அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 06

தேவாலயத்தின் வர்ணிப்பு

1. இஸ்றாயேல் புத்திரர் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற் றெண்பதாம் வருஷத்திலும், சலொமோன் இஸ்றாயேலின் மேல் இராசா வான நாலாம் வருஷம் ஜியோ மாதமா கிய இரண்டாம் மாதத்திலுங் கர்த்த ருடய ஆலயக் கட்டுதல் ஆரம்பமாயிற்று.

2. சலொமோன் இராசா கடவுளுக் குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீள மும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது.

3. ஆயலத்தின் முகப்பிலே கட்டிய மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழமும், ஆலயத்துக்கு மன்னே பத்து முழ அகலமுமாயிருந்தது.

4. ஆலயத்திற்கு வளைவான சன் னல்களைச் செய்தார்.

5. அவர் தேவாலயத்தைச் சுற்றி லுமே கோவிலுக்குத் தேவ சந்நிதி ஸ்தலத் திற்கும் அருகாமையிலே அடைப்பு மதி லின் மேல் (மூன்றடுக்கு) அறைகளையும், ஆலயத்துக்குச் சுற்றிலுந் தாழ்வாரங் களையுங் கட்டினார்.

6. முதலடுக்கு அறைகள் ஐந்து முழ அகலமும், இரண்டாமடுக்கு அறைகள் ஆறு முழ அகலமும், மூன்றாமடுக்கு அறைகள் எழு முழ அகலமுமாயிருந்தன.  அவைகள் ஆலயத்தினுடைய சுவர் களிலே தாங்காதபடிக்குக் கட்டுக்கோப் புச் சுற்றிலும் வெளியே வரும் உத்திரங்  களைப் போடுவித்தார்.

7. ஆலயங் கட்டப்படுகையில் அது பணிக்கையாய் வெட்டிப் பொளியப் பட்ட கற்களாலே கட்டப்பட்டது. ஆகை யால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள்வாச்சிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேள்க் கப்படவேயில்லை.

8. நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்திலிருந் தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறை களுக்கும் ஏறுவார்கள்.

9. இவ்விதமாய் அவர்ஆலயத்தைக் கட்டிக் கேதுரு மரப் பலகைகளால் ஆலயத்தை மச்சுப் பாவி முடித்தார்.

10. அவர் ஐந்து முழ உயரமான சுற்றுக் கட்டுக்களை ஆலயத்தின் மேல் எங்குங் கட்டுவித்தார்.  அவைகள் கேதுரு மரங்களால் மூடப்பட்டிருந்தன.

11. அப்போது கடவுள் சலொமோ னுடன் சம்பாஷித்து அவருக்குச் சொன்ன தாவது: 

12. நீ நமது கட்டளைகளின்படி ஒழுகி நமது நீதி நியாயங்களை நிறை வேற்றி நமது கற்பனைகளின்படி எல் லாம் ஓர் அணுவும் பிசகாமல் நடந்து கொண்டு வருவாயாகில், நீ கட்டுகிற இந்தத் தேவாலயத்தைக் குறித்து நாம் உன் தகப்பனாகிய தாவீதோடு சொன்ன நமது வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றும்படி உறுதிப்படுத்து வோம்.

13. இஸ்றாயேல் புத்திரர் நடுவிலே வாசம் பண்ணி நமது சனமாகிய இஸ்றாயேலரைக் கைவிடாதிருப்போம் என்றார்.

14. அப்படியே சலொமோன் ஆலயத் தைக் கட்டி முடித்தார்.

15. ஆலயத்துச் சுவர்களின் உட்புறத் தைக் கீழ்த்தளந் தொடங்கி மேல் மச்சு மட்டுங் கேதுரு பலகைகளால் மூடினார். மேலும் ஆலயத்தின் கீழ்த்தளத்தைச் சப்பீன் பலகைகளிலாலே தளவரிசைப் படுத்தினார். 

16. தேவாலயத்தின் பின்புறத்திலோ வென்றால், கீழ்த்தளவரிசைத் துடங்கி மேல்தளமட்டும் (அதாவது:) இருபது முழ உயரமாகக் கேதுரு மரப் பலகை களால் மூடப்பட்ட ஒரு ஸ்தானத்தை அமைத்துச் சந்நிதி ஸ்தலத்தின் உட் புறத்தை அதிபரிசுத்தமான ஸ்தலமாகவே நியமித்து வைத்தார்.

17. அந்த ஸ்தானத்துக்கு முன்னிருந்த ஆலயம் நாற்பது முழ நீளமாயிருந்தது.

18. இப்படி ஆலயத்து உட்புறமெல் லாங் கேதுரு மரங்களால் மூடியிருந்ததுந் தவிர, பலகைகளின் மூட்டுச் சந்துகள் விசித்திரமான பற்பல சித்திரத்தினாலும், வெளிக் கம்பைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தன.  இப்படியே பார்வைக்கு ஒரு கல்லாகிலுங் காணப்படாமல் எல் லாங் கேது மரப் பலகைகளாகவே யிருந்தன.

19. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டகத்தை வைக்க ஆலயத்தின் உட் புறத்தில் சந்நிதி ஸ்தானத்தை ஏற்படுத்தி யிருந்தார்.

20. மூலஸ்தானமட்டும் இருபது முழ நீளமும் இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும் பொன் தகட்டால் மூடினார்; பலிபீடத் தையுங் கேதுரு பலகைகளால் மூடினார்.

21. மூலஸ்தானத்துக்கு முன்னிருந்த ஆலயத்தையும் பசும்பொன் தகட்டால் மூடி பொன் ஆணிகள் தைக்கப்பட்ட தகடுகளைத் தொங்கவிட்டார்.

22. இப்படியாய் ஆலயம் முழுமை யும் பொன்தகட்டால் மூடாததொன்று மில்லை.  மூலஸ்தானத்துக்கு முன் னிருந்த பலிபீடத்தை முழுதும் பொன் தகட்டால் மூடினார்.

23. மூலஸ்தானத்தில் ஒலீவ் மரங் களால் பத்து முழ உயரமான இரண்டு கெருபீன் சம்மனசுக்களைச் செய்து வைத் தார்.

24. ஒவ்வொரு சம்மனசுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும், மறு செட்டை ஐந்து முழமுமாக இப்படி ஒரு செட்டையின் கடைசி முனை மட்டும் பத்து முழமாயிருந்தது.

25. மற்றக் கெருபீனும் பத்து முழமா யிருந்தது; இரண்டு சம்மனசுக்களும் ஒரே அளவாகவும், ஒரே வேலைப்பாடாகவும் இருந்ததுகள்;

26. அதாவது: ஒரு கெருபீன் பத்து முழ உயரமாயிருந்தது; மற்றக் கெருபீ னும் அப்படியே இருந்தது.

27. அந்தக் கெருபீன்களை உள்ளால யத்தின் நடுவே வைத்தார்.  அவைகளின் இறக்கைகள் விரிந்திருந்ததினால் ஒரு கெருபீனின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரிலும், மற்றக் கெருபீனின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலுந் தொடத்தக்கதா யிருந்தது.  ஆலயத்தின் நடு மையத்தில் அவைகளில் இறக்கைகள் ஒன்றோ டொன்று தொடத் தக்கதாயிருந்தன.

28. அந்தக் கெருபீன்களையும் பொன் தகட்டால் மூடினார்.

29. ஆலயத்தின் சுவர்களிலெல்லாஞ் சுற்றிலுஞ் சுவரைவிட்டு வெளிப்படுவது போல் சம்மனசுக்களும் பேரீச்சை சோலைகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களாலும் கொத்து வேலைகளி னாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

30. உள்ளும் புறமுமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினார்.

31. மூலஸ்தானத்தின் வாசலுக்கு ஒலீவ் மரங்களால் சின்னக் கதவுகளை யும், ஐந்து கோணமுள்ள நிலைகளையுஞ் செய்து வைத்தார்.

32. ஒலீவ் மரமான அந்த இரட்டைக் கதவுகளில் கெருபீன்களும் பேரீச்சைச் சோலைகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரக் கொத்து வேலைகளைச் செய் வித்து அந்தக் கெருபீன்களையும் பொன் தகட்டால் மூடினார்.

33. தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலீவ் மரத்தினாலே நாலு கோணமுள்ள நிலைகளைச் செய்துவைத்தார்.

34. அதின் பக்கத்திலும் சப்பீன் மரத் தால் இரண்டு கதவுகளைச் செய்து வைத் தார்; ஒவ்வொரு கதவும் இரண்டு மடிப் பாய்ச் செய்யப்பட்டுக் கதவுகளைத் திறக் கும் போது இரு மடிப்புப் பலகைகள் ஒன் றோடொன்று சேர்ந்தே திறக்கப்படும்.

35. அவைகளில் கெருபீன்களும் பேரீச்சஞ் சோலைகளும் மலர்ந்த பூக்களு மான சித்திரக் கொத்து வேலைகளைச் செய்து அச்சித்திரங்களின் அளவு பிரமா ணப்படி அவைகளைப் பொன் தகட் டால் மூடினார்.

36. அவர் உட்பிரகாரத்தை மூன்று வரிசை பொளிந்த கற்களாலும், ஒரு வரிசை கேதுரு பலகைகளாலுங் கட்டி னார்.

37. நாலாம் வருஷம் ஜியோ மாதத் திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்தி வாரம் போடப்பட்டு,

38. பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டா மாதத்திலே அந்த ஆலய முழுதுந் தன் சகல வேலைகளோடும், அதற்குச் செலவாயிருக்கவேண்டிய எல் லாச் சாமான்களோடுங் கட்டித் தீர்த்தா யிற்று; அவர் அதைக் கட்டி முடிக்க ஏழு வருஷஞ் சென்றது.