ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 06

காம விகாரமுள்ள இஸ்றாயேலர் பாழ்க்கடிப்பினால் உபத்திரவப்படுவார்கள்.

1. சீயோனில் சுக செல்வமாய் வாழ்பவரே, சமாரியா பர்வதத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்போரே, பிரசைகளின் தலைவரெனப் பிரபுக்களா யிருந்து, இஸ்றாயேல் கூட்டங்களில் சலாக்கிய ஆடம்பரத்துடன் பிரவேசிப் பவரே, உங்களுக்கு ஐயோ பாடாம்!

2. நீங்கள் கலானே பட்டணம் போய், அங்கிருந்து சிறந்த நகராகிய எமாட்டுக்குச் சென்று, பிலிஸ்தியர் தேசமாகிய கேட்டிலும், அவர்களுடைய முக்கிய இராச்சியங்களிலும் நுழைந்து, உங்கள் இராச்சியத்தை விட அவர்கள் இராச்சியம் விஸ்தீரணமுடையதோ வெனப் பாருங்கள்.

* 2-ம் வசனம். ஆண்டவர் சியோனிலும், சமாரியாவிலுஞ் சுகபோகத்தில் வாழ் பவரைப் பார்த்து: நீங்கள் கலானே, எமாத், ஜேத் முதலிய பட்டணங்கள், தேசங்கள் உங்கள் நாட்டை விடப் பெரிதா, செல்வம் பொருந்தியதா போய்ப் பாருங்கள்; அவைகளெல்லாம் உங்கள் நாட்டுக்கு ஈடாகாது; ஆயினும் அவர்கள் தங்கள் விக்கிரகங்களுக்குக் காட்டும் விசுவாசம் பற்றுதல் அத்தனைகூட நம்மீது நீங்கள் காட்டக் காணோமே என்றதாயிற்று.

3. நிற்பாக்கிய நாளுக்காக நியமிக் கப்பட்டவர்களே, உங்கள் துஷ்கிருத் தியத்துக்காகப் பர இராசாங்கத்தில் அடிமைப்பட நெருங்கியவர்களே,

4. தந்தமிழைத்த மஞ்சத்தின்கண் சயனித்து, சுகபோகத்துக்காக நித்திரை போகிறவர்களே, கிடையில் கொழுத்த ஆட்டையும், மந்தையில் நிணத்த கன்றையும் சாப்பிடுகிறவர்களே,

5. தாவீதென்போரைக் கண்டு பாவிப்பதுபோல் வாத்தியக் கருவியைப் பிரயோகித்து, வீணை நாதத்தோடு கானம் பாடுகிறவர்களே,

6. பாத்திரம் நிரம்ப இரசபானஞ் செய்து, உயர்ந்த வாசத் தைலந் திமிர்த்துக் கொண்டு, யோசேபு கோத் திரத்தவராகிய எளிய சகோதரரின் மனோபாதனையைக் குறித்துக் கிஞ்சித் தும் இரக்கங் கொள்ளாதவர்களே, நீங்கள் பயப்படாதிருப்பதென்னே?

7. ஆனதை முன்னிட்டே அவர்கள் தேசாந்திரிகளில் முதல் வகுப்பினராய்ச் சிறைபட்டுப் போவார்கள்; இங்ஙனஞ் சுகபோகப் பிரியரின் கூட்டமே அற்று போம்.

8. உள்ளபடியே தேவனாகிய ஆண் டவர் தமதுபேரிலேயே சத்தியங் கூறி: யாக்கோபின் அகங்காரத்தை யாம் அருவருக்கின்றோம்; அதின் (சலாக்கிய முள்ள) வீடுகளைப் பகைக்கின்றோம்; அவர்கள் பட்டணத்தைக் குடிகள் சகித மாய்க் கையளித்துவிடுவோம் என்கிறார் சேனைகளின் தேவனான ஆண்டவர்.

9. அதற்குப் பின் ஓர் வீட்டில் பத்தே பேர்கள் மீதியாயிருப்பினும், அவர்களும் மாண்டுபோவார்கள்.

10. உறவினன் அப்போது ஒருவன் பின் ஒருவனாய் அவர்களை வாரி எடுத்து, எலும்புகளைச் (சுலபமாய்) வீட்டினின்று கொண்டுபோம் பொருட்டு அவர்களைத் தகனஞ் செய்ய, வீட்டின் உட்புறத்தில் புலம்பி நிற்பானைப் பார்த்து: இன்னும் அடக்கஞ் செய்ய யாராகிலும் உண்டோவெனக் கேட்பன். 

* 10-ம் வசனம். எவ்வளவு பேர் மாண்டுபோவார்களென்றால்: அடக்கஞ் செய்ய மனிதர்கள் கிடைப்பது அரிதாகும்; உறவினன் ஒருவன் வந்து, ஒரு வீட்டில் கிடக்கும் பிணங்களை எல்லாம் சமாதிக்குக் கொண்டுபோகச் சாத்தியப்படாதாதலின், அவைகளை வீட்டிலேயேசுட்டு, எலும்புகளைப் பொறுக்கிக் கொண்டு போவானாம்; போகையிலே இன்னும் வேறு பிணம் கிடக்கிறதாவெனக் கேட்பவனும், வீட்டில் தனிமையாய்த் துக்கங் கொண்டாடி நிற்பவனுக்கு ஆறுதலான வார்த்தை சொல்லப் புகுந்தால், அவன்: ஆறுதல் எனும் பேச்சே பேசாதே, வாயை மூடு; ஆண்டவர் நாமத்தை ஏன் இன்னம் நினைப்பூட்டு கின்றனை? அவர் நம்மை ஆதரிப்பதற்குப் பதிலாக இஸ்றாயேலைச் சர்வ சங்காரமாய் வாட்டப்போகிறாய் என்பானாம்.

11. இவனோ முடிந்துபோயிறறு என விடை தந்து அவனை நோக்கி: மெளனமாயிரு; எனக்கு ஆறுதல் சொல்லாதே; ஆண்டவருடைய நாமத்தைப் பின்னும் நினைவூட்டாதே.

12. ஏனெனில், இதோ ஆண்டவர் தம் கட்டளைகளைப் பிறப்பிக்கப் போகின்றனர்; (இஸ்றாயேல்) கோத்திர பெரு மாளிகைதனை நாசகோலமாய் வாட்டப்போகின்றனர்; யூதாவின் வீட் டையும் விடர்கள் தோன்ற அலைக்கழிக் கப் போகின்றனர்.

13. கற்பாறைகள் நடுவில் ஓட அசுவங்களுக்குச் சாத்தியப்படுமோ, எருமை மாடுகள் ஏர் உழத்தான் ஏலுமோ, இல்லையெனில்: நீங்கள் எளிய ருக்கு உங்கள் தீர்மானங்களைக் கைப் பாய் மாற்றி, அவர்களுக்கு ஆறுதலான நீதியின் பலனைப் பிச்சாக ஆக்கின தென்னை?

* 13-ம் வசனம். கற்பாறைகள் நடுவே குதிரைகள் எப்படி ஓடக் கூடும்; மாடுகள் எங்ஙனம் ஏர் உழக்கூடும், கூடாது; அதுபோலவே உங்கள் இருதயங்கள் கற்பாறைகளாய்ச் சமைந்து போனமையால், ஆண்டவருடைய தயவு தாட்சண்ணியம் அவைகளின்மேல் ஓட சாத்தியப் படாதாம்.

14. திரணமானதில் பூரிப்பு கொள்ப வர்களே, நமது சுய பலத்தினாலன்றோ (சத்துருக்களை) ஊதிவிட்டோம் எனச் சொல்பவர்களே, ஆண்டவருடைய உதவியை எதிர்பாராதீர்கள்.

15. ஆதலின் இதோ இஸ்றாயேல் கோத்திரரே, உங்களை எமாட் வாயில் தொட்டு வனாந்தர நீரோடை பரியந்தம் அதஞ் செய்யுஞ் சனம் ஒன்றை உங்க ளுக்கு விருத்துவமாய் அனுப்புவோம் என்கிறார் சேனைகளின் தேவனான ஆண்டவர்.