபியத்தா ருடைய குமாரன் அக்கிமெலேக் என்பவ னும் ஆசாரியராகவும், சராயீயாஸ் என்பவன் சம்பிரதியாகவும் இருந்தார் கள்.

18. யோயியதாவின் குமாரன் பனா யாஸோ கெரேத்தியருக்கும், பெலேத் தியருக்குந் தலைவனாயிருந்தான். தாவீ தின் குமாரரோ பிரதானிகளாயிருந் தார்கள்.