நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 07

சேதெயோன் சத்துருக்களை எதிர்த்தது.

1. ஆகையால் சேதெயோன் என்றழைக்கப்பட்ட ஜெரோபவால் இரவில் எழுந்து தன் சகல ஜனங்களோடுகூட ஆராத் எனப்பட்ட நீரூற்றோரம் வந்தான். மதியானித்தரோவெ னில் ஒரு உயர்ந்த குன்றுக்கு வடபக்கமாய்க் கணவாயில் பாளையமிறங்கியிருந்தார்கள்.

2. அப்பொழுது ஆண்டவர் சேதெயோ னை நோக்கி: உன்னோடிருப்பவர்கள் மிகுதி யானபேர்கள். அவர்கள் கையில் நாம் மதயா னித்தரை ஒப்புக்கொடுக்கமாட்டோம். ஒப்புக் கொடுத்தால், எங்கள் பலத்தினால் இரட்சிக் கப்பட்டோம் என்று இஸ்ராயேலர் சொல்லி வீம்பு பேசுவார்களாக்கும்

3. நீ உன் ஜனங்களையும் உன்னைப் பின் சென்ற சகலரையும் நோக்கி, உங்களுக்குள்ளே பயங்காளியுங் கோழையுமானவர்கள் திரும் பிப் போகட்டும் என்று பத்துபேர் கேட்கச் சொல்லென்றார். அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம்பேர் கலாத் மலையினின்று திரும்பிப்போனார்கள், பதினாயிரம்பேர் மாத்திரம் நின்றார்கள்.

4. அப்பொழுது ஆண்டவர் சேதெயோ னை நோக்கி; ஜனங்கள் இன்னமும் அதிகம். அவர்களைத் தண்ணீரோரமாய்க் கொண்டு போ, அவர்களைப் பரிட்சித்துப் பார்ப்போம். உன்னோடு போகலாமென்று எவனைக் குறிப்போமோ அவன் போகட்டும்; உன் னோடு கூடவரலாகாதென்று எவனைக் குறிப்போமோ அவன் திரும்பிப்போகக் கடவான் என்றார்.

5. அப்படியே ஜனங்கள் தண்ணீரோரம் சேர்ந்தபோது ஆண்டவர் சேதெயோனை நோக்கி: எவர்கள் நாய்கள் செய்வதுபோல் நக்கிக் குடிப்பார்களோ அவர்களை ஒருபக் கமும், முழங்காலை வளைத்துக் குனிந்து குடிப்பவர்களை மற்றோர்பக்கமும் நிறுத்து என்றார்.

6. அப்படியே கையால் தண்ணீர் அள்ளி அதை நக்கிக் குடித்தவர்கள் முன்னூறுபேர் மற்றவர்கள் எல்லாரும் முழங்காலை வளைத்துக் குனிந்து குடித்தவர்கள், மீ

7. ஆண்டவர் சேதெயோனுக்கு தண்ணீர் அள்ளி அதை நக்கிக் குடித்த முன்னூறு பேரைக்கொண்டு உங்களை இரட்சித்து மதியானித்தரை உன் கையில் ஒப்புவிப் போம். மீதிப்பேரெல்லாருந் தங்கள் ஸ்தானம் போய்ச் சேரட்டும் என்றார்.

8. மீதிப்பேரைத் தங்கள் ஸ்தானம் போயிச் சேரக் கட்டளையிட்டுச் சேதெ யோன் வேண்டிய போஜனப் பதார்த்தங் களையும் எக்காளங்களையுந் தம்மோடு எடுத்துக்கொண்டு முந்நூறு பேரோடு யுத்தத் துக்குச் சென்றான், மதியானித்தர் பாளையம் அவனுக்குத் தாழே கணவாயிலிருந்தது.

9. அன்றிரவில்தானே ஆண்டவர் அவனை நோக்கி; நீ எழுந்திருந்து அவர்களுடைய பாளையத்திற்கு நேராய்ப்போ; ஏனென்றால் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத் தோம்.

10. தனியே செல்லப் பயப்பட்டால் உன் ஊழியன் பாராவும் உன் கூடச் செல்லட்டும்.

11. அவர்கள் சொல்லிக்கொள்ளுவதை நீ கேட்டால் உனக்குத் தைரியமுண்டாகி அஞ் சாமல் அவர்கள் பாளையத்தில் நுழைவாய் என்றார். ஆகையால் அவனும் அவன் ஊழி யன் பாராவும் முன்னணியிலே சாமங் காக்கி றவர்களிருந்த பக்கமாயிறங்கினார்கள்.

12. மதியானித்தரும் அமலேசித்தரும் கீழ்த்திசையார் சகலரும் வெட்டுக்கிளிகள் கும் பலைப்போலக் கணவாயில் படுத்திருந்தார் கள். எண்ணிலடங்காத ஒட்டகங்களுங் கட லோரத்தில் மணற்குவியல் போலக் கிடந்தன.

13. சேதெயோன் சமீபித்தபோது அவர்க ளில் ஒருவன் தான் கண்ட கனவை மற்றொரு வனுக்குப் பின்வருமாறு சொன்னான்: ஒரு சொற்பனத்தைக் கண்டேன், சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மதயானித்தரின் பாளையத்துக்கு உருண்டு வந்ததாகவும், அது கூடாரமட்டும் வந்தபோது அதை விழத்தாட் டிப் பூமி மட்டத்தோடு கவிழ்த்ததாகவுங் கண்டேன் என்றான்.

14. அதற்கு மற்றவன்: இது இஸ்ராயேலன் ஜோவாசின் குமாரன் சேதெயோனின பட்ட யமேயல்லாமல் வேறல்ல. மதியானித்தரையும் அவர்கள் பாளையம் முழுமையும் ஆண்டவர் அவன் கைவசமளித்தார் எனறான்.

15. சேதெயோன் கனவையும் அதின் வியாக்கியானத்தையுங் கேட்டபோது ஆண்ட வரைத் துதித்து இஸ்ராயேல் பாளையத் திற்குத் திரும்பிவந்து எழுந்திருங்கள் மதியா னித்தர் பாளையத்தை ஆண்டவர் நமது கையில் ஒப்புவித்தார் என்றான்.

16. முந்நூறு பேரையும் மூன்றுபாகமாகப் பிரித்துக் கையில் எக்காளங்களையும், வெறும் பானைகளையும், அந்தப் பானைகளுக்குள் தீபங்களையுங் கொடுத்து,

17. அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து நீங்களும் அப்படியே செய்யுங்கள்; நான் பாளையத்தில் ஒருபக்கத்தில் பிரவே சிப்பேன், நீங்கள் நான் செய்வதெல்லாஞ் செய்யுங்கள் என்றான்.

18. நான் என் கையிலிருக்கும் எக்காளத்தை ஊதும்போது நீங்களும் பாளையத்தைச் சுற்றி ஊதி ஆண்டவருக்குஞ் சேதெயோ னுக்குமென்று கூக்குரலிடுங்கள் என்றான்.

19. இராத்திரி நடு சாமங் காக்கிறவர்கள் தங்கள் வேலையைச் செய்யத் துடங்கின போது சேதெயோனும் அவனோடு முந்நூறு பேரும் பாளையத்தின் ஓர் பக்கத்தில் பிரவே சித்தார்கள். காவலர்களை எழுப்பி எக்காளங் களை ஊதி பானைகளை ஒன்றோடொன்று மோதி உடைத்தார்கள்.

20. பாளையத்தின் மூன்று பக்கங்களில் நின்றுகொண்டு பானைகளை உடைத்து இடதுகையில் தீவட்டி பிடித்து வலதுகையி லிருந்த எக்காளங்களை ஊதி: இதோ ஆண்ட வருடைய பட்டயம், இதோ சேதெயோன் பட்டயம் என்று கூவினார்கள்.

21. பாளையத்தை சுற்றிலும் அவரவர் தங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். அப்போது பாளையத்திலிருந்த சகலருஞ் சிதறி அலறி ஓலமிட்டுக்கொண்டு ஓடிப்போ னார்கள்.

22. முந்நூறு பேரும் எக்காளங்களை ஊதிக்கொண்டே நின்றார்கள். ஆண்டவர் செய்கையால் சத்துராதிகள் தங்களுக்குள்ளா கவே ஒருவரை ஒருவர் மாய்த்துக்கொண் டார்கள்.

23. பெத்செத்தாவரையிலுந் தேபாத்தி லுள்ள அபெலமெயுலா கரை வரைக்கும் ஓடி னார்கள் நேப்தளி ஆசேர் மனாசேயான சகல இஸ்ராயேலருஞ் சப்தமிட்டுக் கொண்டு மதி யானித்தரைப் பின்தொடர்ந்து போனார்கள்.

24. சேதெயோன் எப்பீராயீம் மலைகக ளெங்குந் தூதாட்களை அனுப்பி: மத்தியா னித்தருக்கு விரோதமாய் இறங்கி பெத்பெரா வின் நீர்த் துறைகளையும், யோர்தானின் நீர்த் துறைகளையுங் கட்டிக்கொள்ளுங்கள் என் றான். அப்படியே எப்பிராயீமியர் சகலருமாக ஆர்ப்பரித்துப் பெத்பாரா வரைக்கும் யோர் தானின் நீர்த்துறைகளைக் கட்டிக்கொண் டார்கள்.

25. பிறகு அவர்கள் மதியானித்தராகிய ஒசேப் சேப் என்னும் இரண்டு பேரைப் பிடித்து ஒரேப் கல்லிலுஞ் சேப்பை சேப் என்னும் ஆலையிலுங் கொன்றுபோட்டு மதியானித் தரைப் பின்தொடர்ந்து ஒசேப் சேப் என்பவர் களுடைய தலைகளை யோர்தான் நதிக்கு அப்புறமிருந்த சேதெயோனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.