அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 07

சலொமோன் அரண்மனை

1.  சலொமோன் தன் அரண்மனை முழுவதையுங் கட்டி முடிக்கப் பதிமூன்று வருஷஞ் சென்றது.

2. அவர் லீபானின் வனமென்னும் மாளிகையையுங் கட்டினார்.  அது நூறு முழ நீளமும், ஐம்பது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்ததுமன்றி அதற்குக் கேதுரு மரத் தூண்களின் நடுவே நாலு வரிசைச் சாலைகளுமிருந் தன; அதிலிருந்த தூண்களெல்லாங் கேதுரு மரத் தூண்களாகவே இருந்தன.

3. ஒவ்வொரு வரிசைக்குப் பதி னைந்து தூண்களிருக்கும். அந்த நாற்பத் தைந்து தூண்களின்மேல் அமைந்திருந்த வளவு கேதுரு மரங்களாலேயே மூடப் பட்டிருந்தது.

4. அத்தூண்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்ததுமன்றி, 

5. அதுகள் ஒரே அளவு விஸ்தீரணத் தில் நாட்டப்பட்டதால் ஒன்றுக்கொன்று எதிராகவேயிருந்தது.  அத்தூண்களின் பேரில் ஒரே அளவும் பருமனுமுள்ள சதுர உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

6. ஐம்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமான தூண் மண்டபத்தை யுங் கட்டினார்.  இந்தப் பெரிய மண்ட பத்துக்கு எதிரில் வேறு தூண்களை நிறுத்தி அத்தூண்களின் பேரில் உத்திரங்  களிட்டு வேறொரு மண்டபத்தையுங் கட்டினார்.

7. நியாயாசனம் அமைந்திருந்த சிம்மாசன மண்டபத்தையுங் கட்டினார். அதைக் கீழ்த்தளந் துடங்கி மேல் தளம் வரைக்குங் கேதுருப் பலகைகளை யிட்டுப் பாவினார்.

8. அந்த மண்டபத்தில் நடுவே அதே மாதிரிகையாகச் செய்யப்பட்ட ஒரு நியாயாசன மண்டபம் இருந்தது.  சலொ மோன் (விவாகஞ் செய்த) பாரவோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தைப் போலவே வேறொரு மண்டபத் தையுங் கட்டுவித்தார்.

9. இக்கட்டடங்களெல்லாம், உள் ளும், புறம்பும், அஸ்திவாரமுதல் மேல் திரணைகள் மட்டும், வெளியே அமைந்த பெரிய முற்றம் வரைக்கும், ஒரே அளவு பிரமாணமாய் வெட்டி அறுக்கப்பட்ட விலையேறப் பெற்ற கற்களால் கட்டப் பட்டிருந்தன.

10. அஸ்திவாரமோ பத்து முழமும் எட்டு முழமுமான விலையேறப்பெற்ற பெரிய கற்களால் கட்டியிருந்தது.

11. அதின்மேல் ஒரே அளவுப் பிரமா ணமாய் விலையேறப்பெற்ற கற்களும் போட்டிருந்தன.  கேதுரு மரப் பலகை களும் அவ்விதமாகவே அறுக்கப்பட்டதா யிருந்தன.

12. பெரிய முற்றம் விருத்தமாயிருந் தது. அதில் மூன்று வரிசை பொளிந்த கல் தூண்களும், ஒரு வலிசை இழைத்த கேதுரு மரத் தூண்களும் நாட்டப்பட் டிருந்தன.  கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிரகாரத்துக்கும், அதின் முன் மண்டபததிற்கும் அப்படியே செய்யப் பட்டிருந்தது.

13. இராசாவாகிய சலொமோன், தீரிலிருந்து ஈராபமென்பவனையும் வர வழைத்தார்.

14. இவன் நேப்தாலி கோத்திரத்தா ளாகிய ஒரு விதவையின் மகன்.  இவன் கப்பன் தீரு நகரத்தான்.  கன்னான் வேலை செய்வான்.  சகலவித வெண்கல வேலையையுஞ் செய்யத்தக்க யுக்தி புத்தி அறிவுள்ளவனாயிருந்தான்.  ஈராம், இராசாவாகிய சலொமோனிடத்தில் வந்து அவர் சொன்ன வேலையை எல்லாஞ் செய்தான்.

15. இவன் இரண்டு வெண்கலத்  தூண்களைச் செய்தான்; ஒவ்வொரு தூண் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னி ரண்டு முழ நூலளவுமாயிருந்தது.

16. அந்தத் தூண்களுடைய தலைப் பில் வைக்க வெண்கலத்தினால் வார்க்கப் பட்ட இரண்டு கும்பங்களை உண்டுபண் ணினான்.  ஒவ்வொரு கும்பமும் ஐந்து முழ உயரமாயிருந்தது.

17. அந்த இரண்டு வெண்கலக் கும்பங்களுக்கும்,  வலைபோன்ற பின் னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல் களும், ஒவ்வொரு கும்பத்துக்கும் எவ்வேழாக அமைந்திருந்தன.

18. தூண்களைப் பண்ணின வித மாவது: தூண்களின் தலைப்பின் மேலுள்ள கும்பங்களை மூடும்படிக்குக் கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின் மேல் சுற்றி இரண்டு வரிசை மாதளம் பழங்களை உண்டாக்கினான்.

19. மண்டபத்தின் முன் புறத்திலிருக் கும் தூண்களுடைய தலைப்பின் மேலுள்ள கும்பங்களோ லீலி புஷ்ப வேலையாயும், நாலு முழ உயரமாயு மிருந்தன.

20. இன்னமும் இரண்டு தூண்களின் பேரிலுள்ள கும்பங்களின் பின்னல் களுக்கு அருகே தூண்களின் அங்கத்துக் குத் தக்காப்போல் வேறு கும்பங்களும் வைக்கப்பட்டிருந்தன; இந்த இரண் டாவது கும்பங்களைச் சுற்றிலும் இரண்டு வரிசையாய் இருநூறு மாதளம் பழங்கள் அமைக்கப்பட்டன.

21. ஈராம் இந்த இரண்டு தூண் களைத் தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு ழாக்கின் என்றும் இடது புறத்தில் நிறுத்தின தூணுக்குப் போஸ் என்றும் பேரிட்டான்.

22. தூண்களுடைய சிகரத்தில் லீலி புஷ்பமாகச் செய்யப்பட்ட அந்த வேலையை வைத்தான்.  இவ்விதமாய்த் தூண்களின் வேலை முடிந்தது.

23. அவன் வெண்கலக் கடல் என்னுந் தொட்டியையும் வார்ப்பித்தான்; அது சக்கர வட்டமாயிருந்தது.  அதின் ஒரு பக்கந் துவக்கி மறுபக்கமட்டும் அகலம் பத்துமுழம், உயரம் ஐந்து முழம், சுற்றளவு முப்பது முழ நூலளவுமாயிருந் தது.

24. அந்தக் கடல் தொட்டி வாயின் கீழே பத்து முழமான கொத்து வேலைகள் செய்யப்பட்டிருந்தன;  (மேலும்) தொட்டி வார்க்கப்பட்டபோது பல சித்திரம் இரண்டு வரிசைகள் தொட்டி யோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது.

25. அந்தக் கடல்தொட்டி பன்னி ரண்டு ரிஷபங்களின்மேல் வைக்கப்பட் டிருந்தது.  அவைகளில் மூன்று வடக்கே யும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கே யும், மூன்று கிழக்கேயும் நோக்கும்.  கடல் தொட்டி ரிஷபங்களின் மேலாகவும், இவைகளின் பின்புறங்களெல்லாம் அதற் குள்ளாகவுமிருந்தன.

26. தொட்டியின் கனம் மூன்று அங்குலமும், அதின் விளிம்பு பான பாத் திரத்தின் விளிம்பைப்போலவும், மலர்ந்த லீலி புஷ்ப இதழைப்போலவும் இருந்தது; அது இரண்டாயிரங் குடந் தண்ணீர் பிடிக்கும்.

27. அது தவிர (ஈராம்) பத்து வெண் கலச் சதுரப்பாதங்களையுஞ் செய்தான்.  ஒவ்வொரு பாதமும், நாலு முழ நீளமும், நாலு முழ அகலமும், நான்கு முழ உயரமு மாயிருந்தது.

28. அந்தப் பாதங்கள் வலை வேலை யாய் இசைக்கப்பட்டிருந்தது.  இசைப்பு களுக்குள் சித்திர வேலைகள் செய்யப் பட்டிருந்தன.

29. வளைய முதலிய சிற்பவணிகளுக் குள் சிங்கங்களுங் காளைகளும் ஜல தாரைகளைப் போல் தொங்கிக் கொண் டிருந்த வெண்கலக் கச்சைகளும் இருந்தன.

30. ஒவ்வொரு பாதத்துக்கும் நாலு வெண்கல அச்சுகளும், வெண்கல உருளைகளுமிருநதன.  தொட்டியின் கீழ் நாலு கோடிகளுக்குங் கொப்பரையைத் தாங்க வார்க்கப்பட்ட புஜங்கள நாலு கொம்மைகளும் ஒன்றுக்கொன்று நேர் நேராயிருந்தன.

31. பாதத்தின்மேல் தொட்டி உட் கார்ந்து நிற்க ஒரு பள்ளம்  அமைந் திருந்தது; வெளியேயிருந்து பார்த்தால் அது ஒரு முழ உயரமான வடிவுபோல் இருந்தது. தூண்களின் கோணங்களுக் குள்ளே பல சித்திரங்களுஞ் செய்திருந் தன.  இரு தூண் இடைகளோ விருத்தமா யிராமல் சதுரமாயிருந்தன. 

32. பாதத்தில் நாலு கோணங்க ளோடு சேர்ந்த நாலு உருளைகள் பாதத்தின் கீழே ஒன்றுடனொன்று சேர்ந் திருக்கும்.  ஒவ்வொன்றும் ஒன்றரை முழ உயரமாயிருந்தது.

33. உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், விட்டரங்களும் சுற்றுக்கட்டைகளும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாயிருந்தன.

34. ஒவ்வொரு பாதத்தினுடைய நாலு கோடிகளிலுந் தாங்கும் புஜங்கள் பாதத்திலிருந்து புறப்படுகிற அந்நாலு வார்ப்படமாகவே யிருந்தனவன்றி அவைகள் பாதத்தோடு ஒன்றாயிருந்தன.

35. ஒவ்வொரு பாதத்தின் தலைப் பிலும் அரை முழ உயரமுள்ள வளை வான வரம்பிருந்தது.  அதின்மேல் தொட்டி பதியத்தக்க விதமாயும் நானாவித கொத்துவேலையான சித்திரங்களால் அமைந்ததாயுமிருக்கும்.  இவைகள் பாதத்தோடு சேர்ந்த ஒரே வார்ப்பிடமா யிருந்தன.

36. வெண்கலத்திலிருக்கும் இடையி லும், கொணங்களின் இடையிலும் கெரு பீன்கள், சிங்கங்கள், பேரீச்சஞ் சோலை களுடைய சித்திரங்களைத் தீர்த்திருந் தான்;  ஆனால் எழுதப்பட்ட இவைகள் எல்லாம் வெறுஞ் சித்திரம்போலில்லாமல் ஒரு மனுஷன் நிற்பதுபோலே சுற்றிலும் உருவம் பதிக்கப்பட்டதாயிருந்தன.

37. இந்தப் பிரகாரமாக (ஈராம்) அந்தப் பத்துப் பாதங்களையுஞ் செய் தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரே வித கொத்து வேலை யுமாயிருந்தன.

38. பத்து வெண்கலத் தொட்டிகளை யுஞ் செய்தான், ஒவ்வொரு தொட்டி நாற்பது பாட் என்னுங் குடம் பிடிக்கும்.  ஒவ்வொரு தொட்டி நாலு முழ அகலமா யிருக்கும்.  அந்தப் பத்தும் ஒவ்வொரு பாதத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது.

39. ஐந்து பாதங்களை ஆலயத்தின் வலது புறத்திலும், ஐந்து பாதங்களை ஆலயத்தின் இடது புறத்திலும் வைத் தான்; கடல் என்னுந் தொட்டியையோ கிழக்கில் ஆலயத்தின் வலது புறத்திலே தெற்கு நேராக வைத்தான்.

40. ஈராம் கொப்பரைகளையும், கடாரங்களையுஞ் செய்தான். இவ்வித மாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக் காக இராசாவாகிய சலொமோன் செய்யச் சொல்லிய மற்றுமுள்ள வேலைகளையுஞ் செய்துமுடித்தான்.

41. அவையாவன: இரண்டு தூண் களும், இரண்டு தூண்களுடைய முனை யின் மேலிருக்குஞ் சிற்பவணியான ரேக்குகளும், தூண்களுடைய முனையின் மேலிருக்கும் இரண்டு வலைப் பின்னல் களும்,

42.  தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப் பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம் பழங்களும், ஆக இரண்டு வலைப் பின்ன லுக்கும் நாநூறு மாதளம் பழங்களும், 

43. பத்துப் பாதங்களும், பாதங் களின் மேல் வைத்த பத்துக் கொப்பரை களும்,

44. ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டு ரிஷபங்களும்,

45. கொப்பரைகளும், கடாரங்களும், கலயங்களுமாம்.  கர்த்தருடைய ஆலயத் துக்காக இராசாவாகிய சலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எத்தனங்களெல்லாஞ் சுத்த வெண்கலமாயிருந்தன.

46. யோர்தானுக்கடுத்த சமமான பூமியிலே சொக்கோத்துக்கும் சர்தானுக் கும் நடுவேயுள்ள களிமண் தரையிலே இராசா இவைகளை வார்ப்பித்தார்.

47. இந்த எத்தனங்களெல்லாவற்றை யுஞ் சலொமோன் ஆலயத்தில் வைத்தார். இந்த எத்தனங்கள் இத்தனை அத்தனை யாயிருந்தனவாதலால் அதுகளின் வெண் கலம் இவ்வளவென்று நிறுத்துப் பார்க்க வில்லை.

48. பின்னுஞ் சலொமோன் கர்த்த ருடைய ஆலய ஊழியத்துக்கு வேண்டிய வைகளையெல்லாஞ் செய்தார்.  அதா வது பொன் பீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேசை யையும், 

49. சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாகப் பசும்பொன் விளக்குத் தண்டுகள் வலது புறமாக ஐந்தையும், இடது புறமாக ஐந்தையும், அதுகளின் பேரில் பொன் னினால் லீலி புஷ்ப விளக்குகளையும், பொன் குறடுகளையுஞ் செய்துவைத்தார்.

50.  பசும்பொன் குடங்களையும், கத்தரிகளையும், கலசங்களையும், கலயங்களையும் தூப கலசங்களையும், மகா பரிசுத்தமான உள்ளாலயத்தினு டைய கதவுகளின் பொன்னான முளை களையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளை யுஞ் செய்தார்.

51. இவ்விதமாய் இராசாவாகிய சலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக் காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந் தது; அப்பொழுது சலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்த காணிக்கை யாக நேர்ந்துகொண்ட வெள்ளியையும், பொன்னையும், எத்தனங்களையுங் கொண்டுவந்து கர்த்தருடைய ஆலயத் தின் பொக்கிஷங்களில் வைத்தார்.