அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 07

எலிசேயின் தீர்க்கத்தரிசனம்.

1.  (அரசன் சொன்னதைக் கேட்டு) எலிசே பேசத் துடங்கினான்; ஆண்டவ ருடைய வாக்கியத்தைக் காதுகொடுத்துக் கேளுங்கள், ஆண்டவர் சொல்வதே தெனில்: நாளையத் தினம் இதே மணி நேரத்தில் சமாரியா பட்டணத்து வாச லிலே ஒரு மரக்கால் கோதும்பை மாவு ஒரு சீக்கலுக்கு விற்கும்; ஈரளவு வாற்கோதும்பை ஒரு சீக்கலுக்கு விற்கப் படுமென மறுமொழி சொன்னான்.

2. அரசனூன்றக் கைகொடுத்து உதவி செய்துவருகிற பிரபுக்களில் ஒருவன் கர்த்தருடைய மனிதனை ¼Vக்கி: கர்த்தர் வானத்தினின்று தானியத்தைத் திரளாகப் பெய்யச் செய்தாலும் நீர் சொல்வதும் ஆகக்கூடியதோ எனப் பதில் சொன்னான். அதற்கு எலிசே: நீர் உமது கண்ணாரக் காண்பீர்; ஆனால் அதில் கொஞ்சமாவது நீர் புசிக்கவே மாட்டீர் என்றான்.

3. அது நிற்க, பட்டணத்து வாசல் வாயிலண்டையில் குஷ்டரோகிகள் நாலு பேர் இருந்தனர். இவர்கள் ஒருவரை யொருவர் பார்த்து: மரணத்தை எதிர் பார்த்துக் கொண்டு நாம் இங்கு இருப்ப தென்னை?

4. நாம் பட்டணத்துள் போவோ மென்றால் பட்டினியாய்ச் சாகவேண் டும். இங்கு தானே இருப்போமென் றாலோ மரணமே தப்பாது வரும். ஆதலால் சீரியர் பாளையத்தில் அடைக் கலம் புகுவோம் வாருங்கள்; அவர்கள் நமதுமேல் கிருபை பாலித்தால் சீவிப் போம்; அவர்கள் நம்மைக் கொல்லக் கருதினாலோ எங்கும் மரணந்தான்; செத் துப் போவோமென்று பேசிக்கொண்டு,

5. மாலைப் பொழுது நேரத்தில் அவர்கள் சீரியர் பாளையம் போக எழுந்தார்கள். சீரியர் பாளையத்துப் பிரவேசத்தில் அவர்கள் வந்தபோது, அவர்களுக்கு ஒருவருந் தென்பட வில்லை.

6. ஏனெனில், ஆண்டவர் சீரியர் பாளையத்தில் குதிரைகளும், இரதங் களும், திரண்ட சேனா சமுத்திரமும் வருகிறது போலப் பெருஞ் சப்தங் கேட்கும்படிச் செய்திருந்தார். சீரியர் இதைக் கேட்டு ஒருவர் ஒருவரைப் பார்த்து: இஸ்றாயேல் அரசன் தனக்கு உபபலமாக ஏத்தையர் இராசாவையும், எஜிப்த்தியர் அரசனையும் நமக்கு விரோதமாக அழைத்து வந்திருக்கிறாள்; இதோ அவர்களெல்லோரும் நம்மேல் விழப் போகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டு,

7. எழுந்து புறப்பட்டு, பாளையத் தில் கூடாரங்களையும், குதிரைகளை யும், கழுதைகளையும் விட்டு விட்டு, உயிர் தப்பினாலே போதுமென இருட்டு நேரத்தில் ஓட்டம் பிடித்தார்கள்.

8. முன் சொல்லப்பட்ட குஷ்ட ரோகிகள் பாளைய வாசலில் வந்து, ஒரு கூடாரத்தில் நுழைந்து, சாப்பிட்டுக் குடித்து, அங்கிருநது வெள்ளியையும், பொன்னையும், வஸ்திராபரணங்களை யும் எடுத்துக் கொண்டுபோய் ஒளித்து வைத்து, மறுபடியும் திரும்பி வந்து, வேறொரு கூடாரத்தில் புகுந்து, அங்கே தென்பட்டவைகளைக் கொள்ளை யிட்டு ஒளித்து வைக்கப் போனார்கள்.

9. பிறகு அவர்கள் ஒருவரோடொரு வர் பேசி: நாம் இப்படி செய்கிறது நன்றன்று. ஏனெனில், இத்தினஞ் சுப செய்தித் தினமே. நாம் மவுனமாயிருந்து நாளைக் காலைப் பொழுதுக்குமுன் (இதனை) வெளிவிடாதிருப்போமே யாகில் குற்றவாளிகளாக மதிக்கப்படு வோம்; வாருங்கள் அரசனிடத்துக்குப் போய்த் தெரிவித்துவிடுவோம் எனச் சொன்னார்கள்.

10. இப்படியவர்கள் பட்டணத்து வாசலுக்குப் போய்ச் சேர்ந்தவுடனே (அங்கிருந்த காவலர்களைப் பார்த்து:) நாங்கள் சீரியருடைய பாளையத்திற்குப் போனோம்; அங்கு கட்டியிருக்கிற குதிரைகளையும், கழுதைகளையும், கூடாரங்களையும் கண்டோமேயல்லாது, அவ்விடத்தில் ஒரு மனிதனையாகிலும் நாங்கள் கண்டதில்லை எனத் தெரியச் சொன்னார்கள்.

11. இதைக் கேட்டு வாசற் காவலர் கள் இராசா அரண்மனை உட்காரியஸ்த ரிடத்திலே (இந்தச் செய்தியைக்) கொண்டு போனார்கள்.

12.  அப்போது இராக்காலமாயினும் (அரசன்) எழுந்து தன் உத்தியோகஸ்த ரைப் பார்த்து: சீரியர் நமக்கு விரோத மாய்க் கருதிய உபாய தந்திரத்தை நான் சொல்லுகிறேன் கேளுங்கள். நாம் பசியால் வருந்துவதை அறிந்து தங்கள் பாளையத்தை விட்டு வெளியேயுள்ள நிலங்களில் தங்களை மறைத்து இஸ்றா யேலர் தங்கள் பட்டணத்தினின்று புறப் பட்டு வருவார்கள்; அப்போது நாம் அவர்களை உயிராய்ப் பிடித்துக் கொண்டு, பட்டணத்துள் (சுலபமாக) நுழையலாம் என்று ஆலோசனை பண்ணி யிருக்கிறார்கள் போலும் என்றான்.

13. அவனுடைய உத்தியோகஸ்தரில் ஒருவன் அரசனை நோக்கி: இஸ்றாயேலி லிருந்த குதிரைகளெல்லாஞ் செலவாகி விட்டன. பட்டணத்தின் ஐந்து புரவி தான் மீதியாயிருக்கிறது. அவைகளை முஸ்திப்புப்படுத்தி வேவுகாரரை அனுப்பு வோமாக என யுக்தி சொன்னான்.

14. ஆகையால் இரண்டு அசுவங் களைக் கொண்டுவந்த மாத்திரத்தில் அரசன் இரண்டுபேரை ஏறச் சொல்லி நிஙக்ள் சீரியர் பாளையத்தைப் போய்ப் பாருங்கள் என்று அனுப்பினன்.

15. அவர்களோ சீரியரெங்கே என்று தேடப் புறப்பட்டு யோர்தான் நதிவரை யிலும் போனார்கள். சீரியர் பயப்பிராந்தி யால் பிடிபட்டோடி எறிந்துவிட்ட உடைகளும் ஆயுதங்களும் வழியிலே ஏகமாய்க் கிடந்திருக்கக் கண்டு, திரும்பி வந்து அரசனுக்கு (இது செய்தியைத்) தெரி வித்தார்கள்.

16. உடனே (இஸ்றாயேல்) பிரசை கள் புறப்பட்டுச் சீரியர் பாளையத் தைக் கொள்ளையாடினர்; ஆனதுபற்றி ஆண்டவருடைய வாக்கியப் பிரகாரம் முதற்றரக் கோதும்பை மாவு ஒரு சீக்கலுக்கு ஒரு பெரிய மரக்காலும் வாற்கோதும்பை ஒரு சீக்கலுக்கு இரண்டு பெரிய மரக்கால்களும் விற்கப் பட்டது.

17. அரசன் வழக்கமாய்த் தனக்குக் çலாகு கொடுத்து வந்த (அந்தப்) பிரபுவைப் பட்டணத்து வாசலில் காவலாக வைத்திருந்தான். திரளான சனக்கும்பல் பட்டண வாசலில் வந்த போது அவன் அவர்களுடைய காலால் மிதிக்கப்பட்டு உயிரை இழந்தான். அரசன் எலிசேயைப் பார்க்க வந்த போது, கர்த்தருடைய மனிதன் அவனுக்குச் சொல்லிய பிரகாரமே நடந்தேறி வந்தது.

18. இங்ஙனம் “நாளைக்கு இந்நேரத் திலே ஒரு சீக்கலுக்கு வாற்கோதும்பை இரண்டு மரக்காலும், கோதும்பை மாவு ஒரு மரக்காலும் விற்கப்படும்” என்று தேவனின் தாசன் அரசனிடத்தில் வச னித்த வார்த்தையும் மெய்ப்பிக்கப்பட் டது.

19. அதை மறுக்க அந்தப் பிரபு தேவனின் மனிதனை நோன்கி: கர்த்தர் வானத்தினின்று அமோகமாய் மழை யைப் பெய்யச் செய்தாலும் நீர் சொல் லியது சாத்தியப் படாதென்று சொல்லி யிருந்தானே, அதற்குக் கர்த்தரின் மனிதன்: நீர் அதைக் கண்ணாரக் காண்பீர்; ஆனால் அதனைப் புசிக்க மாட் டீர் என்று வசனித்த வாக்கியமும், 

20. வசனித்த பிரகாரமே அவனிடத் தில் மெய்ப்பிக்கப்பட்டது. ஏனென்றால் அந்தப் பிரபு பட்டணத்து வாசலிலே சனங்களின் காலால் மிதிக்கப்பட்டு உயிர் துறந்தனன்.