அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 06

பெட்டகம் ஜெருசலேமுக்குக் கொண்டு போகப்பட்டது.

1. மறுபடியுந் தாவீது சகல இஸ்றாயேலியருக்குள்ளுந் தெரிந்து கொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரைக் கூட்டி,

2. அவனும் யூதாவின் புருஷர்களுக்குள் அவனோடு இருந்த ஜனங்களும் எழுந்து தேவ பெட்டகத்தைக் கொண்டு வரும்படி புறப்பட்டார்கள்.  அந்தப் பெட்டகங் கெருபீங்களின் நடுவே வீற்றிருக்குஞ் சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே அர்ச்சிக்கப்பட்டதால் கர்த்தர் அதின்மேல் வாசம் பண்ணு கிறார்.

3. அவர்கள் அந்தத் தேவ பெட்ட கத்தை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி அதைக் காபாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலே இருந்து கொண்டு வந்தார்கள், அபினதாபுடைய குமாரர்களான ஓஸா வும் ஐயோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

4. இவர்கள் தேவ பெட்டியை ஏற்றி காபாவிலே அதை வைத்திருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டு வருகையில், ஐயோ என்பவன் தேவ பெட்டிக்கு முன்னாலே நடப்பான்.  

5. தாவீதும் இஸ்றாயேல் புத்திரர் அனைவரும் மரத்தால் பண்ணப்பட்ட யாழ் வீணை சுரமண்டலத்தோடும், மேள தாளம் முதலிய கீத வாத்தியங் களோடும் ஆடிப்பாடி நடந்து கொண் டிருந்தார்கள்.

6. அவர்கள் நாக்கோனின் களத் திற்கு வந்தபோது மாடுகள் மிரண்டு பெட்டியைச் சாயும்படி செய்ததைக் கண்டு ஓஸா என்பவன் அதைக் கையாலே தாங்கினான்.

7. அப்பொழுது கர்த்தருக்கு ஓஸா வின்மேல் கோபம் மூண்டது; அவ னுடைய துணிவினிமித்தம் அவர் அவனை அடித்தார்; ஓஸா பெட்டகத் தின் பக்கத்திலே விழுந்து செத்தானன்.

8. கர்த்தர் ஓஸாவை அடித்ததைப் பற்றித் தாவீது விசனப்பட்டான்.  அந்த ஸ்தலத்துக்கு இந்நாள் மட்டும் ஓஸாவின் ஆக்கினை என்று பேர்.

9. அன்றைய தினம் தாவீது ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினவனாய், கர்த்தருடைய பெட்டகம் என்னிடத் திலே வருவதெப்படி என்று சொல்லி,

10. அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டு வர மனதில்லாமல் கேட்டையனான ஒபேதெதோமின் வீட்டிலே அதனைக் கொண்டுபோய் வைத்தான்.

11. கர்த்தருடைய பெட்டகம் கேட்டையனான ஓபேதெதோம் வீட்டில் மூன்று மாதந் தங்கியிருக்கையிலே கர்த்தர் ஒபேதெதோமையும் அவன் வீட் டாரெல்லோரையும் ஆசீர்வதித்தார்.

12. பல நாள் சென்றபின்பு தேவ பெட்டகத்தினிமித்தம் கர்த்தர் ஒபேதெ தோமையும் அவனுக்குண்டான எல்லா வற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீ தரசனுக்கு அறிவிக்கப்பட்டது.  அப்பொ ழுது தாவீது போய் ஒபேதெதோமின் வீட்டிலிருந்த தேவ பெட்டகத்தை மகிழ்ச்சியுடனே தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வந்தான்.  தாவீதுடன் பாடகர் களுடைய வெவ்வேறு ஏழு கூட்டமும் பலிக்கொரு இளங்காளையும் இருந்தது.

13. கர்த்தருடைய பெட்டகத்தைச் சுமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்த போது அவன் ஒரு மாட்டையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலியிடுவான்.

14. தாவீது சணல் நூலால் செய்யப் பட்ட எப்போத்தைத் தரித்துக் கொண்ட வனாய்த் தன் முழு பலத்தோடுங் கர்த்த ருக்கு முன்பாக நடனம் பண்ணுவான்.

15. அவ்விதமே தாவீதும் இஸ்றா யேல் குடும்பத்தார் அனைவரும் கர்த்தரு டைய உடன்படிக்கைப் பெட்டகத் தைக் கெம்பீர ஆனந்தத்தோடும் எக்காளத் தொனியோடுங் கொண்டு வந்தார்கள்.

16. ஆணடவர் பெட்டகந் தாவீதின் நகரத்திறகுள் பிரவேசமானபோது சவு லின் குமாரத்தியாகிய மிக்கோல் பலகணி வழியாய் உற்றுப் பார்த்து, தாவீதரசன் கர்த்தருக்கு முன்பாக குதித்துக் கூத்தாடு வதைக் கண்டு தனக்குள்ளே அவனை நிநதித்தாள்.

17. பிறகு அவர்கள் தேவ பெட்ட கத்தை உள்ளே கொண்டு வந்து தாவீது அதற்கு முஸ்திப்புப் பண்ணின ஸ்தல மாகிய கூடாரத்தின் நடுவே வைத்தார் கள்; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்கத் தகனப் பலிகளை யும் சமாதானப் பலிகளையுமிட்டான்.

18. அவன் சர்வாங்கத் தகன சமாதான முதலிய பலிகளையுமிட்டான்.  பின்பு சேனைகளின் கர்த்தருடைய நாமத்தி னாலே அவன் ஜனங்களை ஆசீர்வதித்து,

19. திரள் கூட்டமாயிருந்த ஸ்திரீ புருஷராகிய இஸ்றாயேலின் சகல ஜனங் களுக்கும் அவரவருக்கு ஒவ்வொரு மாட் டுக் கறித் துண்டையும் ஒவ்வொரு அப்பத் தையும் எண்ணெயில் பொரித்த நுண் ணிய மாவையும் பகிர்ந்து கொடுத்தான்.  பிறகு ஜனங்களெல்லாரும் அவரவர் தம் தம் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

20. அப்பொழுது தாவீது தன் வீட் டாரை ஆசீர்வதிக்கத் திரும்பி வந்த போது, சவுலின் குமாரத்தியாகிய மிக்கோல் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து அவனை நோக்கி: அற்ப மனிதரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப் போட்டுக் கோமாளித்தனம் பண்ணுவது போல் இன்று இஸ்றாயேலின் அரசன் தம் ஊழியர்களுடைய பணிப்பெண் களுக்கு முன்பாகத் தம் வஸ்திரங்களை உரிந்து போட்டாரே, இது அவருக்கு எம் மாத்திரம் மகிமை என்று சொன்னாள்.

21. அதற்குத் தாவீது: உன் தகப்பனைப் பார்க்கிலும் என்னைத் தெரிந்து கொண்டு இஸ்றாயேல் தேவ பிரசைக்குத் தலைவ னாக இருக்கும்படி கட்டளையிட்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக,

22. நான் ஆடியும் பாடியும் நடனம் பண்ணினது சரியே; அதைவிட   இன்னும் நான் அதி நீசனும் என் பார்வைக்கு அதி அற்பனும் ஆவேன்; ஆகிலும் நீ சொல்லிய பணிப் பெண்களுக்கு முன் நான் அதி சிறந்தவனாய் விளங்குவேனென்று மறு வுத்தாரஞ் சொன்னான்.

23. அதனாலே சவுலின் குமாரத்தி யாகிய மிக்கோலுக்கு மரணமடையும் நாள் மட்டும் ஒரு பிள்ளையும் பிறக்க வில்லை.