நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 08

சேதெயோன் எப்பிராயீமித்தார் முறைப் பாடுகளைக் கேட்டுத் தன் சாந்த குணத்தால் அவர்களைச் சமாதானப் படுத்துகிறார்

1. அப்போது எப்பீராயீமியர் அவனை நோக்கி: மதயானித்தருக்கு விரோதமாய்ச் சண்டைக்குப் போகையில் நீர் எங்களை அழைக்காமற்போன காரணமென்னவென்று முறையிட்டுப் பலத்த வக்குவாதம் பண்ணி மிரட்டினார்கள்.

2. அதற்கவன்: நீங்கள் செய்த பராக்கிலமத்துக்கு நான் செய்தது எம்மாத்திரம? அபியேசரின் திராட்சப் பழத்தின் மிகுதியான வருமதியைப் பார்க்கிலும் எப்பிராயீமின் திராட்சப் பழத்தின் மிகுதியான வருமதியைப் பார்க்கிலும் எப்பிராயீமின் திராட்சரசமே நலமல்லவா. மீ

3. ஆண்டவர் உங்கள் கையில் மதியானித்த பிரபுக்களான ஒரேபையும், சேபையும் ஒப்புக்கொடுத்தார். நீங்கள் செய்ததிலும் நான் செய்தது கொஞ்சந்தான் என்றான். அடிதை அவன் சொன்னபோது அவன் மடடிலிருந்த அவர்களுடைய ஆத்திரம் அடங்கிப் போ யிற்று. மீ

4. பிறகு சேதெயோனும் அவனோடிருந்த முந்நூறு பேரும் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தார்கள். ஆனால் அவர்கள் களையா யிருந்து ஓடினவர்களை பின் தொடரக் கூடா மற் போயிற்று.

5. அப்போது சேதெயோன் சொக்கோத் தூரரை நோக்கி: என்னோடிருக்கிறவர்கள் மெத்தவுங் களையாயிருப்பதால் நீங்கள் அவர்களுக்கு அப்பங் கொடுத்தாலொழிய மதியானித்த அரசர்களான சேபேயையும் சால்மானாவையுந் தொடரக்கூடாது என் றான்.

6. அதற்குச் சொகோத்தின் பிரபுக்கள்; உன் சேனைக்கு நாங்கள் அப்பங் கொடுக் கிறதற்குச் சேபே சால்மானா என்னும் பிரபுக் களின் கைகள் உன் கைவசமாயிற்றோ என் றார்கள்.

7. அதற்கவன்: ஆண்டவர் சேபேயையும் சால்மானாவையும் என் கையில் அளிக்கும் போது உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுக்களாலும், நெரிஞ்சல்களாலுங் கிழித் துவிடுவேன் என்றான்.

8. அவ்விடமிருந்து பானுவேலுக்குவந்து அவ்வூர் மனுஷரிடத்தில் அந்தப்படியே கேட் டான். அவர்களுஞ் சொக்கோத்தார் உரைத்த வண்ணமே மறுமொழி சொன்னார்கள்.

9. ஆனதால் (சேதெயோன்) அவர்களை யும் பார்த்து: செயவீரனாய் நான் சமாதானத் தோடு திரும்பி வரும்போது இந்தக் கோபு ரத்தை இடித்துப்போடுவேனென்றான்.

10. சேபேயும் சால்மானாவும் தங்கள் சேனைகளோடு இளைப்பாற்றினார்கள். இலட்சத்திருபதினாயிரம் யுத்த வீரர் மடிந்து போய்க் கீழ்க்குப்பத்துக் கும்பலில் பதினை யாயிரம் பேர் மாத்திரம் மீதியானார்கள்.

11. சேதெயோன் கூடாரங்களில் வசித்த வர்களின் வழியாய் நோபே சேக்பாவுக்குக் கிழக்கே சென்று தப்பினோமென்று எண்ணி அச்சமற்றிருந்த சத்துருக்களின் பாளையத்தை முறிவடித்தான்.

12. சேபேயும் சால்மானாவும் ஓடிப்போ னார்கள். சேதெயோன் பின்றொடர்ந்து அவர்களைப் பிடித்து அவர்கள் சேனை களைக் கலங்கவடித்தான்.

13. சூரியோதயமாகுமுன் யுத்த களத்தி னின்று திரும்பிவரும்போது,

14. சேதெயோன் சொக்கோத்தாரின் ஒரு வாலிபனைப் பிடித்துப் பிரபுக்களையும் மூப்பருடைய பேர்களையுங் குறித்து விசாரித் ததில் அவன் அவர்களில் எழுபத்தேழு பேர் களைக் குறித்தான்.

15. சேதெயோன் சொக்கோத் ஊராரி டத்தில் வந்து: இதோ களைத்து விடாய்த் திருந்த உன் மனிதருக்கு நாங்கள் அப்பங் கொடுக்கிறதற்குச் சேபா சால்மானா என்ப வர்களின் கைகள் உன் கைவசமாயிற்றோ வென்று என்னைப் பரிகாசம் பண்ணினீர்க ளே, அவர்கள் இதோ வந்தார்கள். அவர் களைப் பாருங்கள் என்றான்.

16. பிறகு அவன் பட்டணத்து மூப்பரைப் பிடித்து வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சல்களையும் கொண்டுவந்து அவை களால் சொக்கோத்தின் மனிதரை அடித்துத் தண்டித்து வாதித்தான்.

17. பின்பு அவன் பானுவேலின் கோபு ரத்தையும் இடித்து அப்பட்டணத்தின் வாசி களையுங் கொன்றுபோட்டான்.

18. பிறகு அவன் சேபேயையும் சால்மானாவையும் நோக்கி: தாபோரில் நீங்கள் கொன்ற மனிதர் எப்படிப்பட்ட வர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: உன்னைப் போன்றவர்களேயாம்; அவர்களில் ஒருவன் இராஜக்குமாரனாகவே தோன்றி னான் என்றார்கள்,

19. அதற்கவன்: அவர்கள் என் சகோதரர், என் தாயின் மக்கள். மெய்யாகவே அவர் களை நீங்கள் கொன்றிராவிட்டால் நானும் உங்களைக் கொல்லாதிருப்பேனென்று 

20. தன் மூத்த குமாரன் ஜேத்தேரை நோக்கி: நீ எழுந்திருந்து அவர்களை வெட்டு என்றான். அவனோ பட்டயத்தை யுருவி னவனல்ல, சிறுபிள்ளையானதால் பயந்தி ருந்தான்.

21. அப்போது சேபே சால்மானா சொன் னது: நீயே எழுந்து எங்கள்மேல் விழுந்து கொல்லு; மனுஷனக்குப் பிராயத்தக்குத் தக் காப்கோலப் பலமுண்டு எனவே, சேதெயோ னெழுந்து சேபேயையும் சால்மானாவையும் வெட்டி அரசர் ஒட்டகங்கள் கழுத்தில ணிந்திருந்த குளிசங்களையும் சரப்பளிகளை யும் எடுத்துக்கொண்டான்.

22. அப்பொழுது இஸ்ராயேலர் சகலருஞ் சேதெயோனை நோக்கி: நீரே எங்கள் எஜ மான். நீரும் உமது குமாரனும், உமது குமார ருடைய புத்திரரும் எங்களை ஆளக்கடவீர் கள். ஏனென்றால், மதியானித்தருடைய கைகளினின்று நீரே எங்களை இரட்சித்தீர்கள் என்றார்கள்.

23. அதற்கவன்: நான் உங்களை ஆளமாட் டேன்: என் குமாரனும் உங்களை ஆளமாட் டான்; ஆனால் ஆண்டவரே உங்களை ஆளக் கடவார் என்றான்.

24. திரும்பவும் அவர்களை நோக்கி: உங்களை ஒரு காரியத்தைக் கேட்கிறேன். நீங்கள் கொள்ளையிட்ட கடுக்கன்களை எனக்குக் கொடுங்கள் என்றான். ஏனெனில், இஸ்ராயேலருக்குப் பொன் கடுக்கன் போட் டுக்கொள்கிற வழக்கம் இருந்தது.

25. அப்போது அவர்கள்: சந்தோஷமாய்க் கொடுப்போமென்று சொல்லி, தரையின் மேல் வஸ்திரத்தை விரித்துக் கொள்ளை யிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.

26. சாந்துக் காறைகளும், ஆரங்களும், மதயானித்தரின் இராஜாக்கள் போர்த்துக் கொண்டிருந்த பீதாம்பரங்களும், ஒட்டகங் களும், சரப்பளிகளும் அல்லாமல் சேதெ யோன் கேட்டு வாங்கின பொன் கடுக்கன்க ளின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சீக்கலின் நிறையாயிருந்தது.

27. அதுகளைக் கொண்டு சேதெயோன் ஒரு எப்போத்தைச் செய்து தன் ஊரான எப்பிராவில் அணிந்துகொண்டான். அதினா லேயே இஸ்ராயேலியர் விக்கிரக ஆராதனைக் காரரானார்கள். சேதெயோனுக்கும், அவர் குடும்பத்துக்கும் அதுவே கேடாயிற்று.

28. மதியானித்தர் திரும்பத் தலையய டுக்கக்கூடாதபடிக்கு இஸ்ராயேல் புத்திர ருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். தேச மானது சேதெயோன் ஆண்ட நாளில் நாற் பது வருஷம் அமரிக்கையாயிருந்தது. 

29. ஜோவாசின் குமாரனான ஜெரோபா வால் போய்த் தன் வீட்டில் வாசஞ் செய் தான்.

30. அவனுக்கு அநேகம் ஸ்திரீகளிருந் தமையால் அவனிடமாய்ப் பிறந்தவர்கள் எழுபதுபேர்.

31. சிக்கேமிலிருந்த அவன் வைப்பாட் டியும் அவனுக்கு அபிமெலேக் என்னும் ஓர் பிள்ளையைப் பெற்றாள்.

32. ஜோவாஸ் குமாரன் சேதெயோன் நல்ல விருத்தாப்பியத்தில் மரித்து எஸ்ரி வம் சத்து எப்பிராவிலே தன் பிதாவாகிய ஜோ வாஸ் கல்லறையில் அடக்கப்பட்டான்.

33. சேதெயோன் மரித்த பிறகு அவன் குமாரர் தவறிப்போய்ப் பாவலை ஆராதித் தார்கள். பாவலே தங்கள் தேவனென்று அவர்கள் அவனோடு உடன்படிக்கைச் செய் துகொண்டார்கள்.

34. தங்களைச் சூழ்ந்திருந்த சகல சத்துராதி கள் கையினின்றுந் தங்களை இரட்சித்த கடவுளை அவர்கள் மறந்துபோனார்கள்.

35. அவர்கள் ஜெரோபாவால் என்ற சே தெயோன் இஸ்ராயேலுக்குச் செய்து வந்த நன்மைகளுக்குத் தக்க தயவை அவனுடைய வீட்டாருக்குச் செய்யாமலே போனார்கள்.