சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 07

சிறையில் யூதர்களின் உபவாசம்.

1. தாரியூஸ் அரசனின் நான்காம் வருடம் கஸ்லேவெனும் ஒன்பதாம் மாதம் நாலாந் தேதி சக்காரியாசுக்கு அருளப்பட்ட தேவ வாக்கியமாவது: 

2. சராசாரும், ரோகோமெலேக்கும் அவர்களோடிருந்தோரும் (ஸ்தானாபதி களை) ஆண்டவர் ஆலயமனுப்பி, அவர்கள் ஆண்டவர் முன் மனு செய்யவும், 

3. சேனைகளின் ஆண்டவரது ஆலயக் குருப்பிரசாதிகளிடத்தும், தீர்க்க வசனரிடத்தும், “ஐந்தாம் மாதத்திலும் யாங்கள் (இன்னம்) கலுழ்தல் வேண் டுமோ? அல்லது அநந்த வருடங்களாக யாங்கள் செய்து வந்ததுபோல், எங்களை (உபவாச ஒருசந்தியால்) சுத்திகரித்தல் வேண்டுமோ” எனக் கேட்டு, (மறுமொழி கொணர்ந்துவரவும்) செய்த (காலை,)

4. சேனைகளின் தேவனாரது வாக்கியம் எனக்கு அருளப்பட்டதெங்ஙன மெனில்:

5. நீ (யூத) நாட்டுச் சகல பிரசைகளையும், குருப்பிரசாதிகளையும் பார்த்து: நீங்கள் இந்த எழுவான் வருடமளவாக ஐந்தாம், ஏழாம் மாதங்களில் அழுது கண்ணீர் வடித்தபோதும், உபவாசம் நோற்றபோதும், எமக்காகவே நோன்பு பிடித்தது.

6. நீங்கள் சாப்பிடுகையிலும், பானஞ் செய்கையிலும் உங்களுக்காக வன்றோ நீங்கள் போஜனஞ் செய்கின் றீர்கள எனச்சொல்வையாக என்பதே.

7. (உள்ளபடியே) எருசலேம் இன்னம் வசிக்கப்பட்டு பொருள் பெருத்திருக்கையிலே அதுவும் அதைச் சூழ்ந்த பட்டணங்களுந் தக்ஷணபாகத்திலும், வெளி இடங்களிலுமாய் வாசிகள் நிறையப்பெற்றிருக்கையிலே, முந்திய தீர்க்கவசனர் வழியாய் ஆண்டவர் அருளிய வாக்கியங்கள் (இங்ஙனமாகவே) இருந்ததன்றோ?

8. பின்னுஞ் சக்காரியாசுக்கு ஆண்ட வருடைய திருவாக்கியம் பின்வருமாறு அருளப்பட்டது.

9. இதோ சேனைகளின் அதிபர் உரைத்தது: (ஆண்டவருக்குப் பிரியப்பட விருப்பமிருக்குமாயின்) மெய்யான சத்தியத்தைக் கோரி தீர்மானங் கூறுங்கள்; ஒவ்வொருவனுந் தன் சகோதரன் மட்டில் இரக்கத்தையும், பிறர் சிநேகத் தையுங் காட்டுவானாக!

10. விதவைக்கென்கிலும், (அநாத) பிள்ளைக்கென்கிலும், அந்நியனுக்கென்கிலும், ஏழைக்கென்கிலுந் துன்புறுத்த (நினைவுறாதிருக்கக்கடவன்;) எவனுந் தன் இருதயத்தில் தன் சகோதரனுக்குத் தீங்கு கருதாதிருக்கக்கடவன்.

11. ஆனாலும் அவர்கள் (எம் வாக் கியத்துக்) கவனங் கூர்ந்தார்களில்லை; புறங் காட்டிப் பின்னிடைந்தனர்; கேளா திருத்தல் பொருட்டு செவிகளை மந்த மாக்கிக் கொண்டனர்.

12. வேதத்தையும், முந்திய தீர்க்கத் தரிசியர் வாயிலாய்ச் சேனைகளின் ஆண்டவர் தமது ஆவி தத்துவமாய்ப் பிரசித்தஞ் செய்த வாக்கியங்களையுங் கேளாவண்ணந் தம் இருதயத்தை வைரமாக்கிக் கொண்டனர். ஆனபடியால் சேனைகளின் ஆண்டவருக்கு மெத்தவுங் கோபவெரிச்சல் உண்டாயிற்று.

13. (ஆண்டவர்) கூறினபடி சம்பவித்தது. அப்போதும் அவர்கள் கேளாதிருந்தனர்; (இனி) அவர்கள் கழற, யாமுங் காதுகொடாதிருப்போம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

14. ஆனதைப் பற்றியே அறியாத் தேசங்களில் எல்லாம் அவர்களைச் சிதறடித்தனம்; அவர்கள் (சுயவ) தேசமானது போவான் வருவானின்றி இருத்தலின் (சுத்த) பாழானது (இங்ஙனம்) அவர்கள் இன்புற்ற நாடுதனை வனவாசமாக்கினர்களாமே.