சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 08

சகலரோடும் நடந்துகொள்ளவேண்டிய விதத்தைப் பற்றியது.

1.  பலவானின் கரங்களில் நீ விழாதபடி, அவனோடு போராடாதே.

2. ஆஸ்திக்காரன் உனக்கு எதிராக வழக்குத் தொடுக்காதபடி, அவனோடு போட்டியிடாதே.

3. ஏனெனில் பொன்னும் வெள்ளியும் அனேகரை அழித்துவிட்டன; அவை அரசர்களின் இருதயங்களைக் கூட சென்றடைந்து அவர்களைக் கெடுத்தன.

4. வாயாடியான மனிதனோடு வழக்காடாதே; அவனுடைய நெருப்பின்மீது விறகைக் குவிக்காதே.

5. அறிவீனன் உன் கோத்திரத்தை இழிவாய்ப் பேசாதபடிக்கு அவனோடு பழகாதே.

6. பாவத்திலிருந்து மனந்திரும்பு கிற மனிதனை நிந்தியாதே; அவனு டைய பாவத்தைப் பற்றி அவனைக் கண்டியாதே. ஏனெனில், நாம் எல்லோ ருமே கண்டிக்கப்படத் தகுதியான வர்களென்று நினைத்துக்கொள்.

7. ஒரு மனிதனை அவனுடைய முதிர் வயதில் புறக்கணிக்காதே; ஏனெனில் நாமும் முதியவர்கள் ஆவோம்.

8. நாம் எல்லோரும் மரிப்போம் என்றும், நமது சாவைப் பற்றிப் பிறர் அக்களிப்பதை நாம் விரும்ப மாட்டோம் என்றும் அறிந்து, உன் பகையாளியின் மரணத்தைப்பற்றி அக்களிப்புக் கொள்ளாதிரு; 

9. பெரியோரான ஞானிகள் சொல்லும் காரியங்களை அசட்டை பண்ணாதே; அவர்கள் நீதிமொழி களின்படி நடந்துகொள்.

10. ஏனெனில், அவர்களிடமிருந்து ஞானத்தையும், புத்திபோதகத்தையும், பெரியோர் குறைசொல்லாத அளவில் அவர்களுக்கு ஊழியம் செய்யும் விதத்தையும் நீ கற்றுக் கொள்வாய்.

11. பெரியோர் சொல் உன்னிட மிருந்து தப்பிவிடாதபடி பார்த்துக் கொள், ஏனெனில் அவர்கள் அவைகளைத் தங்கள் பிதாக்களிடம் கற்றறிந்தார்கள்.

12. ஏனெனில் அவர்களிடம் புத்தியையும், தேவைப்படும் நேரத்தில் பதில் கொடுக்கும் விதத்தையும் நீ கற்றுக்கொள்வாய்.

13. பாவிகளின் பாவங்களின் தீச்சுவாலையால் நீ சுட்டெரிக்கப் படாதபடி, அவர்களைக் கடிந்து கொள்வதன் மூலம், அவர்களுடைய அடுப்புத் தணலை மூட்டாதே.

14. வார்த்தைகளால் காயப்படுத்து கிற மனிதன் ஓர் ஒற்றனைப் போல உன் வார்த்தைகளில் உன்னைச் சிக்க வைக்காதபடி, அவன் முகத்தே எதிர்த்து நிற்காதே; 

15. உன்னிலும் பலவானுக்குக் கடன்கொடாதே; கொடுத்தால், அது தொலைந்துபோனதென்று எண்ணிக்கொள்.

16. உன் சக்திக்கு மிஞ்சி உத்திர வாதம் தராதே; உத்திரவாதியானாலோ நீயே திருப்பிச் செலுத்த வேண்டு மென்று எண்ணிக்கொள்.

17. நியாயாதிபதிக்கு விரோதமாகத் தீர்ப்பிடாதே; ஏனெனில், அவன் நீதியின்படி தீர்ப்பிடுகிறான்.

18. அசட்டுத் துணிச்சல் உள்ளவன் தன் தீமைகளை உன் மீது சுமத்தி விடாதபடி, அவனோடு சேர்ந்து போகாதே; ஏனெனில் அவன் தன் சொந்த சித்தப்படி போகிறான். அவனுடைய மூடத்தனத்தோடு நீயும் சேர்ந்து மடிந்துபோவாய். 

19. கோபமுள்ள மனிதனோடு சண்டையிடாதே; துடுக்கானவனோடு தனியிடம் போகாதே; ஏனெனில் அவன் பார்வையில் இரத்தம் ஒன்று மில்லை. உன்னால் உதவியில்லாத இடத்தில் அவன் உன்னைத் துரத்தி விடுவான்.

20. மூடருக்கு அறிவுரை கூறாதே. ஏனெனில் தங்களுக்குப் பிரியமானவை தவிர, வேறு எதையும் அவர்களால் நேசிக்க முடியாது.

21. அன்னியனுக்கு முன்பாக ஆலோசனை தரும் காரியம் எதையும் செய்யாதே; ஏனெனில், பிறகு அவனிடமிருந்து வருவதென்ன என்று உனக்குத் தெரியாது.

22. எவனும் தீமையானதை உனக்குத் திருப்பிச் செலுத்தாதபடியும், உன்னைக் கண்டித்துப் பேசாதபடியும், ஒவ்வொரு மனிதனுக்கும் உன் இருதயத்தைத் திறக்காதே.