அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 08

தேவாலயத்தின் அபிஷேகம்

1. அப்பொழுது கடவுளுடைய உடன்படிக்கைப் பெட்டகத்தைச் சியோனென்னுந் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி இஸ்றாயேலின் மூப்பரும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்றாயேலின் மூப்பரும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்றாயேலிலுள்ள பிதாக்களின் தலைவர்கள் அனைவரும், எருசலேமில் இராசாவாகிய சலொமோனைக் காண வந்தார்கள்.

2. இஸ்றாயேல் மனுஷரெல்லாம் ஏழாம் மாதமாகிய எத்தானீம் மாதத்துப் பண்டிகையிலே இராசாவாகிய சலொ மோனிடத்தில் கூடி வந்தார்கள்.

3. இஸ்றாயேலின் மூப்பர் அனைவ ரும் வந்தவுடன் ஆசாரியர் கர்த்தருடைய பெட்டகத்தை எடுத்து,

4. கர்த்தருடைய பெட்டகத்தை யும், வாக்குத்தத்தத்தின் பேழையையுந் திரு ஸ்தலத்தின் பரிசுத்த எத்தனங்       கள் அனைத்தையுஞ் சுமந்துகொண்டு போனார்கள்; ஆசாரியரும் லேவியரும் அவைகளைச் சுமந்தார்கள்.

5. இராசாவாகிய சலொமோனும் அவரோடு கூடிய இஸ்றாயேல் சனம் அனைத்தும் பெட்டகத்துக்கு முன்பாக நடந்து செலவுக்கஞ்சாமல் கணக்கில்லாத திரளான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள்.

6. அப்படியே ஆசாரியர்கள் கடவு ளுடைய உடன்படிக்கைப் பெட்ட கத்தை ஆலயத்தின சந்நிதி ஸ்தானமாகிய மகா பரிசுத்த ஸ்தானத்திலே கெருபீன்கள்  சம்மனசுக்களுடைய இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தார்கள்.

7. அந்தக் கெருபீன்கள் பெட்டக மிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, உயரவிருந்து பெட்டகத்தையும், அதன் தண்டுகளை யும் மூடிக் கொண்டிருந்தன.

8. சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்க தண்டுகள் இனி வெளியே காணப்பட வில்லை, அவைகள் இந்நாள் வரைக்கும் அங்கேதானிருக்கின்றன.

9. இஸ்றாயேல் புத்திரர் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்டபின் கடவுள் அவர்களோடு உடன்படிக்கைப் பண் ணினபோது மோயீஸ் ஓரேபிலே அந்தப் பெட்டகத்தில் வைத்த இரண்டு கற் பல கைகளேயல்லாமல் அதிலே வேறொன்று மிருந்ததில்லை.

10. ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தி லிருந்து புறப்படவே, (ஒருவித) மேகமா னது கடவுளுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

11. அம்மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ் செய்கிறதற்கு நிற்கக்கூடா மற் போயிற்று.  கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

12. அப்பொழுது சலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவோமென்று  கர்த்தர் சொன்னாரே;

13. ஆண்டவரே தேவரீர் வாசம் பண்ணத் தக்க வீடும், நீர் என்றைக்கும் பிரசன்னமாயிருக்கத்தக்க சிம்மாசன ஸ்தானமுமாகிய ஆலயத்தை நான் உமக் குக் கட்டினேனென்று சொல்லி,

14. இராசா இஸ்றாயேல் சபையார் பக்கமாக முகத்தைத் திருப்பி அவர்களை ஆசீர்வதித்தார்.  இஸ்றாயேல் சபையார் எல்லாரும் அவ்விடத்திலேயே நின்றார்கள்.

15. சலொமோன் சொன்னது: இஸ்றா யேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தோத்திரமுண்டாவதாக. அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய வல்லபத்தினாலே நிறைவேற்றினார்.

16. அவர்: நம்முடைய சனமாகிய இஸ்றாயேலை நாம் எஜிப்த்திலிருந்து புறப்படப் பண்ணின நாள் முதற்கொ ண்டு, நம்முடைய நாமம் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று நாம் இஸ்றாயேலுடைய எல்லாக் கோத் திரங்களிலுமுள்ள ஒரு பட்டணத்தை நாம் தெரிந்துகொள்ளாமல் நமது சனமா கிய இஸ்றாயேலின்மேல் அதிகாரியா யிருக்கும்படி தாவீதையே தெரிந்து கொண்டோமென்றார்.

17. இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதுக்கு இருந்தது. 

18. ஆனாலும் கர்த்தர் என் தகப்பனா கிய தாவீதை நோக்கி: நம்முடைய நாமத் துக்கு ஆலயத்தைக் கட்டவேண்டுமென் கிற விருப்பம் உன் மனதிலே கொண்ட தும் அதன் மேல் யோசனை பண்ணின தும் நல்ல காரியந்தான்;

19. ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டப்போகிறதில்லை; உன்னிலிருந்து உதிக்கும் உன் குமாரனே நமது நாமத் துக்கு அந்த ஆலயத்தைக் கட்டுவா னென் றார்.

20. இப்பவும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற் றினார்; கர்த்தர் சொன்னபடியே நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத் திற்கு வந்து, இஸ்றாயேலின் சிம்மாசனத் தின்மேல் வீற்றிருந்து இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்.

21. கர்த்தர் நம்முடைய பிதாக்களை எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினபோது அவர்களோடு அவர் பண்ணின உடன்படிக்கை பெட்டகத்துக் குள்ளிருக்கின்றதே, அதற்காக ஒரு ஸ்தானத்தை ஏற்படுத்தினேனென்றார்.

22. பின்பு சலொமோன் கர்த்தருடைய பீடத்தக்கு முன்னே இஸ்றாயேல் சபை யாரெல்லாருக்கும் எதிராக நின்று, வான த்தை நோக்கித் தன் கைகளை விரித்து,

23. அவர் சொன்னதாவது: இஸ்றா யேலின் தேவனாகிய கர்த்தாவே!  மேலே வானத்திலும், கீழே பூமியிலும், உமக்கு நிகரான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடு உமக்கு முன்பாக நடந்த உமதடியாருக்கு உடன்படிக்கை யையுங் கிருபையை காத்து வருகிறீர்.

24. தேவரீர் என் தகப்பனாகிய தாவீ தென்னும் உமதடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர், அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளிலிருக்கிறபடியே உம்முடைய வல்லபத்தினால் அதை நிறைவேற்றினீர்.

25. இஸ்றாயேலின் தேவனாகிய கர்த் தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீ தென்னும் உமது தாசனை நோக்கி: நீ நமக்கு முன்பாக நடந்தது போல, உன் குமாரரும் நமக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்றாயேலின் சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கும் சுதந்தரவாளி நமக்கு முன் பாக உனக்கில்லாமல் போவதில்லை யென்று சொன்னதை இப்பொழுது நிறை வேற்றும்.

26. இஸ்றாயேலின் தேவனாகிய கர்த் தரே!  என் தகப்பனாகிய தாவீதென் னும் உமதடியானுக்குத் தேவரீர் சொன்ன உமது வார்த்தையை உறுதிப்படுத்தியருளும்.

27. கடவுள் மெய்யாகவே பூமியில் வாசம் பண்ணுவாரோ?  வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள் ளக் கூடாதென்றால், நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

28. என் தேவனாகிய கர்த்தரே, உமதடியான் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும், மன்றாட் டையுங் கேட்டு உமதடியானுடைய மன்றாட்டுக்கும் வேண்டுதலுக்குந் திரு வுளமிரங்கியருளும்.

29. உமதடியான் இவ்விடத்தில் செய் யும் விண்ணப்பத்தைத் தேவரீர் கேட்டரு ளும்படி: நம்முடைய நாமம் இவ்விடத் தில் செய்யும் விண்ணப்பத்தைத் தேவரீர் கேட்டருளும்படி: நம்முடைய நாமம் இவ்விடம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் இரவும் பகலும் உமது திருக் கண்ணோக் கியருளும்.

30. உமதடியானும், இந்த ஸ்தலத் திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்றாயேலரும் எந்த விண்ணப்பத்தைப் பண்ணி வந்தாலும் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டரு ளும்.  பரலோகமாகிய உம்முடைய வாச ஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக. கேட்டு அவர்களை மன்னிப்பீராக.

31. ஒருவன் தன் அயலானுக்குக் குற் றஞ் செய்திருப்பான்; அவன் ஆணை யிட் டுத் தன்னை உத்தரவாதியாக்கினான்.  இந்த ஆணையினிமித்தம் இந்த ஆலயத் துப் பீடத்திற்கு முன்பாக வருவானாகில்,

32. அப்போது தேவரீர் பரமண்டலத் திலே அவன் வியாச்சியத்தைக் கேட்டு நடுத்தீர்த்து அநியாயக்காரனைக் கண் டித்து அவனுடைய துர் நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப் பண்ணி அவனைக் குற்றவாளியாகத் தீர்த்து நீதி மானுக்கு அவனுடைய நீதிக்குத் தக்கதாய் அவனை நீதிமானாக்கி, உமதடி யாருக்கு நியாயந் தீர்ப்பீராக.

33. உம்முடைய ஜனங்களாகிய இஸ் றாயேலர் உமக்கு விரோதமாய் பாவஞ் செய்ததினிமித்தஞ் சத்துருக்களுக்கு முன்பாக ஓடிப் போய், பிறகு மன ஸ்தாபப்பட்டு உம்மிடத்திற்குத் திரும்பி உம்முடைய நாமத்தைச் சங்கீர்த்தனம் பண்ணி இந்த ஆலயத்துக்கு முன்பாக வந்து, உம்மை நோக்கி விண்ணப்பத்தை யும், வேண்டுதலையுஞ் செய்தால்,

34. பரலோகத்திலிருந்து தேவரீர் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டு, உம்முடைய சனமாகிய இஸ்றாயேலின் பாவத்தை மன்னித்து அவர்கள் பிதாக் களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர் களைத் திரும்பி வரப் பண்ணுவீராக. 

35. அவர்கள் உனக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்ததினால், வானம் அடை பட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்துக்கு முன் வந்து விண்ணப்பம் செய்து உம்முடைய நாமம் விளங்கத் தபசு பண்ணித் தாங்கள் அனுப விக்குங் கஷ்டத்தினிமித்தந் தங்கள் பாவங் களை விட்டு மனந்திரும்பினால்,

36. பரலோகத்திலிருந்து தேவரீர் அவர்களுக்கிரங்கி, உமதடியாரும் உமது சனமுமாகிய இஸ்றாயேலர் செய்த பாவ த்தை மன்னித்து அவர்கள் நடக்க வேண் டிய நல்வழியை அவர்களுக்குக் காட்டி: தேவரீர் உமது சனத்திற்குச் சுதந் தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக.

37. தேசத்திலே பஞ்சம்,கொள்ளை நோய், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பூஞ்சனம் உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் பட்டணங்களை முற்றிக்கை போட்டு அவர்களுக்கு நெருக்கிடை செய் யும்போதும், யாதொரு வாதையாகிலும், வியாதி முதலிய குறையாகிலும் வருகிற போதும்,

38. உம்முடைய சனமாகிய இஸ்றா யேல் அனைவரிலும் எந்த மனுஷனுக்கும் எவ்வித சாபந் துன்பம் வருகிற போதும் இவன் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு முன்பாக வந்து தன் கைகளை விரித்துச் செய்யுஞ் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டு தலையும்,

39. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலே தேவரீர் அவன் மன் றாட்டைக் கேட்டு மன்னித்து நீர் அவ னவன் இருதய நோக்கத்துக்குத் தக்கப் பிரகாரம் அவனவனுடைய விருப்பத் துக்குஞ் செய்கைகளுக்குந் தக்கதாகச்  செய்து அவனவனுக்குப் பலனளிப்பீராக. (ஏனெனில், தேவரீர் ஒருவரே எல்லா மனுப் புத்திரரின் இருதயத்தை அறிந்தவ ராயிருக்கிறீர்.)

40. அவ்விதமே செய்தால் தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்குங் காலமெல்லாம் உமக்குப் பயந்து ஊழியஞ் செய்வார்கள்.

41. உம்முடைய சனமாகிய இஸ்றா யேல் சாதியல்லாத அந்நிய சாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது கரத்தின் வலுமையையும், உமது புஜ பராக்கிரமத்தையுங் கேள்வி யுற்று உமது நாமத்தினிமித்தந் தூர தேசத்திலிருந்து வந்து,

42. எங்குங் கீர்த்திபெற்ற இப்பிரஸ் தாபத்தால் அந்த அந்நிய சாதியார் இந்த ஸ்தலத்துக்கு முன் வந்து விண்ணப்பஞ் செய்யும்போது,

43. உம்முடைய வாசஸ்தலமாகிய பரமண்டலங்களிலிருந்து தேவரீர் அவன் சப்தத்தைக் கேட்டுப் பூமியின் சனங்க ளெல்லாரும் உம்முடைய சனமாகிய இஸ்றாயேலைப் போல் உமக்குப் பயப் படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்தில் உமது நாமம் விளங்குகிற தென்று அறியும்படிக்கும் உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக அந்த  அந்நிய சாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படி எல்லாந் தேவரீர் செய்வீராக.

44. நீர் உம்முடைய சனங்களை அனுப்பும் வழியிலேயே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம் பண்ணப் புறப்படும்போது நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமம் விளங்க நான் கட்டின இந்த ஆலயத் துக்கும் நேராக அவர்கள் திரும்பி உம்மை நோக்கி விண்ணப்பம் பண்ணி னால்,

45. பரலோகத்திலிருந்து தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும், வேண்டுதலையுங் கேட்டு, அவர்களுக்கு நியாயஞ் செலுத்துவீராக.

46. அவர்கள் உமக்கு விரோதமாய் பாவஞ் செய்து (ஏனெனில் பாவஞ் செய் யாத மனிதன் ஒருவனுமில்லை.) தேவரீர் அவர்கள் மேல் கோபங்கொண்டு அவர் களைச் சத்துருக்கள் கையில் ஒப்புக் கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர் களைத் தூரத்திலாகிலும், சமீபத்திலாகி லும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறை பிடித்துக் கொண்டுபோகும்போது,

47.  அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தாங்கள் மன ஸ்தாபப்பட்டு மனந்திரும்பி, நாங்கள் பாவஞ் செய்து, அக்கிரமம் பண்ணி, துர்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் அடிமை ஸ்தலத்திலிருந்து உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,

48. தாங்கள் சிறையாக்கப்பட்ட தங் கள் சத்துருக்கள் தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும், தங்கள் முழு ஆத்துமத்தோடும், உமது பாரிசந் திரும் பித் தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின ஆலயத்திற்கும் நேராகத் திரும்பி   உம்மை விண்ணப்பம் பண்ணும்      போது,

49. உமது சிம்மாசனத்தின் நிலை யான ஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும், வேண்டுதலையுங் கேட்டு அவர்கள் நியாயத்தை விசாரித்து,

50. உம்முடைய ஜனங்கள் உமக்கு  விரோதமாய்ச் செய்த பாவத்தையும், உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு போனவர்கள் அவர்களுக் கிரங்கத் தக்கதான இரக்கத்தை அவர் களுக்கு வருவிப்பீராக.

51. ஏனென்றால் அவர்கள் எஜிப்த் தென்கிற இரும்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப் பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதநதரமுமாயிருக்கிறார் கள் அன்றோ?

52. அவர்கள் உம்மை நோக்கி வேண் டிக் கொள்வதின்படி எல்லாம், தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி உமதடி யானின் வேண்டுதலுக்கும் உமது ஜனமா கிய இஸ்றாயேலின் வேண்டுதலுக்குந் தேவரீர் கிருபைக் கண்ணோக்குவீராக.

53. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தாவே, நீரே எங்கள் பிதாக்களை எஜிப்த்திலிருந்து புறப்படப்பண்ணும் போது, உம்முடைய தாசனாகிய மோயீ சைக் கொண்டு சொன்னபடி தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீர் எனறு விண்ணப்பம் பண்ணினார். 

54. சலொமோன் கடவுளை நோக்கி: இந்த ஜெபத்தையும் வேண்டுதலையு மெல்லாஞ் செய்து முடித்தபின்பு ஆண் டவருடைய பலிபீடத்திற்கு முன்பாக எழுந்திருந்து நின்றார்.  உள்ளபடி அவர் முழந்தாள்படியிட்டு வானத்தை நோக் கித் தமது கைகளை விரித்து (ஜெபம் பண்ணியிருந்தாரே.)

55. அவர் நின்றுகொண்டு, இஸ்றா யேல் சபை எல்லாம் ஆசீர்வதித்து உரத்த சப்தத்தோடு சொன்னதாவது:

56. (முன்னே) வாக்குத்தத்தம் பண் ணினபடியெல்லாந் தம்முடைய ஜன மாகிய இஸ்றாயேலுக்குச் சமாதானத்தை யருளின கர்த்தருக்குத் தோத்திர முண்டாவதாக.  அவர் தம்முடைய தாசனாகிய மோயீசைக் கொண்டு சொன்ன நல்ல வாக்குகளில் எல்லாம்  ஒரு வாக்கானாலுந் தவறிப் போக வில்லை.

57. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நிகழ விடாமலும், அவர் நம்முடைய பிதாக் களோடு இருந்ததுபோல் நம்மோடும் இருந்து வாசம் பண்ணக்கடவாராக!

58. நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும் அவர் நம் முடைய பிதாக்களுக்குக் கட்டளை யிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவ ருடைய நியமங்களையுங் கைக்கொள்ளு கிறதற்கும் அவர் நம்முடைய இருதயங் களைத் தம் பட்சத்தில் வலித்திழுக்கக் கடவாராக!

59. அவர் தமது அடியானுடைய நியா யங்களையும், தமது ஜனமாகிய இஸ்றாயேலினுடைய நியாயங்களை  யும் அந்தந்த நாளிலும் விசாரிப்பதறகு நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம் பண்ணின இந்த என்னுடைய வார்த் தைகள் இரவும் பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக.

60. அப்போதல்லோ நீர் கர்த்தா வென்றுந் தேவரீரல்லாத வேறொருவரு மில்லையென்றும் எல்லா ஜனங்களும் அறிவார்கள்.

61. ஆதலால் இன்றைக்கு நாம் செய் கிறதுபோல (எக்காலத்திலும்) அவ ருடைய கட்டளைகளின்படி நடக்கவும், அவருடைய கற்பனைகளைக் கைக் கொள்ளவும் நம் இருதயம் நம்முடைய தேவனாகிய கடவுளோடு உத்தமமா யிருக்கக்கடவதென்றார்.

62. பின்பு இராசாவும் அவரோடிருந்த இஸ்றாயேலியர் அனைவருங் கடவு ளுடைய சந்நிதியில் பலிகளைச் செலுத் தினார்கள்.

63. சலொமோன் கர்த்தருக்குச் சமாதானப் பலிகளாக இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினா யிரம் ஆடுகளையும் வெட்டிப் பலி யிட்டார்.  இவ்விதமாய் இராசாவும் இஸ்றாயேல் புத்திரருங் கர்த்தருடைய ஆலயத்தை அபிஷேகம் பண்ணி னார்கள்.

64.  கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடஞ் சர்வாங்கத் தகனப் பலிகளையும், போஜனப் பலிகளையும், சமாதானப் பலிகளின் நிணத்தையும் (எல்லாம்) கொள்ளமாட்டாமல் சிறிதா யிருந்தபடியால் இராசா கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருந்த பிரகாரத்தின் நடு மையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையத்தினம் அங்கே சர்வாங்கத் தகனப் பலிகளையும், சமாதானப் பலி களையும், சமாதானப் பலிகளின் நிணத் தையுஞ் செலுத்தினார்.

65. அக்காலத்தில்தானே சலொமோ னும், ஆமாத்தின் எல்லை துடங்கி எஜிப்த் தின் நதி மட்டும் இருந்துவந்த அவரோடு யிருந்த பெரிய கூட்டமாகிய இஸ்றாயே லியர் அனைவரும் நமது தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும் அதற்குப் பின்பு வேறு ஏழு நாளும் ஆக பதினாலு நாள் வரைக்கும் ஆடம்பர மான பண்டிகையை ஆசரித்தார்கள்.

66. எட்டாம் நாளிலே ஜனங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்; அவர்கள் இராசாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாச னாகிய தாவீதுக்குந் தமது ஜனமாகிய இஸ்றாயேலுக்குஞ் செய்த எல்லா நன்மைகளுக்காகவுஞ் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடு தங்கள் இல்லிடஞ் சென்றார்கள்.